Posted on : Thu Feb 14 8:40:00 2008
சமஷ்டியை நோக்கியதான ஒரு தீர்வே தேவை;
13ஆவது திருத்தம் நிராகரிக்கப்பட்ட ஒன்று
அமெரிக்கத் தூதரிடம் கூட்டமைப்பு இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமஷ்டியை நோக்கியதான தீர்வையே அரசு முன்வைக்கவேண்டும். அது இப்போது அறிவித்துள்ள 13 ஆவது திருத்தச் சட்டம், 20 வருடங்களுக்கு முன்னரே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும்.இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று எடுத்துக் கூறினர்.வடக்கு, கிழக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அரச விமானப்படையினர் நடத்தும் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் பொதுமக்களும் மாணவர்களுமே பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.இச்சந்திப்பு ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது.தற்போதைய அரசியல் நிலைமையில் வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. விமானப் படையினரின் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். விமானத் தாக்குதல்கள் புலிகளின் இலக்குகள் மீதே நடத்தப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் இதனால் பொதுமக்களும் மாணவர்களுமே பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் கொணடுவர விரும்பினால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டமொன்றினை முன்வைக்க
வேண்டும். அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தமிழத் தரப்பினால்
நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். அரசாங்கம் சமஷ்டியை நோக்கியதான தீர்வினை முன்வைக்கவேண்டும். இதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வைக்
காணமுடியும்.தூதுக்குழுவினரின் கருத்துக்களை செவிமடுத்த அமெரிக்கத் தூதுவர், இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்பதாகத்
தெரிவித்துள்ளார்.தற்போதைய நாட்டு நிலைமைகள் தொடர்பில் தூதுவர்களைச் சந்தித்து விளக்கி வரும் கூட்டமைப்பு இதுவரை இத்தாலி, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம்
ஆகியவற்றின தூதுவர்களையும் ஏற்கனவே சந்தித்துள்ளது.
Posted on : Wed Feb 13 10:05:00 2008
சம்பூரிலிருந்து மாற்றம்:
திருமலை கப்பல்துறையில் இன்று அனல் மின்நிலையத்துக்கு அடிக்கல் திருகோணமலையில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான அடிக்கல் இன்று நடப்படவுள்ளது.
படையினரால் மீட்கப்பட்ட சம்பூர் பிர தேசத்தில் இந்த அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆயினும், அந்தப் பிரதேசத்தில் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைய டுத்து மின் நிலையத்தை நகரில்
இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் கப்பல்துறை என்னும் இடத்தில் அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.இந்திய அதிகாரியான எஸ்.சங்கரலிங் கம், மின்சக்தி அமைச்சர் டபிள்யூ. ஜே. செனவிரத்தின ஆகியோர் இணைந்து இன்று முற்பகல் 10 மணிக்கு மின்
நிலை யத்துக்கான அடிக்கல்லை அங்கு நடவுள் ளனர்.
No comments:
Post a Comment