[TamilNet, Friday, 21 March 2008, 23:48 GMT]
Liberation Tigers of Tamileelam (LTTE) elite Black Sea Tigers, engaged in a confrontation with a fleet of Sri Lanka Navy in the seas off Mullaiththeevu, attacked and sunk a SLN Dvora Fast Attack Craft (FAC) between Mullaiththeevu and Naayaa'ru at 2:10 a.m. Saturday, LTTE sources in Vanni told TamilNet. Three Black Sea Tigers were killed in action, according to initial reports.
The sea battle was continuing, the Tigers said.
============================================The sea battle was continuing, the Tigers said.
யாழ் உதயன்Posted on : Sat Mar 22 8:45:00 2008
கிழக்கிலிருந்து அதிரடிப் படையினர் வடக்கின் போர்முனைப் பகுதிகளுக்கு!
பாதுகாப்புத் தரப்பின் புதிய வியூகம் இது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கிலங்கையில் நிலைகொண்டு புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விசேட அதிரடிப்படையினரை
அங்கிருந்து விலக்கி, வடக்கில் போர்முனைகளை அண்டிய பகுதிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்திருக்கின்றது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய தகவலில் இதனை
உறுதிப்படுத்தியிருக்கின்றார்.வவுனியா, அநுராதபுரம் போன்ற பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வீதியோரக் குண்டுத்தாக்குதல்களை
நிறுத்துவதற்கு அங்கு இனிமேல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவிருக்கும் விசேட அதிரடிப்படையினர் உதவுவார்கள் என்றும் உதய நாணயக்கார
தெரிவித்துள்ளார். பயங்கரவாதக் கிளர்ச்சி நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு பொலிஸ்துறையின் ஒரு பிரிவாக விசேட அதிரடிப்படை
உருவாக்கப்பட்டு கடந்த இரு தசாப்த காலமாகப் பெரும்பாலும் கிழக்கிலங்கையில் அந்த அமைப்பு செயற்பட்டு வந்தது. கிழக்கில் பல
நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வந்துள்ளது.கிழக்கு இலங்கையை முற்றாகப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்தாயிற்று என்று அறிவித்துள்ள இலங்கை அரசு, திடீரென கிழக்கிலிருந்து விசேட
அதிரடிப்படை முகாம்களை வடபகுதியை அண்டிய போர்முனைப் பக்கமாக நகர்த்தத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களின்போது வாக்கு மோசடிகளில் ஈடுபட அனுமதிக்காமல், விசேட
அதிரடிப்படையினர் பல வாக்குச் சாவடிகளில் முரண்டுபிடித்து மூர்க்கமாக நின்றனர் என்றும் இது குறித்துக் கொதித்தெழுந்துள்ள பிள்ளையான் அணி, அரசுத் தலைமைக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே விசேட அதிரடிப்படையினரை
கிழக்கில் இருந்து நகர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் அரசில் பூரண கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்திலிருந்து இரண்டாயிரம் விசேட அதிரடிப்படையினரை விலக்கிக் கொள்ளவுள்ளதாகத்
தெரிவித்துள்ள படைத்தரப்பு அவர்களை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் பணிக்கு அமர்த்தவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.விசேட அதிரடிப்படையினரை வடக்கில் நிலைகொள்ளச் செய்வதன் மூலம் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எதிர்கால இராணுவ
நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக மேலும் ஒரு தொகை இராணுவத்தினரை விடுவிக்கக் கூடியதாக இருக்கும் என பிரிகேடியர் உதய நாணயக்கார
தெரிவித்தார்.கிழக்கில் சமீபத்தில் இடம்பெற்ற தேர்தல்கள் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளதாகத்
தெரிவித்துள்ள உதய நாணயக்கார, இதன் காரணமாக அப்பகுதிகளில் விசேட அதிரடிப்படையினருக்குப் பதில் சாதாரண பொலிஸாரைப்
பயன்படுத்தக்கூடிய நிலைமை வந்துள்ளது என்றார்.ஆனால், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அரசுத் தரப்பு தில்லுமுல்லுசெய்து வெற்றிக்கனியை எட்டுவதற்கு வசதியான சூழலை ஏற்படுத்திக்
கொடுக்கும் முகமாகவே பிள்ளையான் குழுவின் அழுத்தத்துக்குப் பணிந்து இப்படி அதிரடிப்படையினரை கிழக்கில் இருந்து நகர்த்த அரசுத் தலைமை
முடிவு செய்துள்ளது என்றும் இம்முடிவால் கிழக்கின் எதிர்காலம் ஆபத்துக்குள் சிக்கப்போகின்றது என்றும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் அரசு மீது குற்றம் சுமத்துகின்றன.தமிழ் இளம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அராஜகங்கள் சில தொடர்பாகப் பிள்ளையான் குழு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே
அரசுத் தலைமை இந்த நடவடிக்கைகளை எடுக்கின்றது என வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted on : Sat Mar 22 8:55:00 2008
இலங்கை அரசமைப்புக்கு உட்பட்டு ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு புலிகள் குறித்து அனுதாபம் இல்லை என்கிறார் முகர்ஜி விடுதலைப் புலிகள் குறித்து இந்தியா வுக்கு எவ்வித அனுதாபமும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அந்த நாட்டின் வெளி விவகார அமைச்சர்
பிரணாப் முகர்ஜி, விடு தலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்திய நாடாளுமன்றத்தில் வெளிவிவகார கொள்கைகள் குறித்த விவாதத் தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக் கையிலேயே அவர் இதனைக்
குறிப்பிட் டுள்ளார்.அதேவேளை, அதிகாரப் பகிர்வு உட் படத் தமிழர்கள் சார்பான விடயங்களுக்கு இலங்கையின் அரசமைப்பின்படி தீர்வு காணப்படவேண்டுமென்றும்
பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய கேள் விக்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜி, இது குறித்த பேச்சுகள் தற்போது
இடம்பெறு கின்றன எனவும் விரைவில் இப்பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படுமென நம்பிக் கையுள்ளது எனவும் குறிப்பிட்டார்.இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி களை இந்தியா பல வருடங்களாக வழங்கி வருவதாகவும், வேறு பல நாடுகளுடனும் இவ்வாறான ஒத்துழைப்பில்
இந்தியா ஈடு பட்டுள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி மேலும் குறிப்பிட்டார்.

Posted on : Sat Mar 22 8:40:00 2008
மன்னார் நகரில் நேற்றிரவு இராணுவ பஸ்மீது கிளைமோர் தாக்குதல்
2 படையினர் பலி; 11 பேர் காயம் மன்னார் நகரத்தில் சவுத்பார் ஸ்ரேசன் வீதியில் நேற்றிரவு 7.15 மணியளவில் இராணுவ பஸ்ஸை இலக்குவைத்துக் கிளைமோர்த் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்ததாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர்; 11 படையினர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மன்னார் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தாக்குதலையடுத்து மன்னார் நகரையும் அண்டிய பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் பெரிய வெள்ளி ஆராதனைக்கு சென்றவர்கள்
வீடு செல்லமுடியாது தேவாலயங்களிலேயே தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.நகரப் பகுதியில் சன நடமாட்டம் நிறைந்திருந்த நேரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு வரை பதற்றம் நிலவியதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

No comments:
Post a Comment