Tuesday, 18 December 2007

ஈழத்தமிழரைப் பகடைக்காய் ஆக்கி ஏகாதிபத்திய முதலீட்டுக்கு சந்தை தேடிக்கொடுக்கும் இந்தியா.

சென்னையில் இலங்கை - இந்திய வர்த்தக மாநாடு
ஆரம்பம்

[18 - December - 2007]

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் `இந்தியா-
இலங்கை வர்த்தகமும் முதலீடுகளும்' இருநாள்
மாநாட்டை சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்றுத் திங்கட்கிழமை
ஆரம்பித்து வைத்தார். இந்திய கைத்தொழில்துறை சம்மேளனம் மற்றும்
இலங்கை துணைத்தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து
`அவதானி ஆராய்ச்சி மன்றம்' (Observer ReSearch
Foundation) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
கைத்தொழில்துறை, முதலீட்டுக்கான சூழ்நிலை என்பன
குறித்தே இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன் இந்த மாநாட்டின் போது இருதரப்பு
தொடர்புகளை விருத்தி செய்வதற்காக வர்த்தகர்கள்
மத்தியில் தனித்தனி சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.
இருநாடுகளும் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து
இலங்கை, இந்திய வர்த்தகத்துறைப் பிரதிநிதிகள்
வெளிப்படையாக கருத்துக்களைப் பரிமாறிக்
கொள்வார்கள்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1998 இல்
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டபின் கடந்த
3 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இருமடங்கு
அதிகரித்திருக்கிறது. 1999 இல் 557 மில்லியன்
டொலர்களாக இருந்த இருதரப்பு வர்த்தகம் 2007 இல் 2.7
பில்லியனாக அதிகரித்திருக்கிறது.
இலங்கையில் இப்போது பல இந்தியக் கம்பனிகள்
அதிகளவு முதலீட்டை மேற்கொண்டுள்ளன. இந்திய
எண்ணெய்க் கூட்டுத்தாபனம், லங்கா- இந்திய எண்ணெய்க்
கம்பனியுடன் பங்குதாரராகவுள்ளது. இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 100 பெற்றோல்
நிலையங்களை 2003 இல் பொறுப்பேற்ற இந்தக் கம்பனி
சில்லறை விற்பனையயும் ஆரம்பித்துள்ளது.
அத்துடன் அசோக் லைலன்ட், டாடா ட்ரக்ஸ், பஜாஜ்
ஓட்டோ ரிக்ஷோஸ், ரி.வி.ஸ், ஹிரோ என்பன ஏற்கனவே
இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றன.

No comments: