பூமி வெப்பமடைவதால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு
கொழும்பு தினக்குரல் செய்திகள் Sun Dec 16 8:25:00 2007
பூமி வெப்பமடைவதால் ஏற்படும் ஆபத்துக்களை இலங்கை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்று நோபல் பரிசு பெற்ற புவியியல் விஞ்ஞானி கலாநிதி மொஹான் முனசிங்க தெரிவித்தார். பூமி வெப்பமடைவதன் காரணமாக அடுத்த இரண்டு தசாப்த காலப்பகுதிக்குள் இலங்கையில் நேரடித் தாக்கம் இருக்கும் நாட்டின் உலர் வலயங்களில் வரட்சி ஏற்படக்கூடிய அதேவேளை, விவசாயத் துக்கும் நேரடிப் பாதிப்பு ஏற்படும். அதே வேளை ஈரவலயப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி மிக அதிகரித்து அதன் காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற அனர்த்தங் கள் ஏற்படும் கடல் மட்டம் உயரும்போது இலங்கை யில் அடிக்கடி சுனாமி உண்டாகும் சாத்தி யங்கள் அதிகம் உண்டு என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல் களை கலாநிதி மொஹான் முனசிங்க கூறி னார்.
No comments:
Post a Comment