ஈழப் போர்க்கள நிலை தொடர்பான இளந்திரையனின் இராணுவ ஆய்வுரை.
*மன்னார் தாய்நிலம், மணலாறு எமது இதய பூமி அதற்காக நாம் உக்கிரமாக போரிடுவோம்.
*இப்பகுதிகளில் களச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முன்னே செல்லுதல் பின்னே செல்லுதல் பக்கவாட்டாக முன்னேற விட்டுத்தாக்குதல், வழிமறித்து
அடித்தல், என பல வகை யுக்திகளை நாம் பயன்படுத்துகின்றோம்.
*கிழக்கைப் பொறுத்தவரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஒரு போரினை நாம் செய்கின்றோம். இதனால், அங்கே படைகளை நிறுத்த வேண்டிய தேவை அரசுக்கேற்பட்டுள்ளது.
*முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற கரும்புலித் தாக்குதல் மூலம் குடாநாட்டு இராணுவத்திற்கான படை விநியோகப் பாதையை நாம் இப்போது எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
*விசேட அதிரடிப்படை என்பது மரபுக் கட்டமைப்பு அல்ல.களமுனை அதிரடிப்படைக்கு சோதனைக்களமாகவே அமையும். அவர்களின் வருகையை நாமும் எதிர்பார்த்துள்ளோம்.
*ஆரம்பத்தில் யுத்தத்தில் கால் வைக்கும் போது புலிகளை வெல்வதென்பது இலகுவான விடயமென நினைத்தார் மகிந்த ராஜபக்ஷ. ஆனால், முன்னாள்
ஜனாதிபதிகள், படைத் தளபதிகள் விட்ட அதே வரலாற்றுத் தவறையே மகிந்த ராஜபக்ஷவும் செய்தார்.
*இராணுவத்தினர் உச்ச நிலைத் தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும், போர் வருடக் கணக்கில் இழுபடுகிறது.
*எமது படைபலத்தை விட அரசின் படைபலம் பாரியது. ஆனால், எம்மிடமுள்ள மனோபலம் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு யுத்தத்தில் மந்த நிலை ஏற்படுவதற்கு காரணம், அவர்களிடம் யுத்தம் செய்வதற்கான தார்மீகம் இல்லையென்பதே ஆகும்.
*புலம்பெயர் மக்களே எமது உந்து சக்தி. நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் வியர்வை எம்மால் வீணடிக்கப்படுவதில்லை.
*நாம் வெற்றிக் கொடி ஏற்றும் நாள் தொலைவில் இல்லை. அதுவரை அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. அதனையே நாம்
எதிர்பார்க்கிறோம்.
இவ் ஆய்வுரை, பக்ச பாசிஸ்டுக்களதும் அவர்களது ஊதுகுழல்களான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களதும் 'பொய் புழுகு புரட்டுக்களை' தவிடு
பொடியாக்கியுள்ளது.மேலும் அதிகாரபூர்வக் கல்வியின் வழி வந்த இராணுவ ஆய்வாளர்களின் தகிடு தத்தங்களோடு ஒப்பிட்டால் இது யுத்தத்தில் இருதரப்பும் கடைப்பிடிக்கும் இராணுவ யுத்ததந்திர, இராணுவ செயல்தந்திர ஒப்பீட்டில் வெற்றி தோல்வியை ஆய்வு செய்து அதிகாரபூர்வக் கல்வியின் இயலாத்தன்மையை அம்பலமாக்குகிறது.தமிழீழ இலட்சியம் நீதியானதால் விடுதலை யுத்தம் நீதியானது என்றும், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை அநீதியானதால் ராஜபக்சவின் யுத்தம் அநீதியான யுத்தம் என்றும், அநீதியான இன ஒடுக்குமுறை யுத்தத்தை நீதியான விடுதலை யுத்தம் வெல்லும் என்றும், 'பெரிய' அரச படையை, சிறிய புலிப்படை வெல்லும் என்று உறுதிபடக் கூறுகிறார்.உண்மையும் அதுதான்.இதன் மூலம் கள நிகழ்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஒளிபாய்ச்சியுள்ளார்.கள நிலவரங்களின் திருப்புமுனைகளில் இவ்வாறான ஆய்வுரைகளை இளந்திரையன் தொடர்ந்தும் வழங்க வேண்டும்.எதிரியின் ஏமாற்றுத் தந்திரங்கள் மக்கள் மீது செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்க இது இன்றியமையாததாகும். இந்த விடுதலை உணர்வின் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளதோ அந்த அளவுக்கே மக்களின் பங்களிப்பும் இருக்கும்.இந்த உணர்வை உயர்த்த நாம் அன்றாடம் விடாப்பிடியுடன் அயராது உழைக்க வேண்டும். ENB
==================================
கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றலாமென்ற சிந்தனையால் பாரிய அழுத்தங்களில் சிக்கியிருக்கும் அரசு
புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்
[27 - March - 2008] தினக்குரல்
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புத்தான் அரசுக்கு பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத்துறை
அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப்
பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சியில் நிற்போம். இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார்.
வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியிலேயே
இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது;
"15.03.2007 வட பகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிகளிலும் அதே போன்று மணலாறுப் பகுதியிலும் உக்கிரமான போர் நடக்கின்றது.
இதேபோன்றே, 11.10.2006 ஆம் ஆண்டு கிளாலி, முகமாலை, நாகர் கோவில் பகுதிகளில் படையினர் பாரிய படை நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள்.
ஆனால், இவர்களால் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. மன்னார், மணலாறு, கிளாலி, முகமாலை, நாகர்கோவில்
இராணுவத் தளங்களிலிருந்து தொடர்ச்சியாக இராணுவத்தினர் நகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படை நகர்வுகளுக்கு நாம்
தகுந்த முறையிலும் யுக்திகளின் அடிப்படையிலும் தரைத் தோற்றத்தை நன்கு பயன்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எமது
தலைவர் பிரபாகரன் தலைமையில் தளபதிகள், போராளிகள் கடுமையான சமரைத் தொடுத்துள்ளனர்.
மன்னார்
மன்னார் பகுதியை இலக்கு வைக்க படையினருக்கு பல காரணங்கள் உண்டு. அவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மன்னாரை முற்று முழுதாக
படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் மன்னார் -பூநகரி கரையோரப் பாதையை திறப்பது ஆகியவயே முக்கியமானது.
அதேவேளை, மடுத்தலம் போன்ற அரசியல் ரீதியில் இலாபங்களை தரக்கூடிய இலக்குகளை அடைவதற்கும் அவர்கள் பெரும் பிரயத்தனப் படுகின்றனர்.
அதற்காகவே படை நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.
ஒரு படை நடவடிக்கையை பெயரிட்டு நடத்தினால் அதற்கு ஒரு எல்லை, இலக்கு, காலவரையறை சொல்ல வேண்டும். அவ்வாறான சூழ்நிலைக்குள்
சிக்க அரசு விரும்பவில்லை. அதனாலேயே இவ்வாறான இடங்களில் உக்கிரமான தாக்குதல்களை உச்ச அளவில் படை வலுவை, யுக்திகளை
பயன்படுத்தி நடத்துகின்றனர்.
இத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் சொல்லக் கூடியவாறான இடங்களைப் பிடிக்கவோ அல்லது அரசியல் ரீதியாக இலாபம் பெறுவதற்காக மடுத்தலம்
போன்ற பிரதேசங்களை கைப்பற்றவோ முயற்சிக்கக் கூடும்.
இவ்வாறான நிலையில் தான் குறித்த இலக்கை குறித்த காலத்துக்குள் அடைய முடியாதென்ற நிலையிலேயே அவர்கள் கால எல்லையை
அறிவிக்கவில்லையே தவிர, மன்னார் பெருநிலப்பரப்பை அதன் கரையோரப் பாதைகளை கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கையை ஆரம்பித்து
விட்டனர்.
இந்நடவடிக்கைக்கு இராணுவத்தினர் உச்ச நிலைத் தாக்குதல் சக்தியைப் பயன்படுத்துகின்றது. 57 ஆவது 58 ஆவது படைப் பிரிவுகள் இதனிடையே
துணைப் படைப் பிரிவுகள், சிறப்புப் படையணிகள், காவல் படையணிகள், ஆட்லெறிப் படையணிகள் பெருமெடுப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனாலும், போர் வருடக் கணக்கில் இழுபடுகிறது.
இந்த தொடர் படை நடவடிக்கையின் விளைவு என்ன? ஒரு வருடமாக தொடரும் இப்போரில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? இதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய அனுமானங்கள் என்ன என்பது தொடர்பாக தற்போது ஆய்வாளர்கள் ஆராயத் தொடங்கி விட்டனர்.
மன்னார் எமது தாய்நிலம். அதற்காக நாம் உக்கிரமாக போரிடுவோம். அரசியல் இலாபங்கள் யாழ். இராணுவத்துக்கான தரைவழிப்பாதை திறப்பு
ஆகியவற்றுக்காக படை நடவடிக்கை நடத்தப்படுகின்றது. காலம் செல்லச் செல்ல படையினருக்கு நாம் இப்பகுதிகளை கைப்பற்றுவோமா என்ற
அங்கலாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் களச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி முன்னே செல்லுதல் பின்னே செல்லுதல் பக்கவாட்டாக முன்னேற விட்டுத்தாக்குதல், வழிமறித்து
அடித்தல், என பல வகை யுக்திகளை நாம் பயன்படுத்துகின்றோம்.
நாளை படையினர் மடுவுக்கு வரலாம். மறுநாள் நாம் மதவாச்சியில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயம். படையினர் முன்னேறும்
ஒவ்வொரு அங்குலத்திலும் என்ன இழப்பை சந்திப்பார்கள்? அவ்வாறான இழப்புகளை அவர்கள் உணரும் போது நாம் எவ்வாறான வாய்ப்புகளைப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து எமது போராளிகள் போரிடுகின்றனர்.
வடபோர் அரங்கிற்கான முக்கிய பின்தளமாக அநுராதபுர படைத்தளமே பயன்படுத்தப்படுகின்றது. இத்தளத்தைப் பயன்படுத்தியே தொடர் இராணுவ
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு பல காரணம் உண்டு. ஆழமான பின்புலன்கள் இல்லாத நிலையில் கூட சில அழுத்தமான அரசியல்
இங்குள்ளது. குறிப்பிட்ட வெற்றிகளை அடைய முடியாத தாங்கள் ஆரம்பித்த சமர்களை நிறுத்த முடியாத அரசியல் அழுத்தம் அரசுக்குள்ளது.
இப்படியான ஒரு இறுக்கப்பாட்டுக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர். மன்னார் களநிலை இது தான்
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது போர் என்பது உப தொழிலாகவே இருந்தது. ஆனால், இப்போது அதுதான் முழுத் தொழிலாகவே மாறிவிட்டது.
ஆரம்பத்தில் யுத்தத்தில் கால் வைக்கும் போது புலிகளை வெல்வதென்பது இலகுவான விடயமென நினைத்தார் மகிந்த ராஜபக்ஷ. ஆனால், முன்னாள்
ஜனாதிபதிகள், படைத் தளபதிகள் விட்ட அதே வரலாற்றுத் தவறையே மகிந்த ராஜபக்ஷவும் செய்தார்.
முன்னவர்கள் விட்ட அதே விதமான கணிப்பீட்டுத் தவறை, தான் நினைத்ததை அடைந்து விடலாமென்ற எண்ணப்பாட்டுடன் சில கணிப்புகளை
வைத்துக் கொண்டு கால எல்லைகளை வெளியில் சொல்லாவிட்டாலும் தன்னகத்தே வைத்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் எண்ணிக்கை விளையாட்டுகளையும் காட்டினார்கள்.
புலிகள் தரப்பில் பலநூற்றுக் கணக்கானவர்கள் இறந்து போவதாகவும் தமது தரப்பில் ஓரிருவர் மட்டும் சிறுகாயமடைவதாகவும் போலிப் பிரசாரங்களை
முன்னெடுக்கின்றனர். இது அவர்களுக்கு தவிர்க்க முடியாதது. ஏனெனில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுவதாகக் காட்டினால் தான்
தென்னிலங்கையில் ஏற்படுகின்ற விலைவாசி உயர்வு, ராஜபக்ஷ சகோதரர்கள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, அது தவிர அரசு எவ்வளவு தூரம் மூடி
மறைக்க முற்பட்டாலும் மக்கள் அறிந்துகொள்கின்ற படையினரின் இழப்புத் தொடர்பான செய்தி தொடர்பாக ஏற்படுகின்ற சிக்கல்கள், குழப்பங்களை
ஏற்படுவதை திசை திருப்பவே இந்த எண்ணிக்கை விளையாட்டில் அரசு ஈடுபடுகின்றது.
மணலாறு
மன்னாரைப்போலவே மணலாற்றில் படையினர் முன்னேற முயற்சிக்கின்றனர். ஆனால், மணலாறில் எமது வலுவான கட்டமைப்புகள் உள்ளன.
மன்னாரைப்போலவே மணலாறும் எமது இதய பூமி. இங்கு எமது படையணிகள் இருவகை சண்டையில் ஈடுபடுகின்றன.
மணலாறு மரபு வழி யுத்தத்திற்கும் ஏற்றது. கெரில்லாப் பணி சண்டைக்கும் ஏற்றது. இதனாலேயே மணலாறில் முன்னேற முடியாமல் திணறுகின்றது.
முகமாலை
வடபோர் முனையைப் பொறுத்தவரை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுகின்றன. இங்கு
இராணுவத்தினரால் ஒரு அங்குலம் கூட முன்றே முடியாமல் உள்ளது. தினமும் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் குடாநாட்டில் இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளனர். ஏனெனில், எவ்வேளையிலும் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள்,
அவர்களின் படையணிகள் இறங்கி வருமென்ற அச்சம் அவர்களுக்குண்டு. இதனால் தான் அவர்களின் மிக நம்பிக்கைக்குரிய 53 ஆவது படைப்பிரிவு
அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காவல் படையணிகளும் உள்ளன.
விமானப்படைத்தளமும் மிக அருகில் உள்ளது. மிக வேகமான விநியோகத்தை இதன் மூலம் செய்யலாம். காயமடைந்தவர்கள் தொடர்பாக
போக்குவரத்து வசதிகளும் உள்ளன. இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.
போர் முனையில் ஒரு இலக்கின் அடிப்படையிலேயே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு படையினர் யுத்தத்தை ஆரம்பித்த
நாள் முதல் வடபோர் அரங்கில் மறித்து சமராடுதல் என்ற விடயத்தில் நாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றோம்.
கிழக்கு
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்த கதையாக இராணுவத்தின் நிலை வந்துவிட்டது. இதனை சர்வதேச படைத்துறை ஆய்வாளர்கள் கூட
கூறத் தொடங்கிவிட்டனர். இராணுவத்தின் போர் யுக்திகளை நம்பி அதிலே தமது முதலீடுகளை செய்தவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இதன் அங்கமாகத்தான் ஜனாதிபதியோ, இராணுவத் தளபதியோ நினைத்ததுபோல் புலிகளை வெல்ல முடியாது. அவர்களை வெல்வதற்கு கால
எல்லையும் கூறமுடியாதென கூறத்தொடங்கியுள்ளனர்.
கிழக்கைப் பொறுத்தவரை எங்களுடைய தேவை போரிடுதலுக்கான எமது வீச்சு, அந்த அளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலிருந்து இயன்ற அளவிலான
ஒரு போரினை நாம் செய்கின்றோம். இதனால், அங்கே படைகளை நிறுத்த வேண்டிய தேவை அரசுக்கேற்பட்டுள்ளது.
படைகளை அங்கிருந்து அகற்றும்போது அதற்குப் பதிலாக புதிய படையணிகளை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கேற்பட்டுள்ளது. ஏனெனில்,
கிழக்கைத் தாண்டிய இடங்களிலும் களங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புத்தான் இன்று அரசுக்குப் பாரிய அரசியல், இராஜதந்திர, படைத்துறை, பொருளாதார
அழுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறான முக்கிய தருணத்திலேதான் களமுனை எங்களுக்கு சாதகமாக திரும்பி வருகின்றது.
எமது தாக்குதலின் வீச்சு எப்படி இருக்குமென்பதை இராணுவத்தினர் பல தடவைகள் அறிந்துள்ளனர். உதாரணமாக, அநுராதபுரம் விமானப்படைத்தளம்,
கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதான எமது தாக்குதல்கள் ஒருவகை, ஓயாத அலைகள், இன்னொரு வகை. உலக நாடுகளுக்கு
எமது படை வலுச்சமநிலையை நிரூபித்த ்அக்னிகீலவுக்குீ எதிரான எமது சமர் இன்னொரு வகையாக அமைந்திருந்தது.
இவ்வாறான ஒரு யதார்த்தம் இருக்கும்போது, இவ்வாறான தாக்குதல்களை நடத்தக்கூடிய ஆற்றல்களைப் புலிகள் இழந்துவிடவில்லையென்பதற்கான
பாரிய யதார்த்த நிலையை சர்வதேச ஆய்வாளர்கள் இலங்கை அரசிற்கு இடித்துரைக்கத் தொடங்கியுள்ளனர். புலிகளின் தாக்குதல் திறனில் ஏதாவது
மாற்றத்தை கொண்டுவரக்கூடிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளீர்களா என்பதே அவர்களின் கேள்வி.
முல்லைத்தீவில் நடந்த கரும்புலித் தாக்குதல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற கரும்புலித் தாக்குதல் குறித்து விரிவாக என்னால் கூறமுடியாது. ஆனால்,
இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள விளைவு பாரியது. குடாநாட்டு இராணுவத்திற்கான படை விநியோகம் இந்த குறிப்பிட்ட பாதையால் தான் செல்ல
வேண்டும். ஆனால், இந்த பாதையை நாம் இப்போது எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
அரசின் கடல் இறைமை என்ற விடயத்தை எமது கரும்புலிகள் மீண்டும் சவாலுக்குட்படுத்தியுள்ளனர். இலங்கை அரசின் கடல் இறைமை என்பது
சர்வதேச ரீதியாக கேள்விக்குரிய விடயமாக முக்கியத்துவமிழந்து வரும் விடயமாக மாறியுள்ளது.
எமது படைபலத்தை விட அரசின் படைபலம் பாரியது. ஆனால், எம்மிடமுள்ள மனோபலம் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு யுத்தத்தில் மந்த நிலை
ஏற்படுவதற்கு காரணம், அவர்களிடம் யுத்தம் செய்வதற்கான தார்மீகம் இல்லையென்பதே ஆகும்.
தற்போது இராணுவத்தினர் இலக்குத் தெரியாமலுள்ளனர். மன அழுத்தம், விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாங்கள் செய்யும் பணியில் நம்பிக்கை
இழந்துள்ளனர். அரசு மறைக்கும் இராணுவ இழப்புகளை தென்னிலங்கை ஊடகங்கள் வெளிக்கொண்டுவருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில்,
அவர்களின் மன உறுதி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது.
கிழக்கில் படைவிரிவாக்கம் செய்துள்ளார்கள். அதற்கு நாம் அவர்களை நிர்ப்பந்தித்துள்ளோம். படை விரிவாக்கத்தை தடுக்க முடியுமா என்பது
அவர்களின் கைகளில் இல்லை. எமக்கு சாதகமான நிலை வரும்போது அங்குள்ள படைச் சமநிலையில் மாற்றம் ஏற்படும்.
அதிரடிப்படை விலகல்
விசேட அதிரடிப்படை என்பது மரபுக் கட்டமைப்பு அல்ல. தனது இனவிரோத உச்சக் கட்டமாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை
உருவாக்கினார். இனப்படுகொலை செய்வதற்கே இந்தப் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. உடும்பன்குளம், கொக்கட்டிச்சோலை படுகொலைகளை
உதாரணமாகக் கூறலாம். அத்துடன், கிழக்கில் அன்றாடம் 1,2,3,4,என இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறான படையணியை தற்போது களமுனைக்கு அனுப்பிவைக்கப்போகின்றார்களாம். களமுனை அதிரடிப்படைக்கு சோதனைக்களமாகவே
அமையும். அவர்களின் வருகையை நாமும் எதிர்பார்த்துள்ளோம். புலம்பெயர் மக்களே எமது உந்து சக்தி. நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் வியர்வை எம்மால் வீணடிக்கப்படுவதில்லை
மிகவும் நுட்பமான கால கட்டத்தில் விடுதலைப் போரை எமது தலைவர் பிரபாகரன் நடத்துகிறார். தந்திரமான, சூட்சுமமான, இராஜதந்திர சுழிகள்
நிறைந்த படை வல்லாதிக்க சூறாவளிகளுக்கு மத்தியில் விடுதலைப் போரை எமது தலைவர் தலைமையேற்று நடத்துகிறார். நாம் வெற்றிக் கொடி
ஏற்றும் நாள் தொலைவில் இல்லை.
அதுவரை அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. அதனையே நாம் எதிர்பார்க்கிறோம்.
இளந்திரையன்.
=================================
Posted on : Wed Mar 26 8:40:00 2008
தமிழர்களுக்குத் தனிநாடு உருவாகுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது!
இஸ்ரேலில் வைத்து இலங்கைப் பிரதமர் தெரிவிப்பு
இலங்கைத் தமிழர்களுக்கென தனியான நாடொன்று உருவாவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காதென இலங்கை பிரதமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்க இஸ் ரேலில் வைத்துக் கருத்து தெரிவித்துள் ளார்.ஜெரூஸலத்தில் இஸ்ரேலியர்கள் மத்தி யில் உரையாற்றுகையிலேயே அவர் இத னைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு என தனி நாடொன்று அமைவது இந்தியாவில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்துமென் பதால் புதுடில்லி அதற்கு
அனுமதிக்காதென் பதை மனதில் கொள்ள வேண்டுமென பிர தமர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு குறித்து இந்தியா அர்ப்பணிப்புடன் உள் ளது என மேலும் குறிப்பிட்டுள்ள அவர், விடு தலைப் புலிகளின் தலைவர்
இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தமிழர் தாயகமொன்றை உருவாக்க முயல்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.இலங்கையின் மூன்று தசாப்தகால மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை காண் பது குறித்து இலங்கை அரசு உறுதியாக வுள்ளது. ஆனால் இராணுவத்
தீர்வை அரசு நாடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார்.வரலாற்று ரீதியாகத் தனிநாடாகவே விளங்கும் இலங்கையைப் பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ள பிரத மர், அரசியல், பொருளாதார
ரீதியாகவும் இது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசைப் பொறுத்தவரை பேச்சுக்கான கதவுகள் எப்போதும் திறந்தி ருக்கின்றன என்று வலியுறுத்தியுள்ள பிரத மர் விக்கிரமநாயக்க, எனினும்
விடுதலைப் புலிகளின் இரத்த வெறிபிடித்த தலைவர் உள்ள வரை மாற்றத்திற்கான வாய்ப் பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் மோதல் இடம்பெறும் பகுதிகளின் இயல்பு நிலையை ஏற்படுத்து வதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக் கைகளை அங்கு விவரித்த
பிரதமர், சிறு பான்மையினத்தவர்களை தேசிய நீரோட் டத்திற்குள் கொண்டு வருவதற்காக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும்
குறிப்பிட்டார்.அரசமைப்பின் 13ஆவது திருத்தம் குறித்தும் அங்கு குறிப்பிட்டுள்ள இலங்கை பிரதமர், அது இந்திய மாதிரியை அடிப் படையாகக் கொண்டது என்றும்
தெரிவித் தார்.அரசமைப்பின் 13ஆவது திருத் தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவ தென இலங்கை அரசு தீர்மானித்துள்ளதை இந்தியா உட்பட பல நாடுகள்
வரவேற் றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.வேறு எந்த நாட்டையும் விட இந்தியா கள் உருவா வதற்கு காரணமான அரச மைப்பின் திருத் தம் 1987இல் கைச்சாத் திடப்பட்ட இந்திய இலங்கை
ஒப்பந்தத் தால் உருவானது என் றும் அவர் சுட்டினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடுவதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை அங்கு கோரியுள்ள பிரதமர் விக் கிரமநாயக்க, விடுதலைப் புலிகள்
அமைப்பு எல்லை கடந்த நெருக்கடியாக மாறியுள் ளது. இதனை எதிர்கொள்ள சர்வதேச ஒருங் கிணைப்பு அவசியம் என்றும் தெரிவித் தார்.
===================================
* பக்ஸபாசிஸ்டுக்களின் வடக்குப் படையெடுப்பைத் தோற்கடிப்போம்!
*போராடும் வேங்கைகளுக்கு தோள் கொடுப்போம்!!
*பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்போம்!!!
*இந்திய விஸ்தரிப்புவாதத்துடன் சமரசமற்ற சமர் செய்வோம்!!!!
ENB
==================================
இணைப்பு இரண்டு
புதினம் இணைய தளத்தில் கேள்வி பதில் வடிவில் வந்த இளந்திரையனின் இராணுவ ஆய்வுரை
வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன?- முல்லை. கடற்சமரில் வெளிப்படுவது என்ன?:
இளந்திரையன் விளக்கம் [வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008, 12:08 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
வன்னிப் பெருநிலச் சமர்க்கள நிலைமை என்ன? என்பது குறித்தும் முல்லைத்தீவு கடற்சமரில் வெளிப்படுவது என்ன? என்றும் தமிழீழப் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கம் அளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.08) அவர் வழங்கிய முழுமையான நேர்காணலின் எழுத்து வடிவம்:
கேள்வி: வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முனைப்புக்கள் பல முனைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போதைய களநிலவரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாள் பாலமோட்டையில் சிறிலங்காப் படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான முதலாவது
முன்னேற்ற முனைப்பு தாக்குதலை தொடங்கினர்.
அன்றில் இருந்து இன்றுவரை மன்னாரின் பல பகுதிகளிலும் அதேபோன்று மணலாற்றுப் பகுதிகளிலும் இத்தகைய சண்டைகள் வியாபித்திருக்கின்றன.
அதேநேரம் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 11 ஆம் நாள் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் சிறிலங்காப் படைகள் பாரிய நடவடிக்கைகளை
மேற்கொண்டிருந்தன. இந்தப் படை நடவடிக்கைகளும் வன்னிப் பெருநிலபரப்பு மீதான முன்னேற்ற முனைப்புக்களாகவே இருந்தன. அன்றிலிருந்து
இன்றுவரை இப்பகுதிகளிலும் அவர்கள் பல முன்னேற்ற முனைவுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மூன்று தளங்களில் அவர்களின் தொடர்ச்சியான முனைவுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக மணலாறு, மன்னார் பெருந்தளம், வடபகுதியில் உள்ள கிளாலி, முகமாலை, நாகர்கோவில் தளம் என தொடர்ச்சியான நடவடிக்கைகளை
செய்வதற்கான முனைவுகள் அவர்களிடம் இருக்கின்றன.
அவற்றிற்கு தகுந்த முறையிலும், உத்திகளின் அடிப்படையிலும், தரைத்திட்டத்தை நன்கு பயன்படுத்தி இழப்புக்களைக் கொடுக்கக்கூடிய நிலையிலும்
ஏதுவான சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிற ஒரு நிலையிலும் எங்களுடைய தளபதிகள், போராளிகள் அங்கு சமரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அவை அனைத்தையும் எங்களுடைய தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் நுட்பமாகவும், உத்தி முறைகளுடனும் தலைமையேற்று
வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
கேள்வி: சிறிலங்காப் படையினர் மணலாறு மற்றும் வடபோர்முனையில் தாக்குதல்களை மேற்கொண்டாலும் குறிப்பாக மன்னார் பகுதிகளில்தான்
அவர்கள் தமது கூடிய கவனத்தைச் செலுத்துகின்றனர். அவர்கள் மன்னார் பகுதியைக் குறிவைப்பதற்கு என்ன காரணம்?
பதில்: அதற்கு பல காரணங்களைக் கூறமுடியும். அவர்களுடைய நிகழ்ச்சித்திட்ட அடிப்படையிலேயே தமது படைக்கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக்
கொண்டுவந்து மன்னார் - பூநகரி கரையோரப் பாதையைத் திறப்பது அவர்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. அதேநேரம் மடுத்தலம்
போன்ற முக்கியமாக அரசியல் ரீதியிலே அவர்களுக்கு இலாபம் தரக்கூடிய இலக்குகளை அடைவதற்கு அவர்கள் மிகவும் எத்தனப்படுகிறார்கள்.
இவ்வாறானதொரு நிலையில்தான் அவர்களுடைய நடவடிக்கைகள் அங்கே தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆயினும் ஒரு நடவடிக்கை
என்று சொல்லும்போது அதற்கு பெயரிடப்பட்டு ஒரு எல்லையைக் கூறவேண்டும், இலக்கை குறிப்பிட வேண்டும், கால வரையறையைக் கூற
வேண்டும். ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலைகளுக்குள் சிக்குப்படாமல் அந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம்
வைத்து அந்தப் பகுதிகளிலே உக்கிரமான தாக்குதல்களை, தங்களுடைய உச்ச அளவிலான படைவலுவை, தங்களுடைய உத்திகளை, தங்களுடைய
படைக்கருவிகளை, வெடிபொருட்களைப் பயன்படுத்தி செய்வதற்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பிடத்தக்க பெறுபேறை அடைந்து அரசியல் ரீதியான இலாபம் பெறலாம் என்பதற்காக மடுத்தலம் போன்ற இடங்களை அவர்கள் கைப்பற்றுவதற்கு
முனைந்தாலும்கூட, குறித்த இலக்கை குறித்த காலத்திற்குள் அடையமுடியாது என்ற தன்னம்பிக்கையே இல்லாத காரணத்தால் அவர்கள் இலக்கை
வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவிர, மன்னார்ப் பெருந்தளத்திலே அரசியல் ரீதியான இலாபங்களைப் பெறக்கூடிய இடங்களைக் கைப்பற்றுதல்
மற்றும் மன்னார் - பூநகரி கரையோரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்பனவே முக்கியமான நோக்கங்களாக இருக்கின்றன.
கேள்வி: மன்னார் களமுனையில் சிறிலங்காப் படைத்தரப்பு எவ்வளவு பலத்தைப் பிரயோகிக்கின்றது என்பதைக் கூறமுடியுமா?
பதில்: சிறிலங்காப் படைத்தரப்பு தனது உச்சநிலைத் தாக்குதல் சக்திகளான அணிகளை அங்கே முன்னணியில் நிறுத்தியிருக்கிறது.
இந்தப் போருக்கு என்றே முக்கியமாக வடிவமைக்கப்பட்ட 57 ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களும் அதனுடைய உபரி அணிகளும், அதுபோன்ற சில
சிறப்பு அணிகளும், கவசப்படையைச் சேர்ந்த ஒரு பகுதியினரும் என தங்களுடைய பலத்தின் மிக உச்சமான பாகங்களை அங்கே அவர்கள்
பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எறிகணைகளையும் மிகவும் செறிவாக பிரயோகிக்கக்கூடிய வகையில் எறிகணை வீரர்களையும், ஆட்லறி
வீரர்களையும் அங்கே அவர்கள் நிறுத்தி சண்டை புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
உச்ச நிலையிலே தங்களை ஈடுபடுத்தினாலும் கூட சொல்லிக்கொள்ளும்படியான பெறுபேறுகளை அவர்கள் பெறுவதில் வருடக்கணக்கான இழுபறி
நிலவுவது இன்னொரு பக்கமாக இருக்கிறது.
அதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பார்த்தால், ஓராண்டு தாண்டியும் தொடர் நடவடிக்கையின் பெறுபேறுகள் என்ன? அவர்களுடைய தரப்பிலே
ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் என்ன? அந்த இழப்புகளின் அடிப்படையிலே அவர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற எதிர்காலம் பற்றிய அனுமானங்கள் என்ன
என்பதை போரியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: தள அமைப்பைப் பொறுத்தவரை தமக்குச் சாதகமற்ற மன்னார் நிலப்பரப்பைக் கைப்பற்றுவதன் மூலம் சிறிலங்காப் படையினர் என்ன
செய்தியைக் கூறவிழைகின்றனர்?
பதில்: மன்னார் பெருந்தளம் என்பது சவால்கள் நிறைந்ததுதான். மன்னார் எங்களுடைய தாய்நிலம். எங்களுடைய தாய்மடி. அந்த இடத்திற்காக நாங்கள்
மிகவும் உக்கிரமாகப் போரிடுவோம். அந்த இடத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தவாறு மிகுந்த அர்ப்பணிப்புடன் எங்களுடைய
போராளிகள் எதிர்ச் சமராடி வருகின்றனர்.
தமது விடுதலைப் போராட்ட பங்களிப்பை அவர்கள் மிகச் சிறப்புடன் செய்து வருகிறார்கள்.
மன்னார்க் களமுனையில் முக்கியமான தளங்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் பாரிய அரசியல் ரீதியான வெற்றிகளைப் பெறுவது என்பது
மகிந்த அரசினது நோக்கமாக இருக்கின்றது.
அதேநேரம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மன்னார் - பூநகரி கரையோரைப் பாதையைத் தொடுப்பதன் மூலம் குடாநாட்டில் இருக்கின்ற
படையினருக்கான விநியோகத்தை கொண்டு வருவதற்கான நோக்கமும் இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.
இப்படியானதொரு சூழ்நிலையிலே காலம் போகப்போக இன்னும் அதிகமதிகமான ஒரு அங்கலாய்ப்புடன் படையினர் அங்கே மோதி வருகிறார்கள்.
களச்சூழ்நிலை என்பது தரைத்தோற்றத்திற்கு ஏற்ற வகையிலே முன்னோக்கிச் செல்லுதல், பின்னோக்கி நகர்தல், பக்கவாட்டாக அவர்களை வருவதற்கு
விடுதல், பின்சுற்றி மறித்து அடித்தல் எனப் பலவிதமான உத்திகள் அங்கே பயன்படுத்தப்படுகின்றன.
நாளை படையினர் மடுவிற்கு வரலாம், நாளை மறுநாள் நாங்கள் மதவாச்சியில் நிற்கலாம். அதுவொரு சுழற்சியான, சுற்றுவட்டமாக
நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடயமாகவே இருக்கின்றது.
இருந்தாலும் படையினர் முன்னேறுகின்ற ஒவ்வொரு அங்குலத்திலும் அவர்கள் எந்தளவு இழப்பை அங்கே சந்திப்பார்கள், அதேநேரம் அவ்வாறான
சூழ்நிலைகளுக்குப் படையினர் வரும்போது அவ்வகையான சூழ்நிலைகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் எமது போராளிகள்
மிக ஆழமாக தங்களை ஈடுபடுத்தி சமரிட்டு வருகின்றனர்.
கேள்வி: சிறிலங்காப் படையினர் தமது விநியோகப் பாதையாக மன்னார் - மதவாச்சி வீதி அல்லது வவுனியா - மன்னார் வீதியைத்தான் பாவிக்கின்றனர்.
அவர்கள் இப்படியொரு பாரிய தாக்குதலை எத்தகைய பின்வள சக்தியை வைத்துக்கொண்டு மேற்கொள்கின்றனர்?
பதில்: அனுராதபுரத் தளத்தைதான் வடபோரங்கிற்குரிய முக்கியமான பின்னணி ஏற்பாட்டுத்தளமாக பயன்படுத்தி வந்தார்கள். வான்படை, தொலைதூர
வேவுக் கண்காணிப்பு, பயிற்சிக்குரிய தளம் மற்றும் ஆயுத வழங்கல் போன்ற தளங்களை உள்ளடக்கிய அந்த அனுராதபுரத்தளத்தின் மீது கடந்த
ஒக்ரோபர் மாதம் எங்களுடைய கரும்புலி வீரர்களும், வான்புலிகளும் இணைந்து ஒரு தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.
அன்று அவர்களது பின்தளம் மிகமோசமாக ஆட்டம் கண்டது. அதன்பின்னும் கூட அவர்கள் ஒருவாறு தங்களை நிலைப்படுத்திக்கொண்டு
இயன்றளவுக்கு அந்த பின்தளத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கையை அவர்கள் செய்து வருகிறார்கள். அதற்கு காரணம்
இருக்கிறது.
அவர்களுக்கு ஆழமான பின்தளங்கள் இல்லாதபோதும் கூட அரசியல் ரீதியான சில அழுத்தங்கள் அவர்களுக்கு உள்ளன. ஒரு குறிப்பிட்ட வெற்றியை
அடையமுடியாத நிலையில், அங்கு தாங்களே தொடக்கிய ஒரு சமரை நிறுத்திவிட முடியாத ஒரு அரசியல் இறுக்குப்பாட்டிற்குள் அவர்கள் இப்போது
சிக்கியிருக்கிறார்கள்.
மன்னார் களமுனையிலேயே பெரிய மட்டத்திலான ஒரு அவதானிப்பை செய்யும்போது அதைத்தான் பார்க்கக்கூடியதாகவிருக்கிறது.
கேள்வி: மன்னார் களமுனையைப் பொறுத்தவரை அங்கே பாரிய இழப்புக்கள் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அது தொடர்பான
எந்தச் செய்தியும் வெளிவருவதாக இல்லை. அவர்கள் திட்டமிட்டு அந்தச் செய்திகளை மறைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: மகிந்த ஆட்சிக்கு வரும்போது போர் என்பதை அவர் ஒரு உபதொழிலாகத்தான் நினைத்தார். இன்று அவரது முக்கிய தொழிலே அதுவாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் யுத்தத்தில் அவர் கால்வைத்து விடுதலைப் புலிகளை வெல்வது ஒரு சிறிய விடயம் என்றே நினைத்துக்கொண்டார்.
முன்னர் இருந்த அரச தலைவர்கள் பலர், படைத்தளபதிகள் பலர் விட்ட இதே வரலாற்றுத் தவறையே மகிந்தரும் விட்டிருக்கிறார் என்றே எண்ணத்
தோன்றுகிறது.
தான் நினைத்ததை அடைந்துவிடலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டுடன் சில கணிப்புகளை வைத்துக்கொண்டு, வெளியே சொல்லாவிட்டாலும் தன்னகத்தே சில காலக்கணிப்புக்களை வைத்துக்கொண்டு அவர் ஒரு நடவடிக்கையைச் செய்தார்.
நடவடிக்கை ஒன்று தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போது அவர்கள் சில எண்ணிக்கை விளையாட்டுக்களை காட்டினார்கள்.
விடுதலைப் புலிகள் தரப்பிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போவதாகவும் தமது தரப்பிலே ஓரிருவர் சிறு காயங்களுக்கு மட்டும்
ஆளானார்கள் என்றும் ஒரு போலிப்பரப்புரையை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
புலிகளுடைய தரப்பிலே அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டினால்தான் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற விலைவாசி, ராஜபக்ச
சகோதரர்கள் மீது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தி, மற்றும் எப்படி மறைத்தாலும் படையினரின் உயிரிழப்புகள் தொடர்பாக
தென்னிலங்கையில் எழுகின்ற பல சிக்கல்கள் மற்றும் பலவிதமான குழப்பங்கள் என்பனவற்றை ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்த விடயத்தை பெரிதாகக்
காட்டுவதன் மூலம் மக்களை திசைதிருப்பலாம் என்ற நப்பாசையில்தான் அவ்வாறானதொரு எண்ணிக்கை விளையாட்டுகளில் அவர்கள்
ஈடுபடுகிறார்கள்.
கேள்வி: முல்லைத்தீவை அண்மித்திருக்கும் மணலாற்று களமுனையில் இருந்து முன்னேவதற்கு படையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு என்ன
காரணம்?
பதில்: மணலாற்றில் மட்டுமல்ல, நாங்கள் இடம்கொடுத்தால் சிங்களப் படைகள் எல்லா வழிகளிலும்தான் முன்னேற முனைவார்கள். அவர்களைத்
தடுத்து வைத்திருப்பதும் அவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதும் எங்களுடைய பதில் தாக்குதல்கள்தான். அங்கே வலுவான கட்டமைப்புக்கள்
இருக்கின்றன.
மன்னாரைப் போன்றே மணலாறும் எங்களுடைய இதயபூமி. அங்கே நீண்டகாலமாக எங்களது அணிகள் இரண்டு வகைச் சண்டைகளையும் தொடர்ந்தும்
மாறிமாறி செய்துவருகின்றதொரு தரைத்தோற்றமாக அது விளங்குகின்றது.
மரபு ரீதியான சமருக்கான சூழ்நிலைகள் அங்கு நிலவினாலும் அந்த மரபு ரீதியான சமருடன் கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களும் சேர்ந்ததாகவே அந்தப் பகுதியின் வரலாறு உள்ளது.
அவ்வாறானதொரு இடத்தில் பதில் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாததனால்தான் அவர்களுக்கு அந்த தயக்கங்கள் ஏற்படுகின்றன. அங்கே
வலிமையான கட்டமைப்புக்களுடன் எங்களுடைய வீரர்கள் அவர்களை மறிப்புச் சமர் செய்து வருகின்றனர்.
கேள்வி: வடபோர்முனையைப் பொறுத்தமட்டில் அவர்கள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியம் ஏதாவது உள்ளதா?
பதில்: வடபோர்முனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கிய நீண்ட வேலிப் பிரதேசத்திலேயே அவர்கள் 2006 ஆம் ஆண்டே
மோதல்களை ஆரம்பித்து விட்டார்கள். இங்கு தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த மோதல்களிலே அவர்கள் இழப்புகளைச் சந்தித்து
பின்வாங்கினார்களே தவிர ஒரு அங்குலம் கூட அங்கே அவர்களால் முன்னேற முடியாமல் போய்விட்டது. இப்போது ஒன்றரை வருடங்களைத் தாண்டி
காலம் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையிலே பாரிய படை பலத்தை அவர்கள் குடாநாட்டில் குவித்திருக்கிறார்கள். எப்போதும் அந்தப் பகுதி தாக்குதலுக்கு உள்ளாகலாம்,
விடுதலைப் புலிகளின் படைகள் அங்கே வந்து இறங்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதே அதற்கு காரணமாகும். அதனால் அங்கே ஒரு பெரிய
படையணியை அவர்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய 53 ஆவது தாக்குதல் பிரிவும் அங்கே
நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கவச அணிகளின் முக்கிய அணிகள்கூட அங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான தகுதிகள் அந்த இடத்திற்கு இருந்தும்கூட, மற்ற எல்லா களமுனைகளையும்விட மிக விரைவாக ஒரு உலங்குவானூர்தி அந்த இடத்திற்கு
வந்து தாக்குதலை நடத்தக்கூடிய நிலையிலுள்ள வான்தளம் இருந்தும்கூட, மிக வேகமான விநியோகத்தையோ அல்லது காயமடைந்தவர்களை
அப்புறப்படுத்துவதற்கான போக்குவரத்து வசதிகளோ இருந்தும்கூட அந்த களமுனைகளில் அவர்களால் ஒரு அங்குலம்கூட முன்னே எடுத்து வைக்க
முடியாமல் இருக்கின்றது.
போர் நடவடிக்கை ஒன்றில் அதன் இலக்கின் அடிப்படையிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. வடபோர் முனையைப்
பொறுத்தவரையிலே மறித்துச் சமராடுதல் என்பதில் நாங்கள் 2006 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிபெற்று வருகிறோம். எங்களுடைய பகுதிகள் நோக்கி
முன்னேறுவதற்கான முனைப்பு என்ற விடயத்திலே அவர்கள் ஒன்றரை வருடங்களாக தோல்வி கண்டு வருகிறார்கள். இதுதான் அங்குள்ள நிலைமை. கேள்வி: கிழக்கிலிருந்து புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்திருந்தனர். ஆனால் அதை தமக்கு கிடைத்த பாரிய வெற்றியாக அவர்கள்
பிரசாரப்படுத்தினர். கிழக்கைப் போன்று வன்னிப் பெருநிலப்பரப்பு மீதான யுத்தமும் ஒரு இலகுவாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருப்பார்களா?
பதில்: நிச்சயமாகக் கருதியிருப்பார்கள். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாகி விட்டது என்பதுதான் அனைவருடைய கணிப்பாகவும்
உள்ளது. நாங்கள் மட்டுமல்ல பன்னாட்டு படைத்துறை ஆய்வாளர்களும் இத்தகைய கருத்துக்களை இப்போது மெல்ல மெல்ல சொல்லத்
தொடங்கியிருக்கிறார்கள்.
சிறிலங்கா அரசாங்கத்தினுடைய போர் உத்திகளை நம்பி அந்தப் போரில் அவர்கள் வெல்வார்கள் என்று கருதி தங்களுடைய முதலீடுகளைச்
செய்தவர்கள் எல்லாம் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனுடைய அங்கமாகத்தான் சிறிலங்கா அரச தலைவரோ அல்லது
அவருடைய படைத்தளபதி சரத் பொன்சேகாவோ இப்போது நினைத்தது போல் புலிகளை வெல்ல முடியாது, இன்னும் காலங்கள் தேவை என்று
அறிக்கைகளை மெல்ல மெல்ல விடத்தொடங்கியுள்ளனர். செய்வோம் என்று அறைகூவல் விடுத்து சொன்னதை அவர்களால் செய்யமுடியவில்லை.
இதுதான் உண்மையிலேயே வன்னிக் களத்தின் நிலைமை.
கிழக்கைப் பொறுத்தவரை எமது போரிடுதலுக்கான தேவையை, போரிடுதலுக்கான எமது வீச்சை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்து
இயன்றளவிலானதொரு போரிடுதலை அங்கே நாங்கள் நிறைவேற்றினோம். அதற்கு ஏற்ற வகையில் அங்கே அவர்களும் தமது படைகளை நிறுத்த
வேண்டியதொரு நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு விதித்தோம். இப்போதும் அங்கே படைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். படைகளை அங்கிருந்து
அகற்றும்போது புதிய படைகளை அங்கு கொண்டுசெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. ஏனெனில் கிழக்கைத் தாண்டிய இடங்களில்கூட புதிய
களங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் கிழக்கில் தாங்கள் செய்தது போன்று வன்னிப் பெருநிலப்பரப்பிலும் செய்வோம் என்று அவர்கள் நினைத்த அந்த கணிப்பில் ஏற்பட்ட
தவறுதான் இன்று அவர்களுக்கு பாரிய அரசியல், இராஜதந்திர, படைத்துறை, பொருளாதார அழுத்தத்திற்குரிய முக்கியமான காரணமாகவிருக்கிறது.
அவ்வாறானதொரு இறுக்கமான சூழ்நிலையில், களமுனை எங்களுக்கு சாதகமாக திரும்பி வருகின்ற சூழ்நிலையில்தான் இப்போதைய ஒட்டுமொத்த களமுனையும் சென்றுகொண்டிருக்கின்றது.
கேள்வி: சிறிலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் முனைவுகளை பல களமுனைகளில் மேற்கொள்கின்றனர். ஆனால் புலிகள் வலிந்த
தாக்குதல்களைச் செய்யாது, எதிர்த்தாக்குதல்களையே மேற்கொண்டு வருகின்றனர். அப்படியானால், சிறிலங்காப் படையினர் புலிகளின்
முழுப்பலத்தையும் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா?
பதில்: சில ஆழமான விடயங்களைக் கேட்கின்றீர்கள். எனினும் இயன்றளவுக்கு அதற்கு பதில் சொல்ல முடியும். எங்களுடைய தாக்குதல்களின் வீச்சம்
எப்படியிருக்கும் என்பதை சிறிலங்காப் படையினர் முன்னர் பல தடவைகள் அறிந்திருக்கிறார்கள். உதாரணத்திற்காக அனுராதபுரத் தாக்குதலைச்
சொல்லலாம், அதேபோல கட்டுநாயக்க வான்படைத் தள தாக்குதலைச் சொல்லலாம். அது ஒரு வகையான தாக்குதல்.
மறுவளத்தில் பார்த்தால் ஓயாத அலைகள் 1, 2, 3 என அனைவருடைய மனங்களிலும் நிற்கக்கூடிய பட்டவர்த்தனமாக பலத்தைச் சொல்லிய
தாக்குதல்கள்.
அதேபோல உலக நாடுகளுக்கு எங்களது வலுச்சமநிலையை நிரூபித்த தாக்குதலாக சிறிலங்காப் படையின் "அக்கினி கீல" என்ற நடவடிக்கைக்கான
எங்களுடைய எதிர்ச்சமர் அமைந்திருந்தது.
இவ்வாறானதொரு யதார்த்தங்கள் இருக்கும்போது அவ்வாறானதொரு தாக்குதல்களைச் செய்வதற்கான ஆற்றல்களை புலிகள் இழந்து விடவில்லை
என்ற அந்த பாரிய யதார்த்த நிலையை பன்னாட்டு ஆய்வாளர்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு இடித்துரைக்க தொடங்கியிருக்கிறார்கள்.
கிழக்கிலே தங்களுடைய படைகள் இருப்பது வேறு புலிகளுடைய தாக்குதல் திறனிலே ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்களா என்ற
கேள்வியை அவர்கள் இப்போது கேட்கத்தொடங்கியிருக்கிறார்கள். அதுதான் அங்கிருக்கக்கூடிய சூழ்நிலை. அப்படிப் பார்க்கப் போனால் நீங்கள் சொல்வது
ஒருவகையில் உண்மைதான்.
கேள்வி: முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடந்த வாரம் கடற்கரும்புலிகள் சிறிலங்காப் படையின் டோறா ஒன்றை தாக்கி மூழ்கடித்து அதிலிருந்த
கடற்படையினரைக் கொன்றிருந்தனர். குடாநாட்டில் உள்ள படையினருக்கான விநியோகத்தில் இந்தத் தாக்குதல் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்
?
பதில்: நிச்சயமாக தொடர் தாக்குதல்களும் அதற்குரிய பக்க விளைவுகளும் இல்லாமல் போகாது. அந்த தாக்குதல் நடத்தப்பட்ட முறை, உத்தி
சம்பந்தமாக என்னால் விலாவாரியாகப் பேச முடியாதிருக்கிறது.
ஆனால், அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் விளைவு சிறிலங்காப் படைத்துறை வழங்கலில் மட்டுமன்றி யாழ். குடாநாட்டில் உள்ள படையினருக்கு
போகின்ற விநியோகத்திலே மிகப்பெரும் பகுதி விநியோகம் அந்த குறிப்பிட்ட பாதையால்தான் செல்ல வேண்டும், வேறு வழியில்லை.
அங்கே இருக்கின்ற அத்தனை படையினருக்கும் ஒரு மூடை அரிசி போவது என்றாலும் அந்த வழியால்தான் போகவேண்டும். பெரும்பாலும் 80 வீத
வழங்கல் பாதையாகவே இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.
அது மட்டுமல்ல, அந்தப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றோம், அதை கண்காணிப்பிற்குள் வைத்திருக்கிறோம் என்ற சிறிலங்கா
அரசின் இறைமை என்கிற விடயம் இருக்கிறதல்லவா அந்த விடயம் எங்களுடைய கடற்புலிகளின் தாக்குதல்களினால் மீண்டுமொருமுறை
சவாலுக்குள்ளாகி, சிதைந்து போயிருக்கிறது.
இறைமை என்பது அனைத்துலக மட்டத்திலும் கேள்விக்குரிய விடயமாக, முக்கியத்துவம் இழந்து வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கடல்
இறைமைக்கு விழுந்துள்ள இன்னுமொரு அடியாக, தாக்கமாக, அவர்களே தாங்கள் இத்தனை பேரை இழந்துவிட்டோம், ஒரு கலத்தை இழந்து
விட்டோம், இத்தனை பேர் தப்பிவந்துள்ளனர் என்று சொல்லுமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக, கடல் இறைமையை சந்தேகத்திற்கிடமின்றி
ஆட்டம் காணச் செய்த விடயமாக கடற் கரும்புலிகளின் அந்தத் தாக்குதல் அமைந்திருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
கேள்வி: சிறிலங்காப் படையினரின் அண்மைக்கால தாக்குதல்கள் சற்றுக் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை சிறிலங்காப் படையின் வீழ்ச்சி என்று கருதலாமா?
பதில்: படைத்துறை ரீதியான மதிப்பீடுகளைச் செய்யும்போது சில மதிப்பீடுகளை நாங்கள் குறை மதிப்பீடாகச் செய்துவிட முடியாது. ஆட்பலம்,
ஆயுதங்களின் பலம் மற்றும் இவை எல்லாவற்றையும் தாண்டி மனோபலம் என்கின்ற உள்ளிருந்து ஊக்குவிக்கின்ற உத்வேகம் என்ற
விடயங்களிலுமே படைத்துறைப் பலம் என்பது உண்மையிலேயே தங்கியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினுடைய படைகள் அது தரைப்படையாக இருந்தாலும் சரி, கடற்படையாக இருந்தாலும் சரி, வான் படையாக இருந்தாலும் சரி
நிச்சயமாக எண்ணிக்கையில், வளத்தில் பெரியவை. இருந்தாலும் அவர்களுக்கு மந்த நிலை ஏற்படுவதற்கு அவர்களிடம் அடிப்படையான தார்மீகம்
இல்லாமல் இருப்பதே காரணமாகும்.
இது எங்களுடைய நாடு, எங்களுடைய மண், எங்களுடைய கடல், எங்களுடைய தாய்மடி. இதுக்காக நாங்கள் போராடும்போது எங்களுக்கு இருக்கின்ற
தார்மீகம் சிறிலங்காப் படைகளுக்கு இல்லை. அதனால் அவர்களுக்கு அந்த மந்த நிலை ஏற்பட்டிருக்ககூடும்.
கேள்வி: யுத்தமொன்று நீண்டகாலத்திற்கு இழுபடும்போது (குறிப்பாக மன்னார் களமுனையில்) படையினர் மத்தியில் அவர்களது மனவலிமையை
எப்படியாகப் பாதிக்கும்?
பதில்: நிச்சயமாக அங்கே பாதிப்பு இருக்கும். ஏனென்று சொன்னால் அது இலட்சியமில்லாத வேலை. அந்த இலக்கு அவர்களுக்கே தெரியாது. எப்போது
முடியும், எங்கே போய் முடியும் என்பது அவர்களுக்கே தெரியாது. களமுனையில் நிற்கின்ற சிப்பாய்க்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை.
அண்மையில்கூட ஒரு செய்தி வந்தது.
மேஜர் தர அதிகாரியிடம் விடுமுறை கேட்ட சிப்பாய்க்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் அந்த அதிகாரியை சிப்பாய் சுட்டுக்கொன்றிருக்கிறார்.
இவ்வாறான மன அழுத்தங்கள், விரக்தி நிலைகள், தாங்கள் செய்கின்ற பணியிலே நம்பிக்கையில்லா நிலை அங்கே இப்போது பெரியளவிலே
மலிந்திருக்கின்றன.
இதுதவிர படையினரின் இழப்புக்களை மறைக்கின்றனர் என்று தென்னிலங்கை ஊடகங்களே இன்று சொல்கின்றன. படையினரின் உடலங்களை
எங்குகொண்டுபோய்ப் புதைக்கின்றனர் என்ற தகவல்களும் அங்கிருந்துதான் வரத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் படையினரின்
மனஉறுதி ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது என்பது உண்மைதான்.
சரியான தருணங்கள் ஏற்படும்போது ஒரு சமரினுடைய போக்கு மனவுரண் சார்பாக மிக வேகமாகச் செயற்படுகின்றதை நாங்கள் எங்களுடைய
போரியல் வரலாற்றிலே பார்த்திருக்கின்றோம்.
தேசியத் தலைவர் அவர்கள் பலமுறை அவ்வாறான கணிப்பீடுகளின் அடிப்படையிலே பல சாதனைகளைச் செய்து காட்டியிருக்கின்றார். ஆகவே
நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி: கிழக்கிலே தற்போது ஒரு ஓய்வு நிலைதான் தற்போது காணப்படுகிறது. அங்கு ஏன் இப்படியான நிலை இருக்கிறது என்று கூறமுடியுமா ?
பதில்: கிழக்கின் நிலையைப் பொறுத்தவரை அங்கு சிறிலங்காப் படையினர் ஒரு படை விரிவாக்கத்தைச் செய்துள்ளனர். படைப்பரம்பலைச்
செய்திருக்கின்றனர். அதற்கு ஒரு வகையிலே நாங்கள் நிர்ப்பந்தித்துள்ளோம். அந்த நிர்ப்பந்த நிலையில் அவர்கள் தமது படையைச் சுருக்க முடியுமா
என்பது நிச்சயமாக அவர்களுடைய கையில் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.
அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, எங்களுக்குச் சாதகமான நிலைப்பாடு வருகின்ற சூழ்நிலையிலேயே அங்குள்ள படைச்சமநிலை கூட
மாற்றமடைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் என்று நிச்சயமாகக் கருதவில்லை.
கேள்வி: கிழக்கில் இருந்த சிறப்பு அதிரடிப்படையினரை அகற்றி அவர்களை மணலாற்றுப் பகுதிக்கு கொண்டுசெல்வதற்கான திட்டம் தற்போது
மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு அதிரடிப்படையின் பலம் எந்தவகையில் உள்ளது?
பதில்: சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை என்பது உண்மையில் ஒரு மரபுக் கட்டமைப்பல்ல. இன விரோதச் செயற்பாட்டின் மிகவும் உச்ச வடிவமாகத்தான்
அதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன வடிவமைத்தார். அந்த நாட்களிலே கிளர்ச்சி முறியடிப்புக்கான பல கட்டமைப்புகள் இருந்தன. இஸ்ரேலில் அத்தகைய
படைக்கட்டமைப்பு இருந்தது. இந்தியாவில் கூட அன்று நடந்த கிளர்ச்சிகளை முறியடிக்கும் படைக்கட்டமைப்புகள் இருந்தன. தென்னாபிரிக்க
படைக்கட்டமைப்பை உதாரணத்துக்கு தேர்ந்தெடுத்தால் இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான படைக்கட்டமைப்பாக அது இருந்ததாகத்
தெரியவில்லை.
எனினும் இனப்படுகொலை செய்வதற்காகவே கட்டமைக்கப்பட்ட இந்த படைக்கட்டமைப்பு அங்கே மிக அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறது.
வெளியே தெரியவந்த உடும்பன்குளமோ அல்லது கொக்கட்டிச்சோலைப் படுகொலை போன்றவையெல்லாம் உண்மையில் மிகச்சொற்பமே. அன்றாடம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்காக அழிந்துகொண்டே வந்தார்கள். அப்படி ஒரு எண்ணிக்கையில் அடங்காத தொகையினர் அந்த அநியாயத்தில் அங்கே
மாண்டிருக்கின்றனர்.
அந்த அநியாயத்தைச் செய்த அதிரடிப்படையினர் இன்று களமுனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
மரபுசார் யுத்தத்திலே அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை நிச்சயமாக எங்களுடைய களங்கள் அவர்களுடைய திறமையை பரிசோதிக்கக் கூடிய விடயமாக இருக்கும்.
நாங்களும் அவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்கிறோம்.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மைக்காலமாக தமக்கு ஏற்படும் இழப்புகளை அனைத்துலக ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் சற்று மௌனம்
காக்கப்படுவது ஏன் ?
பதில்: அப்படியானதொரு தோற்றப்பாடு ஏற்பட்டிருப்பது எனக்குப் புதிய விடயமாக உள்ளது. ஏனெனில் வீரச்சாவு அறிவித்தல்கள் மிகத்தெளிவாக
மறுநாளில் எங்களுடைய "புலிகளின்குரல்" வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. அதிலே மிகவும் நேர்த்தியான புள்ளிவிபரங்களுடன்
வீரச்சாவடைந்தவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலே வித்தியாசமிருப்பதாக நான் உணரவில்லை.
கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய விரைவான பணி குறித்த உங்களது பார்வை என்ன ?
பதில்: இத்தனை நாட்களும் அங்கிருந்துவந்த அவர்களின் உணர்வு ரீதியான அந்த ஒத்துழைப்பு என்பது ஒரு மாபெரும் விடுதலை சக்தியாக
களங்களிலே செயலாக மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் இங்கே நன்றியுடனும் பணிவுடனும் உறவுடனும் தெரிவித்துக்கொள்ள
விரும்புகிறேன்.
அதேநேரத்தில் எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை என்ற களமுனைப் போராளிகளின் அந்த உத்தரவாதத்தையும் ஒவ்வொரு
உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வதிலே உண்மையிலேயே நிறைவடைகிறேன்.
அதேபோல எங்களுடைய தேசியத் தலைவர் மிகவும் நுட்பமான இந்த காலகட்டத்திலே எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை
நடத்திக்கொண்டிருக்கிறார். பலவிதமான சூட்சுமப் புயல்கள், இராஜதந்திரச் சுழிகள், படை வல்லாதிக்க சூறாவழிகள் என்பனவற்றிற்கு ஊடாக விடுதலைப் படகை அவர் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறார்.
இவ்வளவு காலமும் போல அந்த இறுதிப்பயணம் வரைக்கும் எங்களுடைய வெற்றிக்கொடி இயற்றுகின்ற அந்த நாள் வரைக்கும் அத்தனை பேருடைய
உழைப்பும் ஒத்துழைப்பும் உணர்வும் எங்களுடன் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைத்தான் நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
என்றார் அவர்.
No comments:
Post a Comment