Saturday 22 December, 2007

ஈழச்செய்திகள்: 221207: கிழக்கு மாகாணம் இராணுவமயம்

யாழ் உதயன் செய்திகள்
Posted on : Fri Dec 21 10:50:00 2007 .
கிழக்கு மாகாணத்துக்கு சிவில் பாதுகாப்புப் பிரிவு! இரண்டரை லட்சம் பேர் இணைப்பு; அவர்களுக்கு ஆயுதமும் அலவன்ஸூம்

கிழக்கு மாகாணத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, சிவில் பாதுகாப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுக்கு இதுவரை இரண்டரை லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன.தற்போது கிழக்கில் செயற்படும் ஊர்காவல் படையினருக்கு மேலதிகமாகவே புதிய பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா இத்தகவலை நேற்றை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தப் பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.தற்போது செயற்படும் ஊர்காவற்படைக்கு மேலதிகமாக இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.சிவில் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு ஆயு தங்களும் வழங்கப்பட்டுள்ளன.கிழக்கில் எல்லைப்பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதப்படுத்துவதற்காக ஊர்காவற்படையினருக்கு மேதிகமாக சிவில் பாதுகாப்புப் பிரிவை அமைத்துள்ளோம். அவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கி வருகின்றோம்.அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன என்று அமைச்சர் பதிலளித்தார்.மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை எல்லைப் பிரதேசமான மணலாறு மற்றும் கிழக்கின் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டே இந்தப் புதிய பிரிவு அமைக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டது.

Fri Dec 21 10:30:00 2007
முகமாலை-நாகர்கோவில் களமுனைகளில் நேற்றும் பல மணிநேரம் கடும் மோதல்கள்! மழை முழக்கத்துடன் ஷெல் முழக்கமும் அதிரவைத்தது!!

முகமாலை, கிளாலி, நாகர்கோவில் முன்னரங்கப் பகுதிகளிலும் அவற்றை அண்டிய களமுனைகளிலும் நேற்றுக் கடும் மோதல்கள் இடம்பெற்றன. குடாநாட்டில் நாள் முழுவதிலும் கடும் மழை பெய்தவேளை, அதன் முழக்கத்துக்கு மத்தியில் ஷெல் முழக்கங்களும் அடிக்கடி கேட்டவண்ணம் இருந்தன. இரண்டு முழக்கங்களாலும் குடாநாடு நேற்று அதிர்ந்தது.முகமாலையில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் சிலமணி நேரங்கள் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 4 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் மூவர் காயம் அடைந்தனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார். புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.நேற்று அதிகாலை 5.45 மணியளவில் கிளாலியில் இரண்டு புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். படைத்தரப்பில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.""காலை 9.00 மணிக்கு நாகர் கோயில் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின்போது இரண்டு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். வெலிஓயாத் கொக்கித்தொடுவாய் மற்றும் கம்பிலியாவ ஆகிய இடங்களிலும் சிறு மோதல்கள் இடம்பெற்றன. இதில் இரண்டு புலிகள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.ஆனால், ""நாகர்கோவிலில் படையினரின் முன்நகர்வுத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் படைத் தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் ஒன்றும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன'' என்று புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.நாகர்கோவில் முன்னரங்கப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது படையினர் தாக்குதல் நடத்த முன்நகர்ந்த போது அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.விடுதலைப் புலிகளின் இம் முறியடிப்புத் தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர்.அப்பகுதியில் விடுதலைப் புலிகள் தேடுதல் நடத்தியபோது சிதைவடைந்த நிலையில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலம் ஒன்றையும் படைக்கலங்கள் மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் மிக மோசமாக சிøதவடைந்திருந்த காரணத்தினால் விடுதலைப் புலிகள் அச்சடலத்øத உரிய படை மதிப்புடன் அடக்கம் செய்தனர்.இந்த முறியடிப்புத் தாக்குதலில் படைத்தரப்பினரிடமிருந்து ரி 56 துப்பாக்கி 01, ரவைக்கூடுகள் 03, தண்ணீர்க் கொள்கலன்கள் 02, ஜக்கட் ரவைக் கூடுதாங்கி 01 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச் சம்பவத்தில் தமக்கு எதுவித இழப்புகளும் ஏற்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பில் மேலும் கூறப்பட்டது.

Fri Dec 21 10:30:00 2007
குடாநாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் 9,000 பேர் இடம்பெயர்வு; முகாம்களில் பலர்

குடாநாட்டில் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 2,621 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாள்களாக இங்கு காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.வெள்ளப்பாதிப்புக் குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை, மருதங்கேணி, சாவகச்சேரி, உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன என்றும்நேற்றுமாலைவரை கிடைத்த தகவல்களின்படி 9 ஆயிரத்து 222 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார். இந்தப் பிரதேசங்களில் 26 வீடுகண்ள் முழுமையாகவும் 392 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன என்றும் யாழ்ப்பாணம், மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 1,296 குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அரச அதிபர் கூறினார்.வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு யுனிசெவ், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன உணவுப் பொருள்கள் தவிர்ந்த உதவிப் பொருள்களை வழங்கியுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.அவர்களைவிட நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள தமது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இந்தியா உதவும் என்பதில் இன்னமும் நம்பிக்கை உள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு வீரகேசரி நாளேடு

இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்க எமது அண்டை நாடான இந்தியா முன்வந்து உதவும் என்பதில் எமக்கு இன்னமும் நம்பிக்கையுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களில்தான் தலையிடப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக அ ரசியலின் தற்போதைய நிலைவரம் காரணமாக மத்திய அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலையில் கலைஞர் கருணாநிதி சில கருத்துக்களை கூறியுள்ள போதிலும் அவரது அடிமனதில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்கள் குறித்து சிந்திக்கக் கூடியவராகவே இருக்கின்றார்.
எமது நாட்டுப் பிரச்சினையை தீர்க்கக் கூடிய ஒரே நாடு இந்தியாதான் என்பதை இலங்கைத் தமிழர்கள் முற்றுமுழுதாக நம்பியுள்ளனர். எமது விடுதலைக்கும் சமாதானத்துக்கும் என்றுமே கைகொடுப்பது இந்தியாதான் என்பதிலும் ஐயமில்லை.
அந்த வகையில் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியாவினால் மட்டுமே முடியும். எமக்கு அந்த நாடு முன்வந்து உதவும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய மத்திய அரசு ஆயுதம் வழங்கும் விடயங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களையே கூறி வருகின்றார்.
அவரது கருத்துக்களும் இலங்கைத் தமிழர் போராட்டத்தின் மீதான போக்குகளும் தமிழ் மனங்களை புண்படுத்துவனவாகவே அமைந்துள்ளன.

ஈழத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணை அகழ்வாராய்ச்சித்திட்டம்

காவேரி ஆற்றுப்பள்ளத்தாக்கின் ஈழதேசப் பகுதியில் எண்ணை அகழ்வாராய்ச்சி நடத்த ஸ்ரீலங்கா அரசு முயல்கிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் வரையான கடல் மற்றும் ஆழ் நிலப்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான வளங்கள் இருப்பதாக கண்டறிந்த பிந்திய ஆய்வுகளின் அடிப்படையில் இம் முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு இறங்கியுள்ளது.சீன இந்திய அரசுகள் இவ் வாய்ப்பைக் கைப்பற்ற ஆலாய்ப்பறக்கின்றன. -ENB

No comments: