Tuesday 22 January, 2008

ஈழச்செய்திகள்:22012008 கழுதைகள்கூட்டணி


மட்டு. உள்ளூராட்சி தேர்தல் ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். கூட்டணி வேட்பு மனு தாக்கல்
1/21/2008 8:22:31 PM வீரகேசரி இணையம்
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா
அணி) ஆகிய கட்சிகள் இணைந்த சுயேட்சைக்குழு இன்று தாக்கல் செய்துள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரையம்பதி செங்கலடி, வாகரை,
வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவித்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம் வேட்பு மனுக்களை கையேற்றார்.
ஆரையம்பதி பிரதேச சபைக்கு பி.சுரேந்திரன், செங்கலடி சபைக்கு வீரக்குட்டி சேகர், வாழைச்சேனை சபைக்கு அந்துணன் கந்தசாமி, வாகரை பிரதேச
சபைக்கு கணபதிப்பிள்ளை யோகநாதன் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஈ.பி.டி.பி.பிரமுகர்களான கே.அருமைலிங்கம்
சிவாமாமா, புளொட் பிரமுகர் பகீரதன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு .துளியேனும் மாற்றமில்லாத அனைத்துக் கட்சி யோசனை!
புதனன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத் திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை விட,
ஒரு சிறு துளியேனும் மாற்றமும் இல்லாத தீர்வு யோசனையையே எதிர்வரும் புதன்கிழமை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம்
சமர்ப்பிக்கும்!பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இயங்கும் அனைத்துக் கட்சிக் குழு, 1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்திலிருந்து ஓர்
அங்குலமேனும் முன்னே நகரவில்லை. அத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை சரிவர நடைமுறைப்படுத்தல், ஏற்கனவே அமுல் செய்யப் பட்ட சரத்துக்களில் உள்ள
நடைமுறைக் குறைபாடுகளை, குளறுபடிகளை எவ்வாறு களைவது, நேராக்குவது, சீராக்குவது என்பன போன்ற சில்லறை விடயங்களே அந்த
யோசனையில் அடங்கி இருப்பதாக அனைத்துக் கட்சிக் குழுவுக்கு மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன. மொத்தத்தில் சட்டத் திருத்தத்தின் சரத் துக்களை எவ்வாறு முழுமையாகவும் திறம் படவும் நடைமுறைப்படுத்தலாம் என்ற வழிமுறைகளே,
சிபார்சுகளே சமர்ப்பிக்கப் பட இருக்கும் யோசனையில் பிரதான இடம் வகிப்பதாக அதே வட்டாரங்கள் மேலும் கூறின. 1990ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண சபை இயங்கத் தொடங்கிய பின் னர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக நடை முறையில் உருவாகிய
சிக்கல்கள், தடங் கல்களை நிவர்த்தி செய்வது குறித்தும் அ.க. குழுவின் யோசனையில் எடுத்துரைக்கப் பட்டுள்ளதாம். வடக்கு மாகாண சபை, கிழக்கு
மாகாண சபை ஆகியன தனித்தனியாக இயங்கும் என்றும் அதற்கேற்ற விதத்தில் நிர்வாக விதிகளில் கொண்டுவரப்பட வேண்டிய சில மாற்றங்கள்
குறித்தும் அ.க. குழு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருப் பதாகவும் அறியவருகிறது. மொத்தத்தில் எவ்வித சத்துமில்லாத வெறும் சக்கை மட்டுமே தீர்வு யோசனை யாக முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் வர்ணித்தன. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இதனைவிட முன்னேற்றகரமாக எதுவும் செய்யமுடியாத நிலையில் தாம் உள்ளதாக அனைத்துக்
கட்சிக்குழுவின் பிரமுகர் ஒருவர் கவலை தெரிவித்தார் என்றும் அறியவந்தது.
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல்; அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
1/21/2008 5:34:35 PM வீரகேசரி இணையம்
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் யுத்தம் வலுவடைந்து வருவதையடுத்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அகதியாக வந்துள்ளவர்களில் சிலர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்
விடுதலைப்புலிகள் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Posted on : Mon Jan 21 2:00:00 2008
மொனறாகலை தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புச் சாதனங்கள்
அதனைக் கண்டவர்கள் விரைவில் செய்திவரும் என்று
மற்றவர்களிடம் கூறினர் மொனறாகலை மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத் தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து
வெளிவரும் "சண்டே ரைம்ஸ்' வார ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.புத்தல தாக்குதல் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகலை மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை (15ஆம் திகதி) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் வெலிபுரச் சந்தி வீதியைக் கடந்து செல்வதனைக் கிராமவாசி ஒருவர்
பார்த்தார். அந்தக் கிராமம் ஒக்கம்பிட்டியப் பகுதியின் முனையில் உள்ளது. கடந்து சென்றவர்கள் இராணுவத்தினர் என்றே அவர் நம்பினார். ஒருமணி
நேரத்தின் பின்னர் அவர் கிராம சேவையாளரை நேரில் சந்தித்து தாம் கண்டவற்றினைக் கூறியுள்ளார்.அந்த நபர்களை அரை மைல் தொலைவில் இருந்தே தாம் கண்டார் என அவர் கிராம சேவையாளரிடம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து
கிராமசேவையாளர் புத்தல பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு இந்தச் சம்பவத்தைக்கொண்டு சென்றார். காவல்துறை அதிகாரி
12 பொலிஸாருடன் அந்தப் பகுதிக்குச் சென்று கிராமவாசியிடம் விசாரணைகளை நடத்தினார்.வெல்பர சந்திக்குக் கிராமவாசியை அழைத்துச்சென்று திசையை காண்பிக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளனர். பின்னர் இராணுவத்தினர் என்று
சந்தேகிக்கப்படும் நபர்கள் சென்ற பாதை வழியாக சிறிது தூரம் சென்ற பொலிஸார் திரும்பிச் சென்றுவிட்டனர். எனினும் இராணுவத்தினரின்
நடமாட்டத்திற்கான எந்தத் தடயங்களும் இருக்கவில்லை.கடந்த புதன்கிழமை காலை (16ஆம் திகதி) 6.45 மணியளவில் ஒக்கம்பிட்டிய வைத்தியசாலையில் சிற்×ழியரான மனல் விஜேசிங்க என்ற பெண்
வேலைக்கு மோட்டார் சைக்களில் சென்றுகொண்டிருந்தபோது இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை வெலிபர சந்தியில் கண்டார்.
அவர்களில் சிலர் நின்று கொண்டிருந்தனர். சிலர் மரத்தின் பின்னால் மறைந்திருந்தனர். தனது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அவர்,
இராணுவத்தினர் போன்று நின்றவர்களை நோக்கி நடந்துசெல்ல ஆரம்பித்தார். அப்போது அவர்களில் ஒருவர்தமக்கருகில் வரவேண்டாம் என்றுசைகை
மூலம் காண்பித்தார். அவர்களின் அணுகு முறைகள் அவர்கள் ஒரு பதுங்கித் தாக்குதல் சம்பவத்திற்கு காத்திருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியது.ஆயுததாரிகளில் ஒருவர் தனது முதுகில் பெரிய தொலைத் தொடர்புக்கருவி ஒன்றை வைத்திருந்தார். அதன் அலைவாங்கி மிகவும் நீளமாக இருந்தது.
இது அவர்கள் வேறு ஒரு தளத்துடன் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பதனை உறுதிப்படுத்துகின்றது. அவர்கள் எல்லோரும் தாக்குதல்
துப்பாக்கிகளை ஏந்தியிருந்தனர்.விரைவில் செய்தி வரும் என்றார்வேலைக்குச் சென்ற மனல் விஜேசிங்க, தனது சகாக்களிடம் வெலிபர சந்தியில் ஏதோ ஒரு நடவடிக்கைக்காக இராணுவத்தினர் தயாராக இருக்கின்றனர்
எனக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் விரைவில் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர் என செய்திவரும் எனவும் அவர் தெரிவித்தார்.காலை 7.25 மணியளவில் பஸ் ஒன்று சில பத்துப் பயணிகளுடன் வெலிபரச் சந்தியைக்கடந்து சென்றது. அதன் பின்னர் ஆயுததாரிகளைக்
காண்பதற்காக சில கிராமவாசிகள் வெலிபரச் சந்தியை நோக்கிச் சென்றனர். ஆனால், அவர்களைக் கலைந்து செல்லுமாறு ஆயுததாரிகள் சைகை
காட்டினர். எனவே, இராணுவத்தினர் தாக்குதல் ஒன்றுக்காகப் பதுங்கியிருப்பதாகவே அவர்கள் நம்பினர்.7.35 மணியளவில் தரித்து நின்ற பஸ் வெலிபர சந்தியை அண்மித்தது, அப்போது கிளைமோர் வெடித்தது. பஸ்ஸில் இருந்து தப்பிச் செல்ல
முயற்சித்தவர்களின் மீது மறைந்திருந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். அதன் பின்னர் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்த ஆயுததாரிகள்
கடுமையான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதுடன், ஒருவர் முன்வாசல் வழியாக பஸ்ஸிற்குள் ஏறி அருகில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளார்.கிளைமோர்த் தாக்குதலில் 10 பயணிகளே காயமடைந்திருந்தனர். ஆனால், சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர் முற்பகல் 11 மணியளவில் அவர்கள் அங்கிருந்து பயிர்ச்செய்கைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 விவசாயிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.முற்பகல் 9.55 மணியளவில் இந்த செய்தி இராணுவத்தினரின் சிறப்பு அணியினரின் பயிற்சிப் பாசறையான கல்கே பகுதி முகாமுக்கு எட்டியது. அது
கதிர்காமத்திற்கும் புத்தள பகுதிக்கும் இடையில் உள்ளது. தளத்தில் இருந்த அதிகாரி, மூன்று படையினருடன் அருகில் இருக்கும் இராணுவ முகாமில்
உள்ள இராணுவத்தினரை எச்சரிக்கும்நோக்குடன் "யுனிக்கோன்' கவச வாகனத்தில் சென்றார். அப்போது மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு
ஒன்று வெடித்தத்தினால் அதில் சென்ற மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர். அவர்கள் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு
எடுத்துச்செல்லப்பட்டனர்.ஆனால், அந்தக் கிளைமோரும் பயணிகள் பஸ் ஒன்றைக் குறிவைத்தே வைக்கப்பட்டிருந்தது என சந்தேகிக்கப்படுகின்றது. அந்தக் கிளைமோரின் சில
குண்டுகள் கவச வாகனத்தின் இரும்புத் தகட்டை ஊடறுத்துச்சென்று மற்றைய தகட்டின் ஊடாகத் வெளிவந்திருந்தது.எனவே, அதிக தடிப்புக்கொண்ட தகடுகள் பொருத்தப்பட்ட பஸ்களே தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கக்கூடியது என்பது தெளிவானது.
ஆனால், அவ்வாறு பஸ் வடிவமைக்கப்பட்டால் அவை மெதுவாக நகர்வதுடன், அதிக எரிபொருட்களும் தேவை.புதன்கிழமை மாலை வெலிபர சந்திக்கு அண்மையான காட்டுப் பகுதிக்குள் கொமோண்டோப் படையணியினர் தேடுதலை ஆரம்பித்தனர். பின்னர்
ஆயுததாரிகளுடன் நடைபெற்ற மோதலில் கொமோண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார் எனச் செய்தி பரவியிருந்தது. ஆனால்,
அப்படி எதுவும் நடைபெறவில்லை.கொமாண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் பொறித் துப்பாக்கியில் தவறுதலாகக் காலை வைத்தபோது அது வெடித்ததனால் அவர்
காயமடைந்துள்ளார். ஆனால், ஆயுததாரிகள் அந்தப் பகுதியில் இருந்து சென்றுவிட்டனர். அதன் பின்னர் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது.அதனுடன் அந்தச் சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை. அதற்கு மறுநாள் வியாழக்கிழமை ஆயுததாரிகள் அருகில் உள்ள இரு கிராமங்களான
கலவெலிகம, ஹம்பேகமுவ பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் மொனறாகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் காணப்பட்டனர். அங்கு இரு
கிராம சேவையாளர் உள்ளிட்ட 10 பேரைச் சுட்டுக் கொன்றனர். அதாவது கடந்த இரண்டு நாளில் தெற்கின் ஆழமான பகுதியில் 42 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மொனறாகலை மாவட்டத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக உதவிக் காவல்துறை ஆணையாளரை நியமிப்பதற்கு அரசு சிந்தித்து
வருகின்றது. முன்னாள் சிறப்பு அதிரடிப்படை உதவி காவல்துறை ஆணையாளரான கே.எம்.சரத்சந்திரா நியமிக்கப்படலாம் என்று
தெரிவிக்கப்படுகின்றது.''கடந்த ஒக்டோர் மாதம் விடுதலைப் புலிகள் யாலப் பகுதியில் இருந்தபடை நிலையைத் தாக்கியதன் பின்னர் இந்தப் பகுதியின் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதாவது பொலிஸார், ஊர்காவல் படையினர் ஆகியோரை நியமிப்பதுடன், கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டங்களையும் அரசு
அறிமுகப்படுத்த உள்ளது. பின்னர் அவர்களை ஊர்காவல் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் அரசின் திட்டமாகும். இந்தத் திட்டங்கள்
பல கிராமங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆனால், அதற்கான வளங்கள் போதாது.அண்மையில் நடைபெற்ற இத்தாக்குதல்கள் அரசிற்கு பெரும் செலவினங்களை ஏற்படுத்தியுள்ளன. அதாவது பொலிஸ்துறையில் ஊர்காவல்
படையினரைப் பெருமளவில் சேர்ப்பதுடன், பொதுமக்களுக்கும் பெருமளவு ஆயுதங்களை வழங்கவேண்டிய நிலையில் அரசு உள்ளது. எனவே தான்
கிராமவாசிகளுக்கு "சொட்கண்' துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.எரிபொருள் மற்றும் உணவு விலைகள் உயர்ந்து செல்கையில் போர்ச் செலவும் வேகமாக அதிகரித்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. இது
பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, முன்னைய ஈழப்போர்களைவிட நான்காம் ஈழப்போர்
மிகவும் நெருக்கடி மிக்கது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2ம் இணைப்பு)தனமன்விலவில் காவல்துறையினரின் காவலரண் தாக்கியழிப்பு: 3
காவல்துறையினர் பலி
[செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2008, 04:20 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தின் தனமன்வில கித்துல்கொட பகுதியில் அமைந்திருந்த காவல்துறையினரின் காவலரண் மீது நேற்று இரவு
நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டுள்னர்.
இச்சோதனைச் நிலையத்திலிருந்த ஆயுதங்களை தாக்குதல் நடத்தியவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் காவலரணும் முற்றாகத்
தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு 8:30 மணயளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தாக்குதல்
நடத்தியவர்கள் மறைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட பகுதிகளில் இரவு இரவாக தேடுதல் நடைபெற்றது.
அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் ஒருபகுதியினர் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிரடிப்படையினர், படையினர், காவல்துறையினர், ஊர்காவற் படையினர் என சுமார் 8 ஆயிரம் பாதுகாப்புப் பிரிவினரை உள்ளடக்கி கடந்த
சனிக்கிழமை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதல் குறித்து படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய குழுவினர் கித்துல்கொட காட்டுப்பகுதியில் அமைந்திருந்த காவல்துறையினரின் காவலரணை
தாக்கியுள்ளனர். இதில் காவல்துறை காவல்துறை உப பரிசோதகர் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது சடலங்கள்
தனமல்வில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர். மேலதிக படையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கையும் தொடர்கிறது என்றார்.
இதில் தாக்குதல் நடத்தியோரால் ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02, ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02, ரவைக்கூடுகள் - 08, ரவைகள் - 240 ஆகியன
கைப்பற்றப்பட்டுள்ளன.
தாழையடி கொழும்பு குண்டுவெடிப்புகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை: மகிந்த ராஜபக்ச
[செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2008, 05:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அரச தலைவர் மாளிகையில் இன்று திங்கட்கிழமை மதிய விருந்து கொடுக்கும்
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொழும்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும்
இல்லை என்று தெரியவந்துள்ளது. இக்குண்டு வெடிப்புக்களின் பின்னால் பிறிதொரு குழுவினரே உள்ளனர்.
எதுவித சேதங்களும் ஏற்படாமல் வெறும் சத்தம் மட்டுமே வெளிப்படும் குண்டுவெடிப்புக்களை விடுதலைப் புலிகள் விரும்ப மாட்டார்கள். சேதங்களை ஏற்படுத்தாத போலியான குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு தமது உறுப்பினர்களை அவர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈடுபடுத்தியிருக்க
மாட்டார்கள். அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களாகவே இவற்றை நான் கருதுகிறேன். இத்தகைய குண்டுவெடிப்புக்களின் பின்னால் வேறு
ஒரு குழுவினர் செயற்படுகின்றனர்.
படையினர் வடக்கில் தாக்குதல்களை மேற்கொண்டு வரும்போது இத்தகைய குண்டுவெடிப்புக்களின் மூலம் தென்னிலங்கையில் ஒரு அழுத்தத்தை
ஏற்படுத்தவே முனைகின்றனர்.
கொழும்பிலும், கம்பஹா மாவட்டத்திலும் இத்தகைய மேலும் பல குண்டுவெடிப்புக்களை நிகழ்த்துவது அவர்களின் விருப்பமாக இருக்கலாம். நாங்கள்
இதனை எதிர்கொள்வோம். கொழும்பு பாதுகாப்பற்றது என்ற ஒரு மாயயை ஏற்படுத்துவதே இத்தாக்குதல்களின் நோக்கமாகும்.
இது விடுதலைப் புலிகளின் செயல் அல்ல என்பது தெட்டத் தெளிவாகியிருக்கின்றது. நானும் அப்படித்தான் நம்புகிறேன். நாங்கள் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம் என்றார் அவர்.

No comments: