Friday, 8 February 2008

ஈழ களத்தில்....ஊடுருவல் முறியடிப்பு!

செய்திகள்: புதினம்

மணலாற்றில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008, 06:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மணலாற்றில் வெடிவைத்தகல்லுப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.15 மணிக்கு இம் முறியடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் படைத்தரப்பினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர்.
இம் மோதலின் போது
கிளைமோர்கள் - 03
வெடிப்பிகள் - 03
தொடுகம்பிச்சுருள் - 01 ஆகியவற்றினை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே மணலாறு சம்பத்நுவரப் பகுதியில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
மணலாறு சம்பத்நுவர சிங்களக் குடியேற்றப் பகுதியில் இன்று முற்பகல் 11:45 மணிக்கு 3 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

மன்னாரில் படையினரின் இருமுனை முன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு
[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008, 05:59 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் சிறிலங்காப் படையினர் நேற்றுப் பிற்பகல் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
பெரிய பண்டிவிரிச்சான் பகுதி ஊடாக பல்குழல் மற்றும் ஆட்டிலெறிகளின் செறிவான சூட்டாதரவுடன் டாங்கிகள் சகிதம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1:50 மணியளவில் முதலாவது முன்னேற்ற முயற்சியை படையினர் ஆரம்பித்தனர்.
இம் முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் சுமார் 1 மணி நேரமாக கடும் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்நகர்ந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலையடுத்து படையினர் பயன்படுத்தும் உபகரணங்கள் பல விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
2 ஆவது முன்நகர்வு முயற்சியை வலயன்கட்டுப் பகுதி ஊடாக நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினர் ஆரம்பித்தனர்.
இம் முன்னேற்ற முயற்சியும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
சுமார் 30 நிமிட நேரமாக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலையடுத்து படையினர் இழப்புக்களுடன் படைப்பொருட்களை கைவிட்ட நிலையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

No comments: