Sunday, 23 March 2008

மன்னார் முன்நகர்வு முறியடிப்பு: 55-க்கும் அதிகமான படையினர் பலி; 120-க்கும் அதிகமானோர் படுகாயம்

மன்னார் முன்நகர்வு முறியடிப்பு: 55-க்கும் அதிகமான படையினர் பலி; 120-க்கும் அதிகமானோர் படுகாயம்
[சனிக்கிழமை, 22 மார்ச் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்னகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 55-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து இரு முனைகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு படையினர் பெருமெடுப்பிலான தாக்குதலை மேற்கொண்டனர்.
பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறித்தாக்குதல், மோட்டார்த் தாக்குதல் ஆகியவற்றின் மிகச்செறிவான சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். படையினரால் மிகச்செறிவாக மிக அதிகளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செறிவான எறிகணைத் தாக்குதலுடன் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
இன்று பிற்பகல் 5:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் படையினர் 55-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
படையினர் பின்தளங்களிலிருந்து ஊர்திகள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் மன்னார் - வவுனியா சாலைப் போக்குவரத்து படையினரால் தடுக்கப்பட்டது.
கடும் சேதங்களுடன் படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

No comments: