Friday, 28 March 2008

'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- உள்ளிருந்து கொல்லும் வியாதி!


யாழ் உதயன் Posted on : Fri Mar 28 21:45:00 2008

13ஆவது திருத்தச் சட்ட அமு(மூ)லை ஒருபோதும் தமிழர்கள் ஏற்கார்!
அது மிகவும் பின்னடைவானது என்கிறார் சம்பந்தன்
13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலம் முதல் இது நாள் வரையில் அது முறையாக அமுல்படுத்தப்படவில்லை. இதனை அமுல்படுத்தும் நட வடிக்கைகளில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனை மீள தூசுதட்ட முனைவதை தமிழர் தரப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள் ளாது. அது மிகவும் பின்னடைவானது என்பது மிகவும் தெட்டத் தெளிவானது. இவ்வாறு தமிழர் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய சமாதானப்பேரவை ஏற்பாடு செய்திருந்த "தேசியப் பிரச்சினை மற்றும் 13ஆவது திருத்தம் பற்றிய கருத்தரங்கு' மற்றும் "இரு தசாப்த கால
யுத்தத்தால் ஐந்து வருட யுத்த நிறுத்தம். அடுத்தது என்ன?' என்ற நூல்வெளியீடு ஆகியன நேற்று முன்தினம் கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்த் தன கேந்திர மண்டபத்தில் நடைபெற்றன.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை யாற்றியபோதே இரா. சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் 1986ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதி யாக இருந்த காலப்பகுதியில் இச்சட்டம் குறித்து கருத்தரங்குகள், கலந்துரையாடல் கள் மற்றும் பேச்சுக்கள் பல இடம் பெற் றன. இதில்ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ் தர்கள் பலர்பங்குபற்றியிருந்தனர். ஆனால் எங்களின் கருத்துகள் அங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலம் போன்றதொரு அதிகாரம் எமக்கு வழங்கப்படும் என்று மட்டும் கூறப்பட் டது.(கபடத்தனமான பச்சைப் பொய்) இந்த திருத்தச்சட்டத்தை இதுவரை ஆட்சிக்கு வந்த தரப்பினர் மக்களுக்கு திருப்தி தரக்கூடிய விதத்தில் நடைமுறைப் படுத்தவில்லை. இந்தச் சட்டம் குறித்து 1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க வின் ஆட்சிக்காலத்தில் ஆராயப்பட்டு இதில் சில திருத்தங்களை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது. அதுவும் இறுதி யில் கைவிடப்பட்டது. நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசு ஆக்கபூர்வமானதும் முன்னோக்கிச் செல்லக்கூடியதுமான தீர்வு யோசனைகளை முன்வைக்க
வேண்டும். தற்போதைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ள கூடிய விதத்தில் அரசியல் தீர் வொன்றைக் காண்பதற்கு இந்த அரசு அர்ப் பணிப்புடன் செயல்படுகிறதா என எமக் குத் தெரியவில்லை.அரசின் தீவிர அர்ப்பணிப்புத் தொடர் பில் எமக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன.13ஆவது திருத்தத்தை எம்மால் ஒரு போதும் ஏற்கமுடியாது. இந்தச் சட்டம் பின் னடைவான விடயம் என்பது எமக்கு தெட் டத் தெளிவாகின்றது.
இதனை ஒரு போதும் செயற்படுத்த முடியாதுஎன்றார்.
திருகோணமலை சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் மிக விரைவில் ஆரம்பம்
வீரகேசரி இணையம் 3/28/2008 12:38:35 PM
திருகோணமலை, சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் அடுத்த
மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆரம்பமாகுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இந்த அனல் மின் நிலையத்தின் மூலம் சுமார் ஆயிரம் மெகாவோட்ஸ் அலகு மின்சாரத்தை
உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டளவில் இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தைப்
பெற்றுகொள்ளலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பின் கீழ் இந்திய நிறுவனமான என்.பி.ரி.சி.
மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையத்தினை அமைப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 700 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். முதல் கட்டப் பணிகளுக்காக சுமார் 500
மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது. இதில் 70 வீதமானவை இந்தியா மற்றும் இலங்கை மின்சார சபையின் நிதிகள் தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு நிதிகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது என அரச ஊடகம் செய்தி
வெளியிட்டுள்ளது.
பிற்குறிப்பு:
1985 இல் திம்புவில் இந்தியா நடத்திய மிரட்டலுக்கும் மத்தியில் பின்வரும் கோரிக்கைகள் ஈழத்தமிழர் சார்பில் முன்வைக்கப்பட்டன.
1) தமிழர்கள் ஒரு தேசிய இனம்
2) வடக்கு கிழக்கு அவர்களது தாயகம்
3) அவர்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள்.
4) மலையகத்தமிழர்கள் இலங்கைப் பிரஜைகள், அவர்கள் இலங்கையில் தேசிய உரிமை உடையவர்கள்.
இலங்கை அரசு இவற்றில் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, கூடவே இந்திய அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அடிபணியவைத்து அடிமைத்தீர்வான இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டது. இதனுடைய ஒரு பகட்டு அலங்காரமாகவே 13வது திருத்தச் சட்டம் அமைந்தது.சுரேஸ் கும்பலும்( EPRLF ), சம்பந்தன் கும்பலும்(TULF ) இந்த அரசியல் அடிமைத்தனத்தை அங்கீகரித்து அரங்கேற்றினார்கள். தமிழ் மக்கள் மீது ஆயுதம் ஏந்திய அந்நிய ஆக்கிரமிப்பை ஏவினார்கள். அமிர்தலிங்கம் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆயுதங்களை சட்ட பூர்வமான ஆயுதம் என்றார். இன்று கிழக்கு மாகாணத்தில் நமது தேசத்துக்கும், ஒட்டுமொத்தமாக இலங்கை நாட்டிற்கும் நேர்ந்துள்ள அனைத்து தீமைகளுக்கும் வித்திட்ட தீயவர்கள் இவர்கள் தான். இந்த இரண்டு கும்பலையும் புலிகள் தலைமை தமது பினாமிகளாக 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ' என்ற பேரில் பாராளமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.சுரேஸ் யாழ் கச்சேரித் தேர்தலைஇப்போதும் ஜனநாயகம் என்கிறான்.சம்பந்தன் 13வது திருத்தச் சட்டம் பற்றி 'இந்தியாவில் இருப்பது போல ஒரு மாநிலம் தரப்படும் என கூறப்பட்டதாக சொல்கிறான்'. அறிவுகெட்ட முண்டம் 13வது திருத்தச்சட்டத்தை படித்திருக்க வேண்டுமா இல்லையா?
'தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது உள்ளிருந்து கொல்லும் வியாதி'
இல்லையேல்:
1) இந்திய இலங்கை ஒப்பந்தத்தை,
2) ஆறாவது திருத்தச் சட்டத்தை,
3) 1972,1978 அரசியல் யாப்புக்களை,
4)அவசரகாலச்சட்டம்,பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற கறுபுச் சட்டங்களை,
5)அனைத்து தொழிலாளர் விரோத ஏகாதிபத்திய நலன் காக்கும் சட்டங்களை
புதைகுழியில் போட்டு புதிய ஜனநாயக அரசு முறைக்காக போராடு!
ENB

No comments: