Tuesday, 12 February 2008

ENB:தள்ளாடியில் தறிகெட்ட இராணுவம் நாலாபுறமும் எறிகணை வீச்சு!!






மன்னார்- தள்ளாடி புலிகளின் இலக்கு?


தறிகெட்ட இராணுவம் நாலாபுறமும் எறிகணை வீச்சு!!

enb News: 12-02-2008
இன்று செவ்வாய் காலை 8.10 மணியளவில் மன்னார் தள்ளாடி ஆக்கிரமிப்பு இராணுவமுகாம் மீது புலி விடுதலைப் போராளிகள் தொடுத்த தாக்குதலை அடுத்து கிலி கொண்ட ஸ்ரீறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் நாலாபுறமும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை நடத்தியதாக ஈழச் செய்திகள் தெரிவிக்கின்றன.மன்னார் பண்டிவிரிச்சான் ஈழநிலப்பரப்புக்குள் மும்முனைகளில் ஊடுருவ முனைந்த ஸ்ரீறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை முயற்சி புலி விடுதலைப் போராளிகளால் பி்ன்தள்ளப்பட்டதன் பின்னணியில் இத் தள்ளாடி எறிகணை வெறியாட்டம் நடந்துள்ளது.இதனால் மன்னார் தீவின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவியதாகவும்,தொலை பேசிஇணைப்புக்களில் துண்டிப்பு ஏற்பட்டதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. புலி விடுதலைப் போராளிகளின், இத்தாக்குதலில் குறைந்தது 6 ஸ்ரீறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஸ்ரீறிலங்கா இராணுவத்தை மேற்கோள்காட்டி 'தமிழ் நெற்' இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


பக்ச பாசிஸ்டுக்களின் வடக்குப் படையெடுப்பை தோற்கடிக்க, தேசபக்த போரை ஆதரிப்போம்!

********************************************************************

(2ம் இணைப்பு)

தள்ளாடி படைத்தளம் மீது எறிகணை வீச்சு: 15 படையினர் பலி- 50 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2008, 03:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்காப் படையினரின் ஆட்டிலெறிப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை
வீச்சுத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். தள்ளாடி ஆட்டிலெறிப் படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் விடுதலைப் புலிகள் செறிவான எறிகணை வீச்சுத்
தாக்குதலை நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் தள்ளாடி ஆட்டிலெறிப் படைத்தளம் மற்றும் அதன் சுற்றயல்ப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதில் 15 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சுத் தாக்குதலையடுத்து பதிலுக்கு படையினரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி
எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர்.
அத்துடன் மன்னார் தொலைபேசித் தொடர்புகளையும் துண்டித்து போக்குவரத்துச் சேவைகளையும் படையினர் நிறுத்தினர்.


மன்னார் தள்ளாடி பகுதியில் ஆட்லறித்தாக்குதல்
2/12/2008 1:21:27 PM வீரகேசரி இணையம்


மன்னார் படை முகாம்களில் இருந்து இன்று காலை 8 மணிமுதல் விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி பாரிய ஷெல்
தாக்குதல் எறிகணைக் தாக்குதல் , பல்குழல் , எறிகணைத் தாக்குதல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிலங்குளம் படை முகாம் மற்றும் தள்ளாடி படைமுகாம் ஆகியவற்றில் இருந்து படையினர் திருகேஸ்வரம் பகுதியுனுடாக விடுதலைப்புலிகளின்
பகுதிகளுக்குள் முன்னகர்வை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது .
இதணைத் தொடர்ந்து படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம் பெற்றது. இதன் போது படையினருக்கு ஆதரவாக செளத்பார்
படைமுகாம் , வங்காலை படைமுகாம் ஆகிய வற்றில் இருந்து புலிகளின் இலக்குகள் மீது கடும் ஷெல் தாக்குதல் இடம் பெற்றது . பரஸ்பர
தாக்குதல்கள் காலை 8 மணி முதல் காலை 10.30 மணிவரை இடம் பெற்றது . இதன் போது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள்
தள்ளாடிபடை முகாம் , தள்ளாடிப்படை முகாமிற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயம் ஆகிய பகுதிகளிலும் கடற்பரப்பினுள்ளும் வீழ்ந்து வெடித்துள்ளது.
இதன் போது பாரிய புகை மண்டலம் உருவாகியதைக் காணக்கூடியதாக இருந்தது. இத் தாக்குதல்களைத் தொடர்ந்து மன்னார் - வவுனியா
போக்குவரத்து மன்னார் மதவாச்சி ஊடான போக்கு வரத்துக்கள் நிறுத்தப்பட்டது . பெரும் பாலன வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் அரச அரச சார் பற்ற நிறுவனங்களில் பணியாளர்கள் அச்சத்தின் காரணமாக அலுவலகங்களில் இருந்து வெளியில் வந்தனர் .
பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை பெற்றோர் மீண்டும் அழைத்துச் சென்றனர். இதனால் மன்னாரின் இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டது. இந்த
தாக்குதல்களின் போது ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

No comments: