படைகளின் முன்னேற்ற நகர்வு முறியடிப்பு எனப் புலிகள் அறிவிப்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அரசுப்படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் கடுஞ் சமர் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின் றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி படைத்தரப்பினர் முன்னேற முயன்ற வேளையே இருதரப்பினருக்கும் இடையே சமர் வெடித்ததாகவும் கூறப்பட் டது. சரமாரியான ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் மற்றும் வேட்டுக்களைத் தீர்த்தபடி படையினர் நள்ளிரவு சுமார் 11.30 மணிய ளவில் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதி ராக விடுதலைப் புலிகள் ஒரு மணிநேரம் கடும் சமர் புரிந்தனர் என்று புலிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து, படையினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றனர் என்றும் கூறப்பட்டது.படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலைத் தாம் முறியடித்து விட்டனர் என்றும் விடுதலைப் புலிகள் அறிவித்த னர்.இத்தாக்குதலின்போது படையினருக்கு தாம் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி யுள்ளதுடன், படையினரின் பல ஆயுதத் தளபாடங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றும் தமது தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றும் அவர் கள் மேலும் தெரிவித்தனர்.இத்தாக்குதலின்போது தங்களினால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரங்களையும் புலிகள் வெளியிட்டனர்.இதேவேளை, யாழ். நாகர் கோவில் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் படையினர் தரப்பில் ஒருவர் பலியானார் என்றும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய ஊடகப் பாதுகாப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்த மோதலில் பத்து விடுதலைப் புலி கள் கொல்லப்பட்டும் 20 பேர் காயமடைந் தும் உள்ளனர் என்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
No comments:
Post a Comment