Tuesday 11 December, 2007

ENB-ஈழச்செய்திகள்11122007- "பல்கலைக்கழக மாணவர் போராட்டம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்'' -அரசு

Tue Dec 11 2007 யாழ் உதயன்
பல்கலைக்கழக மாணவரின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு; தடியடி; விரட்டியடிப்பு
பிற்பகல் வரை களேபரம்; அதனால் கொழும்பில் பதற்றம்

கொழும்பு லிப்டன் சதுக்கப் பகுதியில் மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று
மேற்கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியைப் பொலிஸார்
கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசியும், தண்ணீரைப்
பீய்ச்சியடித்தும், தடியடிப்பிர யோகம் செய்தும்
கலைத்தனர்.இந்தக் களேபரத் தில் சிக்கிய பல மாண வர்கள்
காயமடைந் தனர். பத்துப் பல் கலைக்கழக மாணவர் கள்
பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர் எனத் தெரி
விக்கப்படுகின்றது. தலைநகரின் பாது காப்புக்கு இந்த ஆர்ப் பாட்டக்காரர்கள்
அச்சு றுத்தலை ஏற்படுத்தினார்கள் என்ற கார ணத்தால்
இப்படி நடவடிக்கை எடுக்க நேர்ந் தது எனப் பொலிஸ்
தரப்பில் சம்பவத்துக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.பல்கலைக்கழக பீடமொன்றை வேறு இடத்துக்கு மாற்றும்
நடவடிக்கை, பல் கலைக்கழக மாணவர்களின்
தீர்க்கப்படாத அடிப்படைச் சிக்கல் உட்படப் பல்வேறு
பிரச்சினைகளை முன்வைத்து சப்ரகமுவப் பல்கலைக்கழக
மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களைக் கடந்த
இரு மாதங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு முன்பாக சில
வாரங்கள் தொடர்சியானஅடையாள உண்ணா நோன்புப் போராட்டத்தை அவர்கள்
முன்னெடுத்து வந்தனர்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்தப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தோர் பொலிஸாரினால் பலவந்தமாக
விரட்டியடிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அச்சமயம் 4 மாணவர்கள் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருக்கின்றனர்.இந்தச் சம்பவத்தைக் கண்டித்தே நேற்றையதினம் பெரிய
ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எந்த எதிர்ப்பு வந்தாலும் போராட்டம் தொடரும் என
மாணவர்கள் ஏலவே அறிவித்தபடி நேற்றுப் பேரணியாகத்
தலைநகரில் அவர்கள் சென்றனர். பிக்கு மாணவர்கள்
உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று
முற்பகல் முதல் லிப்டன் சதுக்கப் பகுதியில்
பெருமெடுப்பில் கூடினர். இவர்கள் கோஷங்களை
எழுப்பியவண்ணம் பொலிஸாரின் தடுப்பு வேலிகளையும்
மீறி போக்குவரத்து நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச்
செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.சுமார் இரு மணித்தியாலங்களுக்கும் மேல் போக்குவரத்து
அப்பகுதியில் ஸ்தம்பிதமடைந்ததைத் தொடர்ந்து
பொலிஸாரின் தண்ணீர் பவுசர்கள் சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர்
பீய்ச்சியடிக்கப்பட்டது. பல கோணங்களில் இருந்தும்
கண்ணீர்புகைக் குண்டுகளும் ஏவிவிடப்பட்டன. இதனால்
பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல்
நிலை ஏற்பட்டது.இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் தமது பலத்தைப்
பிரயோகித்து பிக்கு மாணவர் ஒருவர் உட்பட 10
மாணவர்களைக் கைது செய்தனர் எனத் தகவல்கள்
கிடைக்கின்றன.முற்பகல் தொடர்ந்த இந்தக் களேபர நிலை பிற்பகல் வரை
தொடர்ந்தும் நீடித்து அப்பகுதியில் போக்குவரத்துக்கும்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொழும்பில் பெரும்
பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

கதிரவெளியில் தேடுதல்; 122 தமிழர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளியில் நேற்றுமுன்தினம்
காலை 9 மணி முதல் நண்பகல் வரை படையினரால்
தேடுதல் நடத்தப்பட்டது. இத்தேடுதலின்போது 122 தமிழர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொலனறுவைப் பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு
வருகின்றனர். இத்தேடுதலில் 300 இற்கு மேற்பட்ட
படையினரும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சமாதான முயற்சியை ஆரம்பிக்க கோரினால் புலிகளுடன்
பேசி உரிய சூழலை ஏற்படுத்த தயார்-நோர்வே


"இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு
காணும் பொருட்டு மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும்
முயற்சிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
கோரினால் அது குறித்து புலிகளுடன் தொடர்பு கொண்டு
அதற்கான சூழலை உருவாக்க நோர்வே தயாராகவுள்ளது'
என்று இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதான
தூதுவர் ஜோன் ஹென்சன் பௌவர்
தெரிவித்தார்.தற்போதைய நிலைமைகளை உணர்ந்து
இருதரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட முன்வர வேண்டும்.
எவ்வாறெனினும் எம்மால் இரு தரப்பினரையும்
பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு தள்ள முடியாது என்றும்
அவர் கூறினார். ஒஸ்லோவில் நேற்று நடைபெற்ற நோபல்
சமாதான விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும்
பொருட்டு நோர்வே சென்ற ஊடகவியலாளர் குழுவுக்கு
நேற்று முன்தினம் இரவு விருந்துபசாரம் வழங்கிய விசேட
தூதுவர் ஜோன் ஹென்சன் பௌவர், இலங்கை விவகாரம்
குறித்து "கேசரி' யுடன் கருத்து பரிமாறுகையிலேயே
இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள்
தொடர்லில் நீண்ட நேரம் அளவலாவிய அவர் இருதரப்பு
மோதல்களின் பின்னணியில் அப்பாவிப் பொது மக்கள்
பலியாகி வருகின்றனர் என்றும் கவலை வெளியிட்டார்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இராணுவ
முன்னெடுப்புக்கள் பரஸ்பரம் அதிகரித்து செல்லும்
நிலையில் அமைதிப் பேச்சுக்களை உடனடியாக
ஆரம்பிப்பது சாத்தியமாகுமா? என்று கேட்டபோது,
நெருக்கடிக்கு அமைதி வழியிலேயே நிரந்தர தீர்வுகாணக்
கூடியதாக இருக்கும். எவ்வாறெனினும் பேச்சுக்களை மீள
ஆரம்பிப்பதற்கான கால இடைவெளி அதிகரித்துச்
செல்லுமானாலோ அன்றேல் இழுபட்டுச் சென்றாலோ
அதற்கான வாய்ப்புக்களை இல்லாமல் போகலாம்.
மோதல்கள் அதிகரித்துச் செல்கையில் நிலைமை மேலும்
மோசமடையவே வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் இலங்கையை எவ்வாறான
கண்ணோட்டத்துடன் பார்க்கின்றது? தற்போதைய
சூழ்நிலையில் இலங்கைக்கு சாதகமான போக்கு நிலவும்
எனக்கருத முடியுமா? என்று வினவியபோது,
கருத்துகூற மறுத்துவிட்ட விசேட தூதுவர் பௌவர்,
இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும். அனைத்து
சமூகங்களும் நிம்மதியாக வாழும் சூழல்
தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றே நோர்வே
எதிர்பார்க்கின்றது என்றார். இலங்கை இனப்பிரச்சினை
விவகாரம் தொடர்பில் நாங்கள், விசேட சமாதானத்
தூதுவர் என்ற வகையில் அடிக்கடி இந்தியா சென்று
வருவதுண்டு. அந்த வகையில் இந்தியாவின் தற்போதைய
போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்று கூற முடியுமா?
என்ற கேள்விக்கு சமாதானத் தூதவர் ஹன்சன் பௌவர்
பதிலளிக்கையில்,
இந்தியாவின் அனுசரணை இலங்கை இனப்பிரச்சினை
தீர்வுக்கு அவசியமாதாகவே கருதப்படுகின்றது.
பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதும்
இந்தியாவின் எதிர்பார்ப்பாகவுள்ளது. எவ்வாறெனினும்
நிலைமையை இந்தியா அவதானித்து வருவதாகவே
கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நோர்வேயின் மத்தியஸ்தப் பணி குறித்து ஜே.வி.பி. உட்பட
ஒரு சில கடும் போக்காளர்கள் கடுமையாக விமர்சித்து
வருகின்றனரே! அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்
என்ற கேட்டபோது,
நாம் எந்தவொரு பகுதியினருக்கும் பக்கச்சார்பாக நடந்து
கொள்ளவில்லை என்று கூறிய பௌவர், இலங்கையில்
அமைதி ஏற்பட வேண்டும் என்ற வகையிலும்
சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் அழைப்பின் பேரிலேயே
மத்தியஸ்தம் வகிக்க பிரசன்னமானோம். இந்த
மத்தியஸ்தத்துக்கு அப்பால் இலங்கைக்கும்
நோர்வேயிக்கும் இடையில் நீண்டகால பரஸ்பர
நட்புறவுகள், இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகள் உள்ளன.
இலங்கையை நட்பு நாடாகவே நோர்வே கருதி நீண்டகால
உறவைப் பேணி வருகின்றது. எனவே மத்தியஸ்தத்தோடு
மாத்திரம் நின்றுவிடாமல் இருதரப்பு உறவுகள் குறித்தும்
ஊடகவியலாளர்கள் விபரிக்க வேண்டும் என்றார்.

இலங்கைத் தமிழருக்கான ஆதரவைத் தடுக்கும் இந்திய
உளவுத்துறை

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதர வாகத் தமிழ்நாட்டுத்
தமிழர்கள் கிளர்ந் தெழுவதைத் தடுக்க இந்திய மத்திய
உளவுத்துறை தீவிரமுயற்சி செய்து வருவதாகத்
தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் "ஜூனியர் விகடன்'
தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்
எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன் ஊடக மாநாடொன்றில் சு.ப.
தமிழ்ச்செல்வனின் மறைவிற்குப் பின்னால் புலிகள்
இயக்கத்தின் தலை வர் பிரபாகரனின் கரங்களே இருக்
கின்றன என்று ஒரு "குண்டைப்' போட்டார் மத் திய
உளவுத்துறையில் இருக்கும் நண்பர்களிடமும் இதுபற்றி
பேசியதாகக் கூறியுள்ளார். தமிழக அரசையும் இவர்
கடுமையாக விமர் சிக்க ஆரம்பித்திருக்கிறார்.இது இந்திய மத்திய உளவுத்துறை யான "றோ' தமிழகக்
காங்கிரஸ் கட்சியை இலங்கைத் தமிழர் ஆதரவுக்கு
எதிராக தூண்டி வருவதைக் காட்டுவதாக "ஜூனியர்
விகடன்' தகவல் வெளி யிட்டுள்ளது.

இலங்கையில் 51.3 வீதமானோருக்கு போதுமான உணவு
கிடைப்பதில்லை ஐ.நா. தலைமையகம் தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51.3
வீதமானோருக்கு ஆகக்குறைந்த போதுமான போஷணை
உணவுகள்கூட கிடைப்பதில்லை. உள்நாட்டு போரினால்
ஏற்பட்ட அழிவுகள் மற்றும் இடம்பெயர்வு காரணமாக
வடக்கு கிழக்கு பகுதிகளில் வறுமை நிலை
அதிகரித்துள்ளது என்று கொழும்பிலுள்ள ஐக்கிய
நாடுகளின் தலைமையகம் தெரிவித்துள்ளது. உலக
வறுமை ஒழிப்பு தினம் தொடர்பான நிகழ்வு
கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்
அலுவலகத்தின் இணைப்பாளர் அமீன் அவார்ட், யு. என். டி.
பி.யின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட
ஐ.நா. முகவர் நிறுவனங்களின் தலைவர்களும், சிவில்
சமூக அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஐ.நா.
தலைமையகம் இலங்கை குறித்து மேலும்
தெரிவித்துள்ளதாவது:
மாதாந்தம் ரூபா 2, 240இற்கு குறைவான
வருமானமுடையோர் வறுமைக் கோட்டின்கீழ் உள்ளதாக
அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. ஏனைய தொழில்
துறைகளைப் பார்க்கிலும் விவசாயத் துறையில்
ஈடுபடுவோர் மிகவும் வறிய நிலையில் உள்ளனர்*.

இலங்கையில் எட்டுப் பேரில் இருவர் வறுமைக்
கோட்டின்கீழ் உள்ளனர். எதிர்வரும் 2015ஆம் ஆண்டிற்குள்
வறுமைக் கோட்டின்கீழ் உள்ளோரை எட்டுப் பேரில்
ஒருவராக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும்.
உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட அழிவுகள்,
இடம்பெயர்வுகள் மற்றும் சுனாமி அனர்த்தத்தின்
காரணமாக வறுமை நிலை அதிகரித்துள்ளது.
இலங்கையில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 13. 5
வீதமானோர் போசனைக் குறைபாட்டை எதிர்நோக்கியுள்ள
அதேவேளை, 29.4 வீதமானோர் குறைந்த நிறை
உடையவர்களாக உள்ளனர்.
இலங்கையில் தேசிய வறுமை மட்டமானது 23 வீதமாக
உள்ளது. இது ஏனைய ஆசிய நாடுகளைவிட
முன்னேற்றமான நிலையாகும். இந்தியாவில் ???
வீதமாகவும், பாகிஸ்தானில் 32.6 வீதமாகவும்,
பிலிப்பைன்ஸில் 36.8 வீதமாகவும் வறுமை மட்டம்
உள்ளது.
* அழுத்தம் ENB

No comments: