Sunday 20 April, 2008

இந்தியாவின் தலையீட்டுக்கு திராவிடத் தரகர்கள் மீண்டும் அறைகூவல்

இந்தியாவின் தலையீட்டுக்கு திராவிடத் தரகர்கள் மீண்டும் விடுக்கும் அறைகூவல்,
ஈழ விடுதலைப் போரைக் கருவறுக்கும் நேரடித் தலையீட்டுக்கு இந்திய விஸ்தரிப்புவாத அரசு தயாராகி விட்டதன் அறிகுறி!!


இந்திய விஸ்தரிப்புவாத அரசே,
கொல்லாதே கொல்லாதே, ஈழ விடுதலைப் புரட்சிகர யுத்தத்தைக் கொல்லாதே!



விடுதலைப்புலித் தலைமைப்பீடமே,
செல்லாதே செல்லாதே, அரசியல் சந்தர்ப்பவாத அக சுயநிர்ணய உரிமைப் பாதையில் செல்லாதே!!


1) 2002 இல் விடுதலைப்புலிகள் தலைமை இந்தியாவை மிஞ்சி காய் நகர்த்தி ஐரோப்பிய ஜுனியனின் ஆதரவில் நோர்வேயைப் பயன்படுத்தி, 13 வது திருத்தச் சட்ட மாகாண சபைகளுக்கு மேலான அதிகாரம் கொண்ட பதவி ஆசனத்தைப் பெற முயன்றனர்.
2) இந்த அதிகார 'மாயமானைக்' கண்ட கையோடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என தூக்கி வீசினர்.
3) இலங்கையின் ஒற்றை ஆட்சிமுறையை அங்கீகரித்து 1977 தமிழர் தீர்ப்புக்கும், 1985 திம்பு கோரிக்கைக்கும் நேரெதிரான ஒஸ்லோ ஒப்பந்தத்தில், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக கையொப்பமிட்டனர். ஒஸ்லோ ஒப்பந்தத்தை 'தேசத்தின் குரல்' என வர்ணித்தனர்.புலித்தலைமைக்கு இரண்டு குரல்; ஏகாதிபத்திய வாதிகளுக்கும், இந்திய ஆளும் கும்பலுக்கும் ஒஸ்லோ ஒப்பந்தம்! அடிமைத் தமிழனுக்கு தமிழ் ஈழம்!! -என நாடகமாடினர்.
4) எனினும் யுத்த களத்தில் ஆனையிறவுக்கு மேல் ஒரு அடி முன்னேறவும் விடாமல் தடுத்த இந்தியா, அரசியல் களத்திலும் இந்திய இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தம் ஆகியவற்றை மிஞ்சி, ஒரு இஞ்சி முன்னேறவும் அனுமதிக்கவில்லை; அநுமதிக்கப் போவதும் இல்லை!

*பாதுகாப்பு வலயத்தை நீக்குவதற்கு ஆயுத ஒப்படைப்பை (நம்பியார்) நிபந்தனையாக வைத்தது;
*சுனாமி நிவாரண உதவிகளை இந்தியா இலங்கை அரசோடு இணைந்தே செய்தது;
*கருணாவை உடைத்தது;
*கிழக்கைப் பிளக்க இலங்கை அரசுக்கு முழு இராணுவ உதவியும் வழங்கியது;
*தனது தத்துப்பிள்ளை ஜே.வி.பி ஐ பயன்படுத்தி நோர்வேயை புலி ஆதரவாளர்கள் எனப் பிரச்சாரம் செய்தது;
*இந்திய இலங்கை ஒப்பந்தம் அடைய விரும்பிய, திருமலைத் துறைமுக ஆதிக்கத்தை அடைய கிழக்கைத் துண்டாடியது;
*தொப்பிகல வெற்றிக்கு இலங்கை அரசுக்கு பக்கத்துணையாக இருந்தது;

*இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை ஒழித்துக்கட்ட தனது கடற்படையைக் கொண்டும், இலங்கை கடற்படைக்கு உதவியும் தாக்குதல்கள் நடத்தியது.குருவி உணவு சேர்ப்பது போல் தமிழர்கள் சேகரித்த செல்வத்தை, எதிரி எரித்துத் தள்ள தகவல் கொடுத்தது;
* இறுதியாக இலங்கை அரசை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேற வைத்து பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து நோர்வேயைப் புறந்தள்ளியது;
*முறிவு நிலையை முன்னேற்ற இந்தியா உதவவேண்டும் என நோர்வேயை அறிக்கை விடவைத்தது.
*இவ்வாறாக 2002 இல் இந்தியாவை மீறி காய் நகர்த்திய புலித்தலைமையின் அரசியல் தீர்வுகாணும் நேர்மையான முயற்சிக்கு முற்றுப்புள்ளியிட்டு, பேச்சுவார்த்தைக் களத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொண்டது.

*புலித்தலைமையின் அரசியல் சந்தர்ப்பவாத ஊசலாட்டப் போக்குகளை நன்கறிந்த, - தமிழீழ தாயகப் பற்றுறுதியும் போர்க்குணமும் மிக்க விடுதலைப்புலிப்போராளிகளை-யுத்தத்தின் மூலம் அழிக்க முடியாது என்பதை நடைமுறையில் நன்குணர்ந்த இந்தியா, அரசியல் வழியில் ஆசை காட்டி, ஆசைகாட்டி மெல்ல மெல்லக் கொல்லும் தந்திரத்தைக் கடைப்பிடித்தது.
*இதற்குப் பலியாகி, சலன புத்தியுள்ள ஒரு மனிதன், சிவப்பு விளக்குப்
பிரதேசத்தில் நடந்துகொள்வதைப் போல புலித்தலைமை நடந்துகொள்கிறது.
*இதைப் பயன்படுத்தி போர்க்களப் புலிகளின் வடபோர்முனை வெற்றிகளை முன்னேற விடாமல் தடுத்து, மீண்டும் இந்திய விஸ்தரிப்புவாதப் பொறிக்குள் ஈழதேசவிடுதலைப் புரட்சிகர யுத்தத்தை அமுக்க, இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் தமிழ் மாநில தரகர்கள் கபடத்தனமான முயற்சியில் இறங்கி, மீண்டும் இந்தியத் தலையீட்டுக்கு அறைகூவல் விடுக்கின்றனர். உண்மையில் தயாராகிவிட்ட இந்தியாவுக்கு தமது சம்மதத்தை தெரிவிக்கின்றனர்.
5) ரசியப் புரட்சியின் பாதையில் தமிழக தேசிய இயக்கம் சென்று விடுவதைத் தடுப்பதற்காக ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கிய சதிதான் முழு மூடன் ஈ.வே.ராமசாமியின் 'பகுத்தறிவு இயக்கமும்', நீதிக்கட்சியும். 1917 இல் இந்தியத் தமிழ் நாட்டில் 'பகுத்தறிவு' பற்றியும், 'நீதி' பற்றியும் பேசியவன் எப்பேற்பட்ட அயோக்கியனாக, முழு முட்டாளாக இருந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள் !
*அந்தப் பெரியார் பொரித்த போக்கிரிக் குஞ்சுகள்- கருணாநிதி, வீரமணி, வை.கோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் கும்பல்_ தம் சொந்த தேச மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாதவர்கள், போராடுகிற புரட்சிகர சக்திகளை 'இரும்புக் கரம் கொண்டு' ஒடுக்குபவர்கள்;
*தமிழக விவசாய தேசம் மீது உலகமயமாக்கலின் சூறையாடலுக்கு காவல் காக்கும் கடிநாய்கள்;
*சேது சமுத்திரத்திட்டத்தின் நேரடி முதலீட்டாளர்கள்;

* மன்னாரின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடக் காத்திருக்கும் மத்திய கழுகளுக்கு மாநிலத்தில் பொதி சுமக்கும் கழுதைகள்;
*வெறும் வெள்ளை வேட்டியோடு சட்டசபைக்குள் புகுந்து கோடீஸ்வரர்களான கொள்ளையர்கள்;
*ஏகாதிபத்தியம் இட்ட கடமையை நிறைவேற்றி, நிலப்பிரபுத்துவ கண்ணியம் காத்து- (பானுமதியில்@ இருந்து மு.க.ஸ்ராலின் சண்டாள தர்மம் வரை!), தேசிய விடுதலைப் புரட்சிக்கு கட்டுப்பாடு விதிக்கும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் தரகுக்,கைக்கூலிக், கயமைக் கும்பல்கள்;

* இவர்கள் எவரும் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தவர்கள் அல்ல, ஈழவிடுதலைப் போர் நீதியான யுத்தம் என்பதைக் கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல, விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக்கோரி போராடுபவர்கள் அல்ல, கேவலம் ஈழத்தமிழ் அகதிகள் மனிதர்களாக நடத்தப்படவேண்டும் என்பதற்காகவேனும் குரல் எழுப்புபவர்கள் அல்ல, மாறாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஆதரவாளர்கள், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சேவகர்கள், இந்திய மேலாதிக்கத்தின் காவலர்கள்.
6) இதனால்தான் புரட்சிகர ஈழவிடுதலை யுத்தத்தை ஒழித்துக்கட்ட முயலுகின்றனர். இந்த கபட நோக்கத்தை அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற மனிதாபிமான முழக்கத்தால் மூடி மறைக்கிறார்கள்.

1) இலங்கையில் தமிழர்களின் சாவு அப்பாவித் தனமானதல்ல.இந்தச் சடலங்களுக்கு முன்னே ஒரு சாகாத இலட்சியம் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சாவில் புதைத்த சடலங்கள், அதன் வாழ்வுக்காக விதைத்த வித்துக்கள்!

2) ஆனால் அமைதிப் பூங்கா தமிழகத்தில்; வோட்டுப் பொறுக்கும் இவர்களது கட்சிகளுக்காக ''தீக்குளித்தவர்கள்'', காவல் நிலையங்களில் ''தற்கொலை'' செய்தவர்கள், சாதிகளுக்கிடையில் சண்டை மூட்டி சாகடிக்கப்பட்டவர்கள் .........கண்டதென்ன? இந்தக் கழகக் கண்மணிகள், பதவி பெற்றதும், பதுக்கல் பெருத்ததும், தொந்தி பருத்ததும் தவிர!
அப்பாவித்தமிழர்களை தமிழகத்தில் கொல்பவர்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்!!

7) எச்சரிக்கை:

1) ''ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்''-இப்படித்தான் இவர்களை புலித்தலைமையின் பிரச்சார சாதனங்களும், பொதுவாக தமிழ் ஊடகங்களும் மக்களுக்குக் காட்டுகின்றன.
2) உலக ஏகாதிபத்தியத்தின் முப்பெரு மையங்களிலும் (USA, EU, JAPAN) ஏக காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முதல் இரு உலகப்போர்கள் சந்தித்ததைக்காட்டிலும் மிகமோசமான நெருக்கடியை உருவாக்கி ஒரு உலகப் பொதுப் பொருளாதார மந்தத்தை உருவாக்கியுள்ளது.

3)இதனால் பிரதேசக் கைப்பற்றல்களும், நாடுகளுக்கிடையேயான மோதல்களும், தேசிய ஒடுக்குமுறைகளும் உலகெங்கும், என்றுமில்லாத அளவில் உக்கிரமடைந்துள்ளன.

4) இவை ஒரு மூன்றாம் உலகப் போருக்கான சூழ்நிலையைக் கனியவைத்த வண்ணம் உள்ளன.இதன் தலைவனாக அமெரிக்கா இருக்கையில், அதன் தென்னாசியத் தோழனாக இந்தியா மாறியுள்ளது.சீனாவுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்கா தட்டிக்கொடுத்து ஊட்டி வளர்க்கிறது.

5) திருமலைத்துறைமுகம், மன்னார் எண்ணெய்வளம், சேதுசமுத்திரத்திட்டம் ஆகியவை உள்நாட்டு, பிராந்திய முக்கியத்துவம் உடையவை மட்டுமல்லாது,சர்வதேசிய- மேலும் குறிப்பாக ஒற்றைத்துருவ அமெரிக்காவின் இன்றைய உலக மறுபங்கீட்டு போர் நடவடிக்கைகளோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளன.சில தினங்கள் முன்பாக அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய 12 மில்லியன் டொலர் உதவியை 'கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம், நல்லாட்சி, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஐந்தாண்டு செயற்திட்ட உதவி' எனக் கூறியுள்ளது இதைத்தெளிவாகக் காட்டுகின்றது.

6) இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவின் நடவடிக்கைகள் கிழக்கில் அமைகின்றன.சுருங்கச் சொன்னால் இந்திய இலங்கை அரசுகள் அமெரிக்காவுக்கு கிழக்கில் ஒரு இராணுவத்தளம் அமைக்கின்றன.

7) இதனால் ஈழவிடுதலைப் புரட்சி மென்மேலும் அவர்களால் சகிக்க இயலாததாகிவிட்டது. மேலும் ஏகபோக முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரம் காரணமாக இந்த கால அவகாசம் அருகிவருகின்றது.இருந்து பேசுவதற்கே அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. நேரடியாக களத்தில் இறங்கிவிடுகிறது அமெரிக்கா. சிறை வைக்கக் கூடப் பிரியப்படுவதில்லை உடனடியாகவே வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன, அல்லது தூக்குமேடைத் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

8) விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்து இந்தியா(1) 'அரபாத் இல்லாத பாலஸ்தீனம்' என்கிற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.இது இலங்கையின் இராணுவ வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு எதிர்பார்த்த, அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான வாய்ப்புக்கள் யாவும் அறவே இல்லாதொழிக்கப் பட்டுவிட்டன. இந்தியாவின் அரசியல் தலையீடு ஏதேனும் ஒரு வழியில் இராணுவத் தலையீட்டிலேயே போய் முடியும். இந்தத் தடவை அதன் குறிக்கோள்(2) 'அரபாத் இல்லாத பாலஸ்தீனம்' அன்றி வேறெதுவாகவும் இருக்கமுடியாது.

9) இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் விடுதலைப்புலிகளின் தமிழக ஆதரவாளர்கள்- (எப்பேற்பட்ட ஆதரவாளர்கள் பாருங்கள்: எதிரிகளைக் காட்டிலும் மோசமானவர்கள்!! இந்த விடயத்திலும் கூட புலிகள் தலைமை ஒரு உலக சாதனை படைத்துள்ளது.) இந்தியாவின் அரசியல் தலையீட்டிற்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.

10) விடுதலைப்புலிகள் தமது பினாமி ஆதரவாளர்களை (மறைந்த நண்பர் மாத்தையா, கிளி மொழி பெயர்ப்பாளராக பாலசிங்கத்தைக்
கையாண்டதைப் போல..!) கண்காணித்து கட்டிவைத்து கையாளவேண்டும். கட்டாக்காலிகளாக விடக்கூடாது.தமது பிரச்சார சாதனங்களையும், பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் பொறுப்புடன் சிந்திக்கக் கோரவேண்டும். தமிழ் ஊடகங்களுக்கும் இந்தப் பொறுப்பு இருக்க வேண்டும்.

இல்லையேல் ஒரு பெரும் பழிக்கு நீங்கள் அனைவரும் பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கின்றோம்.

* இந்திய விஸ்தரிப்புவாதத்தைத் தோற்கடிப்போம்!
* இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் தமிழக தரகர்களைத் தனிமைப்படுத்துவோம்!
* அரசியல் தீர்வுகாண வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவோம்!
* பிரிந்து செல்லும் உரிமையைப் பற்றிப்பிடித்து, விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிற்போம்!
* கிழக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
* சுயாட்சிப் பிரதேச திட்டத்தின் அடிப்படையில், விடுதலைப் புரட்சியில் முஸ்லிம் மக்களை ஒன்றிணைப்போம்!
* ஆசியாவில் அமெரிக்காவின் பிரதேச, மூலவளக் கைப்பற்றலுக்கான இராணுவத் திட்டங்களைத் தோற்கடிப்போம்!
* யுத்த கால மனிதநேயப் பணிகளுக்காக மக்கள் குழுக்களைக் கட்டியமைப்போம்! மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவோம்!!
* தமிழர் தாயகத்தில் அனைத்து தன்னார்வ உளவாளி நிறுவனங்களுக்கும் தடை விதிப்போம்!
* விடுதலைப் புரட்சியைக் காக்க, போராடும் தலைமையைப் பாதுகாப்போம்!
_______________________________
@ முதல் அளிப்பில் தவறான பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது, திருத்தியுள்ளோம் மன்னிக்க!
_______________________________
20-04-2008__________________>சுபா_____>ENB______>*

இலங்கை அரசு-புலிகள் சந்திப்புக்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்

கருணாநிதி வேண்டுகோள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள் மத்தியிலும் இந்தியா பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்
என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ""ரைம் ஒவ் இன்டியா'' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு பலனளிக்கக்கூடிய
பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் உரிய அரசியல் தீர்வைக் காணமுடியும்என்று அவர் தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நோர்வே சென்று திரும்பி பிரதமர் மன்மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும்
சந்தித்த பின்னணியில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் மத்தியஸ்தம் தேவை என்று நோர்வே சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தது தெரிந்ததே. இலங்கைத் தமிழர்களுக்கு சகலரும் ஏற்கக்கூடிய நம்பகரமான தீர்வு ஒன்றைக் காண இந்தியா உதவவேண்டும். அப்போது நான் மகிழ்ச்சி அடைவேன்
என்று சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் கருணாநிதி கருத்து வெளியிட்டிருந்தார்.பட்டுப்படாமலும் இலங்கைத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வந்த கலைஞர், வன்னிக்குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட பின் அஞ்சலிக் கவிதை ஒன்றையும் எழுதி வெளியிட்டிருந்தார்.இக் கவிதை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மாநில அரசியல் கட்சி ( வை.கோ கூட்டு வைத்திருக்கும் ஜெயலலிதாவின் கட்சியென்று சொல்லக் கூடாது பாருங்கோ! ) இதனை சர்சைக்குரிய ஒன்றாக்கியது தெரிந்ததே.இலங்கைப் பிரச்சினைக்கு மத்திய அரசுதான் தீர்வு ஒன்றைக் காணவேண்டும்.மாநில அரசு அதில் முடிவெடுக்க இயலாது என்றும் கருணாநிதி மற்றொரு தடவை கருத்து வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வேண்டும்:
இந்தியப் பிரதமரிடம் இராமதாஸ் நேரில் வலியுறுத்தல் [சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008, 07:47 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்
மருத்துவர் இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார். புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
பிரதமரின் இல்லத்தில் சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கை இனச் சிக்கலில் இந்திய அரசு தலையிட்டு சமரச தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இலங்கையில், அரச படையினர் மிகக் கடுமையான முறையில் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்களின் மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் மன்மோகன் சிங்கிற்கு எடுத்துக்கூறிய மருத்துவர் இராமதாஸ், இந்திய அரசு உடனடியாக தலையிட்டு அரசியல் தீர்வுகாண உதவ வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். இலங்கைச் சிக்கல் குறித்து பிரதமர் தனது ஆழ்ந்த கவலையை அப்போது தெரிவித்தார் என்று பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மருத்துவர்
இராமதாஸ் கூறினார்.
இலங்கைச் சிக்கல் தொடர்பாக கடந்த மாதம், பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தின் நகலை மீண்டும் பிரதமருக்கு அளித்து
அவரது கவனத்தை ஈர்த்ததாகவும் மருத்துவர் இராமதாஸ் மேலும் தெரிவித்தார்.
Posted on : Sat Apr 19 8:55:00 2008
ஒஸ்லோ மாநாட்டிலிருந்து திரும்பிய கையோடு போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்தக் கோருகிறார் வைகோ
போர்நிறுத்தத்தை அறிவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தவேண்டும் என்று ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பிரதமர்
மன்மோகன்சிங்கிடம் நேரில் வற்புறுத்தியுள்ளார்.நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வாழுங்கலை நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற ""தென்னாசியாவில் சமாதானமும் அமைதியும்'' மாநாட்டில்
கலந்துவிட்டு நாடு திரும்பிய கையோடு வைகோ பிரதமரையும், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் நேற்றுமுன்தினம் சந்தித்தார்.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று
முன்தினம் புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்புகளின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதங்கள் குறித்தும் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தவும் சமாதானப் பேச்சுகளைத் தொடங்கவும் ஒஸ்லோ மாநாட்டில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்தும் நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் நடத்திய பேச்சுகள் குறித்தும் வைகோ
விளக்கினார்.இந்தியப் பிரதமருடனான சந்திப்பு அவரது புதுடில்லி அலுவலகத்திலும் முகர்ஜியுடனான சந்திப்பு அமைச்சரின் இல்லத்தி லும் நடைபெற்றன.பிரதமருடனான வைகோவின் சந்திப்பு 25 நிமிடம் நீடித்தது. இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ தமக்கு
எழுதிய கடிதத்துக்குப் பிரதமர் இச்சந்திப்பின்போது பதில் அளிக்கையில், ""நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை'' என்று தெரிவித்தார். இலங்கையில் இருந்துவரும் அரச தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் ""இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை, பேச்சுகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு
காணுங்கள்'' என்றே கூறி வருவதாகப் பிரதமர் மேலும் கூறினார்.பொய்ப்பிரசாரம் செய்வதற்காகவே கிழக்கில் மோசடித் தேர்தல். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம். அது ஒரே பகுதியாக இணைக்கப்படவேண்டும் என்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தில்
உள்ள விதிகளுக்கு மாறாக, கிழக்கு மாகாணத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது அனைத்துலக சமுதாயத்தை ஏமாற்றுவதற்காகவே. வடக்கு
மாகாணத்தோடு நாங்கள் சேர்ந்து இருக்க விரும்பவில்லை என்று கிழக்கில் உள்ளவர்கள் கருதுவதாக ஒரு பொய்ப்பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே
இராணுவத்தைக்கொண்டு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசு முயற்சிக்கிறது என்றார் வைகோ.அதற்குப் பிரதமர் பதில் அளிக்கையில்,""13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறார்களே?'' என்றார்.13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை தமிழர்கள் எப்போதே நிராகரித்து விட்டார்கள். அந்த 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கு நீதி வழங்காது. இப்போது
உள்ள சூழ்நிலையில் இலங்கை அரசுதான் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள்தான் போர்நிறுத்தம் செய்யவேண்டும். அவ்வாறு இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லி இந்தியா வற்புறுத்த வேண்டும்'' என்று வைகோ கூறினார்.வெளிவிவகார அமைச்சரை வைகோ சந்தித்தபோது பிரதமரிடம் தம்மால் கொடுக்கப்பட்ட மனுவின் பிரதியையும் கையளித்தார்.

ஈழத்தமிழர்களை காக்க அனைவரும் ஒன்று படுவோம் - வீரமணி அறைகூவல்
வீரகேசரி இணையம் 4/19/2008 11:34:17 AM
ஈழத்தமிழர்களை காக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமனி
அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி முன்நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் மத்திய சிறைக்கு சென்று ராஜீவ் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினியை சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் வீரமணி நளிணியின் தூக்குத் தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைக்குமாறு கோரிய
சோனியா காந்தி, மற்றும் நளினியை சந்தித்துள்ள பிரியங்கா காந்தியின் மனித நேயத்தை பாராட்டி உள்ளார்.
ராஜீவ் கொலையை வைத்து விடுதலைப்புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கருத்துக் கூறிவருபவர்கள் இனியாவது திருந்துவார்களா எனவும்
அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
நோர்வே இந்தியாவை இலங்கை விவகாரத்தில் தலையிடும் படி அண்மையில் அழைப்புவிடுத்துள்ளது போன்று இந்திய மத்திய அரசும் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தலையிட வேண்டும் எனவும் வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

No comments: