Prabakharan Injured Slightly in Air Force Bombing
December 15th, 2007 by D.B.S. Jeyaraj
Velupillai Prabakharan the elusive chief of the Liberation Tigers of Tamil Eelam has sustained minor injuries in aerial bombardment by the Sri Lankan Air Force in the last week of November!. Although the injuries are not of a serious nature the LTTE supremo was treated at an underground medical facility in a secret location by the Thileepan medical unit it is learnt.

பிரபாகரன் காயமடைந்ததை உறுதிப்படுத்தும் நிலையில் அரசு இல்லை ஆனாலும் அந்தத் தினத்தில் கிளிநொச்சி மீது தாக்குதல் இடம்பெற்றது [19 - December - 2007]
ஜனாதிபதி
`தாக்குதல் தொடர்ந்தால் புலிகள் மீது தடை' விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தாக்குதல்களை அதிகரித்தால் அவர்களை அரசாங்கம் தடை செய்யுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற `நத்தார்' ஒன்றுகூடல் நிகழ்வின் போது சிறிய தொகையினரான ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாடும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
`ஒன்றிரண்டுக்கு மேல் தாக்குதல்கள் இடம்பெற்றால் எமக்கு வேறு `தேர்வு' இல்லை. (நாம் அவர்களை) தடை செய்ய வேண்டியிருக்கும். எமது பொறுமைக்கும் எல்லை உண்டு, என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இராணுவ ரீதியாக புலிகளை பலவீனப்படுத்தினால் மட்டுமே சமாதானம் சாத்தியம் என்பதில் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 28 இல் இடம்பெற்ற விமானத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்திருப்பதாக ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட போது, அந்த செய்தி தொடர்பாக உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்றாலும் அந்தத் தினத்தில் கிளிநொச்சியில் புலிகளின் முக்கிய நிலைகள் மீது இரு தாக்குதல்களை இலங்கை விமானப்படை நடத்தியதாக ஜனாதிபதி கூறியதாக`இந்து'பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
அரசாங்கம் சமாதானத்துக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதேசமயம் புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தாத வரை சமாதானத்தை வென்றெடுக்க முடியாது. எமது உபாயம் தெளிவானதாகும். புலிகளிடமிருந்து ஏற்படும் சவால்களை தொடர்ந்து நாம் எதிர்கொள்ளும் அதேவேளை, இனநெருக்கடிக்குத் தீர்வாக அரசியல் பொறியொன்றை முன் வைப்பதில் எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் தடை விதித்தால் அது அரசாங்கம் இராணுவத் தீர்வையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்பதற்கான சமிக்ஞைசையாக அமையுமெனவும் பேச்சுக்கான கதவுகள் மூடப்பட்டு விடுமென்றும் தேசிய சமாதானப் பேரவையைச் சேர்ந்த ஆய்வாளர் ஜெகான் பெரேரா ராய்ட்டருக்கு தெரிவித்திருக்கிறார்.

No comments:
Post a Comment