''உணவை ஆயுதமாகப் பயன்படுத்தும் சிறிலங்கா அரசு'':
விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு
''எரிபொருட்கள், சமையல் எரிவாயு, அரிசி, பாண் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் வானளவ அதிகரித்துள்ளது.
அதனை ஈடு செய்யக் கூடிய வருமானம் மக்களுக்குக் கிட்டவில்லை. மகிந்த சிந்தனையை நம்பி மக்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர். இன்று இன்னும் சிறிது காலத்துக்கு இடுப்புப் பட்டியை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு ராஜபக்ஷ அரசு மக்களைக் கேட்கிறது''. UNP
--------------------------------------
அப்படியா விவகாரம்? அப்படியானால் REGAINING SRI LANKA வை தீயிட்டுக் கொழுத்துங்கள்,உங்கள் 'ஜன பல சேனை' முதல் அடி வைக்குமுன்!.
--------------------------------------
உணவை ஆயுதமாகப் பயன்படுத்தும் சிறிலங்கா அரசு: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு [செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2008, 04:20 மு.ப ஈழம்] [பி.கெளரி]
தமிழ் மக்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பிரித்தானியாவிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவ சோதனைச்
சாவடிகளை அமைத்தே தமிழ் மக்களை அடக்கி ஆண்டு வருகின்றன.
தமது உரிமைகளுக்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்ததும் சிங்களப் படையினரின் இந்தச் சோதனை சாவடிகள் அதிகரித்துள்ளன. இது தமிழ்
மக்களின் மனித நேயத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும். இச் சோதனைச் சாவடிகளில் விசாரணை செய்யப்பட்ட பல தமிழ் மக்கள்
காணாமல் போய் உள்ளனர்.
இது தமிழ் மக்களுக்குப் பெரும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. சிங்கள அரசாங்கம், சில சோதனைச் சாவடிகளை மூடுவதன் மூலம்
தமிழ் மக்கள் வெளியுலகத்தில் இருந்து அன்னியப்படுத்தியும் வருகின்றது. கடந்த 18 மாதங்களாக யாழ். குடாநாட்டில் இந்நிலமை நீடிக்கின்றது.
யாழ். குடாநாட்டின் இந்நிலமை அங்கு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. யாழ். குடாநாடு வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக யாரும் எழுதுவது கிடையாது. சிங்கள அரசின் கொலைக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ். குடாநாட்டில் இருப்பவர்களாலும் பேச முடிவதில்லை.
தமிழ் மக்கள் மீதான முதலாவது தடையாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாவது தடையாக வெளி உலகத்துடனான
தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தடையாக உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள்
உள்ளது.
2006 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்ப் பகுதிகளுக்கான சீமெந்து மற்றும் எரிபொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இத்தடைகளால்
ஆழிப்பேரலை அனர்த்த உதவிகளை வழங்கி வந்த பல அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாடுகளை
வன்னி மூன்றாம் ஈழப் போரில் இருந்து எதிர்கொண்டு வருகின்றது.
இத்தடைகள் சிறுவர்களை அதிகம் பாதித்து வருகின்றது. போசாக்கு குறைவு, சிறார் தொற்று நோய்கள் என்பன அதிகரித்துள்ளன. அதனை போர் நிறுத்த
காலத்தில் பயணம் செய்தவர்கள் அவதானித்திருந்தனர்.
ஓவ்வொரு வாரமும் இந்நிலமை மோசமடைந்து வருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் உலக
உணவு நிறுவனமும், அனைத்துலக சமூகமும் இதனை சிங்கள அரசிடம் எடுத்துச் சென்ற போதும் எந்த பலனும் எற்படவில்லை.
வன்னியின் மக்கள் தொகை 460,000 ஆகும். இதில் கிளிநொச்சியில் 200,000 பேரும், முல்லைத்தீவில் 200,000 பேரும், வவுனியாவில் 30,000 பேரும்,
மன்னாரில் 30,000 பேரும் வசிக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted on : Tue Mar 25 9:50:00 2008
"மக்கள் சக்திப் படை' இயக்கத்தை இன்று ஆரம்பிக்கிறது ஐ.தே.க.!
எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களுக்கும் முகம் கொடுத்து இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நோக்கோடு "ஜன பல சேனா' (மக்கள் சக்திப் படை)
என்ற செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைப் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி இன்று ஆரம்பிக்கின்றது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்க கூறினார்.தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதிகள், தேர்தல் மத்திய நிலையங்கள் மட்டத்தில் நாட்டிலுள்ள அனைவரும் இணைந்த மாபெரும்
சக்தியாக இந்த மக்கள் இயக்கம் உருவெடுக்கவுள்ளது என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத்
தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:இந்த நடவடிக்கையின் மூலம் பத்து வீடுகளுக்கு ஒரு தலைவர் என்ற வகையில் நாலரை லட்சம் தலைவர்களை "ஜன பலசேனா' மக்கள் சக்தியில்
இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த இயக்கம் கிராம மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை இரண்டு மாதத்திற்குள் கட்டி எழுப்பப்படும்.ஜன பல சேனா தலைவர்களை உருவாக்குவதன் மூலம் அதிக எண்ணிக்கையானோரை அணி திரட்டுவதும் மேலும் பத்துலட்சம் வாக்குகளைப்
புதிதாகப் பெற்றுக்கொள்வதுமே கட்சியின் பிரதான நோக்கமாகும்.மீண்டும் ஒரு முறை தோல்வியைத் தழுவாமல் கட்சியை வெற்றிபெறச் செய்யும் புதிய அரசியல் நடவடிக்கையை உருவாக்குவதும் இந்நோக்கத்தில்
ஒன்று.இவ்வாறு அத்தநாயக்க தெரிவித்தார்.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள இந்த அரசியல் நடவடிக்கையின் மூலம் ஊழல்கள் நிறைந்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் அரசு உடனடியாகத் தேர்தல் ஒன்றுக்கு கொண்டு செல்லக் கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசுக்கு எதிராக ஐ.தே.க. நாடு தழுவிய மக்கள் போராட்டம்
[24 - March - 2008]
* ஏப்ரல் 3 இல் ஆரம்பம்; ரணில் அறிவிப்பு எம்.ஏ.எம்.நிலாம்
அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் எதிர்வரும் மூன்றாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுமென அறிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் இறுதியில் பத்து லட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
முப்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டு வருவதாகவும் மெதமுலன குடும்பம் நாட்டை
கொள்ளையடித்து வருவதாகவும் ரணில் விக்கிர மசிங்க சுட்டிக் காட்டினார்.
நேற்று முன்தினம் சனிக் கிழமை இரவு கொழும்பு வர்த்தக கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சிச் சபை
பிரதிநிதிகள், கட்சி அமைப்பாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெருந்தொகையான பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
்நாடு மீண்டும் 77 ஆம் ஆண்டுக்கு முன்னரான சிறிமாவோவின் மரவள்ளி யுகத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அன்று மக்களிடம்
பணம் இருந்தது. ஆனால், பொருட்கள் இருக்கவில்லை. இன்று ராஜபக்ஷ ஆட்சியில் பொருட்கள் இருக்கின்றன ஆனால், மக்களிடம் பணம் இல்லை.
விலைவாசி உயர்வை தாங்கிக் கொள்ளும் நிலையில் நாட்டு மக்கள் காணப்படவில்லை.
மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்ததும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு 6 மாதங்களில் நிவாரணம் தேடப்படுமென்று உறுதியளித்தார். பின்னர் கடந்த
டிசம்பர் வரை பொறுமை காக்குமாறும் அதன் பின்னர் பிரச்சினை கிடையாது என்றும் பேசினார்.
ஜனவரி மாதத்தில் சொன்னார் மார்ச்சில் யுத்தத்தில் வெற்றி கண்டதும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்தப் போவதாக உறுதியளித்தார்.
மார்ச் மாதமும் முடிவடைகிறது. நடந்தது எதுவுமில்லை. மக்கள் பட்டினிச் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். கிராமப் புறத்து மக்கள்
குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இறங்கப் போவதாக கூறுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
எரிபொருட்கள், சமையல் எரிவாயு, அரிசி, பாண் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் வானளவ அதிகரித்துள்ளது.
அதனை ஈடு செய்யக் கூடிய வருமானம் மக்களுக்குக் கிட்டவில்லை. மகிந்த சிந்தனையை நம்பி மக்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர். இன்று இன்னும் சிறிது காலத்துக்கு இடுப்புப் பட்டியை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு ராஜபக்ஷ அரசு மக்களைக் கேட்கிறது.
அரசுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு போதுமானதென்றே நாம் கருதுகின்றோம். பொறுமை எல்லை மீறிவிட்டது. மக்கள் வீதியிலிறங்கத் தயாராகி
விட்டனர். இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக கிராமிய மட்டத்திலிருந்து மக்கள் சக்தி படையொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இந்தப்
படையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மூன்றாம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு,
அரசாங்கத்தின் அராஜக செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் மாத இறுதிவரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். மாத இறுதியில் 10 இலட்சம்
மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். இந்த விடயத்தில் எத்தகைய
சவாலையும் எதிர்கொள்ள மக்கள் சக்தி எம்மோடு இணைந்து கொண்டுள்ளது. மெதமுலன சுறாமீன்கள் மிக் 27 விமானக் கொள்வனவின் மூலம் கொள்ளையடித்தனர். பிரதேச மட்டத்திலுள்ள அரசின் நெத்தலி மீன்கள் மகநெகும,
கமநெகும போன்றவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி கொள்ளையடிக்கின்றன. இதற்கு தொடர்ந்து இடமளித்தால் எமது நாடு
பிச்சைக்கார நாடாக மாறி விடும் அபாயம் தோன்றியுள்ளது. இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் போராட்டத்தையே ஏப்ரல் 3 ஆம் திகதி
ஆரம்பிக்கின்றோம்.
உள்ளூராட்சிச் சபைகளில் எமது உறுப்பினர்கள் நேர்மையுடன் மக்களுக்காக பணிபுரிய வேண்டும். மக்களை எம் பக்கம் அரவணைத்து இவ்வருட
இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
நாட்டு மக்கள் பட்டினியால் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு வரவிடாது தடுக்கும் முயற்சியில்
ஜே.வி.பி.இறங்கியுள்ளது. ஜே.வி.பி.யின் சக்தியை விட ஐக்கிய தேசியக் கட்சியின் சக்தி எத்தகையது என்பதைக் காட்ட நாம் தயாராகி விட்டோம்
என்பதை ராஜபக்ஷ ஆட்சிக்கும் அதன் கைக்கூலிகளான ஜே.வி.பி.க்கும் சொல்லி வைக்கின்றோம்.
இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் ருக்மன் சேனாநாயக்கா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர
அபேவர்தன, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கே.சர்னல் ஜயமின் பெர்னாண்டோ ஆகியோரும் உரையாற்றினர்.
============================================
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்: 47 இடதுசாரி அமைப்புக்கள் வலியுறுத்தல்
[செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2008, 01:30 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]
தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் உலகு
எங்கும் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று 47
இடதுசாரி அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை இடதுசாரி முன்னணியின் பிரமுகர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் மாநாட்டில் இந்த
வேண்டுகோள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ஒரு தலைப்பட்சமாக நிராகரித்ததனைத் தொடர்ந்து பொதுமக்கள்
ஈவிரக்கம் இன்றி தாக்கப்படுவதும், உயிர் உடைமை அழிப்புக்கள் அதிகரித்த வண்ணமும் உள்ளன.
சட்டத்தின் ஆட்சி அகன்றுவிட்டது. எனவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு இராணுவத் தீர்வைத் திணிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதில்
எதுவித ஐயமும் இல்லை. இதன் காரணமாக தமிழர் மட்டுமல்லாமல் சிங்கள, முஸ்லிம் எல்லா இனங்களும் இனக்குழுமங்களையும் சேர்ந்து
இலட்சக்கணக்கான மக்கள் பெரும் துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
அடக்குமுறை அரசாங்கங்களினால் ஒடுக்கப்பட்டு வரும் மக்களுக்காக குரல் கொடுத்து ஆதரவளிப்பது எம் எல்லோரினதும் கூட்டுக் கடமையாகும்.
ஆகையால் தான் நூற்றாண்டுகளாக தமது தாயகத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் நீதிக்கும் சமாதானத்திற்குமான நியாயபூர்வமான
அபிலாசைகளை நாம் பாதுகாப்பதற்கு விளைகிறோம்.
மனித வாழ்க்கைக்கு நிரந்தரமான ஆபத்து நிறைந்திருக்கும் நிலையில், மக்கள் சீராக வாழ வாய்ப்பு இழந்த நிலையில் பல இலட்சக்கணக்கான தமிழ்
மக்கள் தமது தயாகத்திலே அகதிகளாக அல்லலுறுகின்றனர். வாழ்விடமின்றி உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மின்சாரம் முதலியவற்றிற்கான
தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக நோய், நொடி மற்றும் வறுமையில் வாடுபவர்கள், சிறு பிள்ளைகளுக்கும்
சொல்லும் தரமற்ற வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசிய இனம் அவர்களின் தாயக சுயாட்சி, அதிகாரம் மற்றும் சுயநிர்ணய உரிமை யாவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நவசமசமாஜக் கட்சி மற்றும் இடதுசாரி முன்னணித் தோழர்கள் 1974 ஆம் ஆண்டு முதல் போராடி வந்துள்ளனர். இலங்கையில் புரையோடி உள்ளதும் மோசமடைந்த
வண்ணம் உள்ளதுமான இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுதான் அடிப்படையாக அமைய வேண்டும்.
இலங்கையின் தற்போதைய சிக்கலான சந்தர்ப்பத்திலே தமிழ்த் தேசிய இனம், அவர்களின் தாயக சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை
அங்கீகரித்து அதன் அடிப்படையில் ஒரு தீர்வை காண்பதற்கு உலகம் பூராகவும் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புக்கள்,
தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் மற்றும் முற்போக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாம் வேண்டுகிறோம்.
சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்துவதனை நிறுத்த வேண்டும்
போர் நிறுத்த ஒப்பந்தம் மீள அமுல் நடத்தப்பட வேண்டும்
படைபலம் கொண்டு தமிழ் மக்கள் மீது தீர்வொன்றினை திணிக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று நாம் வேண்டி நிற்கின்றோம்.
பியர் றுசோ பிரான்ஸ், அலன் மத்தியூ பிரான்ஸ், பற்றிக்ரமர்லன் பிரான்ஸ், எங்கியூ நெதர்லாந்து, கேளன்ட் கிளாஸ் ஜேர்மனி, யக்கோ சொகாபர்
ஜேர்மனி, எனிட்றிக் டோர்ண் ஜேர்மனி, செளக்கி சலமி அல்ஜிரியா, பிலிஃப் லெம்மி தியூபெக், நுசடிலேஸ் என்கே ஜேர்மனி, வேற்றில் விடட்
நெதர்லாந்து, மத்தியாஸ் லெரன்ஸ் பெல்ஜியம், எற்காட் சாஞ்சே மெக்சிக்கோ, பிறேம் பிலக்கா பேரு, காகிறியன் அக்குவராஜா ஈக்குவேர், ராசியா
மெடிறோஸ் பிறேசில், மிற்சாலியஸ் ஜோர்ஜ் கிறீஸ், ரிற்ரக்குஸ் கிறிஸ்தோஸ் கிறிஸ், கென்சி குளிற்ரோமி ஜப்பான், அன்டேஸ் ஸ்வன்சென் சுவீடன்,
மொசே அபற்றோ பிலிப்பைன், யங்கிஸ் யன்சிற் பெலிப்பிஸ் கிறிஸ், யுவான் லெமின்றி பிரான்ஸ், லியோன் கிறளிஒக்ஸ் பிரான்ஸ், கியூ யசாகி
நெதர்லாந்து, மெலிந்த ரெறி கொள்வே பிரித்தானியா, ஈறூக் ரறிக் பாகிஸ்தான், பெனலோடுகன் பிரான்ஸ், ஜான் மலஸ்கி பிரான்ஸ், உர்சி உரெக்
சுவிற்சர்லாந்து, றெம்பெற்ரோ எரியாஸ் வொலிவியா, நிசார் பாகிஸ்தான், றுத் அனோன் பேட்டோறிக்கோ, முறேசிமித் நெதர்லாந்து, யூஸ்கிரே
நெதர்லாந்து, செவஸ்ரியன் பில்வே பிரான்ஸ், யோசே மாட்டினஸ் குறுஸ் மெக்சிக்கோ, அகமட் சலி ரமுன் கஸ்ரனோஸ் எசகன் வற்ரா துருக்கி,
ஜெற்ரஜெப்க் நெதர்லாந்து, சுசன் கல்வெல் கியூபெக், குவன்நாமிஸ்நிக், ரீவன் ப்லூம் U.S.A, ஜே மச்சாடோ பிறேசில், டென் கொன்குளோஸ் பெல்ஜியம்,
மேரியா கர்ரி கியூபெக் ஆகிய இடதுசாரி அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன. ஆதாரம்: தினக்குரல்
==============================================
அரசு - புலிகள் யுத்தத்தில் இலங்கை அரசைப் பலப்படுத்துகிறது இந்தியா ≡ Category: அருட்சல்வன் வி, கட்டுரைகள்/ஆய்வுகள் ≅
பெப்ர வரியில் மட்டும் அரசு 90 பாதுகாப்புப் பிரிவினரை பலிகொடுத்துவிட்டது. இந்நிலையில் வன்னி நோக்கி தரைமூலம் நகர்வதும், கைப்பற்றுவதும்
லேசான விசயமாக இல்லை என்பதை அரசுக்கும், பாதுகாப்புப் பிரிவினர் உணர்த்தி இருப்பதாக தெரிகிறது. பொறி வெடிகள், மிதி வெடிகள், மற்றும்
சினிப்பர்கள் மூலம் பாரிய இழப்புக்களை இராணுவம் அடைகிறது.
கிழக்கின் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பரபரப்பில் ஏனைய பகுதிகளில் சண்டை ஓரளவுக்கு தணிந்து காணப்பட்டது. மன்னார், வவுனியர்,
வெலிஒயா முன்னரங்குகளில் சண்டையில் தீவிரம் குறைந்துவிட்டிருக்கிறது. புளியங்குளத்தில் மட்டும் பெரிய அளவிலானதொரு சமர்
இடம்பெற்றுள்ளது.
மார்ச் 10இல் கிழக்கில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. அன்றைய தினம் புளியங்குளம் முன்னரங்கு பகுதியில் நடமாடிக்
கொண்டிருந்த இராணுவத்தினர் மீது ஆச்சரியப்படும்படியான திடீர் தாக்குதல் நடவடிக்கையொன்றில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலுக்கு
முதல நாளே அரச படையினர் இப்பகுதியை தம்வசமாக்கிக் கொண்டிருந்தனர். அரச படை தமது நிலையை அப்பிரதேசத்தில் ஸ்திரப்படுத்திக்
கொள்வதற்கு இடமளிக்காமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடும் பாதுகாப்புப் பிரிவின் அறிக்கை
சேத விபரங்களையும் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், போராளிகள் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும்
அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதில் கொல்லப்பட்ட அனைவருமே பெண்போராளிகள் என்றும் அவர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன.
அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளின் போர் நடவடிக்கைகளில் பெண் பேராளிகள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் முன்னிலையிலிருந்து
சண்டை போடுகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக பயிற்சிபெற்ற போராளிகள் செயல்படுகின்றனர் என இராணுவம் கூறுகின்றது.
சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் முன்னிலையில் கலந்து போராடுகின்றனர். பின்னின்று செயல்படுகின்ற நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கு தகுந்த
ஆலோசனை வழங்குபவர்களாக பானு, சுவர்ணம், லஸ்மன் ஆகியோர் செயல்படுகின்றனர் என்கிறது இராணுவம்.
புலிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்டுகின்ற போது பின்வாங்கிச் செல்வதைவிட பதுங்கு குழிகளையே அவர்கள் நாடுகின்றனர். மிதிவெடிகள்
அதிகமாக புதைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு செயல்படுகின்றனர். பயிற்சிபெற்ற போராளிகள் தூரவிருந்து குறிபார்க்கும் சினிப்பர்களையே பெருமளவில்
பயன்படுத்துகின்றனர். அதிக அளவில் போராளிகளை இழப்பதைத் தவிர்த்துக்கொள்ளவே இத்தந்திரோபாயத்தை புலிகள் பின்பற்றுகின்றனர் என்ற
கூற்றை சில தளபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் சினிப்பர் சூட்டில் அதிக உயிர்ச்சேதம் இராணுவத் தரப்பில் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 02 முதல் 10 வரையான காலத்தில் மன்னார் முன்னரங்கு நிலைகளில் 35 இராணுவத்தினர் உயிரிழந்ததாக எல்.ரி.ரி.ஈ. தகவலொன்று
கூறுகின்றது. இவர்கள் மிதிவெடிகளுக்கே பலியாகியுள்ளனர். எனினும் அரச தரப்பு தகவலொன்று மார்ச் 12 - 13 காலகட்டத்தில் இப்பிரதேசத்தில் 54
விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று கூறுகின்றது.
இரு தரப்பினரும் இழப்புக்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் அவை இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகவே
காணப்படுகின்றன. இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சில
மாதங்களுக்கு முன்னர் சந்தித்திருந்தார். இலங்கைக்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்க முடியாது என்றும் நட்பு நாடுகளான சீனா, பாக்கிஸ்தான் ஆகிய
நாடுகளிடமிருந்து அவற்றைக் கொள்வனவு செய்யக்கூடாது என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இம்முறை எம்.கே. நாராயணனின் பல்லவி வேறு விதமாக இருந்தது. இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை சந்தித்த பின்னர் நாராயணன்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்திருக்கிறார். இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா பிரதான பங்கு வகிக்கும் என்று
கூறியிருக்கிறார். இதற்கு பின்புலமாக இந்தியா இராணுவத் தளபதி வழங்கியிருந்த உறுதிமொழியே காரணமாக அமைந்தது. எல்.ரி.ரி.ஈ.யுடனான சமரில்
இலங்கை இராணுவத்தினர் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்பதையே புதுடில்லி விரும்புகிறது என்ற தற்போதைய கோட்பாடே இது.
இப்படி ஒரு மாற்றம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவது இயல்பானதே.
தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணி வளர்ப்பதில் இந்தியா அண்மைக்காலமாக அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. லெப்டினல்
ஜெனரல் சரத் பொன்சேக்காவின் இந்தியா விஜயத்துக்கு முன்னர் பங்களாதேஸின் இராணுவத் தளபதி ஜெனரல் அஹமத் இந்தியாவிற்கு விஜயம்
மேற்கொண்டிருந்தார். அவருக்கும் அரச மரியாதை அளிக்கப்பட்டது. அரசியல் பிணைப்புடன் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள்
கலந்துரையாடப்பட்டன. உறுதிமொழிகள் பரிமாறப்பட்டன. பாக்கிஸ்தானுடனும் இத்தகைய உறவுகளை பேணிக் கொள்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். இலங்கையுடன் இத்தகைய உறவினை ஏற்படுத்திக்
கொள்வதற்கான ஆரம்பகட்ட உறுதிமொழிகளே வழங்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாகப் புலனாகிறது.
எல்.ரி.ரி.ஈ. யுடனான சமரில் இலங்கை இராணுவத்தின் கையோங்கி நிற்கவேண்டும் என்ற இந்தியாவின் புதிய நிலைப்பாடு விடுதலைப் புலிகளை கொதிப்படையச் செய்வது இயல்பானதே.
இந்தியாவின் இந்த நிலைப்பாடானது ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு இட்டுச் செல்வதற்கு வழங்கப்படுகின்ற ஓர் அங்கீகாரமே அன்றி
வேறில்லை. தமிழக மக்கள் இதை எதிர்த்து எழவேண்டியது அவசியமாகும் என எல்.ரி.ரி.ஈ..யின் அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும் இலங்கை
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு இந்தியாவில் அளிக்கப்பட்ட அரச மரியாதையையும் விடுதலைப் புலிகள்
கண்டித்திருக்கின்றனர். இந்த மரியாதை வருத்த்திற்குரியது. இது ஈழமக்களுக்கு எதிராக இனபடுகொலை யுத்தத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம்
தொடர்வதற்கான ஓர் அங்கீகாரம் என குறிப்பிட்டுள்ளது. இவற்றின் எதிரொலி தமிழகத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டது.
கிழக்கு மாகாண தேர்தலை ரத்து செய்யும் படி இந்தியா இலங்கைக்கு பணிக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
3/25/2008 10:45:42 AM
வீரகேசரி இணையம் - இலங்கையில் மே மாதம் அளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலை ரத்து செய்யுமாறு இந்தியாவை,இலங்கைக்கு
பணிப்பு விடுக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக அண்மையில் இந்தியாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில்
அங்கத்துவம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீகாந்தா,சிவாஜிலிங்கம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இந்த
கோரிக்கையை விடுத்துள்ளனர்..
இதேவேளை வடகிழக்கு இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீக தாயகபகுதி ,இது 1987களில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி இணைக்கப்பட்ட
பிராந்தியம் இதை இலங்கை அரசு இரண்டாக கூறுபோட்டுவிட்டு,தேர்தல் நாடகமாடுவதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இந்திய அரசு
இவ்விடயத்தில் கண்மூடிக் கொண்டு இருக்காமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும் எனவும் இந்திய அரசுக்கு சுட்டி காட்டி உள்ளார்கள்.
No comments:
Post a Comment