Friday, 21 March 2008

யாழ்ப்பாண பெண்களின் கோரிக்கைகள்

யாழ் உதயன்: Posted on : Fri Mar 21 10:00:00 2008

குடாநாட்டில் பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் நடக்கும் கடத்தல், காணாமற்போகச் செய்தலைத் தடுத்து நிறுத்துங்கள்!

பெண்கள் யாழ். நகரில் கூடிப் பிரகடனம் குடாநாட்டில் பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் இடம்பெறும் ஆள்கடத் தல்கள், காணாமற் போகச் செய்யப்படு தல், நீதிக்குப் புறம்பான கொலைகள்
போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.யாழ்.பொது நூலகத்தில் நேற்றுப் பெண் கள் கூடி வெளியிட்ட பிரகடனம் ஒன்றில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. ஐந்நூறுக் கும் அதிகமான பெண்கள்
ஒப்பமிட்டுப் பிர கடனம் ஒன்றின் மூலம் இப்படி ஒரே குரலில் கோரியுள்ளனர்.மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் அபி விருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற ஒன்று கூடல் நிகழ்வில் இது தொடர்பான பிரகடனம்
வெளியிடப்பட்டது. உலகெங்கும் பெண்கள் பல்வேறு பிரச் சினைகளை எதிர்கொள்கின்றனர். யாழ்ப் பாணப் பெண்களின் பிரச்சினைகள் ஏனைய பெண்களின்
பிரச்சினைகளை விட அதிக மானவை, மோசமானவை என நேற்றைய மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற பெண் கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள்
பிர கடனம் ஒன்றையும் வெளியிட்டனர். ஜனாதிபதிக்கும், சம்பந்தப்பட்ட அமைச் சுகளுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ள இந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:

* உலகளாவிய ரீதியில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை விட அதிக சுமைகளை யாழ். பெண்கள் எதிர்கொள் கின்றனர். தொடரும்
யுத்தத்தினால் எதிர் பாராத பல இடர்களை இவர்கள் சந்திக் கின் றனர். இதனால் தொடரும் யுத்தம் நிறுத்தப் படவேண்டும்.

* போர்ப் பிரதேசங்களிலிருந்து பெரும் பாலான ஆண்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறுகின்றமை பெண் கள் மீது அதிக சுமையை மேலும் வலுப் படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் பல வகையான வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் சந்திக்கின்றனர். ஆகவே
இந்நிலை தவிர்க்கப்பட்டுப் பெண் களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

* யாழ். பிரதேசத்தில் ஆள் கடத்தல், காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்றவை பயங்கரவாதத் தடுப்பு என்ற ரீதியில் இடம்பெறுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

* இதுவரை காணாமற்போனோர், கொலை செய்யப்பட்டோர், கடத்தப்பட் டோர் குறித்து சட்டரீதியான விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு, குற்றம் புரிந்
தோர் இனம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு அதுவே நியமமாகமாறி வரும் நிலை
காணப்படு வது தவிர்க்கப்படவேண்டும்.

* பெண்களுக்குரிய மனிதாபிமான கௌரவம், மதிப்பு, சுயமரியாதை பேணப் படுவது அவசியம் என்பதை வலியுறுத்து கின்றோம்.

* மனித உரிமை மீறல்களில் பெண் கள் உரிமை மீறல் இடம்பெறுவது, குறிப் பாக சோதனைச் சாவடிகளில் பெண்களை சோதனைக்குட்படுத்தல், மன
அழுத்தத் திற்கான துன்புறுத்தல்களை எதிர்பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

* மகளிர் சுதந்திரமாக வீதிகளில் மட்டு மன்றி, இலங்கையின் ஏனைய பிரதேசங் களுக்கும் கட்டுப்பாடின்றி சுதந்திரமாகச் சென்று வருவதற்கான
நடைமுறைகள் பேணப்படவேண்டும்.

* பெண்கள் தமது குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கான பொருள் களை இலகுவாக நியாய விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்
பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* தொடரும் இராணுவ ரீதியான போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, கௌரவ மான சமாதானத்தை எட்டுவதற்கான முயற்சிகளில் பெண்கள்
இணைக்கப்பட்டு சமாதான முயற்சிகளை முனைப் போடு செயற்படுத்த பெரும் எத்தனம் மேற் கொள்ள வேண்டும். என்று உள்ளது.நேற்றைய ஒன்று கூடலில் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

யாழ் உதயன்: Posted on : Fri Mar 21 10:00:00 2008

இளம் பெண் கடத்தல்; மற்றிருவரும் கைது

வீதியால் சென்ற இளம் பெண்ணைக் கடத்திச்சென்று ஆனைவிழுந்தான் மயானப் பகுதியில் வைத்து தகாத உறவு கொள்ள முயற்சித்ததாகக்
கூறப்படும் சம்பவம் தொடர் பாக ஏனைய இரு இளைஞர்களும் பொலி ஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவ்விரு இளைஞர்களும் பருத்தித் துறைப் பொலிஸாரினால் பருத்தித்துறை நீதிபதி கே.அரியநாயகம் முன்னிலையில் நேற்று ஆஜர்செய்யப்பட்டபோது
இருவரை யும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதி பதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர் பாக ஏற்கனவே இரு இளைஞர்கள் பொலி ஸாரால்
கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத் தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: