Friday, 18 January 2008

ஈழச்செய்திகள்:அமெரிக்காவின் கடற் படைக் கட்டளைத்தளபதி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற் படைக் கட்டளைத்
தளபதி இலங்கை விஜயம்

1/18/2008 4:09:05 PM வீரகேசரி இணையம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற் படைக் கட்டளைத்
தளபதி அட்மிரல் ரொபேட் எப் வில்லாட் தலைமையிலான
உயர்மட்ட கடற்படை அதிகாரிகள் குழு பாதுகாப்புச்
செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை நேற்று பாதுகாப்பு
அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு
அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த உயர்மட்ட கடற்படை அதிகாரிகள்
குழு நேற்று கொழும்பிலுள்ள கடற்படைத்
தலைமையகத்திற்கு விஜயம் செய்தது. இதன்போது
அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அட்மிரல்
வில்லாட்டுக்கு அங்கு கடற்படையினரால் அணிவகுப்பு
மரியாதையும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அட்மிரல் வில்லாட் தலைமையிலான
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படைத்
தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணகொடவைச்
சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும் இலங்கையின்
கடற்பாதுகாப்புக் குறித்தும் ஆராய்ந்தார்.
இதன் போது, இரு தரப்புக்குமிடையிலான ஒத்துழைப்பால்
ஏற்பட்ட சிறந்த பலாபலன்கள் குறித்து இரு தளபதிகளும்
சுட்டிக்காட்டியதோடு, பல்வேறு துறைகளிலும்
இருதரப்புக்குமிடையே பரஸ்பர ஒத்துழைப்புக்களை
மேற்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
அத்துடன், இலங்கை கடற்பரப்பிலும் அதற்கு அப்பாலும்
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக்
கடற்படையினர் தாக்கியழித்ததைப் அட்மிரல் வில்லாட்
பாராட்டினார். அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட
கடற்படையினருக்கும் அவர் தனது பாராட்டுக்களைத்
தெரிவித்தார்.
அட்மிரல் வில்லாட் 2007 ஆம் ஆண்டு மே மாதம்
அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற்படைத் தளபதியாக
பொறுப்பேற்றார். இன்று இவர் உலகின் மிகப்பெரும்
படையணியொன்றின் கட்டளைத் தளபதியாகவுள்ளார்.
இந்தப் படையணி 100 மில்லியன் சதுர மைல்
கடற்பரப்பையும் சுமார் 180 கப்பல்களையும் 1500
விமானங்களையும் மற்றும் 1,60,000 கடற்படையினர்
ஆகியோரை உள்ளடக்கியதாகுமெனவும் அச்செய்தியில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி உட்பட உயர்மட்ட குழுவினர் யாலைப்
பிரதேசத்துக்கு திடீர் விஜயம்

1/18/2008 4:06:41 PM வீரகேசரி இணையம்
தெற்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடனடி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்காக இராணுவத் தளபதி லெப்டினட்
ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர்மட்ட
குழுவொன்று நேற்று யாலைப் பிரதேசத்துக்கு திடீர்
விஜயம் செய்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக
மையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் சிவிலியன்கள் மீது புலிகள்
கடந்த 16 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களை
அடுத்து அப்பிரதேசத்தி;ல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இக்குழு அங்கு
விஜயம் செய்துள்ளது.
அப்பிரதேச பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் விசேட
கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. இ;தில்
தெற்குப் பிராந்திய இராணுவத் தளபதி பிரிகேடியர் சுதந்த
ரணசிங்க, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன
உட்பட மற்றும் பிராந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்.இங்கு தேவையான பாதுகாப்பு
ஆலோசனைகளை வழங்கிய இராணுவத் தளபதி யால
காட்டுப்பிரதேசத்துக்குள் புலிகள் ஊடுறுவுவதைத் தடுதக்க
தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பணிப்புரை
விடுத்தார்.

Posted on : Wed Jan 16 10:05:00 2008
அதிகாரப் பகிர்வை கைவிட்டு அனைத்து

கட்சிக்குழுவை கலைக்குக!
ஜே.வி.பி அரசுக்கு அழுத்தம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்ய வேண்டும். அதிகாரப்
பகிர்வுத்திட்டத்தைக் கைவிட்டு அனைத்துக் கட்சி
பிரதிநிதிக்குழுவைக் கலைத்து விடவேண்டும். இவ்வாறு
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் ஜனதா
விமுத்தி பெரமுனையின் அரசியல் சபை நேற்று
அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:புலிகளை தடை செய்வதுடன் அதிகாரப்பகிர்வு திட்டத்தை
கைவிட்டு அனைத்துக் கட்சிகள் ஆலேசனைக்குழுவை
கலைத்தால் மட்டுமே புலிகளுக்கு எதிரான
நடவடிக்கைகளுக்கு தேசப்பற்றாளர்களின் ஆதரவை
திரட்ட முடியும்.மக்கள் பாரிய சவால்களுக்கு முகம்
கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அரச
நிர்வாகத்தின் சீர்கேடுகளினால் பொருள்களின் விலை
நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிற அதிகரித்து செல்லும்
வாழ்கை சுமையை குறைக்காவிடின் புலிகளுக்கு எதிரான
நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவை திரட்ட முடியாது.பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் ஒரு
புறத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும்
பயங்கரவாதத்துடன் இணைந்துள்ள இதர முன்னணிகளை
அரசாங்கம் புரிந்து கொள்ளாமை பயங்கரவாதத்தை
முழுமையாகப் தோற்கடித்து தேசியபிரச்சனைக்கு
தன்னால் தீர்வொன்றை முன்வைக்க முடியாது என்பதை
உறுதிப்படுத்தியுள்ளது.மறுபுறத்தில் தமது நிர்வாகத்தில் இடம் பெறுகின்ற சகல
பிழைகளையும் மூடிமயைப்பதற்காக புலிகளைத்
தோற்கடிப்பதற்கான போராட்டத்தை முன்னிலைப்படுத்தி
நிற்கின்றது. இது படைகளின் வெற்றிகளை மழுங்கடிக்க
எடுக்கப்படும் நடவடிக்கைகளாகும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணியுடன் போர்நிறுத்த உடன்படிக்கை
உத்தியோகபூர்வமாக ரத்து

[16 - January - 2008]

இலங்கை அரசுக்கும் விடுதலைப்
புலிகளுக்குமிடையிலான போர்நிறுத்த உடன்பாடு சுமார்
ஆறு வருடங்களின் பின் இன்று புதன்கிழமையுடன்
முடிவுக்கு வருகிறது. இதையடுத்து சுமார் ஐந்தரை வருடகாலம் கண்காணிப்புப்
பணியில் ஈடுபட்டிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு
இன்று இரவு 7 மணியுடன் தனது அனைத்துப்
பணிகளையும் முடித்துக் கொண்டு நாட்டை விட்டு
வெளியேறவுள்ளது.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்
கட்சி அரசு 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம்
திகதி நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப்
புலிகளுடன் போர்நிறுத்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
இதையடுத்து சுமார் மூன்று மாதங்களின் பின்
ஸ்கன்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வந்தது.
இந்த நிலையில் அதேயாண்டு செப்ரெம்பர் மாதம் 3 ஆம்
திகதி இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீதான
தடையை நீக்கியதன் மூலம் அரசும் விடுதலைப்
புலிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம்
தெரிவித்தன.
இதையடுத்து முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை 2002 ஆம்
ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி தாய்லாந்தில்
ஆரம்பமானது. அரச குழுவுக்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸும்
விடுதலைப் புலிகளுக்கு அன்ரன் பாலசிங்கமும் தலைமை
தாங்கினர்.
2002 இல் இருதரப்புக்குமிடையே மூன்று சுற்றுப்
பேச்சுக்களும் 2003 இல் மூன்று சுற்றுப் பேச்சுகளும்
நடைபெற்ற போதும் அவை தோல்வியில் முடிவடைந்தன.
தாய்லாந்து (1 ஆம், 2 ஆம், 4 ஆம் சுற்றுப் பேச்சுகள் )
நோர்வே ( 3 ஆம் சுற்று), ஜேர்மனி (5 ஆம் சுற்று) மற்றும்
ஜப்பானில் (6 ஆம் சுற்று) இந்தப் பேச்சுக்கள்
நடைபெற்றன.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்
அரசுடன் சுவிற்சர்லாந்தில் ஒரு சுற்றுப் பேச்சு
நடைபெற்றது. (22 பெப்.2006)
இந்தப் பேச்சுகளும் தோல்வியடைந்தன.
2004 ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு
பதவியிலிருந்து விலக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
தலைமையிலான அரசு பதவியேற்றது.
இதையடுத்து, நிழல்யுத்தம் ஆரம்பமாக, ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ தலைமையிலான அரசு பதவியேற்க 2005 ஆம்
ஆண்டு ஜூன் மாதம் மாவிலாறு அணைக்கட்டை திறக்க
படையினர் ஆரம்பித்த யுத்தம் முழு அளவில்
தீவிரமடைந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி போர் நிறுத்த
உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அரசு முடிவெடுத்ததுடன்
மறுநாள் இலங்கை அரசு நோர்வேக்கு
உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து எந்தத் தரப்பாவது
விலகுவதாயின் மற்றத்தரப்புக்கு 14 நாள் அவகாசம்
வழங்கப்பட வேண்டுமென்ற உடன்பாட்டின் விதிக்கமைய
இன்று 16 ஆம் திகதியுடன் போர்நிறுத்த உடன்பாடு
முடிவுக்கு வருகிறது.
இதன்படி கடந்த 2,157 நாட்கள் (சுமார் 6 வருடம்)
அமுலிலிருந்த போர்நிறுத்த உடன்பாடு இன்றிரவு 7
மணியுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பாதுகாப்புக்கு ஈரான் அச்சுறுத்தல்; ஜனாதிபதி
[15 - January - 2008]

உலகின் பாதுகாப்புக்கு ஈரான் அச்சுறுத்தலாக
விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ
புஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரான் தீவிரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதெனத்
தெரிவித்த புஷ் இவ் அபாயத்தை தடுப்பதற்கு வளைகுடா
நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தனது மத்திய கிழக்கு விஜயத்தின் ஓர் கட்டமாக ஐக்கிய
அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்ட புஷ்
அபுதாபியில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான
சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்
அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;
பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் ஈரான்
முதலிடத்தில் உள்ளது. லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா,
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் ஈராக்கின் ஸியா
போராளிகள் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு
வழங்குவதன் மூலம் ஈரான் அமைதி நடவடிக்கைகளை
சீர்குலைக்கின்றது.
ஈரானின் நடவடிக்கைகள் அனைத்து நாடுகளின்
பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால்
மோசமான விளைவுகள் ஏற்படுவதற்கு முன்பாக இதனை
எதிர்ப்பதற்கான ஏற்பாடுகளை தனது நட்பு நாடுகளுடனும்
வளைகுடா நாடுகளுடனும் இணைந்து அமெரிக்கா
தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதில் முன்னணியில்
உள்ள ஈரான் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை
உலகம் பூராகவுமுள்ள தீவிரவாதிகளுக்கு அனுப்பும்
அதேவேளை ஈரானிய மக்கள் அடக்கு முறைகளுக்கும்
பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகங் கொடுத்துள்ளனர்
எனத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மானியம் வழங்காவிடின் மீனவரும் வேலை
நிறுத்தத்தில் குதிப்பர்


அகில இலங்கை மீனவர் சமூக சங்கம் எச்சரிக்கை

1/15/2008 6:25:42 PM வீரகேசரி இணையம்

எரிபொருட்களின் விலையேற்றத்தால் மீனவர்கள் பாரிய நெருக்கடிகளை
எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, அரசாங்கம்
உடனடியாக எரிபொருள் மானியத்தினை வழங்க முன்வர
வேண்டும். இல்லையேல் மீனவர்களும் வேலைநிறுத்தப்
போராட்டத்தில் குதிப்பர் என்று அகில இலங்கை மீனவர்
சமூக சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். விஜேந்திரன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மீனவச் சமூகம்
எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் தொடர்பாக சங்கத்தின்
பொதுச் செயலாளர் எம். விஜேந்திரன் மேலும் கருத்து
தெரிவிக்கையில் கூறியதாவது: டீசல், பெற்றோல்,
மண்ணெண்ணெய், விலை அதிகரிப்பால், மீன்
பிடித்துறையில் செலவு நூற்றுக்கு 20 வீதமாக
அதிகரித்துள்ளது. இதனால், சிறிய படகுகளில்
மீன்பிடிப்போர் தொடக்கம் பெரிய படகுகளில் மீன்
பிடிப்போர் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். நாட்டு
மக்களுக்கு புரத சத்தை வழங்கும் மீன் உணவை
வழங்கும் மீனவர்களின் வாழ்வு பின்னடைவுகளை
சந்தித்துள்ளது. கடலில் மீன்பிடிக்க வரையறைகள்
விதிக்கப்படுகின்றன. நிலையான விலைக்கு மீன்களை
கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் திட்டமும்
மந்தகதியிலேயே இடம்பெறுகிறது.
எமது சங்கம் 65 மீன் வகைகளுக்கான நிலையõன
விலையை மீன்பிடி அமைச்சிற்கு வழங்கிய போதும் 19
மீன் வகைகளுக்கான நிலையான விலையே
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ் நிலையில்,
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பால் மேலும்
மேலும் மீன்பிடித்துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு அக்
குடும்பங்களின் வருமானம் பின்னகர்த்தப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி
மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதோடு
நிலையான மீன்களின் விலையை 20 வீதமாக அதிகரிக்க
வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள்
மேற்கொள்ளாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் எமது
சங்கம் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ளும்.

எந்த ரூபத்தில் வந்தாலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டு அழிக்க வேண்டும் - பிரதமர் மன்மோகன்சிங்
1/16/2008 7:03:04 PM வீரகேசரி இணையம்
எமது அண்டை நாட்டில் சமீப
காலமாக நிகழ்ந்து வரும் பயங்கரவாத செயல்கள் எந்த
ரூபத்தில் வந்தாலும் அதனை கூட்டாக எதிர்த்து போரிட்டு
அழிக்கவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்
தெரிவித்துள்ளார். சீனாவுக்கான மூன்று நாள்
விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் பிரதமர்
மன்மோகன் சிங் நாடு திரும்பியுள்ளார்.
அவர் தனது சீன சுற்றுப்பயணத்தின் போது இந்தியசீன
உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து
அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபாவோவுடன் பேச்சுக்கள்
நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது உள்நாட்ட அணுசக்தி
துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து 11 ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்பட்டன. சீன சமூக அறிவியல் அக்கடமியில்
உரைநிகழ்த்திய போதே பிரதமர் மன்மோகன் சிங்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது இந்திய சீன
எல்லைப் பிரச்சினையில் இரு தரப்பினரும்
திருப்தியடையும் வகையில் சுமூகமான தீர்வு ஏற்பட
வேண்டும். சர்வதேச அளவில் வளர்ச்சித்திட்டங்களுக்கு
முட்டுக்கட்டையாக இருப்பது பயங்கரவாதம்தான்.
என்றாலும் அதற்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றுபட்டு
போராடவேண்டும்.
எங்கள் அண்டைய நாட்டில் சமீப காலமாக ஏற்பட்டு
வரும் பயங்கரவாத செயல்கள் எந்த ரூபத்தில்
இருந்தாலும் பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்த்து
போரிட்டு அழிக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி
உள்ளது. பல்வேறுபட்ட சமூகத்தைச் சேர்ந்த நாம்
நவீனமான உலகின் நன்மைகளை எந்தவித
அச்சுறுத்தலும் இல்லாமல் அமைதியான முறையில்
பெறவேண்டும்.

இராணுவத்தளபதி உட்பட உயர்மட்ட குழுவினர் யாலைப்
பிரதேசத்துக்கு திடீர் விஜயம்


1/18/2008 4:06:41 PM வீரகேசரி இணையம்

தெற்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடனடி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்காக இராணுவத் தளபதி லெப்டினட்
ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர்மட்ட
குழுவொன்று நேற்று யாலைப் பிரதேசத்துக்கு திடீர்
விஜயம் செய்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக
மையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் சிவிலியன்கள் மீது புலிகள்
கடந்த 16 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களை
அடுத்து அப்பிரதேசத்தி;ல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இக்குழு அங்கு
விஜயம் செய்துள்ளது.
அப்பிரதேச பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் விசேட
கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது. இ;தில்
தெற்குப் பிராந்திய இராணுவத் தளபதி பிரிகேடியர் சுதந்த
ரணசிங்க, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன
உட்பட மற்றும் பிராந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்.இங்கு தேவையான பாதுகாப்பு
ஆலோசனைகளை வழங்கிய இராணுவத் தளபதி யால
காட்டுப்பிரதேசத்துக்குள் புலிகள் ஊடுறுவுவதைத் தடுதக்க
தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பணிப்புரை
விடுத்தார்

No comments: