Monday, 7 April 2008

எறிகணைகளை எதிர்த்து பொறிவெடிகள்!


மன்னார் களமுனையில் ஐந்து நாட்களில் 35 படையினர் பலி- 120 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2008, 03:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம் இணைய தளம்
மன்னார் களமுனையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல் 5 ஆம் நாள் வரை இடம்பெற்ற மோதல்களில் 35-க்கும் அதிகமான படையினர்
கொல்லப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். முதலாம் நாள்...
இத்திக்கண்டலில் இருந்து கறுக்காய்க்குளம் நோக்கி படையினர் முன்நகர்வு முயற்சியினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டனர். 25 படையினர் படுகாயமடைந்தனர்.
2 ஆம் நாள்...
மடுப்பகுதி நோக்கி படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 10 படையினர்
கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர்.
அதேநேரம் நான்கு சம்பவங்களில் படையினர் பொறிவெடிகளிலும், மிதிவெடிகளிலும் சிக்கியிருந்தனர்.
3 ஆம் நாள்...
கட்டுக்கரையில் இருந்து பாலைப்பெருமாள்கட்டுப் பகுதி நோக்கி முன்நகர முயற்சித்த படையினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 40 படையினர் படுகாயமடைந்தனர்.
அதேநேரம் பாலமோட்டைப் பகுதியில் படையினரின் காவலரண் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதலில் 5
படையினர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் ஐந்து சம்பவங்களில் படையினர் பொறிவெடிகளிலும், மிதிவெடிகளிலும் சிக்கியிருந்தனர்.
4 ஆம் நாள்...
மிதிவெடிகள், பொறிவெடிகளில் படையினர் 7 இடங்களில் சிக்கியிருந்தனர்.
5 ஆம் நாள்...
மிதிவெடிகள், பொறிவெடிகளில் படையினர் 5 இடங்களில் சிக்கியிருந்தனர். அதேநேரம் படையினருக்கு எதிராக ஐந்து பதுங்கிச் சூட்டுத்தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இந்த காலப்பகுதியில் படையினர் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கிய 30 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
பண்டிவிரிச்சான், கீரிசுட்டான், விளாத்திக்குளம், சேத்துக்குளம் பகுதிகளிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஞாயிறு 06-04-2008 22:51 மணி தமிழீழம் [விஜயன்]
மன்னார் சூனியப்பிரதேசத்தில் 5 நாட்களில் 30 பொறிவெடிகள் வெடித்துள்ளன.
மன்னார் சூனியப்பிரதேசங்களில் 30 இராணுவத்தினர் பொறிவெடிகளில் கொல்லப்பட்டோ அல்லது காயப்பட்டோ உள்ளனர் என மன்னார் பகுதி
த.வி.புலிகள் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.
கீரிசுட்டான், பண்டிவிரிச்சான், விளாத்திக்குளம், கோயிலாமோட்டை மற்றும் அடம்பன் அண்டிய பகுதிகளிலே இப்பொறிவெடிகள் வெடித்துள்ளன.
இதைவிட 3 இராணுவத்தினர் த.வி.புலிகளின் குறி சூட்டு பிரிவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.



கிழக்கு தேர்தலும் மன்னார் மோதலும்
வீரகேசரி வாரவெளியீடு 4/6/2008 9:50:07 AM -
மார்ச் 31 ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என். பகவதி
தலைமையிலான சர்வதேச சுயாதீனக்குழு, தமது மனித உரிமைப்பணியை முடித்துக் கொண்டது. வருகிற ஒக்டோபர் மாதத்துடன் வர்த்தக
ஒப்பந்தத்தினை நிறுத்திக் கொண்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென ஐரோப்பிய யூனியனை எச்சரித்துள்ளார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். கடந்த
மாதம் முழுவதும் அரச தரப்பிலிருந்து வெருட்டல்களும் எச்சரிக்கைகளும் தொடராக வெளிவந்த வண்ணமிருக்கிறது. இந்தியாவைப் போலொரு உத்தம
நண்பன் இப் பூவுலகில் கிடையாது என்பது போன்ற முதுகு தடவும் வார்த்தைகள், பேரினவாதக் காற்றெங்கும் விரவி நிற்கிறது. இந்நிலையில் எதற்கும்
சளைக்காத மேற்குலகம், ஆள், அம்பு, சேனைகளை இலங்கைக்கு அடுக்கடுக்காக அனுப்பிய வண்ணமுள்ளது.
தற்போது இருபெரும் பேரினவாதக் கட்சிகளின் இணைப்பாளராக நீண்ட காலமாகத் தொழிற்படும் பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர்
லியம் பொக்ஸ் (ஃடிச்ட் ஊணிது) முருங்கை மரம் ஏறும் முயற்சியில் மறுபடியும் ஈடுபட்டுள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் இரு துருவங்களையும் ஒரு கோட்டில் இணைத்து தமிழர் பிரச்சினைக்கு பொதுக் கருத்தொன்றை உருவாக்கும் முயற்சியில் லியம் பொக்ஸ் ஈடுபடுவதாக வியாக்கியானம்
அளிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்தவுக்குப் பதிலாக ஆட்சியில் இன்று ரணில் அமர்ந்திருந்தால் லியம் பொக்ஸிற்கு இந்த மரதன் ஓட்டம்
தேவைப்பட்டிருக்காது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விலகி நின்றது குறித்த கடுப்பு இன்னமும் ஐரோப்பிய யூனியனிடமிருந்து
விலகவில்லை போல தெரிகிறது. லண்டன் சர்வதேச சமாதானக் கருத்தரங்கிலும் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை தமிழ் மக்கள் பயன்படுத்த
வேண்டுமென்கிற கருத்து லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் சைமன் ஹியுஸிடமிருந்து வெளிப்பட்டது.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் எதுவென்றால், விடுதலைப் புலிகளிடம் பேசித் தீர்க்கும்படி வேண்டுகோள் விடுத்த பலமேற்குலக நாடுகள், தடை
விதிப்பதனூடாக புலம்பெயர் மக்களின் ஆதரவினை புலிகள் பெற்றுக்கொள்வதை தடுத்த இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
அதேவேளை ஐரோப்பிய யூனியனின் வேண்டுகோள்களை முற்று முழுதாக நிராகரித்துள்ளார் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித
கோஹன்ன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக கிழித்தவுடன் மேற்குலகின் நேரடித் தலையீடு அகற்றப்பட்டு, திரும்பவும் உள் நுழையும்
முயற்சிகளும் அரச தரப்பினரால் தடுக்கப்படுகின்றன.
ஐ.நா. மனித உரிமைப் பிரதிநிதிகளின் அறிக்கைகளை எதிர்கொள்வதற்கு, பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை இயங்க அனுமதித்த
அரசு அதனையும் செயலிழக்கச் செய்துள்ளது.
போர் என்றால் போர் என்று ஜே.ஆர். ஆரம்பித்த யுத்தம் இற்றைவரை நீடிக்கிறது. அதேவேளை மாமனார் அநுருத்த ரத்வத்தையின் துணையோடு 90
களில் பெருஞ்சமர் புரிந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது அரசியல் வாழ்வில் மூன்று தவறுகள் புரிந்ததாக பாவ மன்னிப்புக் கேட்கிறார். 2004
இல் ரணிலின் ஆட்சியைக் கலைத்தது முதல் தவறு, ஜே.வி.பி. யுடன் ஒப்பந்தம் செய்தது இரண்டாவது மாபெரும் தவறெனக் கூறும் சந்திரிகா, காலம்
வரும் வேளையில் தனது மூன்றாவது தவறினை வெளியிடப் போவதாக சுய விமர்சனம் செய்துள்ளார்.
அனேகமாக மாமானார் ரத்வத்தையின் அறிவுரையைக் கேட்டு வன்னியில் நாலாயிரம் படையினரைக் காவு கொடுத்த ஜெயசிக்குறு நடவடிக்கையே
மூன்றாவது தவறாக இருக்கும்.
மடு பிடிக்கும், பெயர் சூட்டப்படாத ஜெயசிக்குறு 2 இன் இறுதிக் கட்டம் அண்மிக்கிறது. போர்ச் சூழல் அற்ற சமாதான வலயமாக மடுப் பிரதேசத்தை
பிரகடனப்படுத்த வேண்டுமென்கிற மன்னார் ஆயரின் கோரிக்கையை கருத்தில் கொள்ள மறுக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலிற்கு முன்பாக
மடுவைப் பிடித்து அந்த இராணுவ வெற்றியை மூலதனமாகக் கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற அரசு முனைகிறது.
மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முற்றாக புறக்கணித்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைக்குள் உடைவினை
உருவாக்க தமது காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளன பேரினவாதக் கட்சிகள்.
வட கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் தாயகமெனக் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தின்
கீழ் இணைந்து அதிகாரப் போட்டியில் ஈடுபடுவது அபத்தமாகவுள்ளது. ஆயினும் காங்கிரஸின் மரச் சின்னத்தில் ஐ.தே.க. போட்டியிடாதென்கிற
உண்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள். முதலமைச்சர் நாற்காலிக் கனவுச் சகதிக்குள் வீழ்ந்தõல் மண் பறி போகும் மாயங்களைத் தரிசிக்க
முடியாமல் போய்விடும். கிழக்கின் பூர்வீக இன மக்கள் மீது தமது பிரித்தாளும் உத்தியை தென்னிலங்கைச் சக்திகள் பிரயோகிப்பது புரியப்படுதல்
வேண்டும்.
இதேவேளை விடுதலைப் புலிகள் பல தாக்குதல் அணிகள், படகுகள் மூலம் கிழக்கு மாகாணத்தில் வந்திறங்கியிருப்பதாக இணையத்தளச் செய்திகள்
கூறுகின்றன. அண்மையில் நிகழ்ந்த நாயாறு டோராப் படகு தகர்ப்பும் மட்டக்களப்பில் நடைபெற்ற கண்ணி வெடித் தாக்குதலும் இச் செய்திக்கு வலுச்
சேர்ப்பதாக உள்ளது. தற்போதைய அரசியல், இராணுவ கள நிலவரப்படி மடுவும் மட்டக்களப்பும் உணர் திறன்மிக்க விவகாரங்களாக மேலெழுந்துள்ளன.
இராணுவத்தின் தந்திரோபாய நகர்வுகளில் அரசியல் ரீதியிலான சாத்தியமான இணைவுகள் தென்படும் அதேவேளை வெளியேற்றப்பட்ட பெரும்
எண்ணிக்கையிலான விசேட அதிரடிப்படையினரால் கிழக்கின் படை வலுச் சமநிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
ஒரு வருட காலமாக நீளும் மடு பிடிக்கும் திட்டம் வெற்றியளித்தாலும் கிழக்கின் பிடிமானம் தளர்ச்சியடையும் நிலை, வேறொரு பரிமாண தளத்தினை
நோக்கி நகரலாம். ஆயினும் மன்னார் போர்க் களத்தில் இராணுவத் தரப்பு கொடுத்த இழப்புக்கள் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. வெற்றிச்
செய்தியொன்று வெளியிடப்பட்ட பின்னர் தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தோடு இந்த இழப்புக்கள் குறித்த புள்ளி விபரங்கள் தென்னிலங்கை
ஊடகங்களில் வெளிவரும் சாத்தியப்பாடுகள் உண்டு.
இலங்கை இராணுவத்தின் மிகப் பலம் வாய்ந்த 58 ஆவது படையணிக்கு மன்னார் சமர்களில் ஏற்படும் பாரிய இழப்புக்கள், நவீன ஆயுதக்
கொள்வனவில் ஈடுபட வேண்டிய அழுத்தங்களை அரசின் மீது திணித்துள்ளது. ஒன்றரை இலட்சம் எறிகணைகளைத் தந்துதவும்படி பாகிஸ்தானிடம்
அவசரக் கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது. படை நகர்வுகளில் அதிகளவில் ஆளணி இழப்புக்கள் ஏற்படுவதால் எறிகணைப் போர் நடத்தி
விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை அழித்திடலாமென இராணுவம் கருதுகிறது. இழக்கப்படும் ஆளணி வளத்தை பாகிஸ்தானால் ஈடுசெய்ய
முடியாதென்கிற நிலையில் எறிகணைகளின் துணையுடன் போரை நீடிக்கலாமென்கிற போக்கினையே இராணுவம் மேற்கொள்கிறது.
கடந்த காலங்களில் மன்னார் வளைகுடாவினை அண்டிய நிலப் பிரதேசங்களில் நிகழ்ந்த சமர்களை அவதானித்தால் பூநகரி மீதான தவளைப்
பாய்ச்சலும் மண்டை தீவில் நடத்தப்பட்ட ஈரூடகப் படையணிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கையும் நெடுந்தீவு மீதான கடற்புலிகளின் அதிரடி
தாக்குதல்களும் சில போர்ப் பரிமாணங்களை நினைவூட்டுகின்றன. பல பின்தளச் சிதைப்பு நகர்வுகள், இராணுவ முன்னேற்றங்களைத் தடுத்த போரியல்
வடிவங்களாக மாற்றமடைந்ததை வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.



அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மடு மாதாவின் இடப்பெயர்வு:
"லக்பிம" [திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2008, 05:18 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
சிறிலங்காவின் அரசியல் வட்டடாரங்களில் மடு மாதாவின் இடப்பெயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம"
ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் "லக்பிம" வார ஏட்டில் வெளிவரும் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
மடுவை அண்டிய பகுதிகளில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் மிகவும் பழமை வாய்ந்த கன்னி மாதா சொரூபம் ஆலயத்தில் இருந்து
அகற்றப்பட்டுள்ளதான செய்திகள் கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பை எட்டியது மிகப்பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளது.
1583 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவில் கிறிஸ்தவர்களின் தொகை 43,000 ஆக அதிகரித்திருந்தது. 26 தேவாலயங்களும் உருவாகியிருந்தன.
அவற்றில் ஒன்று மாந்தையில் அமைந்துள்ள மடு தேவாலயமாகும். இது மன்னாரில் இருந்து 6 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
பல நூறு ஆண்டுகளாக வருடம் தோறும் நடைபெறும் உற்சவத்தில் இலங்கையின் நான்கு திசைகளில் இருந்தும் மக்கள் சென்று கலந்து
கொள்வதுண்டு. கடந்த புதன்கிழமை மன்னார் பேராயர் இராஜப்பு ஜோசப்பின் உத்தரவுக்கு அமைய கன்னி மாதா சிலை ஏ-32 வீதியில் உள்ள
வெள்ளங்குளம் புனித பிரான்சிஸ் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மன்னார் பகுதியில் நடைபெறும் படை நடவடிக்கையை வழிநடத்தி வரும் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு
இந்த தகவலை பேராயர் தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே கடந்த வாரம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள முருங்கன் பகுதி மீது விடுதலைப் புலிகள் மோட்டார்த் தாக்குதலை நடத்தி உள்ளனர்.
120 மி.மீ மோட்டார் எறிகணைகள் அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாப் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டு படை நடவடிக்கைகளை
பார்வையிட்டிருந்தார். பருவ மழை காரணமாக படை நடவடிக்கைகளில் ஏற்பட்டு வரும் தாமதங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார். திடீரென
தோன்றிய தொற்று நோய்களால் பெருமளவிலான இராணுவத்தினர் பாதிக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
மடுவில் இருந்து வடக்காக 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாலம்பிட்டியை கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளை
தடை செய்து மடுப்பகுதி மீதான படை நடவடிக்கையை இலகுவாக்குவதே படையினரின் உத்திகள்.
இதற்கு அமைய 57 ஆவது படையணியின் 2 அவது பிரிகேட் முள்ளிக்குளத்தில் இருந்து பாலம்பிட்டியை நோக்கி நகர்வை ஆரம்பித்திருந்தது. அது
தற்போது பாலம்பிட்டியில் இருந்து 2 ½ கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் மடுவில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தப் பகுதியில் கடந்த
வாரம் நடைபெற்ற சமரில் இரு படையினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே புனித கன்னிமாதா சொரூபம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பில் பல அரசியல்
மற்றும் படைத்துறை வட்டாரங்கள் தமது அதிதிருப்திகளை வெளியிட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவன்பிட்டி தேவாலயத்தில் எழுந்தருளியுள்ள- (பதுங்கியுள்ள என வீரகேசரி எழுதியிருக்கவேண்டும்-ENB)- மடு அன்னை
வீரகேசரி நாளேடு 4/6/2008 7:32:26 PM -
பாதுகாப்புக் காரணங்களுக்காக மடு திருப்பதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மடு மாதாவின்
திருச்சொரூபம் மக்களின் வழிபாட்டிற்காக தேவன்பிட்டி புனித சவேரியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மன்னாரின் ஏனைய பகுதிகளிலிருந்து மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து இப்பகுதியில் தங்கியுள்ளப் மக்கள் மாதாவின் வருகையால்
மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடம்பெயர்ந்து நாம் படும் அவலங்களை பார்க்கவே மாதா அங்கு வந்துள்ளதாக நம்பும் இடம்பெயர்ந்த மக்கள் சவேரியார்
தேவாலயத்தில் எழுந்தருளியுள்ள மடு மாதாவைக் காண்பதற்குத் திரண்டு செல்கின்றனர்.
ஈராக்குக்கு செல்லும் பிரிட்டிஷ் படையினருக்கு` மகாபாரத பாடம்' [07 - April - 2008] தினக்குரல்.
ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு இந்துக்களின் இதிகாசமான மகாபாரதத்திலிருந்து சிறந்த விடயங்களை
எடுத்து விளக்கி உளவள ஆலோசனை வழங்கி வருகிறார் அந்த இராணுவத்தின் முதலாவது இந்து மதகுருவான கிரிஷான் ஆத்ரி. பிரிட்டிஷ்
இராணுவத்தால் இந்தப் பணிக்காக 2005 இல் ஆத்ரி நியமிக்கப்பட்டார். சீக்கிய மதகுருவாக மன்டீப் கௌரும் பௌத்த மத போதனைக்காக சுனில்காரியக் கரவணம் இஸ்லாம் மதபோதனைக்காக அசிம் ஹா பிஸும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சென்ற ஆத்ரி பகவத்கீதையிலிருந்து சுலோகங்களை மேற்கோள்காட்டி போருக்கு ஏன் செல்ல வேண்டும்
என்பது தொடர்பாக விளக்கமளித்து வருகிறார்.
பிரிட்டனின் ஆயுதப் படைகளில் 183,000 பேர் கிறிஸ்தவர்களாகும். இவர்களுக்கு கிறிஸ்தவ மத போதனைக்காக 300 பேர் உபதேசியர்களாக உள்ளனர்.
470 இந்துக்களும் பிரிட்டிஷ் படையில் உள்ளனர். இவர்களுக்கே ஆத்ரி போதித்து வருகிறார்.
உங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் உலகில் சமாதானத்தைப் பேணவும் கடவுள் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என்று
படைவீரர்களுக்குத் தான் கூறுவதாக ஆத்ரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் (படைவீரர்கள்) எவரையும் கொல்லவில்லை என்றும் கடமையையே செய்வதாகவும் நான் அவர்களுக்கு தெரிவித்து வருகிறேன் என்றும் அவர்
குறிப்பிட்டிருக்கிறார்.
கடமையே எனது முன்னுரிமை. இது எமது கர்மம். அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று கிரிஷான் ஆத்ரி கூறுகிறார்.
================================
பிற்குறிப்பு ENB :கடமை என்று பொதுவாக எதுவும் இல்லை.ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோருமாய் பிளவுண்ட சமுதாயத்தில் பொதுவாக கர்மம் ஆற்ற இயலாது.ஏதாவது ஒரு பிரிவுக்குத்தான் கர்மம் ஆற்ற முடியும். ஒடுக்கும் அரச படை வீரர்களுக்கு கடவுளின்ஆசி வழங்கி கர்மம் ஆற்ற அனுப்புவதன் மூலம் மட்டுமல்ல, ஒடுக்கப்படும் மக்களுக்கு 'அபினியாக' இருந்து அவர்களது போர்க்குணத்தை மழுங்கடிப்பதன் மூலமும் இதனை ஆற்றுகிறார்கள். இதை மதவாதிகள் ஆன்மீக-கலாச்சாரத் தளத்தில்-செய்வதைப்போல, தத்துவார்த்த அரசியல் பொருளாதாரத் துறைகளில், அதிகாரபூர்வ விஞ்ஞானம் பெற்றுத்தள்ளும் குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள்,அரைவேக்காடுகள், மற்றும் அறிவே அற்ற முண்டங்கள் நிறைவேற்றுகிறார்கள். இவர்களும் தம்மைப் பொதுவில் சமூகவியலாளர்கள் என அழைத்துக்கொள்கிறார்கள்.

எவ்வளுவுதான் கடவுளின் ஆசீர்வாதம் இவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிற போதிலும், கறுத்தப் பைகளில் இவர்கள் வீடுதிரும்பும் போது, மூர்க்க குணம் உள்ள மக்கள் கடவுளின் இராச்சியத்துக்கு தாம் எதிரிகள் என்பதையே நடைமுறையில்-(புரிந்து கொண்டுள்ள முறை எவ்வாறு வேறுபடினும்)- பயங்கரமான வழிகளில் எடுத்தியம்புகிறார்கள்.


இந்தப் பிரளயத்தை எந்த 'உபதேசமும்' இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது. புனித மரியாள்கள் மக்களைக் காத்த காலம் முடிந்து போய்விட்டது . புரட்சிகர மக்களின் போராட்டங்களில் தான் புனித மரியாள்கள் தம்மைக் காத்துக்கொள்கின்றனர். ENB

No comments: