Sunday 27 April, 2008

பிலியந்தல தாக்குதல்: புலிகள் தலைமையின் பேடித்தனம்!

பிலியந்தல தாக்குதல்: புலிகள் தலைமையின் பேடித்தனம்!
*சாணேற முழம் சறுக்கும் புலிகள் தலைமையின் போராட்டப் பாதை விடுதலைப் புரட்சியின் வெற்றிக்கு உதவாது!
* சிங்கள பொதுமக்களைப் படுகொலை செய்வதற்கு, தமிழர்கள் புலிகளின் தலைமைக்கு அங்கீகாரம் வழங்கவில்லை!!
* எமது பெயரில் செய்யும் இப் பொறுக்கிச் செயலை இனிமேலும் நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்!!!
* போர்க்கள வெற்றிகளை வீணடிக்கும் இப் 'போர்த்தந்திரம்' கேடானது! கேவலமானது!!





கொழும்பின் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பு:
24 பேர் பலி- 52 பேர் படுகாயம்
[வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008, 07:03 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை பேருந்திற்குள் குண்டு வெடித்ததில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 52 பேர் படுகாயமடைந்துள்ளனர். பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 61-4170 இலக்க பேருந்திற்கு உள்ளேயே குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணியளவில் இடம்பெற்றதாக சிறிலங்காவின் காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபரும், காவல்துறைப் பேச்சாளருமான இலங்கக்கோன் தெரிவித்துள்ளசம்பவ இடத்திலேயே 10 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்தவர்கள் பிலியந்தல மற்றும் களுபோவில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேர் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான பேருந்தின் கூரைப்பகுதி கடுமையாகச் சிதைவடைந்துள்ளது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது மேற்படி பேருந்திற்குள் 90 பயணிகள் வரை இருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லப் படையினர் தடை விதித்துள்ளனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: