Friday, 25 January 2008

மட்டுநகர் தேர்தல்:இந்தியச் சதியின் இறுதிக் காட்சிகள்.

டில்லியின் ஆசீர்வாதம் பெற்ற தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் வடக்கின் இடைக்கால நிர்வாகம்?
[24 - January - 2008]-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இலங்கை - இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாகப் அமுல்படுத்தி
இந்தியாவின் ஆதரவை முழுமையாக பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் அதே சமயம், புதுடில்லியின் `ஆசீர்வாதம்'பெற்ற
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் வடக்கின் இடைக்கால நிர்வாகத்தைக் கையளிப்பதிலும் அரச தரப்பு ஆர்வம் கொண்டிருப்பதாகத் தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வகட்சிப் பிரதி நிதிகள் குழுவின் இறுதித் தீர்வு வரைபை முழுமையாக அமுல்படுத்தும் வரை இடைக்கால ஏற்பாடாக 13 ஆவது திருத்தத்தை
செவ்வனே நடைமுறைப்படுத்தும் சிபார்சுகளை உள்ளடக்கிய அறிக்கையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நேற்று புதன்கிழமை ஜனாதிபதியிடம்
கையளித்திருக்கிறது.
கடந்த 20 வருடங்களுக்கு முன் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதில் கூறப்பட்ட
விடயங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானத்திற்கு இந்தியாவின் அழுத்தம் பிரதான
காரணமாக இருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில், வடக்கில் இடைக்கால நிர்வாகத்தையும், கிழக்கில் தேர்தலையும் நடத்தி 13 ஆவது திருத்தத்தை வடக்கு, கிழக்கில் நடைமுறைப்படுத்த
இந்தியா பூரண ஆதரவை நல்கியிருப்பதாகவும், அதனடிப்படையில் மிக விரைவில் இந்தியாவின் ஆசீர்வாதம் பெற்ற தமிழ் அரசியல் கட்சி
முக்கியஸ்தர்களிடம் வடக்கின் இடைக்கால நிர்வாகம் ஒப்படைக்கப்படுமெனவும் மேலும் அறிய வருகிறது.

Posted on : Thu Jan 24 8:50:00 2008
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரித்திருப்பதால்
கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடாது

கிழக்கில் நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது. அங்கு ஆயுதக் குழுக்களின் வன்முறை
அதிகரித்திருப்பதால் இத்தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசி யல் விவகாரக் குழு நேற்றுக் கூடி இத்தீர் மானத்தை எடுத்தது.நாடாளுமன்றக்குழு அறையில் நேற் றுப் பிற்பகல் இவ்விடயம் தொடர்பாக நீண்ட நேரம் கலந்தாலோசித்து இறுதியில் இத்தேர்தலில்
போட்டியிடுவதில்லை என்று அக்குழு தீர்மானித்தது.இது தொடர்பாகக் கூட்டமைப்பின் பிர முகர் ஒருவர் கூறிய கருத்துகள் வருமாறு:நடைபெறவுள்ள கிழக்குத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றி நாம் கலந்தாலோசித்தோம். மட்டக்களப்பில் நாம் போட்டியிடுவதற்கான சூழல்
நூறு வீதம் இல்லை என்பதால் நாம் அத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித் துள்ளோம்.மட்டக்களப்பில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் ஆயுதக்குழுக்களின் வன்முறைகள் அதி கரித்துள்ளன. எந்தக் கட்சியின்
வேட்பா ளர்களும் துணிந்து தேர்தல் களத்தில் குதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு வழங்க அரசு தயாரில்லைஎந்த வேட்பாளருக்கும் போதியளவு பாது காப்பை வழங்க அரசு தயாராக இல்லை. ஆனால், கிழக்கு புலிகளிடமிருந்து மீட்கப் பட்டதாகவும்
சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவதற்கான சாதகநிலை அங்கிருப்ப தாகவும் அரசு கருதுகிறது. அரச படையினரின் உதவியுடன் அவர் கள் கண்முன்னேயே ஆயுதக்குழுக்கள் வன் முறைகளில் ஈடுபடுகின்றபோது அரசோ அங்கு தேர்தலுக்கான
சாதகமான நிலை உள்ளதாகக் கூறுகிறது.ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பா ளர்களை விடவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் வேட்பாளர்களுக்கே ஆயுதக் குழுக்களால் அதிக
உயிராபத்துள்ளது. கூட்டமைப்பு களத்தில் இறங்கி தேர்தல் பிரசாரத்தில் அறவே ஈடுபட முடியாது. அதற்கான பாதுகாப்பு எமக்கு இல்லை.ஏற்கனவே இவ்வாறான அச்சுறுத்தல் கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் மட்டக்களப்பிற் குப் போகமுடியாமல்
கொழும்பிலேயே தங்கியிருக்கின்றனர்.எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தேர்தலில் ஈடுபடுவதற்கான சூழல் அறவேயில்லை. இதன்
காரணமா கவே இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று நாம் தீர்மானித்துள்ளோம். இந்தத் தேர்தலில் கிழக்குத் தமிழ் மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என் பது தொடர்பான எமது கூட்டமைப்பின் நிலைப் பாடு மக்களுக்கு
விரைவில் விரிவாக விளக்கப்படும். இதற்கான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

Posted on : Thu Jan 24 9:35:00 2008 .
கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் ஆயுதங்களைத் துறக்க வேண்டும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்து கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளும் ஆயுதங்களைக்கீழே வைத்துவிட்டு மக்கள் பிரதிநிதிகளாக
வரவேண்டுமே தவிர ஆயுதங்கள் மூலம் வரக்கூடாது.இப்படி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றோபேட் ஓ பிளேக் தெரிவித்தி ருக்கிறார்.நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் அங்குவைத்து இக்கருத்தினைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டது. அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்குமா என்பது குறித்து எனக்கு
சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.ஒரு பகுதியினர் ஆயுதங்களை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு மற்றக் கட்சிகளை அச்சுறுத்துவதன் மூலம் இங்கு சுமுகமான தேர்தல்
நடக்கும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை.தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல அமைப்புகளும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஆதரவைப்
பெற்று பிரதிநிதிகளாக வரவேண்டுமே தவிர ஆயுதங்கள் மூலம் வரக்கூடாது என்பதே அமெரிக்காவின் கருத்தாகும் என்றார்.

பண வீக்கத்தில் ஒரு சாதனை!
நவம்பரில் 26.2 வீதம் அதிகம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் ஆட்சிக் காலத்தில் பணவீக்கமும் புதிய சாதனையை நிலை நாட்டியிருக்கின்றது.நவம்பர் மாதத்தில்
பணவீக்கம் 26.2 வீதத்தை எட்டியதாக மத்தியவங்கி அதி காரிகள் நேற்றுமுன்தினம் தகவல் வெளி யிட்டிருக்கின்றனர்.முழு நாட்டிலும் விலை அதிகரிப்பை விசா லமாகக் கணக்கிட வகைசெய்யும் நுகர் வோர் விலைச் சுட்டெண் முன்னைய ஆண்டின் நவம்பர்
மாதத்துடன் ஒப்பிடு கையில் 223.3 புள்ளியிலிருந்து 281.8 புள்ளி யாக உயர்ந்து 26.2 வீத அதிகரிப்பைக் காட்டி இருக்கின்றது. எரிபொருள் விலையைப் பன்னிரண்டு வீதத்தாலும் மற்றும் அடிப்படை உணவு வகைகள், கிழங்கு, சீனி போன்றவற்றின் மீதான வரியைக் கணிசமான
அளவினா லும் அரசு அதிகரித்ததை அடுத்தே பண வீக்கம் இத்தகைய பெரும் பாய்ச்சலை எட்டியிருப்பதாகக் கூறப்பட்டது.நாடு முழுவதிலும் கணிப்பிடப்பட்ட நுகர்வோர் விலைச்சுட்டெண் 26.2 வீத அதிகரிப்பைக் காட்டிய அதே சமயம், கொழும்பு நுகர்வோர் விலைச்
சுட்டெண் அதிகரிப்பு 19.6 வீதமாகக் காணப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது. பணவீக்கம் இவ்வாறு எகிறி வரு வதால் ஏற்படும் பொருளாதார நெருக்க டியை நாடுபெரும் தாக்கமாக உணர வேண்டியிருக்கும். அதற்கு அதிக காலம்
எடுக்காது எனப் பொருளாதார வல்லு நர்கள் எச்சரித்துள்ளனர்.போரியல் போக்கில் தீவிரம் கொண்டுள்ள அரசு, இவ்வருடத்தில் தனது பாதுகாப்புச் செலவினத்தை 20 வீதத்தால் அதிகரித்து, சுமார் 16 ஆயிரம் கோடி
ரூபாவை அதற்குச் செலவிடத் தீர்மானித்திருக்கின்றது. எனி னும் அரசு யுத்தத்தை ஒட்டி மேற்கொள் ளும் எடுப்புகளைப் பார்த்தால் யுத்தச் செல
வினம் அந்த எல்லையையும் தாண்டும் அறிகுறிகளே தோற்றுகின்றன.அப்படி நேர்ந்தால் பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்தில் வீழும். பண வீக்கமும் மேலும்எகிறும் என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

No comments: