Thursday 24 April, 2008

பக்சபாசிஸ்டுக்களின் வடக்குப் படையெடுப்பு முறியடிப்பு!


பக்ஸபாசிஸ்டுக்களின் வடக்குப் படையெடுப்பு முறியடிப்பு!


தூக்கி நிறுத்த துடிக்கிறது
இந்திய விஸ்தரிப்புவாத அரசு!!

சிறிலங்காப் படையினர் 100-க்கும் அதிகமானோர் பலி- 400-க்கும் அதிகமானோர் படுகாயம்- 16 போராளிகள் வீரச்சாவு: இளந்திரையன் [புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008, 07:40 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ள போர்க்கலங்களை கைப்பற்றும் நடவடிக்கை களத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
19 படையினரின் உடலங்கள் இன்று புதன்கிழமை இரவு 7:00 மணிவரை கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொது
விளையாட்டுத்திடலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரின் உடலங்களை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவற்றினைப் பார்வையிட திரள்கின்றனர்.

தமிழர் நிலங்களை சிங்களப் படைகள் வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் மேற்கொண்ட பாரிய நடவடிக்கை முறியடிக்கப்பட்ட வெற்றியில் மக்கள்
திளைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சிப் பூரிப்பில் உரையாடுகின்றனர்.
சிறிலங்காப் படையினரின் உடலங்கள் நாளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்கா அரசிடம் விடுதலைப் புலிகளால்
ஒப்படைக்கப்படவுள்ளன

(இணைப்பு)கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 40 பேர் பலி- 375 பேர் படுகாயம் [புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008, 10:11 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட
பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரில்
சிறிலங்காப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். 375 பேர் படுகாயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும், போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன. வடபோர்முனையில் மேற்கே கிளாலி முதல் முகமாலை ஊடாக கிழக்கே கண்டல் வரையான 7 கிலோமீற்றர் நீளமான முன்னரண் பகுதியில்
சிறிலங்காப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு பாரிய முன்நகர்வை தொடங்கினர்.
பல்குழல் வெடிகணைகள்- ஆட்டிலெறிப் பீரங்கிகள்- மோட்டார்கள் ஆகியவற்றின் மிகச் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வின் போது சிறிலங்காப் படையினரால் பல்லாயிரக்கணக்கில் எறிகணைகள் ஏவப்பட்டன.
அத்துடன் சிறிலங்காப் படையினரின் கவசப்படை டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகள் படையினரின் முன்னரணின் பின்தளத்திலிருந்து செறிவான
பீரங்கிச்சூடுகளை வழங்க படையினர், விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை நோக்கி முன்நகர்வை மேற்கொண்டனர்.
சிறிலங்கா தரைப்படையின் உச்சவலு 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்கள் மற்றும் 55 ஆம் டிவிசன் படையினர் இப்பாரிய முன்நகர்வை
மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் 10:30 மணி நேரம் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அதிகாலை 2:30 மணி முதல் இன்று பிற்பகல் 1:00 மணிவரை மிகத் தீவிரமாக படையினரின் முன்நகர்வை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப்
புலிகள் நடத்தினர்.
இம் முன்நகர்வு வலிந்த தாக்குதலை 10:30 மணிநேர தாக்குதல் மூலம் முறியடித்த விடுதலைப் புலிகள், படையினரை பழைய நிலைகளுக்கு
விரட்டியடித்துள்ளனர்.
முறியடிப்புத்தாக்குதலின் போது படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
களத்தில் படையினரின் உடலங்கள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.
விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளில் சிக்கி அதிகளவில் படையினர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர்.
படையினரின் சுடுகலங்கள், வெடிபொருட்கள் பெருமளவில் களமுனையில் சிதறிக்கிடக்கின்றன.
படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் துடைத்தழிப்பு தாக்குதல் மற்றும் தேடுதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள்
மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய மோதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 375 படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்காப் படைத் தரப்பினரை மேற்கோள்
காட்டி அனைத்துலக ஊடகமான ஏ.எஃ.பி. தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இதே களமுனையில் இடம்பெற்ற முறியடிப்புத் தாக்குதலில் 190 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதுடன் 600 படையினர் படுகாயமடைந்திருந்தனர். அதன் பின்னர் இந்தக் களமுனையில் படையினருக்கு அதிக இழப்பை ஏற்படுத்திய முறியடிப்புத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.



முகமாலையில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: டாங்கி முற்றாக அழிப்பு [செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2008, 11:20 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். வடபோர்முனையான முகமாலைக் களமுனையில் சிறிலங்கா கவசப் படை கொமாண்டோக்களின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள்
முறியடித்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளால் கவசப் படை டாங்கி ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
எழுதுமட்டுவாளில் மோட்டார் தளம் ஒன்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரிந்து கொண்டிருக்கின்றது. முகமாலைக் களமுனையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காவின் காலாற் படைகளும், கவசப்படை ஊர்திகளும் இணைந்து செறிவான ஆட்டிலறி, மோட்டார் எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
30 நிமிட நேர தாக்குதலில் படையினரின் ரி-55 ரக போர் டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காப்
படையினர் உயிரிழந்தும், காயமடைந்த நிலையிலும் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இதனிடையே தென்மராட்சி எழுதுமட்டுவாளில் சிறிலங்கா படையினரின் மோட்டார் நிலை மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அப்பகுதி சேதங்களுக்குள்ளாகி எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



மன்னார்- யாழ்.- மணலாறு மோதல்களில் படைத்தரப்பில் ஒருவர் பலி- 12 பேர் படுகாயம் [செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2008, 08:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
மன்னார் மினுக்கன் மாதோட்டம் வேடமுறிப்புப் பகுதிகளில் நிகழ்ந்த மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 6
படையினர் காயமடைந்தனர். இம் மோதல் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்தது.
மன்னார் மடு சுற்றயல் பகுதியில் நேற்று நிகழ்ந்த மோதலில் 2 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னார் தட்சணமருதமடு அயல் பகுதியில் நேற்று மாலை 5:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மணலாறு ஜனகபுரப் பகுதியில் நேற்று நிகழ்ந்த மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ். முகமாலைப் பகுதியில் நேற்று காலை நிகழ்ந்த மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
அப்பகுதிக்கு அருகாமையில் நிகழ்ந்த மற்றொரு மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இத்தகவல்களை சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்டுள்ளது.
____________________________
செவ்வணக்கம்:
ஒரு புதிய காலையின் விடிவுக்காய்,
மாலையாகி மண்ணில் வீழ்ந்த மாமனிதர்களே,
புரட்சிகர தேசபக்த விடுதலை யுத்தத்தின்-
முகமாலை முன்னரங்கில்
முத்து முத்தாய் வீழ்ந்த முல்லை மலர்களே,
காட்டிலும் மேட்டிலும்,
புல்லிலும் புதரிலும்,
மழையிலும் குளிரிலும்
'நின்று நிமிர்ந்து' நீர் ஈட்டிய சாதனை
கண்டு களிக்கிறோம்!
சென்றுவாருங்கள், நின்று வாழ்வீர்கள்,
நெஞ்சு வலிக்கையில் செவ்வணக்கம் அளிக்கிறோம்.
__________________________

No comments: