Thursday, 7 February 2008

ஈழச்செய்திகள்:07022008

Posted on : Thu Feb 7 9:35:00 2008
கிளிநொச்சியில் நேற்றும் விமானங்கள் குண்டுமாரி! எட்டுத் தடவைகள் கொட்டித் தீர்த்தன!!
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் விமானப்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் நேற்று
முற்பகல் நடத்திய தாக்குதலில் பாடசாலைச் சிறுமி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றுக்காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி நகரை வட்டமிட்ட விமானங்கள் எட்டுத் தடவைகள் அப்பகுதியில் குண்டுகளைக் கொட்டித்தீர்த்தன.இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.இதேவேளை, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் தளம் ஒன்றை இலக்குவைத்தே இத்தாக்குதல்
வெற்றிகரமாக நடத்தப்பட்டது எனப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
02/5/2008 11:03:02 PM வீரகேசரி இணையம் -
லண்டன் வாழ் தமிழர்கள், இலங்கையின் 60ஆவது சுதந்திர தினத்தையொட்டி, முன்தினம் திங்கட்கிழமை "டவுனிங்' வீதியில் கூடி
ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.
தமிழ்ச் சமூகத்திற்கு உண்மையான சுதந்திரமும் உரிமைகளும் கிடைக்க வேண்டும் என அவர்கள் இதன்போது கோஷம் எழுப்பினர்.
இங்கிலாந்தில் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்ட
ஊர்வலமானது தமிழ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இவ்வமைப்பு 8 ஐரோப்பிய நாடுகளிலும்,கனடா மற்றும் அமெரிக்காவிலும்
கிளை பரப்பி செயற்பட்டு வருகின்றது.
அதேசமயம் பிரித்தானிய தமிழர்கள் மன்றமான கடந்த 60 ஆண்டுகாலப் பகுதியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய இனச் சுத்திகரிப்பு, பாகுபாடு என்பன
குறித்து இங்கிலாந்திலுள்ள தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினருக்கு அறிவூட்டுவதை இலக்காகக் கொண்டு, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு
அருகே புகைப்படக் கண்காட்சியொன்றை நடத்தியது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது இந்த டவுனிங் வீதி ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் பிரித்தானிய
அதிகாரிகளைச் சமாளித்து அங்கு செயற்பட்டு வருவதற்கு இன்னொரு உதாரணமாக உள்ளதெனக் குற்றஞ்சாட்டியுள்ளது

Posted on : Mon Feb 4 9:40:00 2008
நேற்றுப் பிற்பகல் தற்கொலைத் தாக்குதல் கோட்டை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து 12 பேர் பலி! 103 பேர் வரை படுகாயம்; 25 பேர் நிலை கவலைக்கிடம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில், பயணிகள் நிரம்பி வழிந்த சமயம், இடம்பெற்ற குண்டுவெடிப்பில்
பன்னிரண்டு பேர் பலியாகினர். மொத்தம் 103 பேர் காயமுற்றனர். 25 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பெண் ஒருவர்
நடத்திய தற்கொலைத் தாக்குதலே இது என்று கருதப்படுகின்றது.வெளியிடங்களில் இருந்து பல ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்து அவற்றிலிருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருந்த சமயம், ரயில்
நிலையத்தின் மூன்றாம் மேடைப் பகுதியில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.இந்தக் கோரச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட நூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் உடல் வயிற்றுப் பகுதியுடன் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலத்தின் எச்சங்கள்
காணப்பட்டதால் இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும், தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் எஞ்சிய உடல் பகுதியே அது
என்றும்கருதப்பட்டது.இந்தக் குண்டுவெடிப்பை அடுத்து கோட்டை ரயில் நிலையம் ஊடான சகல ரயில் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டன.எனினும், நேற்று மாலைக்குப் பின்னர் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின என்றும் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பலரும் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு விரையப்பட்டனர். இதனால் தேசிய
வைத்தியசாலை விபத்துப் பிரிவு நிரம்பி வழிந்தது. படுகாயமுற்றவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.காயமடைந்தவர்களில் 84 பேர் பெண்கள், 16 பேர் ஆண்கள் எனக் தெரிவிக்கப்பட்டது.

`பயங்கரவாதத்தை அழித்து வறுமையை ஒழிக்க திடசங்கற்பம் கொள்வோம்' [04 - February - 2008]

பயங்கரவாதத்தை அழிப்பதும் வறுமையை ஒழிப்பதுமான இரு முக்கிய சவால்களில் வெற்றி கண்டு புதியதோர் இலங்கையை நோக்கி நகர்வதற்கான
திடசங்கற்பத்தை நாம் மீள உறுதிப்படுத்துவோம் என்று சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அதில் அவர்மேலும் தெரிவித்திருப்பதாவது;
2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரிகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால
இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திரதின வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ
ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெற்று, தேசங்கள் எனும் சமூகத்தில் சுதந்திர மக்களாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தை அது குறித்து
நிற்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை இக்காலப்பிரிவில் அதன் பல அடைவுகள் குறித்து பெருமிதம் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. அவற்றில் அநேகமானவை எமது
பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் உலகுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றன. ஆசியாவிலேயே பிரதிநிதித்துவ
ஜனநாயகத்தின் நீண்ட மரபைக் கொண்டு தனித்துவமானவர்களாக நாம் திகழ்கின்றோம். உலகளாவிய சுகாதாரம், கல்வி, பால்சார் சமத்துவம், சமூக
இயக்குகை என்பவற்றை மேம்படுத்துவதற்கான முதல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக நாம் விதிவிலக்கான சமூக பொருளாதாரக்
குறிகாட்டிகளை எட்டமுடியுமாக இருந்திருக்கிறது. குறைந்த, நடுத்தர வருமான மட்டத்திலுள்ள நாடொன்றின் சாதாரணமாக
எதிர்பார்க்கப்படுகின்றவற்றையும் கடந்து சென்று இன்று நாம் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளின் பலவற்றை அடைந்து அல்லது கடந்து நகர்ந்து
கொண்டிருக்கிறோம். அண்மைய ஆண்டுகளில் எமது பிராந்தியத்தின் பாரிய வளர்ச்சி இயந்திரங்களுக்கு மீண்டும் ஒரு முறை முன் சென்று எமது
மக்களின் தலா வருமானம் வரவேற்கத்தக்க வகையில் உயர்ந்ததை நாம் கண்டோம். குறிப்பாக 25 வருட கால கொடூர பயங்கர வாதத்தின்
அழிவுகளுக்கு மத்தியிலேயே நாம் சமூக அபிவிருத்தியில் இந்த அடைவுகளை எட்டக்கூடியதாக இருந்திருக்கின்றது.
60 ஆவது சுதந்திர ஆண்டை நாம் பூர்த்தி செய்யும் இச்சந்தர்ப்பத்தில் எம்முன் இரு பிரதான சவால்கள் காணப்படுகின்றன. ஒன்று பயங்கரவாதத்தை
பூண்டோடு அழிப்பதும் மற்றையது வறுமையை ஒழிப்பதுமாகும். முதலாவது விடயத்தைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணமானது தற்போது
பயங்கர வாதத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறது என்பது திருப்தி அடையக்கூடியதாக இருக்கின்றது. அதை வடக்கிலிருந்தும் ஒழித்துக்
கட்டுவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு வெற்றிக்கான சிறந்த எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றது. பயங்கரவாதத்திற்கெதிரான
போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் முன்னுதாரணமிக்க செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்க நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
நாட்டில் சுதந்திரம் தொட்டு அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்ற பல பகுதிகளையும் பயங்கரவாதத்தினாலும் அதற்கெதிரான
போராட்டத்திலும் உட்பட்ட பிரதேசங்களுக்கும் முன்னேற்றத்தின் பலாபலன்களை பெற்றுக்கொடுப்பதை கவனத்திற்கொண்டு மிகவும் சம வாய்ப்புமிக்க
பொருளாதார அபிவிருத்தியொன்றை வறுமை ஒழிப்பு வேண்டிநிற்கின்றது.
பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று புதிய உதயத்தை காண்கின்ற கிழக்கு மாகாணம் உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்ட கிராமப் புறங்களில்
இதுவரை அடையப்பெறாத அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கு எனது அரசாங்கம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
இந்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை மொழி, மத, கலாசார ரீதியாக செழிப்பான பன்மைத்துவம் கொண்ட எமது இலங்கை தேசத்தின்
சகல மக்களும் அனுபவிக்கின்ற உரிமை களில் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
அநேகமான கொந்தளிப்புகள், தடைகளினூடே கடந்த 60 ஆண்டுகளில் கணிசமான வெற்றியையும் பல்வேறு முன்னேற்றத்தையும் அடைந்துள்ளநாம்
கடந்த காலங்களில் எம்மை பின்னடையச் செய்த வேறுபாடுகள், சந்தேகங்கள் என்பவற்றிலிருந்து தூரவிலகி, தேசமொன்றாக உண்மையான
ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காக எதிர்காலத்தில் எமக்கு முன்னாலுள்ள பாரிய பணிக்காக உற்சாகத்துடன், சவால்மிக்க வெற்றியுடன் கூடிய புதிய
உலகை நோக்கி முன்னேற வேண்டியிருக்கின்றது.
புதியதோர் இலங்கையை நோக்கி ஐக்கியத்துடன் நகர்வதற்கான எமது திடசங்கற்பத்தை நாம் மீள்உறுதி செய்துகொள்வோம்.

60 ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் வெறிச்சோடிக்கிடந்த விருந்தினர் கதிரைகள்
இ.தொ.கா, ஹெலஉறுமய பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை
2/4/2008 11:41:19 PM வீரகேசரி இணையம் - முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலிமுகத்திடலில் நேற்று திங்கட்கிழமை
நடைபெற்ற நாட்டின் 60 வது சுதந்திர தின பிரதான வைபத்தில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்து கதிரைகள் வெறிச்சோடி கிடந்தன.சுதந்தி தின
வைவத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவகர்கள்
பிரதிநதிகள் அமர்வதற்காக விசேட கொட்டகைகள் அமைப்பக்கப்பட்டிருந்த அந்த கொட்டைகளில் இருந்த சில ஆசனங்கள் வைபவம் முடியும் வரை
வெறிச்சோடியே இருந்தன.
வைபவத்கு விசேட அதிதிகளின் வரிசையில் அழைக்கப்பட்டிருந்த சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை.
அவரது வருகை அறிவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசருக்கு அடுத்தப்படியாக சபாநாயகரின் வருகை இடம்பெறும் என்று நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வைபவத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சில கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை.
குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் இந்த
வைவத்தில் கலந்து கொள்ளவில்லை எனினும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திர சேகரன், அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா ஆகியோரும் ஐக்கிய தேசியக்கட்சின் மாற்றுக்குழுவை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பங்கேற்கவில்லை
நாட்டின் 60 ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதும் குறிப்பிட்டு
சொல்லக்கூடிய வகையில் இந்த வைபவத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் வருகைதந்திருக்கவில்லை. வைபவத்தை பார்வையிடுவதற்காக
வருகைதருகின்ற பொதுமக்கள் லோட்டஸ் வீதியூடாக காலி முகத்திடலுக்கு அனுமதிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் லோட்டஸ்
வீதியிலிருந்து இலவச பஸ் சேவையினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பின்னர் வைபவத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. லோட்டஸ் வீதிக்கு
அண்மையிலிருந்து காலி முகத்திடல் வரைக்குமான குறுகிய தூரத்திற்குள் மூன்று தற்காலிக சோதனை கூடாரங்கள் நிறுவப்பட்டிருந்தன அத்துடன்
லோட்டஸ் வீதியிலுள்ள சம்புத்தாலோக்க விஹாரைக்கு முன்னால் நிறுவப்பட்டிருந்த கூடாரத்தில் பொதுமக்களை வீடியோ செய்வதற்கான
ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Posted on : Mon Feb 4 9:40:00 2008
வடக்கிலிருந்தும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு உரிய நகர்வுகள்
60 ஆவது சுதந்திர தின வாழ்த்தில் ஜனாதிபதி வடக்கிலிருந்தும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர தினத்தின் அறுபதாவது ஆண்டுப் பூர்த்தியை ஒட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பவை
வருமாறு:2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரிகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால
இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60ஆவது ஆண்டு சுதந்திர வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியிலிருந்து
சுதந்திரத்தைப் பெற்று, தேசங்கள் எனும் சமூகத்தில் சுதந்திர மக்களாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்தை அது குறித்து நிற்பது அதன்
முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.இலங்கை இக்காலப்பிரிவில் அதன் பல அடைவுகள் குறித்துப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. அவற்றில் அநேகமானவை எமது
பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் உலகுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. ஆசியாவிலேயே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நீண்ட மரபைக் கொண்டு தனித்துவமானவர்களாக நாம் திகழ்கின்றோம். உலகளாவிய சுகாதாரம், கல்வி,
பால்சார் சமத்துவம், சமூக இயக்குகை என்பவற்றை மேம்படுத்துவதற்கான முதல் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக நாம்
விதிவிலக்கான சமூக, பொருளாதாரக் குறிகாட்டிகளை எட்ட முடியுமாக இருந்திருக்கிறது.குறைந்த, நடுத்தர வருமான மட்டத்திலுள்ள நாடொன்றின் சாதாரணமாக எதிர்பார்க்கப்படுகின்றவற்றையும் கடந்து சென்று, இன்று நாம் மில்லேனிய
அபிவிருத்தி இலக்குகளின் பலவற்றை அடைந்து அல்லது கடந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம்.பயங்கரவாத அழிவுகளுக்கு மத்தியிலும் வளர்ச்சிஅண்மைய ஆண்டுகளில் எமது பிராந்தியத்தின் பாரிய வளர்ச்சி இயந்திரங்களுக்கு மீண்டும் ஒரு முறை முன் சென்று, எமது மக்களின் தலா
வருமானம் வரவேற்கத்தக்க வகையில் உயர்ந்ததை நாம் கண்டோம். குறிப்பாக 25 வருட காலக் கொடூரப் பயங்கரவாதத்தின் அழிவுகளுக்கு
மத்தியிலேயே நாம் சமூக அபிவிருத்தியில் இந்த அடைவுகளை எட்டக்கூடியதாக இருந்திருக்கின்றது.60 ஆவது சுதந்திர ஆண்டை நாம் பூர்த்தி செய்யும் இச்சந்தர்ப்பத்தில் எம்முன் இரு பிரதான சவால்கள் காணப்படுகின்றன. ஒன்று பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழிப்பது. மற்றையது வறுமையை ஒழிப்பது. முதலாவது விடயத்தைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாணமானது தற்போது பயங்கரவாதத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறது என்பது
திருப்தி அடையக்கூடியதாக இருக்கின்றது. அதை வடக்கிலிருந்தும் ஒழித்துக் கட்டுவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதோடு
வெற்றிக்கான சிறந்த எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் முன்னுதாரணமிக்க
செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்க நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.சமவாய்ப்புமிக்க பொருளாதார அபிவிருத்தி வேண்டும்நாட்டில் சுதந்திரம் தொட்டு அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்ற பல பகுதிகளையும் பயங்கரவாதத்திற்கும் அதற்கெதிரான
போராட்டத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் முன்னேற்றத்தின் பலாபலன்களைப் பெற்றுக்கொடுப்பதை கவனத்திற்கொண்டு மிகவும் சம வாய்ப்புமிக்க
பொருளாதார அபிவிருத்தியொன்றை வறுமை ஒழிப்பு வேண்டிநிற்கின்றது.பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று புதிய உதயத்தைக் காண்கின்ற கிழக்கு மாகாணம் உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்ட கிராமப் புறங்களில்
இதுவரை அடையப்பெறாத அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கு எனது அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.இந்தச் சவால்களுக்கு முகம்கொடுக்கும் அதேவேளை மொழி, மத, கலாசார ரீதியாக செழிப்பான பன்மைத்துவம் கொண்ட எமது இலங்கைத் தேசத்தின்
சகல மக்களும் அனுபவிக்கின்ற உரிமைகளில் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.புதிய இலங்கையை நோக்கி ஐக்கியமாக நகர்வோம்அநேகமான கொந்தளிப்புகள், தடைகளினூடே கடந்த 60 ஆண்டுகளில் கணிசமான வெற்றியையும் பல்வேறு முன்னேற்றத்தையும் அடைந்துள்ள நாம்,
கடந்த காலங்களில் எம்மைப் பின்னடையச் செய்த வேறுபாடுகள், சந்தேகங்கள் என்பவற்றிலிருந்து தூரவிலகி, தேசமொன்றாக உண்மையான
ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காக எதிர்காலத்தில் எமக்கு முன்னாலுள்ள பாரிய பணிக்காக உற்சாகத்துடன் சவால்மிக்க வெற்றியுடன் கூடிய புதிய
உலகை நோக்கி முன்னேற வேண்டியிருக்கின்றது.புதியதோர் இலங்கையை நோக்கி ஐக்கியத்துடன் நகர்வதற்கான எமது திடசங்கற்பத்தை நாம் மீள்உறுதி செய்துகொள்வோம். என்று உள்ளது.

Posted on : Mon Feb 4 9:50:00 2008
கொழும்பு, தம்புள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்
கொழும்பு மற்றும் தம்புள்ளப் பகுதிகளில் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக்
கண்டித்திருக்கிறது.இச்சம்பவங்களைக் கண்டித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:கொழும்பு ரயில் நிலையத்திலும் மற்றும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையிலும் நேற்றுமுன்தினம் தம்புள்ளவில் பஸ்மீதும் நடத்தப்பட்ட குண்டுத்
தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பாணிகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன.இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பொதுமக்கள் மத்தியில் பீதியான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தத்
தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல் முறையாக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பியதாக இரான் கூறுகிறது
பாலைவனத்தில் ஒரு இரகசிய இடத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டுள்ளது இரானிய அரசுத் தொலைக்காட்சி, தமது நாட்டின் முதல் விண்வெளி ராக்கெட் ஏவுதல் என அது கூறும் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது.
'ஓமிட்' அல்லது நம்பிக்கை எனப் பெயரிடப்பட்டுள்ள ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் இரான் அரசின் திட்டத்தின் சோதனை முயற்சியாக
இந்த ராக்கெட் ஏவுதல் பார்க்கப்படுகிறது.
நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு கிழக்கே, செம்னான் மாகாணத்தின் ஒரு பாலைவனப் பகுதியில், அதிபர் அஹ்மதிநிஜாதும் மற்றும் இதர அரசு
அதிகாரிகளும் கூடியிருந்த காட்சிகளை அரசுத் தொலைக்காட்சி காண்பித்தது.
விண்வெளியில் இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளதன் மூலம், இரானின் ஏவுகணைத் திட்டம் முன்னெடுக்கப்படலாம் எனவும், இதன் மூலம் அந்நாட்டின்
அணுத்திட்ட இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் எனவும் மேற்குலகம் அச்சமடையக் கூடும் எனவும் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேலை சென்று தாக்கக் கூடிய அளவு சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இரான் வசம் ஏற்கெனெவே இருக்கின்றன என்று நம்பப்படுகிறது.

No comments: