Tuesday, 18 December 2007

ஈழச்செய்திகள் 19122007 புலிகள் மீது தடைவிதிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த திட்டம்!

யாழ் உதயன் செய்திகள் Tue Dec 18 11:15:00 2007
புலிகள் மீது தடைவிதிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த திட்டம்!
இன்னும் இரண்டொரு தாக்குதல்கள் தொடர்ந்தால்
வேறு வழியில்லையாம் தமிழீழ விடுதலைப் புலிகளை அரசு தடை செய்யும் என்று
ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கோடி காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அரச படையினருக்கு எதிரான பெரிய
தாக்குதல்களைத் தொடர் வார்களேயானால் அந்த
இயக்கத்தை இலங்கை அரசு தடை செய்யும் என்று தமது
திட்டத்தைக் கோடி காட்டியிருக்கின்றார் இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. கொழும்புப் பிரமுகர்களுக்கு அலரி மாளிகை இல்லத்தில்
நேற்று நத்தார் விருந் தளித்த சமயம் அங்கு
பிரசன்னமாகியி ருந்த பத்திரிகையாளர்களிடமே அவர்
இவ் வாறு தெரிவித்தார் என்று "ரோய்ட்டர்' தக வல்
வெளியிட்டுள்ளது. ""இன்னும் இரண்டு, மூன்று தாக்குதல் கள் நடந்தால்,
எமக்கு வேறு மாற்று மார்க் கம் ஏதும் இருக்காது புலிகள்
இயக்கத் தைத் தடை செய்வதைத் தவிர'' என்றார் அவர். ""எங்களது பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் ஓர்
எல்லை உண்டு'' என் றும் தெரிவித்தார் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ. ""தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தை இராணுவ
ரீதியில் ஒடுக்கினால் மட்டுமே சமாதானம் சாத்தியமாகும்
என்று நாம் நம்புகின்றோம்'' என்றார் அவர். ""புலிகள் மீது தடை விதிப்பது என்பது அரசின் நோக்கம்
இராணுவத் தீர்வுதான் என்பதை அப்பட்டமாக
வெளிப்படுத்தும். அந்த நடவடிக்கை பேச்சுக்கான கதவை
நிரந்தரமாக மூடி விடும்'' என்று கருத்துத் வெளியிட்டார்
தேசிய சமாதானப் பேரவை அமைப்பாளர் ஜெஹான்
பெரேரா.""தடை விதிக்கப்படுமானால் அது நீக் கப்படும் வரை
புலிகள் பேச்சுக்கு வரவே மாட்டார்கள்'' என்றும் அவர்
கூறினார். 2002 ஆம் ஆண்டு, அப்போதைய ரணி லின் அரசு
அமைதிப் பேச்சுக்குப் புலி களை இணங்க வைப்பதற்காக
அவர்கள் மீதான தடையை நீக்கியிருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

தலை வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பரு. செஞ்சிலுவைத் தலைவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது

கைதடி வடக்கு, மாவடி மூலையில் நேற்றுமுன்தினம்
தலை உடலிலிருந்து வெட்டப்பட்டு வேறான நிலையில்
மீட் கப்பட்ட சடலங்களில் ஒன்று இலங்கைச்
செஞ்சிலுவைச்சங்கத்தின் பருத்தித்துறைக் கிளைத்
தலைவர் சூரியகாந்தி தவராஜா (வயது 43)
என்பவருடையதென நேற்று அடையாளம்
காணப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை இரவு கல்வி யங்காடு, புதிய
செம்மணி வீதியில் அமைந் துள்ள அவரது வீட்டுக்குச்
சென்ற சுமார் பத்து, பன்னிரெண்டு பேர் கொண்ட ஆயுத
தாரிகள் குழுவொன்று இவரைக் கடத்திச் சென்றதெனவும் பின்னர் நேற்று முன்தினம் கைதடி வடக்கு, மாவடி
மூலையில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இவரது
சட லம் யாழ். போதனா வைத்தியசாலையில் அடையாளம்
காண்பதற்காக ஒப்படைக் கப்பட்டது எனவும்
கூறப்படுகின்றது.இவரது மனைவியும் தாயாரும் சட லத்தை அடையாளம்
காட்டினார்கள்.பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சொந்த இடமாகக்
கொண்ட இவர் அச்சம் காரணமாக அங்கிருந்து
இடம்பெயர்ந்து கல்வியங்காட்டில் வசித்து வந்தார் என்றும்
கூறப்பட்டது.இந்தச் சம்பவத்தில் வெட்டுக்காயங் களுடன் மீட்கப்பட்ட
மற்றைய சடலம் அரியாலை, இலந்தைக் குளத்தைச்
சேர்ந்த சுப்பிரமணியம் கௌசிகன்(வயது 22) என்று
அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனையின்
பின்னர் உறவினர்களி டம் ஒப்படைக்குமாறு சாவகச்சேரி
பதில் நீதிவான் எஸ்.கணபதிப்பிள்ளை உத்தர விட்டுள்ளார்

கொழும்பு தினக்குரல் செய்திகள்
பணம் அச்சிடுவதை தவிர அரசுக்கு மாற்றுவழி இல்லை
[18 - December - 2007]

* நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன
கூறுகிறார் பணத்தை அச்சிடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு
மாற்றுவழி இல்லை. ஏனென்றால், மட்டுப்படுத்தப்பட்ட
செலவின ஒதுக்கீட்டு வரையறைக்குள் உள்சார்
கட்டமைப்புபணிகளை மேற்கொள்ளமுடியாத நிலைமை
உள்ளது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல
குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள
சேவையான சந்தேசியவுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே
அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத்
தெரிவித்திருக்கிறார்.
பணத்தை அச்சிடுவது அவசியத் தேவையாகிவிட்டது.
ஏனெனில், அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேரை
பணிக்கு திரட்டியுள்ளது. அத்துடன், பாதுகாப்பு
செலவினமும் அதிகரித்துவிட்டது.
2002 - 2003 காலப்பகுதியில் அரசசேவையானது
மாற்றியமைக்கப்பட்டது. 1 இலட்சத்து 20 ஆயிரம்
வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால், இப்போது
செலவினங்கள் அதிகரித்துவிட்டன என்று பந்துல
குணவர்த்தன கூறியுள்ளார்.
இந்தச் செலவினங்களுக்கு பணம் செலுத்த
நாணயத்தாளை அச்சிட அரசு முயற்சிக்கின்றதா என்று
அவரிடம் கேட்கப்பட்டபோது, ஆம். வேறு
மாற்றுவழியில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு மாற்றுவழி இல்லை. ஆனால், பணத்தை
அச்சிடுவதால் பணவீக்கம் மோசமாக உயர்வடைகிறதே
என்று கேள்வி எழுப்பப்பட்டபோது;
ஆம். இந்த நிலையில் புதிதாக ஆட்திரட்டுவதை
அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும், யுத்தத்தை
நிறுத்த வேண்டும், நலன்புரிச் செலவினங்களை
நிறுத்தவேண்டும். உரமானியங்கள் வழங்குவதையும்
பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு
வழங்குவதையும் நிறுத்த வேண்டும். ஆயினும், அரசாங்கம்
செலவினத்தை மட்டுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு
செல்வதற்கு தயாராக இல்லை. ஏனெனில், இவற்றை
நிறுத்துவது அரசியல் ரீதியாக நாட்டிற்கு உகந்தது அல்ல
என்று அரசாங்கம் நம்புகின்றது என்றும் அமைச்சர்
தெரிவித்திருக்கிறார்.
இலங்கை நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரகாரம்
கணிப்பிடப்பட்ட பணவீக்கம், அக்டோபர் 2007 இல் 24.1
சதவீதமாக இருந்தது. அதன்பின்னரே தனது வாராந்த
நிகழ்ச்சியின்போது, பி.பி.சி., அமைச்சர் பந்துல
குணவர்த்தனவிடம் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இலங்கை நுகர்வோரின் நவீன செலவீன முறைமைகளை
வெளிப்படுத்தும் சுட்டெண்களை தயாரிக்கும் இந்த
முறைமை 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன்
விபரத்திரட்டல் கடந்த அக்டோபர் மாதமே அதிகளவிலான
பணவீக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்
பிரகாரம் அக்டோபர் மாத பணவீக்கம் 19.4 சதவீதமாகும்.
பந்துல குணவர்த்தன பிரதிநிதியமைச்சராக இருந்த 2002
காலப்பகுதியில் பணவீக்கம் 6.6 சதவீதமாக இருந்தது
என்று சந்தேசிய சேவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"காசநோயினால் மாத்தளையில் 210 பேர் பாதிப்பு
எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்'


[18 - December - 2007]

மாத்தளை மாவட்டத்தில் தற்போது 210 பேர்
காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த
மாத்தளை மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி
ஜி.எஸ்.பேர்டினால் இரத்தோட்டை, தம்புள்ள, உக்குவளை
பிரதேசவாசிகளே இந்நோயினால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தளை பௌத்த மகளிர்
அமைப்பின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது
இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கையில் சுமார் 9 ஆயிரம் பேர் காசநோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு,
மொனராகலை,அம்பாந்தோட்டைப் பிரதேசங்களிலும்
வறிய மக்களுக்கு மத்தியிலுமே இந்நோய் பெருமளவில்
பரவி வருகின்றது.
உலகில் 8.8 மில்லியன் மக்கள் இந்நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மணித்தியாலயத்திலும்
சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால்
பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு எதிர்வரும் காலங்களில் இந்நோயை
கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நோய் முதன்முதலாக 1882 ஆம் ஆண்டு
இனங்காணப்பட்டது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 45
வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்களில்
மூன்றிலொரு பகுதியினர், இந்நோய்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தீராத இருமல், இருதய நோய், தொடர்ச்சியான இருவார
காய்ச்சல், மாலை நேரக் காய்ச்சல் என்பன
இந்நோய்களுக்கான அறிகுறிகளாகும். எனினும் தொடர்ந்து
இருவாரம் சிகிச்சை பெறுவதன் மூலம் இந்நோயை
குணப்படுத்திகொள்ள முடியும்.
இந்நோயினால் பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள்
உடனடியாக சிகிச்சைப் பெற்று குணமடைகின்றனர்.
அறியாமையும், முறையான வழிநடத்தலும் இன்மையால்
தோட்டப்புற மக்கள் இந்நோயினால் மரணமடைகின்றனர்.
இந்நோயை கட்டுப்படுத்த தற்போது ஐவர் கொண்ட
வைத்திய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் உடன்
வைத்திய அதிகாரியை நாடவேண்டுமெனவும்
தெரிவித்தார்.

மூன்று மாவட்டங்களில் வெள்ளம்,சூறாவளி 7035
குடும்பங்கள் பாதிப்பு;50 வீடுகள் சேதம்


அமைச்சர் றிஷாட்
தகவல் வீரகேசரி நாளேடு கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக நிலவுகின்ற மோசமான
காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கு மற்றும் மினி சூறாவளியினால் 7035
குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 வீடுகள்
சேதமடைந்துள்ளன என மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த
நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்
தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் 110 குடும்பங்களை
சேர்ந்தவர்கள் மட்டுமே தற்காலிக அகதி முகாம்களில்
வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் மற்றும்
சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும்
கூறினார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று
பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து
கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும்
தெரிவித்தாவது;
நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பெய்து
வருகின்ற அடைமழை காரணமாக கிழக்கு மாகாணத்தில்
மட்டக்களப்பு. அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலும்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அம்பாறை
மாவட்டத்தில் 5825 குடும்பங்களும் மட்டக்களப்பு
மாவட்டத்தில் 1421 குடும்பங்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 110
குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே சித்தி விநாயகர்
வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை வடமத்திய மாகாணத்தில் பொலநறுவை
மாவட்டத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 50
வீடுகள் சேதமடைந்துள்ளன இதில் 9 வீடுகள் முற்றாக
சேதமடைந்துள்ள இதனால் 59 குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த
உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு
பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் இயற்கை
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான
விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சில் 24
மணித்தியாலமும் காரியாலயம் ஒன்று இயங்குகின்றது
பாதிக்கப்படுபவர்கள் 0112431589 என்ற தொலைப்பேசி
இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை
வழங்கலாம்.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உடனடியாக நிவாரணங்களை வழங்கும் வகையில் 2007
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்
வகையில் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் முற்றாக சேதமடைந்த வீடொன்றுக்கு 50
ஆயிரம் ரூபாவும், முதியோருக்கு நாளொன்றுக்கு சமைத்த
உணவு வழங்குவதற்காக 75 ரூபாவும் 12 வயதிற்கு
குறைந்தவர்களுக்கு 50 ரூபாவும் வழங்கப்படும்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரமொன்றிற்கு
245 ரூபாவிற்கான உலர் உணவு வழங்கப்படுவதுடன் ஐந்து
பேர் கொண்ட குடும்பமொன்றிற்கு 500 ரூபா
பெறுமதியான உலர் உணவு வழங்கப்படும் இந்த தொகை
கடந்த வருடங்களை விடவும் 33.1 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன் பாதிக்கப்படுகின்ற சிறு வியாபாரிகளுக்கு
உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இயற்கை அனர்த்தங்களில்
காயமடைபவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆக
குறைந்தது 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

கருணாவுக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டமை
இன்று உறுதியாகியுள்ளது

ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார் வீரகேசரி நாளேடு

இலங்கையின் ராஜதந்திர அந்தஸ்துடைய கடவுச்சீட்டு
கருணாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை இன்று பிரிட்டிஷ்
உளவுப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு எதிர்காலத்தில் எமது ராஜதந்திர கடவுச்
சீட்டிற்கான கௌரவத்தை குறைத்து விடும் என்று
ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே
லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது, போலியான ராஜதந்திர
கடவுச் சீட்டுடன் லண்டனில் பிடிபட்ட கருணா அம்மான்
ஐ.தே. கட்சி ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள்
அமைப்பிலிருந்து வெளியேறியது முதல் தற்போதைய
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டது வரையிலான
நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான விபரங்களை
வாக்குமூலமாக பிரிட்டன் உளவுப் பிரிவினரிடம்
தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின்
பரிந்துரைக்கமையவே கருணாவுக்கு வெளிநாட்டமைச்சு
ராஜதந்திர கடவுச் சீட்டை வழங்கியுள்ளது. ???????
பிரிட்டன் பொலிஸால் முன்னிலையில்
அம்பலமாகியுள்ளது.
இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். எமது
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதோடு
எதிர்காலத்தில் எமது ராஜதந்திர கடவுச் சீட்டுக்கான
மதிப்பும் இல்லாது போகும் நிலை தோன்றியுள்ளது.

No comments: