Monday 17 December, 2007

வரவு - செலவுத் திட்டத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உதவும்

வரவு - செலவுத் திட்டத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உதவும்
யாழ் உதயன் செய்திகள் Sun Dec 16 8:30:00 2007

வரவு - செலவுத் திட்டத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க உதவும் ஜனாதிபதி அறிக்கை வரவு - செலவுத் திட்டத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அரசுக்கு உதவியாக இருக்கும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப் படிக் கூறியுள்ளார். வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றமை தொடர்பாக அவர் விடுத்த விசேட செய்தி அறிக்கையிலேயே இப்படிக் கூறி யுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது திரைமறைவில் மேற்கொள்ளப்பட்ட பல சதித்திட்டங்களுக்கு மத்தியிலும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள், அரசாங்கத்தைப் பலப்படுத்தியுள் ளன. அதற்காக அவற்றைப் பாராட்டுகின் றேன்.நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரசையும் மற்றவருடன் நல்லுறவோடு வாழக்கூடிய நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமா கும். இருந்த போதி லும் வரவு செலவுத் திட்டத்தை தோற் கடிக்க சில கட்சிகள் பல்வேறு பிரசார நட வடிக்கைகளை மேற் கொண்டிருந்தன. வரவு செலவுத் திட்டத்தில் கிடைத் வெற்றி அனைத்து மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றி அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உதவியாக இருக்கும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயற்படுமாறு சகல கட்சிகளையும் கேட் டுக்கொள்கின்றேன். என்றுள்ளது.

தேசத்துரோகியான ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படக்கூடாதென்பதற்காகவே பகிஷ்கரித்தோம் ஜே.வி.பி.
வீரகேசரி நாளேடு
நாம் ஐ.தே.க. வையும் எதிர்க்கின்றோம். அரசாங்கத்தையும் வெறுக்கின்றோம். எதிர்காலமே இல்லாத வரவு செலவுத் திட்டத்தை எதிர் த்து வாக்களித்த ஜே.வி.பி. தேசத்துரோகியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படக்கூடாது என் பதற்காகவே மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பினை பகி ஷ்கரித்தது என்று ??கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
எந்தப் பக்கம் தாவுவது என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதி நேரத்தில் அரசுடனேயே ஒட்டிக் கொண்டார். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை பகிஷ்கரித்தது தொடர்பாக விளக்கப்படுத்தும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்க அமரசிங்க, பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச, அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்திருப்பதன் மூலம் அக்கட்சியால் இனிமேலும் இந்த நாட்டில் ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்லாது அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் மேற்கொண்ட வாக்கெடுப்பின்போது 118 வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் சரியாக மூன்று வாரகால இடைவெளிக்குள் 114 வாக்குகளையே பெற்றுள்ளது. இதன் மூலம் அதன் பலம் குன்றியுள்ளது. அதிலும் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தே 3 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து அரசாங்கத்தின் தோல்வியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இன்னுமொரு புதினம் என்னவென்றால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைய விடக்கூடாது என்பதற்காக வைத்தியசாலையில் நோயாளியாக படுத்திருந்த பிக்கு ஒருவரும் இதில் கலந்து கொண்டிருந்தமைதான். எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மக்கள் தொடர்பான அபிலாஷைகளை நிறைவேற்ற இயலாத ஒரு வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது. அதனையே நாம் எதிர்க்கின்றோம். முதலில் அதற்கு எதிராகவும் வாக்களித்தோம். இதனையடுத்து மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது ஜே.வி.பி. தீர்க்கமான முடிவினை எடுக்கும் என்றே அறிவித்திருந்தோம்.
எமக்கு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு எதுவும் இல்லை. அசாங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பது ஐ.தே.க. வில் இருந்து பிரிந்து சென்றவர்கள்தான். கட்சிகள் தங்களது உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாது திண்டாடுகின்றன. அரசிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவுகின்றன. எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு மாறுகின்றனர். இந்த வேளையில் ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் ஒரு அரசாங்கத்தை அமைக்க இடம் கொடுக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி. சான்றிதழ் வழங்கிவிட்டது. இதனால் ஜே.வி.பி. வாக்களிப்பை பகிஷ்கரித்ததன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்துக் கொண்டுள்ளது. இதனால் ஐ.தே.க.வின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளது.
நாம் ஐ.தே.க.வையும் எதிர்க்கிறோம். அரசாங்கத்தையும் வெறுக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் அரசாங்கம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. வாக்களிப்பு இறுதி நேரத்திலும்கூட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எந்தப் பக்கம் தாவுவது என்று தத்தளித்த நிலையில் இறுதியில் அரசுடனேயே ஒட்டிக் கொண்டார். அதேபோல் (அமைச்சர்) அநுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சிக்கு போய்விட்டார். ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் என்ற நிலையில் உள்ளது. வரவு செலவுத் திட்டம் முடிந்துவிட்ட நிலையிலும் சர்வதேச தலையீடுகளும் அதன் மூலமான சதித்திட்டங்களும் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. இவைகளை முறியடிக்க வேண்டுமானால் பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப வேண்டுமானால் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

No comments: