Friday 14 December, 2007

தமிழக அகதிமுகாம்களில் தீவிர சோதனை நடவடிக்கை
யாழ் உதயன் செய்திகள்

தமிழக அகதிமுகாம்களில் தீவிர சோதனை நடவடிக்கை கடற்புலி உறுப்பினர்கள் உட்பட புலிகளின் முகவர்கள் எனத் தெரிவிக்கப்படும் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் அதிரடியாகக் கைது செய்யப் பட்ட நிலையில், இங்கிருக்கும் அகதி முகாம் களில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.தமிழக அகதி முகாம்களுக்கு கடந்த 3 மாத காலத்துக்குள் வந்து சென்ற புதிய நபர்கள் யார் யார்? என்ற விசாரணைகளில் "கியூ' பிரிவுப் பொலிஸார் ஈடுபட்டுள்ள னர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. முகாம்களிலுள்ள அகதிகள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றும், உறவினர்களைச் சந்திக்கச் செல்கிறார்கள் என்றும் கூறிவிட்டு வெளியில் கிளம்பிச் செல்கின்றனர். இவர்கள் மூலமாகவும் கடற்புலிகளின் நடவடிக்கை அவர்களைச் சந்திக்கும் முறைகள் குறித்து தகவல் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் கிளப்பியுள்ள நிலையிலேயே இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.தமிழக முகாம்களில் தங்கியுள்ள அகதிகளைப் பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் போர்வையில் கடந்த 3 மாதத்தில் யார் யார்? வந்து சென்றனர் என்பது குறித்து விசாரிக்கும்படி "கியூ' பிரிவுப் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடற்புலிகளின் முகவர்களிடம் விசாரித்தபோது, அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர் அவர்களுக்கு உதவியுள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இதே பிரச்சினையில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டவராவார். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும். மேலும் புலிகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் அமைப்புகளின் நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று "கியூ' பிரிவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted on : Wed Dec 12 8:55:00 2007
புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு யுத்தநிறுத்தம் எதையும் கடைப்பிடிக்காது

ஜப்பானில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம தகவல் விடுதலைப்புலிகளுடன் எதிர்காலத்தில் நடத்தப்படக்கூடிய எந்தப் பேச்சுகளின்போதும் அதற்கு முன்னேற்பாடாக யுத்த நிறுத்தம் ஏதும் கடைப்பிடிக்கப்படவே மாட்டாது.இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று ஜப்பானில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார்.முன்னைய பேச்சுகளின்போது, அவற்றை ஒட்டி எட்டப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாடுகளைப் புலிகள் மோசமாக மீறி வந்துள்ள நிலையில், இனிமேல் நடக்கும் உத்தேசப்பேச்சுகளை ஒட்டி யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கக் கோருவது அர்த்தமற்றது என்றார் அவர்.""புலிகளுடன் பேச நாம் எப்போதும் தயார் என்பதையே நாங்கள் வெளிப்படுத்தி வருகின்றோம். அவர்கள் விரும்பினால் கூடிய ஈடுபாட்டைக் காட்டி எமது இசைவை சாதகமாகப் பயன்படுத்த முடியும்'' என்றார் போகொல்லாகம.

Posted on : Wed Dec 12 11:40:00 2007 .
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆறு எம்.பிக்கள் வெளிநாட்டில் "பட்ஜெட்' வாக்கெடுப்பின்போது பிரசன்னமாவரா?

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நாடாளுமன்றில் நடக்கவிருக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆறு எம்.பிக்கள் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். வாக்கெடுப்பில் பங்குபற்றுவதற்காக அவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நாடு திரும்பி விடுவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வாக்கெடுப்பின்போது வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது எனத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது.எதிர்த்து வாக்களிப்பதற்காக அன்றைய தினம் தவறாது சபைக்கு சமுகம் தருமாறும் தனது எம்.பிக்கள் அனைவரையும் அக்கட்சி பணித்திருக்கின்றது.கட்சியின் கொறடா செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், சிவநேசன், அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோரே தற்சமயம் வெளிநாட்டில் தங்கியிருக்கின்றனர்.அவர்கள் அனைவரும் நாளை மறுதினத்துக்கு முன்னர் நாடு திரும்பி விடுவர் என கூட்டமைப்பின் மூத்த எம்.பி. ஒருவர் நம்பிக்கை வெளியிட்டார்.

No comments: