Saturday, 9 February 2008

ENB:வடக்குப் படையெடுப்பு முறியடிப்பு

Posted on : Sat Feb 9 8:25:00 2008
மன்னார் அடம்பனில் நேற்று 9 மணி நேரமாகக் கடும் சமர்! 1 கிலோ மீற்றரை கைப்பற்றிவிட்டோம்-படையினர் விரட்டி முறியடித்துவிட்டோம்-புலிகள்
மன்னார் மாவட்டம், அடம்பன் தெற்கில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், நேற்றுத் தொடர்ச்சியாக 9 மணி நேரம்
கடும் சமர் இடம்பெற்றது.நேற்றைய சமரில் அடம்பன் குளத்துக்குத் தெற்கே ஒரு கிலோ மீற்றர் தூரத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டு, அங்கு தாம்
நிலைகொண்டிருப்பதாக படைத்தரப்பினர் நேற்று மாலை தெரிவித்தனர்.ஆனால், பாலைக்குழியில் இருந்து அடம்பன் பகுதியை நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தி, அவர்களை
விரட்டி தாக்குதல்களை முறியடித்து விட்டதாக விடுதலைப் புலிகள் நேற்றிரவு அறிவித்தனர்.நேற்றுக்காலை 9மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ந்து நடைபெற்ற உக்கிர சண்டையில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர்
காயம் அடைந்ததாகவும் புலிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.நேற்றைய தாக்குதலில் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.மன்னார் பாலைக் குழியில் இருந்து அடம்பன் பகுதியை நோக்கி இராணுவத்தினர் நேற்றுக் காலை மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி,
எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இராணுவத்தினருடன் நேற்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய மோதல்கள் தொடர்ச்சியாக மாலை 6 மணிவரை கடுமையாக இடம்பெற்றதாகவும்,
அதில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், இராணுவத்தினரிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள்
கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.மன்னார் மாவட்டத்தில் இராணுவ முன்னரங்கப் பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின்போது சுமார்
ஒரு கிலோ மீற்றர் நீளமுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழி வரிசையொன்றை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக
பாதுகாப்புத் தரப்பு அறிவித்தது.இந்தச் சண்டையில் தமது தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு
மேலும் தெரிவித்தது.இராணுவத்தினர் தாங்கள் கைப்பற்றிய பிரதேசத்தில் நிலைகளைப் பலப்படுத்தி வருவதாகவும், இந்தத் தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள்
கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.தாம் முன்னேறிச் சென்ற விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதிகளில் நிலைகொண்டுவிட்டதாக இராணுவத்தரப்பினர் வெளியிட்ட பிந்திய
தகவலில் தெரிவிக்கப்பட்டது.

அடம்பன் தெற்கில் கடும் மோதல் இரு இராணுவ அதிகாரிகள் பலி 2/8/2008 8:26:49 PM வீரகேசரி நாளேடு -
நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இம்மோதலானது சுமார் ஒன்றரை மணிநேரம் வரையில் நீடித்ததாகவும் விடுதலைப்
புலிகளின் தாக்குதலை முறியடித்ததாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
இம்மோதலின் போது காயமடைந்த இராணுவ அதிகாரிகள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ
பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மணலாற்றில் மோட்டார் தாக்குதல் இரு பொதுமக்கள் காயம்
2/8/2008 4:10:38 PM வீரகேசரி இணையம் -
மணலாறு எத்தாவெட்டுநுவர பகுதியில் இன்று நண்பகல் 12.45 மணியளவில் மோட்டார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இதில் இரு பொது மக்கள் காயமடைந்துள்ளதாக பதவிய பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.
இம் மோட்டார் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சம்பந்நுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

மன்னார் தாழ்வுப்பாடு பிரதான கடற்படையினர் மீது துப்பாக்கி பிரயோகம்
2/8/2008 4:01:46 PM எஸ்.ஆர்.லெம்பட் -
மன்னார் தாழ்வூபாடு பிரதான வீதியின் எழுத்தூர் சந்தியில் இன்று மாலை 3 மணியளவில் வீதிச்சோதணையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கடற்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் தேடுதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Posted on : Sat Feb 9 8:25:00 2008
13ஆவது திருத்தம் அமுலாவதை ஊன்றி அவதானிக்கிறது இந்தியா புதுடில்லியில் ரணிலிடம் தெரிவிப்பு இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவடிக்கையாக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்யப்போவதாக அறிவித்திருக்கும்
இலங்கை அரசு, அதனை எப்படி எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த விழைகின்றது என்பதை இந்தியா ஊன்றிக் கவனிக்கும்.இவ்வாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புதுடில்லி அதிகார வர்க்கம் தெரிவித்திருப்பதாக நம்பகமாக அறியப்படுகின்றது.இலங்கை இந்திய ஒப்பந்த ஏற்பாடுகளுக்குச் சட்ட வடிவம் கொடுக்கும் முயற்சியாக 1988 இல் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
எனினும், அதில் உள்ள ஒழுங்குகளுக்கு அமைவான அதிகாரப் பகிர்வுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை.இந்நிலையில், இந்த 13 ஆவது திருத்த ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தப் போவதான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் அண்மையில் விடுத்தது.எனினும் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள சட்ட ஒழுங்கு விவகாரம், பொலிஸ் நிர்வாகம், உயர் கல்வி, காணி, பெருந்தெருக்கள் போன்ற முக்கிய
துறைகளுக்கான அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் எண்ணம் கொழும்பு அரசுத் தலைமைக்கு இல்லவே இல்லை என்று உறுதியான
தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தப் பின்னணியிலேயே, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும் அரசின் அறிவிப்பு எவ்வளவு தூரத்துக்கு
செயல்வடிவம் பெறுகின்றது என்பதை ஊன்றிக் கவனிக்கப் புதுடில்லி முடிவு செய்திருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு புதுடில்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கின் தேசியப் பாதுகாப்பு
ஆலோசகர் எம்.கே. நாராயணன் உட்பட அரச உயர்மட்டத்தில் பலரையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார்.அப்போது, மேற்படி அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் கொழும்பின் திடீர்த் தீர்மானம் தொடர்பாக ஐ.தே.கட்சியின்
நிலைப்பாட்டை புதுடில்லி உயர் வட்டாரங்கள் கேட்டறிந்தன என்றும் தெரிகின்றது.பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதில் மஹிந்தவின் அரசு இதயசுத்தியுடன் ஈடுபடுமா அல்லது முன்னர்
வரதராஜப்பொருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணசபை செயற்பட்ட காலத்திலேயே அதற்கு உரிய அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காமல்
இழுத்தடித்தமை போன்று கொழும்பு நிர்வாகம் நடந்துகொள்ளுமா என்பதை இந்தியா ஊன்றிக் கவனிக்கத் தயாராகக் காத்திருக்கின்றது என்ற தகவலும்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக அறியவந்தது.

Posted on : Sun Feb 10 0:55:00 2008
ஓடையில் ஓட்டோவுக்குள்ளிருந்து வெள்ளியன்று மீட்கப்பட்ட சடலங்கள் மட்டு. இளைஞருடையவை மட்டக்களப்பு பொலநறுவை மாவட்டங்களின் எல்லையில் வெலி கந்தை செவனப்பிட்டியவில் உள்ள ஓடை ஒன்றுக்குள் வீழ்ந்து கிடந்த
ஓட்டோவுக்குள்ளிலிருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்ட சடலங்கள் இரண்டும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடையவை என
இனங்காணப்பட்டுள்ளன. 26 வயதான எஸ்.மாணிக்கவாசகம் மற்றும் 19 வயதான கே.கதிரீசன் ஆகிய இருவரின் சடலங்களே அவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக
வெலிகம உதவிப் பொலீஸ் சுப்பிரின் டென்ட் ஏ.ஜி.குணரத்னா தெரிவித் தார்.இளைஞர்கள் இருவரும் கத்தி யால் குத்திக் கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களின் சடலங்கள் ஓட் டோவுக்குள் வைக்கப்பட்டு ஓடைக் குள்
தள்ளப்பட்டிருப்பதாக விசாரணை கள் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து முழு அள வில் விசாரணைகள் முடுக்கிவிடப் பட்டிருப்பதாகவும் பொலீஸ் வட்டா ரங்கள் தெரிவித்தன.

இராணுவ உயர்மட்டக்குழுவினர் இந்தியாவிற்கு இரகசிய விஜயம் 2/9/2008 8:26:54 PM வீரகேசரி இணையம் -
இலங்கை இராணுவ உயர்மட்டக்குழு ஒன்று இந்தியாவிற்கு இரகசிய விஜயம் மேற் கொண்டு உயர்தர புலனாய்வுப்
பயிற்சிகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் பூனே நகரிலுள்ள இந்திய இரா ணுவ தேசிய பயிற்சிக் கல்லூரியில் இடம் பெற்ற ஐந்துநாள் பயிற்சி நெறியிலேயே இந்த
உயர்மட்டக்குழுவினர் கலந்துகொண்டு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்த தகவல்களை ரைம்ஸ் ஒவ் இந் தியா வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை இராணுவ
உயர்மட்டக்குழுவைச் சேர்ந்த மூவர் இந்திய இராணுவ தேசிய பயிற் சிக் கல்லூரியில் உயர்தர புலனாய்வுப் பயிற்சிக ளைப் பெறுவதற்காக இரகசிய
விஜயம் மேற் கொண்டுவந்து பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ இராணுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவே இந்த பயிற்சியில் கலந்துகொண்டது. ஜெனரல் சேர்
ஜோன் கொத்தலாவ இராணுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான மேஜர் ஜெனரல் பாலசூரிய தலைமையிலான இந்த உயர்மட்டக்குழுவில்
கொமாண்டர் ஏ.எல். பிஎஸ். திலகரட்ண , பயிற்சிப் பிரிவுக் கட் டளை அதிகாரியான டபிள்யூ. எம். அமரதாச ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பித்த இந்த உயர் தர புலனாய்வுப் பயிற்சி கடந்த வெள்ளிக் கிழமை நிறைவடைந்தது என்று இந்திய இரா ணுவத்தின் தேசிய
பயிற்சிக் கல்லூரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் இருந்துவரும் பிரதி நிதிகளைப் போல் அல்லாது இலங்கை இரா ணுவ
உயர்மட்டக்குழுவினருக்கு இந்த பயிற்சிக்கல்லூரியில் அனைத்து துறைகளிலுமான புலனாய்வு விளக்கங்கங்களும் , பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன
என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக நவீன இலத்திரனியல் ஆயுதங்களைக் கையாள்வது குறித்த உயர்தர பயிற்சிகள் , தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகளைப் பேணும் பயிற்சிகள் ,
கணினி புலனாய்வு பயிற்சிகள் உட்பட மேலும் பல பயிற்சிகளை இலங்கையிலிருந்து சென்ற இராணுவ உயர்மட்டக்குழுவினர் பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சி நெறியில் மன்னார் மற்றும் பாக்கு நீரிணை பகுதியில் புலிகளின் நடமாட்டங்கள் மற்றும் அதுகுறித்த புலனாய்வுத்தகவல்களையும்
இந்திய இராணுவத்தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தாவுடன் இவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில்
பயன்படுத்துவதற்கான பயிற்சி நெறிகளையே இலங்கையில் இருந்து சென்ற இராணுவ உயர்மட்டக்குழுவினர் பெற்றுள்ளனர் .
இந்தியாவிலுள்ள அனைத்து துறைகளுக்குமான புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கும் ஒரேயொரு பயிற்சி நிலையமாக இந்திய இராணுவ தேசிய
பயிற்சிக் கல்லூரி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஏழு பேர் அடங்கிய இந்திய இராணுவ உயர்மட்டக்குழு ஒன்று
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின்போது இலங்கையில் இராணுவப் பயிற்சிக்கல்லூரியை
அமைப்பது குறித்து அவர்கள் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: