Sunday, 3 February 2008

சிங்கள பொது மக்கள் மீதான வெடி குண்டுத்தாக்குதல்கள் புலிகளின் கோழைத்தனம்!


Sri Lankan husband Ajith Silva (36), (L), and daughters Sulochana (C) and Sewvandi cry as his wounded wife receives treatment at the National Hospital in Colombo, following a suicide attack. Sri Lanka braced for more violence as suspected Tamil rebels set off bomb attacks in the capital on the eve of celebrations to mark independence day, officials said Sunday.(AFP/Lakruwan Wanniarachchi)


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு
11பேர் பலி, 103 பேர் காயம் 2/3/2008 7:07:46 PM
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 103 பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று பிற்பகல்
2.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலியானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலை
கவலைக்கிடமாகவுள்ளதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோட்டை ரயில் நிலையத்தின் 3 ஆவது மேடைக்கருகிலேயே இக்குண்டு வெடித்துள்ளது. கொழும்பிலிருந்து அப்பேபுஸ்ஸவுக்கு செல்லும் ரயில் தரித்து
நின்ற பகுதியிலேயே குண்டு வெடித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியே குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார
தெரிவித்தார்.
கொழும்பு அம்பேபுஸ்ஸவுக்கான ரயில் 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்த வேளையிலேயே குண்டு வெடித்துள்ளது. குறித்த ரயிலில் பெருமளவு
பயணிகள் இருந்துள்ளனர். இன்று சுதந்திரதினமென்பதால் வெளியூர்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் நேற்று குழுமிநின்ற சமயமே குண்டு
வெடித்துள்ளமையினால் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.
குண்டினை வெடிக்க வைத்ததாக பொலிஸாரினால் சந்தேகிக்கப்படும் பெண் தற்கொலை குண்டுதாரியின் தலையும் கால் ஒன்றும் சம்பவ இடத்தில்
காணப்பட்டது. இதனை குண்டு வெடித்த இடத்தில் நின்ற ஆண் ஒருவரின் சடலத்தின் கீழ்ப்பகுதி சிதைவடைந்த நிலையில் புகையிரத நிலையத்திற்குள்
காணப்பட்டது.
திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தமையினால் கோட்டை புகையிரத நிலையத்தில் பெரும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது. மக்கள்
பதறியடித்துக்கொண்டு ஓடினர்.
குண்டு வெடிப்பின்போது ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகினர். ஏனையோர் வைத்தியசாலையில் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குண்டுவெடிப்பினையடுத்து கோட்டை ரயில் நிலையத்துக்கான சேவைகள் சில மணிநேரம் இடை நிறுத்தப்பட்டன. சம்பவத்தில் காயமடைந்த 100
பேரில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குவர்.
குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ரயில் நிலையத்திற்குள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல
ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸார் உடன் அனுமதி வழங்கவில்லை.
பொலிஸாரும், படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பெரும் சோதனையும் இடம்பெற்றது.
ரயில் பெட்டிகள் சேதம்
குண்டுவெடிப்பையடுத்து புறப்படவிருந்த ரயில் பெட்டிகள் சிலவற்றின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்திருந்ததுடன் ரயிலுக்குள்ளும் இரத்தக்
கரைகளும் காணப்பட்டன. இதேவேளை, வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலும் பெருமளவு இரத்தக்கரைகள் இருந்ததுடன் ரயில் நிலைய
அலுவலக கட்டிடக் கண்ணாடிகளும் சேதமடைந்திருந்தன.

படையினர் குவிப்பு
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து ரயில் நிலையத்துக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் அத்துடன்
அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ரயில் நிலையம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்த படையினர் பொதுமக்கள் எவரையும் ரயில்
நிலையத்துக்குள் அனுமதிக்காத அதே நேரம் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன், ரயில் நிலைய முன்னரங்கப் பகுதியிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரயில் நிலைய அனைத்து
சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்பட்டன.
சேவை இடைநிறுத்தம்
குண்டுவெடிப்பையடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பெரும் பீதிக்குள்ளான அலுவலக ஊழியர்கள் உடனடியாக அலுவல்களை
இடைநிறுத்திக்கொண்டனர். இதனையடுத்து சகல ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. அத்துட அனைத்து அனுமதிச் சீட்டு
கரும பீடங்களும் மூடப்பட்டிருந்ததுடன் அலுவலகம் வெறுமையாக இருந்தது.

தம்புள்ள குண்டுத்தாக்குதல் சம்பவம் புலிகளின் கோழைத்தனமான நடவடிக்கைPosted on : Sun Feb 3 9:25:00 2008
யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேளை.... தம்புள்ளவில் பஸ் குண்டுவெடிப்பு!
20 பேர் பலி; 63 பேர் காயம்!! குண்டை உள்ளே வைத்துவிட்டு தூர
இருந்து இயக்கியதாகத் தகவல் கண்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பௌத்த யாத்திரிகர்களுடன் சென்ற தனியார் பஸ் ஒன்று, தம்புள்ளவில் தரித்து நின்றவேளை, அதற்குள் குண்டு
ஒன்று வெடித்தது. அதனால் 20 பேர் கொல் லப்பட்டனர்; 63 பேர் காயமுற்றனர். கொலையுண்டவர்களில் 16 பேர் பெண்கள். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்றுக் காலை 7.05 மணியளவில் நடைபெற்றது. பஸ்ஸுக்குள் குண்டை வைத்துவிட்டு அதனைத் தூரத்தில் இருந்து இயக்கி வெடிக்க வைக்கப்பட்டிருப்பதாகப் பொலீஸ் விசாரணைகளிலிருந்து
தெரியவந்ததாகத் தகவல்கள் கூறின. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு விடுதலைப் புலிகள் மீது இராணுவம் குற்றம் சுமத்தியது. ஆனால் தங் களுக்கு இதில் எந்தவித தொடர்பும்
இல்லை என்று விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். வழமையாக வார இறுதியில் கண்டியில் இருந்து அனுராதபுரத்துக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ் நேற்று காலை 5 மணிக்கு
புறப்பட்டது.வழியில் தம்புள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்த யாத்திரிகர்களை ஏற்றுவதற்கா கத் தரித்து நின்றபோதே, பஸ்ஸில் பாரிய குண்டு வெடிப்பு
இடம்பெற்றது.கொல்லப்பட்டவர்களில் 16 பேர் பெண் கள். நால்வர் ஆண்கள். மிகவும் மோச மான நிலையில் இருந்த இருவர் கொழும்பு வைத் தியசாலைக்கு எடுத்து
செல்லப்பட்டனர்.தம்புள்ள மருத்துவமனையில் பணி யாற்றும் டாக்டர் சுதர்ஷன் அரம்பேகெதர காயப்பட்டவர்கள் மொத்தம் 83 பேர் கொண்டுவரப்பட்டதாகக்
கூறுகின்றார்.பயணிகள் தேநீர் அருந்துவதற்காகப் பஸ்ஸில் இருந்து இறங்கத் தயாரான போது பஸ்ஸிற்குள் குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது.சம்பவ இடத்தில் 16 பேர் கொல்லப் பட்டனர் மேலும் 4 பேர் தம்புள்ள ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமா னார்ககள்.காயமடைந்த 62 பேரில் இருவர் ஆபத் தான நிலையில் கொழும்பு தேசிய வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.காயமடைந்தவர்கள் தம்புள்ள, மாத் தளை, கண்டி வைத்தியசாலைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் எரிகாயங்களுக்கு ஆளாகினர்.

No comments: