Friday 14 December, 2007

ஈழம்:விவசாயப் பிரச்சனை

யாழ் உதயன்:Fri Dec 14 10:40:00 2007
புன்னாலைக்கட்டுவன், குப்பிளான் பிரதேசங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் தீவிரம்
தனியார் வர்த்தகர்களால் எடுத்து வரப் பட்ட விதை உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்து புன்னாலைக் கட்டு வன், குப்பிளான் ஆகிய பிரதேசங்களின் விவசாயிகள் உருளைக் கிழங்கு உற்பத் தியில் ஈடுபட்டுள்ளனர்.குடாநாட்டு விவசாயிகளும் விவசாய சம்மேளனத்தினரும் தமக்கு விதை உரு ளைக்கிழங்குகளைப் பெற்றுத் தருமாறு கமத்தொழில் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அவற்றின் விலையில் காணப்பட்ட இழுபறியால் அத னைப் பெற்றுக் கொடுப்பதில் திணைக் களத்தினர் தயக்கம் காட்டினர்.இதையடுத்து தற்போது தனியார் வர்த் தகர்கள் சுமார் இருநூறு பெட்டி விதை உருளைக்கிழங்குகளை எடுத்து வந்துள்ள னர். இவற்றையே தற்போது விவசாயிகள் பெற்று நடுகையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே 50 கிலோ கொண்ட பெட்டி விதை கிழங்கு 15 ஆயிரத்து 500 ரூபா வரை விலையிடப்பட்டிருந்தது. இதனால் அவற்றைக் கொள்வனவு செய்வதில் விவ சாயிகள் தயக்கம் காட்டி வந்தனர்.கொழும்பில் இருந்து தனியார் எடுத்து வந்த விதை கிழங்கை 14 ஆயிரம் ரூபா விலைக்கு விநியோகமானதைத் தொடர்ந்து இப்பகுதியில்
உருளைக்கிழங்கு நாற்று நடும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments: