Friday, 21 March 2008

பிள்ளையான் கிழக்கு மாகாண அரசியல்வாதி! மேஜர் ஜெனரல் ரூபவாஹினி நிர்வாக அதிகாரி!!

Posted on : Fri Mar 21 10:00:00 2008
நோர்வே, இணைத்தலைமைப் பிரதிநிதிகள் வன்னி செல்ல அரசு அனுமதி வழங்காது!
வெளிவிவகார அமைச்சு மறைமுக அறிவிப்பு வெளிநாடுகளின் உயர்மட்ட அதிகாரி கள் மற்றும் பிரமுகர்கள் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அரசாங்கம்
அனுமதி வழங்க மாட்டாது என்று இலங்கை அரசாங்கம் பூட கமாக, மறைமுகமாக சுற்றிவளைத்து தெரிவித்துள்ளது.வெளிநாட்டு அதிகாரிகள் பிரமுகர்கள் இதுவரை வன்னிக்குப் பல தடவைகள் விஜ யம் செய்தபோதிலும், சமாதான முயற்சி களை முன்னெடுத்துச்
செல்வதில் எவ்வித பயன்தரக் கூடிய, முன்னேற்றமும் இல்லை என்று இலங்கை வெளிநாட் டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.வெளிநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் வன்னிக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தமது பிரசாரத்துக்கே பயன்படுத்தி இருக்கிறார் என்று வெளிநாட்டு
அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.இவ்வார ஆரம்பத்தில் இலங்கை வந்து திரும்பிய ஜரோப்பிய ஒன்றியத்தின் அறு வர் கொண்ட தூதுக்குழு விடுதலைப் புலி கள் சமாதான நடவடிக்கைகளுக்கு மீண் டும் திரும்புவது குறித்து அவர்களுடன் பேசுவதற்கு, நோர்வே அனுசரணையாளர் கள், இணைத் தலைமை நாடுகளின் பிரதி நிதிகள் மற்றும் மனிதாபிமானப் பணிக ளில் ஈடுபட்டிருப்போர் வன்னி செல்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் வசதி செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தி இருந்தது வாசகர்கள் அறிந்ததே.வெளிவிகார அமைச்சு அதிகாரி இதற் குப் பதிலளிக்கும் விதத்தில் கருத்து வெளி யிடுகையில் கோரிக்கையைத் தட்டிக் கழிக் கும் வகையில்
சப்புக்கொட்டியிருக்கிறார்.அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இப்போதைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் வெளிவகார அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.
Posted on : Fri Mar 21 9:55:00 2008
ரூபவாஹினியின் நிர்வாக அதிகாரியாக மேஜர் ஜெனரல் நியமனம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாப னத்தின் நிர்வாக நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு மேலதிக உதவிப் பணிப் பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற
முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சுனில் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ செய்துள்ளதாக அறியப்படுகிறது. அரசின் இச்செயலைக் கண்டித்துள்ள ஊடக அமைப்புகள், ஊடகத்துறையை இராணுவ மயப்படுத்தும் முயற்சி இது என வும் குற்றம் சாட்டியுள்ளன.எனினும், அரசு இந்தக் குற்றச்சாட்டை, உருவாக்கப்பட்ட பொய் என நிராகரித்துள் ளதுடன் ரூபாவாஹினியில் காணப்படும் முகாமைத்துவக்
குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதற்காகவே முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சுனில் சில்வா நியமிக்கப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது.இராணுவம் ரூபாவாஹினியின் பாது காப்பைப் பொறுப்பேற்று, அதன் இரு நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த
சம்பவத்திற்கு ஓரிரு தினங்களுக்கு பின்னர் மேஜர் ஜெனரல் சுனில் சில்வா பிரதிப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 20 வருடங்களாக தொலைக் காட்சி நிலையமொன்றை இராணுவ அதி காரியொருவர் நிர்வகிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக
இயக்கத் தின் சுனந்த தேசபிரியா, நாட்டை முழுமை யாக இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கை யின் ஒரு பகுதியே இந் நடவடிக்கை என மேலும் தெரிவித்துள்ளார்.எவ்வாறான சூழ்நிலையிலும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அர சின் முயற்சி இது என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

Posted on : Fri Mar 21 10:00:00 2008
வடக்கு - கிழக்கு இணைப்பைத் தனது அணி எதிர்க்கவில்லை என்கின்றார் பிள்ளையான்
பல அரசியல் தலைவர்களுடனும் கொழும்பில் அவர்
கலந்துரையாடல் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவர் பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) கொழும்பில் தங்கி நின்று ஜனாதிபதி
மற்றும் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று தமிழ் அமைச்சர் ஒருவரையும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரையும் சந்தித்த பிள்ளையான் அச்சமயம், வடக்கு கிழக்கு
மாகாண இணைப்புக்குத் தமது கட்சி எதிரானது அல்ல என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்தார் என அறியவந்தது.அண்மையில் இடம்பெற்ற மட்டக் களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமது கட்சியின் உறுப்பினர்களுடன் கொழும்பு
வந்துள்ள பிள்ளையான், உயர் பாதுகாப்புடன் கொழும் பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியி ருக்கின்றார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல்
வெளியிட்டன.அவரது கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
முன்னிலையில் பத விப் பிரமாணம் செய்து கொண்டது தெரிந் ததே. அச்சமயம் அங்கு கட்சித் தலைவர் பிள்ளையான் பிரசன்னமாகியிருக்கவில்லை.
எனினும், அவர் பின்னர் ஜனாதிபதியைத் தனியாகச் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினார் எனக் கூறப்பட்டது.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சி இணைந்து வெற் றிலைச் சின்னத்தில்
போட்டியிடுவதற் கான இணக்கம் அப்போது எட்டப்பட்டதா கவும் கூறப்பட்டது.அந்தக் கூட்டமைப்புக்குள் தேர்தலில் ஆகக்கூடிய உறுப்பினர்களைப் பெறும் தரப்பிற்கு மாகாண முதல்வர் பதவியை வழங்குவது என்ற தமது
தீர்மானத்தை அச் சமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிள்ளையானுக்குத் தெரியப்படுத்தினார் என் றும் விடயமறிந்த வட்டாரங்கள் கூறின.இதன் பின்னர் பிள்ளையான் தமது ஹோட்டலில் வைத்து பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகின்றார் என்றும் கூறப்பட்டது.அந்த வரிசையில் தமிழ் அமைச்சர் ஒரு வரையும் அவரது அணியில் உள்ள பிரதி அமைச்சர் ஒருவரையும் அவர் நேற்று சந் தித்திருக்கின்றார்.முன்னர் புலி சார்புக் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த இந்த அமைச்சரின் அணியினர் திடீரென பிள்ளையான் குழுத் தலைவரைச் சந்தித்துக்
கலந்துரையாடி யிருக்கின்றமை அரசியல் வட்டாரங்களில் எதிர்பாராத விடயம் எனத் தெரிவிக்கப்படு கின்றது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் லண்டன் கிளைத் தலைவர் சுப்பையா என்பவரும் மேற்படி அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர்
பிள்ளையா னைச் சந்தித்த சமயம் உடனிருந்தார் எனத் தெரிகின்றது.வன்னித் தலைமையை மன்னிக்க கிழக்கு மக்கள் தயாரில்லைஇந்தச் சந்திப்பின் போது பிள்ளையான் தரப்பால் கூறப்பட்ட விடயங்கள் தொடர் பாகத் தெரியவந்தவை வருமாறு:* தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கருணா அம்மானே தொடர்ந் தும் தலைவராக இருக்கிறார். பிள்ளையான் பிரதித் தலைவர் பதவியையே வகிக்கின் றார்.
* தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயம், அந்த அபிப்பிராய பேதத்தை விட்டுக் கொடுத்துப் பேசித் தீர்ப்பதற்கு
வன்னித் தலைமைக்கு வாய்ப்புகள் இருந்தன. வன் னித் தலைமை அதைத் தவறவிட்டு நிலை மையை கெடுத்துவிட்டது. அந்த தலை மையை
மன்னிக்க இனி கிழக்கு மக்கள் தயாரில்லை.
* எனினும், வடக்கு மக்களுக்கோ, வடக்கு கிழக்கு இணைப்புக்கோ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு எதிரானது அல்ல.
* கிழக்கில் தமிழர் தாயகமும், நிலங் களும் பறிபோக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு அனுமதிக்காது. அது குறித்துக் காத்திரமான நடவடிக் கைகளை அது எடுக்கும்.
* இளம் தமிழ் சமூகத்துக்கு எதிராகக் கொடூரமான தவறுகளை இழைத்த கார ணத்துக்காக சில அரச படைமுகாம்களை கிழக்கில் இடம்மாற்றும்படி
அல்லது அகற்றும்படி அரசுத் தலைமையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு வற்புறுத்தியிருப்பது உண்மையே. மேற் படி குற்றங்கள்
குறித்து அரசுத் தலை மைக்கு விவரமாக விளக்கமளிக்கப்பட்டி ருக்கின்றது.இவ்விடயங்கள் அச்சந்திப்பின் போது பிள்ளையான் தரப்பால் தெரிவிக்கப்பட் டன என அறிய வந்தது.

கிழக்கு மக்களின் வளங்களை இந்தியா சூறையாடுவதாக ஜே.வி.பி.குற்றச்சாட்டு
தினக்குரல்:[21 - March - 2008]
* விரைவில் அம்பலப்டுபடுத்துவோம்; சோமவன்ச அமரசிங்க -டிட்டோகுகன்-
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக காட்டிக் கொள்ளும் இந்தியா கிழக்கில் மக்களின் வளங்களை சூறையாடுவதாக கடும் குற்றச்சாட்டை
தொடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முடிந்தால் அவர்களை, இந்தியாவை வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு சவால்
விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த சவாலை
விடுத்த ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, சம்பூர் விடுவிக்கப்பட்ட பின் அதிகளவு பயனைப் பெறுவது இந்தியாவே என்றும் அங்கு அனல்
மின் நிலையத்தை அமைத்து முழு இலாபத்தையும் இந்தியாவே பெற்றுக்கொள்ளப்போவதாகவும் சாடினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் நாம் போட்டியிடுவோம். இதில் மக்கள்
அச்சம், சந்தேகமின்றி வாக்களிக்கும் வகையிலான சூழ்நிலையை ஏற்படுத்த நாம் செயற்படுவோம்.
கிழக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவது ஜனநாயக வெற்றியாகும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க படையினருக்கு பல கஷ்டங்களுக்கு
மத்தியிலும் ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தங்களது
இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏனெனில், இவ்வாறெல்லாம் நடப்பதனாலேயே நாம்
இதனைக் கூறுகிறோம்.
இதேநேரம், கிழக்கில் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக அரசும் படையினரும் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும், கிழக்கு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் அணியினர் ஆயுதங்களுடன் போட்டியிட்டனர். தங்களது பாதுகாப்புக்கென கூறி அணியொன்று
ஆயுதங்களுடன் தேர்தலில் போட்டியிடுவதை எம்மால் ஏற்க முடியாது.
அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின் பாதுகாப்பு படையினரைக் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து
ஜனாதிபதி பிள்ளையான் அணியினரை ஆயுதங்களுடன் தேர்தலில் போட்டியிட அனுமதித்து ஆயுதங்களை தேர்தலுக்கு மறைமுகமாக பயன்படுத்திக்
கொண்டுள்ளார். பாதுகாப்பு படையினரைக் கொண்டு ஜனாதிபதி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்காததற்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன.
இந்த நாட்டில் ஆயுதம் தாங்கிய படையொன்று மட்டுமே இருக்க முடியும். இல்லாவிட்டால் கிழக்கை மீட்டது பொய்யாகிவிடும். அரசாங்கம் என்றாலும்
அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி ஆயுதங்களை தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது. பிள்ளையான் அணியினரிடமிருந்து ஆயுதங்களை
அரசாங்கம் மீளப்பெறாதது ஏனென எம்மைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வினவுகின்றனர்.
இதேநேரம், 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கத்துக்கு நடைமுறைப் படுத்த முடியாமலில்லை. எனினும், ஒரு நோக்கத்திற்காகவே
அரசாங்கம் இப்படி செய்கிறது. தேர்தல் சட்டத்தை மீறவே அரசு இவ்வாறு செயற்படுகிறது. பிரபாகரனை போலவே அரசாங்கமும் இன்று
ஜனநாயகத்துக்கு பயப்படுகிறது. சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது
அவசியம்.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் போல் வந்த இந்தியா இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் காணிகளை
கைப்பற்றி அப்பகுதியிலுள்ள மக்களுக்கு சொந்தமான வளங்களை சூறையாடி வருகிறது. இது முழு விபரங்களுடன் விரைவில் வெளிச்சம் போட்டுக்
காட்டப்படும்.
குறிப்பாக சம்பூர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அதில் பயன்பெறுவது இந்தியா தான். அங்கு அனல்மின்நிலையத்தை நிறுவி அதன் முழு இலாபத்தையும்
இந்தியாவே பெறப் போகிறது. இதை இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகரும் (நிருபமாராவ்) எம்மிடம் தெரிவித்திருக்கிறார். எனவே,
முடிந்தால் இவர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு நாம் சவால் விடுக்கிறோம்.
திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியா கைப்பற்றி வருகிறது. இதுபற்றி சரியான தகவல்கள் வெளிப்படுத்தப்படும். எனவே, இந்தியா தமிழ்
மக்களை ஏமாற்றுகிறது. இந்தியா தமிழ் மக்களின் விடுதலை விரும்பிகள் இல்லை. அது தமிழ் மக்களின் வளங்களைக் கொள்ளையடித்துக்
கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய வாதிகள் போல் இலங்கை மீது செயற்படுகிறது.
இந்தியாவை நாடு என்ற வகையிலோ அரசு என்ற வகையிலோ நாம் கண்டிக்கவில்லை. எமது நாட்டு விடயங்களில் தலையீடு செய்யும்
அதிகாரப்போக்கையே நாம் கண்டிக்கிறோம்.
எனவே, இந்தியா உட்பட மேலைத்தேய அதிகார வர்க்கத்தினரை எமது நாட்டு உள் விவகாரங்களில் தலையிட இடமளிக்கக் கூடாது என்றார்.
இதேநேரம், கிழக்கு மாகாண தேர்தலில் ஜே.வி.பி. தனித்தே போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையென்றும்
அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இந்திய ஆயுத உதவியை கண்டித்து தென்னாபிரிக்காவில் ஆர்ப்பாட்டம் 3/21/2008 9:19:12 PM
வீரகேசரி இணையம் - இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளை கண்டித்து தென்னாபிரிக்காவில் தமிழர்கள் நேற்று வியாழக்கிழமை கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னாபிரிக்க மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இந்தியத் தூதரகம்
முன்பாக இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்தியத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மதுரை, கண்டன மனுவை தென்னாபிரிக்க மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் ஜோடி கோலப்பனிடம் கையளித்தார்.
மற்றொரு மனுவை இந்தியத் துணைத் தூதுவர் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரிடம் கையளிக்கப்படவிருந்தது. ஆனால், துணைத் தூதரகம் மனுவை
ஏற்றுக் கொள்வதற்கு மறுத்துவிட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை பேசியதாவது,
இலங்கை அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறியது தொடர்பாக பிராந்திய வல்லரசான இந்தியா
எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை. இந்தியாவால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அனைத்து இராணுவ உதவிகளையும் நாங்கள் மிகவும் கண்டிக்கின்றோம். இந்திய அரசாங்கம் மனுவை ஏற்க மறுத்ததன் மூலம் தமிழ் மக்கள் தொடர்பான தனது ஏளனத்தன்மையை
வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
கண்டன மனுவை பெற்றுக் கொண்ட கோலப்பன் பேசியதாவது,
அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் கோட்பாட்டின்படி உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை உடையவர்களாகக்
கருதப்படவேண்டும். அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பதற்கான சுதந்திரம் உள்ளது. ஆனால் பலஸ்தீனம், ஈராக் மற்றும் இலங்கைத் தமிழர்கள் போன்ற மில்லியன் கணக்கான மக்கள் தங்களது உரிமைகளை அனுபவிக்க முடியாமல் உள்ளது.
தென்னாபிரிக்கா சுதந்திரமடைந்ததற்கு முக்கியமான காரணம் உலகம் முழுவதும் இருந்தும் மில்லியன் கணக்கான மக்கள் தென்னாபிரிக்க மக்களோடு சேர்ந்து நின்றார்கள். இது தமிழர்களின் பிரச்சினை மட்டுமல்ல தென்னாபிரிக்காவில் எங்களுக்குரிய சவால் என்னவெனில் இப்பிரச்சினையை தமிழ்ச் சமூகத்திற்கும் அப்பால் எடுத்துச் செல்லவேண்டும்.

Posted on : Thu Mar 20 9:05:00 2008
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வில் 13ஆவது திருத்தம் அமுலாவதை முதல் கட்ட நடவடிக்கையாக இந்தியா வரவேற்கின்றது
வைகோவிற்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் இலங்கையில் உள்ள தமிழர்கள் உட்பட சகல இனமக்களுக்கும் ஏற்பு டைய விதத்தில் ஐக்கியப்பட்ட இலங் கைக் கட்டமைப்புக்குள் பேச்சுக்கள் மூலம்
ஏற்படுத்தப்படும் அமைதித் தீர்விலேயே அந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் வைகோவிற்கு எழுதி யுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்தியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இரா ணுவத் தீர்வு சாத்தியமில்லை என்று இந்தியப் பிரதமர் அழுத்திக் கூறியுள்ளார்.இலங்கைத் தீவுடனான எமது தொடர்புகளில் இலங்கைத் தமிழர் களின் நலன்களுக்கு மிகமுக்கியத்து வம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனை
மனதில் கொண்டுதான் இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் நடத்த அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையை இனப் பிரச்சினை
தீர்வுக்கான முதல் கட்ட நடவடிக்கை என நாம் வரவேற் றுள்ளோம் என்று மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.இந்திய மீனவர் பிரச்சினை இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தாக்குதலுக்கு உள்ளா வது தொடர்பாக தெரிவிக்கையில் இந்திய மீனவரின் நலன்களும் எமது
முக்கிய குறிக்கோளாகும். முடிந்த போதெல்லாம் இந்த விடயம் முக்கி யத்துவம் கொடுத்து இலங்கை அரசு டன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகி றது. இந்திய மீனவர்கள் விடயத்தை மனிதாபிமான முறையில் கட்டுப் பாட்டுடன் அணுகும்படி இலங்கை கடற்படையை வலியுறுத்தியிருப் பதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.பெரும்பாலான சமயங்களில் இந் திய மீனவர்கள் இந்திய எல்லையை கடந்துசென்று விடுகிறார்கள். அத னால் சூட்டுக்கு இலக்காக நேர்ந்துள் ளது.
அப்பகுதிகளை இலங்கை அரசு மீன்பிடிப்புக்குத் தடை விதித்து உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளது. இப்பகுதிகளுக்கு எமது மீனவர்கள்
ஊடுருவாத விதத்தில் நாம் பார்த்துக் கொள்ள தொடர்ந்தும் முயல்கிறோம். இல்லை எனில் நமது மீனவர்கள் மோதல்களின் இடையில் சிக்கிக்கொள்
ளும் அபாயம் உள்ளது என்று இந்தி யப் பிரதமர் தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு வைகோ எழுதி யிருந்த கடிதத்திற்கு அவர் இப்பொழுது பதில் அனுப்பி உள்ளார்.

Posted on : Thu Mar 20 9:15:00 2008 .
தமது அந்தரங்க அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தியமைக்கு ஐ.சி.ஆர்.சி. கண்டனம்
காணாமல்போதல் தொடர்பாக தாம் இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையை அது பகிரங்கப்படுத்தியதை செஞ்சிலுவைச்
சர்வதேசக் குழு (ஐ.சி.ஆர்.சி.) வன்மையாகக் கண்டித்துள்ளது.இலங்கை மனித உரிமை நிலைமை தொடர்பாக அமெரிக்க ராஜாங்க அமைச்சு விடுத்த அறிக்கைக்குப் பதில் அளித்து இலங்கை அரசு விடுத்த
அறிக்கையில் தமது அமைப்பைச் சம்பந்தப்படுத்தியதைக் கண்டித்தே செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்ட 2007ஆம் ஆண்டுக்கான நாட்டறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில்
2008 மார்ச் 15ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ""2007ஆம் ஆண்டின் இரண்டாம் மூன்றாம் காலப்பகுதியில்
காணாமல்போதல் மற்றும் காரணமற்ற கொலைகள் குறிப்பிடக்கூடிய விதத்தில் குறைவடைந்து செல்கின்றது'' என ஐ.சி.ஆர்.சி. உறுதிப்படுத்தியுள்ளதாக
ஐ.சி.ஆர்.சியை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐ.சி.ஆர்.சியின் அவதானிப்புகளின்படி நிலைமை திருந்தியுள்ளது என வெளிவிவகார
அமைச்சு அதில் கூறியிருந்தது. அத்துடன் ஐ.சி.ஆர்.சியின் அந்தரங்க அறிக்கைகளை ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் பெற்றுக் கொண்டுள்ளது எனவும்
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையினை இவ்விதம் பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமையும் தனது முழுக்
கண்டறிதல்கள் தொடர்பில் தான் அரசுடன் நடாத்தும் கருத்தாடல்கள் மட்டில் வெளிவிவகார அமைச்சின் தவறான தகவலினையும் ஐ.சி.ஆர்.சி.
வன்மையாகக் கண்டிக்கிறது.நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணாமல் போதலும் இலங்கையில் இடம்பெறும் பயங்கரமான தகாத நிகழ்வுகளின் ஒரு பகுதிகளாகிவிட்டன.
இவை நிறுத்தப்படவேண்டும் என, ஐ.சி.ஆர்.சியின் தெற்காசிய நாடுகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐக் டி மய்யோ குறிப்பிட்டுள்ளார். இவை
தொடர்பில் ஐ.சி.ஆர்.சி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அந்தரங்கமாகவும் நேரடியாகவும் உரையாட முற்படுகின்றது. இதன் காரணமாகவே
இலங்கையில் நடைபெறும் பல காணாமற்போதல் சம்பவங்கள் மட்டில் நாம் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிப்பதில்லை எனவும் அவர்
தெரிவித்தார்.உலகம் முழுவதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்படுவோரை பாதுகாத்து உதவியளிக்கும் சர்வதேச ஆணை அதிகாரத்தை
ஐ.சி.ஆர்.சி. கொண்டுள்ளது. பிரத்தியேகமானதொரு மனிதாபிமான நிறுவனம் என்ற அடிப்படையில் ஐ.சி.ஆர்.சி. இக் கடமையினை நடுநிலைமை,
பக்கச்சார்பின்மை என்னும் கொள்கைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றது என்று உள்ளது.( =================இராக்கில் 'வெற்றி': படையெடுப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவுரையில் அதிபர் புஷ் பெருமிதம்
இராக்கில் உள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாபெரும் வெற்றிக்கான வாசற்கதவு
திறக்கப்பட்டுள்ளது என்று இராக் மீதான படையெடுப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் உரையில் அதிபர் புஷ் குறிப்பிட்டுள்ளார்.
அல்கைதாவை விரட்டியடிக்க அமெரிக்கர்களுடன் அரபுக்கள் இணைந்த ஒரு களமாக இராக் மாறிவிட்டது என்றும் ஒசாமா பின் லாடனுக்கு எதிரான
அரபுக்களின் முதலாவது பேரெழுச்சியை உலகம் இராக்கில்தான் கண்டது என்றும் அதிபர் புஷ் தெரிவித்தார்.
இராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் தேசிய ஒற்றுமைக்காக குரல் எழுப்பப்பட்டுள்ளதோடு தீவிரவதக்
கோட்பாடுகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.
சுமார் 400 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டார்கள். ஆனாலும் பிரதான சுனி அரபு பிரிவினரும் கடும்போக்கு மதகுரு மொக்ததா அல் சத்ரை
பின்பற்றும் ஷியா பிரிவினரும் இந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தார்கள்.
உட்பூசல்களைத் தள்ளிவைத்துவிட்டு தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க இராக்கின் அரசியல்வாதிகள் தயாரா என்ற கேள்வியை இந்தப்
புறக்கணிப்பு எழுப்பியிருப்பதாக எமது பிபிசியின் அரபு விவகாரங்களுக்கான ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments: