இலங்கை அரசின் 2008ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் 47 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தினால் 2008ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்டிருந்த வரவு
செலவுத் திட்டத்திற்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று 47 அதிகப்படியான வாக்குகளினால் ஒப்புதல்
அளித்திருக்கிறது.
இந்த வாக்கெடுப்பு அரசிற்கு தோல்வியில் முடிவடையும் என்றும், இதனால் அரசினை பதவியிறக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் கடுமையான
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த
மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததனால் இந்த முயற்சி கைகூடவில்லை.
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதியமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்
மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றபோது அதற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களும், எதிராக 67 உறுப்பினர்களும் வாக்களிதிருந்தனர்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் இந்த வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவிய தேசிய அரும்பொருட்கள் அமைச்சர்
அனுர பண்டாரநாயாக்கவும், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக அரச தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் வந்து
அமர்ந்துகொண்ட விஜயதாச ராஜபக்ஷவும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,
மலையக மக்கள் முன்ணணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி.யின் போட்டி நாடாளுமன்ற
உறுப்பினரான நந்தன குணதிலக ஆகியோர் வாக்களித்திருக்கின்றனர்.
எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, மற்றும் இவ்வார முற்பகுதியில்
அரசிற்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்
நான்கு உறுப்பினர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவினர்கள் கடத்தப்பட்ட மூன்று கிழக்கு மாகாண உறுப்பினர்களும் மற்றும் ஈழவேந்தனும் நாடாளுமன்றத்திற்கு
சமூகமளித்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தை வீழ்த்தும் எண்ணத்தில் நாம் எதிர்த்தரப்பிற்கு செல்லவில்லை ஹக்கீம்
அரசாங்கத்தை வீழ்த்தவோ வீழ்த்தப்படும் என்பதை எதிர்பார்த்தோ நாம் எதிர்த்தரப்பிற்கு செல்லவில்லை. எதிர்க்கட்சியினருடன் இணைந்து
அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியிலும் நாம் ஈடுபடப்போவதில்லை. எனினும் வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராகவே வாக்களிப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
விரக்தியின் வெளிப்பாடுதான் அரசாங்கத்திலிருந்து நாம் வெளியேறக் காரணம். தேசிய சபையுடன் இணைந்து செயற்படும் நோக்கம் கட்சிக்கு இல்லை.
இருப்பினும் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினருடன் பேச்சு நடத்தி இணக்காப்பாட்டுக்கு வருவோம். அதன்மூலம் சமூகத்திற்காக
போராடுவோம் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு 02 இல் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ரவூப் ஹக்கீம் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறியதாவது: கொள்கை ரீதியில் தீர்மானித்ததன் பின்னரே அரசாங்கத்திலிருந்து நாம் வெளியேறியுள்ளோம். சுயநலத்திற்காக இந்த முடிவினை எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களிடமிருந்து தொடர்ச்சியாக கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருந்தால்இ கட்சியை பாதுகாக்க முடியாது என்ற நிலை உருவானபோதே அரசாங்கத்திலிருந்து கௌரவமாக நாம் விலகிவிட்டோம்.
இதற்கு பலர் பல காரணங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கலாம். அதுதொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்துடன் சேர்ந்தோம். அந்த நோக்கத்திற்காகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளோம்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தோம். நில சுவீகரிப்பு மதச்சுதந்திரம் மௌலவி ஆசிரியர்
நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தினோம். இந்த விடயங்களை அரசு தரப்பினர்
திறந்த மனப்பான்மையுடன் பார்க்கவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் கரிசனை காட்டியதாகவும் தெரியவில்லை.
சாட்டுப்போக்கு கூறுவதில்தான் அதிக காலத்தை வீனடித்தது. இந்நிலையில் மக்கள் மத்தியிலிருந்து பெரும் அழுத்தம் தொடர்ச்சியாக கட்சிக்கு
கொடுக்கப்பட்டு வந்தது. எனவே முஸ்லிம் மக்களின் அழுத்தம் காரணமாக அரசாங்கத்திலிருந்து நாம் வெளியேற வேண்டிய தேவை ஏற்பட்டது.

No comments:
Post a Comment