Monday, 28 April 2008

பிரபாகரனைப் படுகொலை செய்ய இந்தியா சதிவலை!

பிரபாகரனைப் படுகொலை செய்ய இந்தியா சதிவலை விரிக்கிறது!
துணைபோகும் தமிழக தரகுக் கும்பல் தமிழனைக் காப்பதாய் நடிக்கிறது!!
இந்தியச் சதியை முறியடிக்க, தமிழக மக்களே விழிப்படைவீர்!
ஈழத்தமிழர்களே கொதித்தெழுவீர்!!
_________________________________
1)
1987 இந்திய ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரனைப் படுகொலை செய்ய இந்திய விஸ்தரிப்புவாத அரசு எல்லாவகையிலும் முயன்றது.மேலும்
சதித்தனமாக இந்திய இராணுவ அதிகாரியுடன் ஆயுத ஒப்படைப்பு சம்பந்தமாக பேச்சு நடத்திக் கொண்டிருந்த வேளையில் பிரபாகரனைப் படுகொலை செய்யுமாறு டிக்சிற் உத்தரவிட்டார். அவ் உத்தரவை அந்த இராணுவ அதிகாரி நிறைவேற்ற மறுத்ததால் பிரபாகரன் உயிர்தப்பினார்.
[What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?
Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.-General Harkirat Singh]
2)
தமிழ்நாடு சட்ட சபை தீர்மானம்
(BBCதமிழ்- http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_newsbulletin.shtml#top மேலே காணும் இணைய தள இணைப்பு BBC தமிழோசையின் 23-04-2008 இல் பிரசுர நேரம் 16.42 இற்கு ஆரம்பித்த வானொலி ஒலிபரப்பாகும்.)
அதில் தமிழ்நாடு சட்ட சபையில் இலங்கையில் சமாதானம் ஏற்பட இலங்கை அரசு தலையிட வேண்டும் எனக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
குறித்து BBC அறிவிப்பாளர் மணிவண்ணன் புது டெல்கி பாதுகாப்பு ஆய்வாளர் K.சுப்பிரமணியத்தைப் பேட்டி கண்டார். அப் பேட்டியில் அவர் தெரிவித்த
அடிப்படையான கருத்துக்கள் வருமாறு:
1) இலங்கைப் பிரச்சனையில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து மத்திய சர்க்கார் இதர உலக நாடுகளுடனும், இலங்கையுடனும் பேசி வருகின்றது.எனவே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
2)ஆனால் தமிழ் மாநில சட்டசபைத் தீர்மானம் கோருகிறவாறு நேரடியான மத்தியஸ்த்துவத்தில் பெரும் சங்கடம் உள்ளது.
3)இந்த புலிகள் இயக்கம் பிரபாகரன் தலைமையில் உள்ளது.இவர் ரஜீவ் காந்தி கொலையின் முதலாவது குற்றவாளி.அவர் உள்ளவரையில்
அவ்வமைப்புடன் பேசுவது மத்திய சர்க்காருக்கு சாத்தியமில்லை.
அதேவேளை அவருக்கு கீழேயும் யாரும் இல்லை. அவர் தனது போட்டியாளர்களை கொன்றொழித்துவிட்டார்.பிரபாகரனைத்தவிர வேறு யாரேனும் அவ்வியக்கத்தில் இருந்து முன்வந்தால் அவர்களுடன் பேச முடியும்.
4) அதற்கான சாத்தியப்பாடு இல்லையெனக் கூறமுடியாது.கருணா என்கிறவரு உடைச்சிட்டு வந்தார்.அது போல எண்ணங்கள் மேலும் சிலருக்கு தோணலாம், மேலும் பலர் உடையலாம்.
5) இலங்கையில் போர் வலுவடைந்து வருவது, அகதிகள் தமிழ் நாட்டுக்கு வருவது தமிழ் மாநில அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும் சிக்கல்களில் இருந்து
அவாகள் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம்.
6) அத்தீர்மானத்தில் கூட கருணாநிதி புலிகளின் சகோதரப் படுகொலைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.எனவே பிரபாகரன் உள்ளவரையில் அந்த
அமைப்புடன் நேரடியாக பேசுவது என்பது சாத்தியமில்லை என்றார் கே.சுப்பிரமணியம்.
3)
இந்திய அரசின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளரான- B.ராமன், முகமாலைத் தாக்குதல் குறித்த தனது ஆய்வுக் குறிப்புகளின் முடிவுரையாக, ''இலங்கையின் யுத்த சூழ்நிலையில் ஒரு திருப்பு முனை பிரபாகரனைப் படுகொலை செய்வதன் மூலமே ஏற்படும்'' என பச்சையாகவே கூறியுள்ளார்.இவர்தான் ஈழத்தில் 'அரபாத் இல்லாத பாலஸ்தீனம்' காண வழிகாட்டுபவர். இவர் உண்மையில் Raman இல்லை RA-W- man!
4)
தமிழ்நாடு சட்ட சபையில் இலங்கையில் சமாதானம் ஏற்பட இலங்கை அரசு தலையிட வேண்டும் எனக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்
கருணாநிதியின் பின்வரும் குறிப்புக்கள் முக்கியமானவை.
அ) சகோதரப் படுகொலைகளால் தான் ஈழத்தமிழர்கள் இன்னும் விடுதலை அடையவில்லை;
ஆ) விருந்துக்கு வந்த அமிர்தலிங்கத்தை பிணமாக சாய்த்தார்கள்,
இ) அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும்.
ஈ) இந்திய அரசை குறை கூறி பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
உ) இந்தியப் பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து, நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்து விடக்கூடாது அது தான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும். இதன் மூலம் கருணாநிதி சொல்ல வருவது என்ன?
1) இலங்கையில் சமாதானத்துக்குத் தடை பிரபாகரன்.
2) ''இந்தியப் பேரரசுடன்''- இந்திய விஸ்தரிப்பு வாதத்துடன்- தனக்குள்ள தொப்புள் கொடி உறவு.இந்திய இலங்கை ஒப்பந்தம் உறுதி செய்து
கொண்டுவிட்ட இந்திய மேலாதிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக
இருக்கும் விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்ட இந்தியத் தலையீடு
மீண்டும் வேண்டும்.
5)
''இந்தியப் பேரரசின் ஆணிவேரான இறையாண்மையை, ஒருமைப்பாட்டை எவரும் அசைத்து விடக்கூடாது'', என்கிறார் கருணாநிதி. இதுவே தான்
வை.கோ,நெடுமாறன், வீரமணி,ராமதாஸ், திருமாவளவன் கும்பலின் அரசியல் நிலைப்பாடுமாகும்.இதனால்தான் அவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்ப்பதில்லை, சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதில்லை.ஆதாம் செய்த பாவத்தைப்போல, இந்திய விஸ்தரிப்பு வாத 'அப்பிள்' பழத்தைப் புசித்துத்தான் இந்தக் கழகக் கண்மணிகள் கருத்தரித்தார்கள். இவர்களுக்கும் ஈழதேசத்துக்கும் எந்த தொப்புள் கொடி உறவும் கிடையாது.
6)
இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு சேவகம் செய்ய, மைய தரகுப் பெரு முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் உலகமயமாக்கல் கொள்கைகளை
மாநிலத்தில் அமூலாக்கி, தொழிலாள விவசாய உழைக்கும் மக்களின் இரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிக் கும்பல், இப்போது தனது இரத்தப் பசிக்கு இலங்கையில் இரை தேடுகிறது. சேதுசமுத்திரத் திட்டத்தாலும், மன்னார் எண்ணெய் வயல்களாலும் தனக்கும் ஆதாயம் கிட்டும் எனக் கணக்கிடுகிறது. இதற்குத் தடையாக இருக்கும் ஈழ விடுதலைப் புரட்சியை, விடுதலைப்புலிகள் இயக்கத்தை, குறிப்பாக பிரபாகரனை ஒழித்துக்கட்டி தனது நலன்களை
அடைய கங்கணம் கட்டியுள்ளது.

7)
கழகக் கண்மணிகளின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்துக்கு சில எடுத்துக்காட்டுகள்:
அ) ஈழ விடுதலைப் போராட்டத்தில் உள் இயக்க மோதல்கள் ஒரு போக்காக தீவிரம் அடைந்தது 1985 இற்குப் பின்னால் தான்.இதன் சூத்திரதாரி
பிரபாகரன் அல்ல இந்திய அரசே! சகோதரப் படுகொலை பற்றிப் பேசும் சண்டாளன் கருணாநிதிக்கு, அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைத்து தமிழ்
அமைப்புக்களும் ஒன்று பட்டு திம்புக் கோரிக்கைகளை முன் வைத்தது ஏன் தெரியவில்லை? அதை இந்தியப் பேரரசு ஏற்க மறுத்தது ஏன் தெரியவில்லை? இந்திய இலங்கை ஒப்பந்தம், திம்புக் கோரிக்கைகளுக்கு நேர் முரணான தீர்வை ஆயுத முனையில் எம் மீது திணித்தது ஏன் தெரியவில்லை?
தமிழர்களின் ஒன்றுபட்ட பலத்தை சிதைப்பதற்காக, உள் இயக்க மோதல்களை சகோதரப் படுகொலைகளை தூண்டி விட்டது இந்திய அரசு.இதனால்தான்
1985 இற்குப் பின்னால்- திம்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னால்- இவை ஒரு போக்காக வளர்ந்தன.கருணாநிதி போன்ற ஒரு பழுத்த அரசியல் வாதிக்கு,
தமது திராவிட இயக்கத்தையே காங்கிரஸ்காரர்கள் எவ்வாறு பிளவுபடுத்தினார்கள்- வை.கோ.எத்தனை பெட்டிகள் கை மாற்றினார்கள்- என்பது நன்கு தெரியும்.அதை எவ்வாறு ஈழத்தில் செய்தார்கள் என்பதும் நன்கு தெரியும். ஆனால் இந்திய விஸ்தரிப்புவாதத்துடன் உள்ள தனது தொப்புள் கொடி உறவு காரணமாக அவர் அதை மூடி மறைக்கிறார்.
பழியை பிரபாகரன் மேல் போடுகிறார்.பிரபாகரனை ஒழித்துக்கட்டும் சதியில் திரைமறைவில் பங்கேற்கிறார்.
ஆ) இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் நலனைக் காப்பதாகவும் ''சிங்கள அரசுதான்'' அதைத் தடுப்பதாகவும் இவர்கள் ஒரு மோசடிப் பிரச்சாரத்தில் இறங்கி தமிழக மக்களை ஏய்த்துப் பிழைக்கிறார்கள்.இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நலன்களுக்கும் எதிரான இந்திய மேலாதிக்க ஒப்பந்தம் ஆகும்.ஈழதேசத்தின் ஜனநாயக உரிமையை மதித்து நடக்கத்தவறிய ஜே.ஆர்.இன் போக்கைப் பயன்படுத்தி அவரை அடிபணியவைத்த ஒப்பந்தமாகும்.கேவலம் தமிழர்களை ஒரு தேசிய இனம் என்றோ, வடக்கு கிழக்கு நிலப்பரப்புக்கள் அவர்களது தாயகம் என்றோ ஏற்றுக்கொள்ளாத மேலாதிக்க ஒப்பந்தம் ஆகும்.
இ) இவர்கள் ஈழத்தமிழர்களின் அடி ஆதாரமான (- ஆணிவேரான- நம்முடைய சிற்றரசுக்கும் ஆணிவேர் உண்டு கருணாநிதி!) சுயநிர்ணய உரிமையைப்
பின்தள்ளி வெறும் இனவெறிக் கூச்சல் இடுகிறார்கள்.
ஈ) தான் தோன்றித்தனமாக நமக்கு தீர்வுகள் சொல்லுகிறார்கள்.ஒரு வாரத்துக்கு முன்னால் கருணாநிதி சொல்கிறார் ''தமிழை ஆட்சி மொழியாக மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்'' - (கருணாநிதி நம்பிக்கை வீரகேசரி இணையம் 4/21/2008 5:08:59 PM ).நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்
இருந்து தமிழை விற்றுப் பிழைத்த தப்புலிக் கும்பல் இன்னும் அந்த மொழிக்கே அரசியல் அந்தஸ்து பெற்றுக் கொடுக்கவில்லை.முற்றாக
நடைமுறையில் இல்லையெனினும் இது சட்ட அந்தஸ்த்து பெற்றிருக்கிறது ''சிங்கள'' அரசுமுறையின் கீழ்!.
ஒரு நாள் சொல்கிறார் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு மாநில அரசு தீர்வுகாண முடியாது. மத்திய அரசுதான் தீர்வுகாண வேண்டும் என்று; மறு நாள்
சொல்கிறார் நேபாளம் போல - ஆயுதங்களை அறைக்குள் பூட்டி, கதவுச் சாவியைக் காட்டரிடம் கொடுத்ததில் கருணாநிதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி!!- நாம் வெற்றியடைந்திருக்கலாம் என்று. ''இந்தியப் பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நடத்தும்''- அவருடைய வார்த்தைகள்! என்னே ஒப்புதல் வாக்குமூலம்!!- அதிகாரிக்கு தேசிய இனப்பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் தகுதி இருக்க முடியாது.அவர்கள் நமக்கு தீர்வு சொல்ல முற்படக்கூடாது.
8)
இந்தியப் பேரரசின் அனைத்து முண்டுகொடுப்புக்களையும் மீறி பக்சபாசிஸ்டுக்களின் ஈழத்தமிழர்களுக்கெதிரான இன ஒடுக்குமுறை யுத்தம் வடபோர்முனையில் மரண அடிகளைச் சந்திக்கின்றது.இத்தகைய ஒரு அனர்த்தத்தை பக்ச பாசிஸ்டுக்கள் வடபோர்முனையில் சந்திக்கப் போகிறார்கள் என்பதை முன்னறிந்துதான், பொறிந்து விழும் அரசைப் பாதுகாக்க மீண்டும் 'மத்தியஸ்த்துவம்' என்ற போர்வையில் தலையீட்டுக்கு தயாராகிவிட்டது இந்திய விஸ்தரிப்புவாத அரசு.அதனது தமிழகத் தரகர்கள் சட்டமன்ற அங்கீகாரம் வழங்கிவிட்டார்கள்!!
மேற்கண்ட தகவல்களும், கருத்துக்களும் உணர்த்துவது என்னவெனில்,
அ) இந்திய விஸ்தரிப்புவாத அரசு மீண்டும் 'மத்தியஸ்த்துவம்' என்ற போர்வையில் தலையீட்டுக்கு தயாராகிவிட்டது
ஆ) அரசியல் வழியில் தீர்வுகாண்பதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் இது யுத்தத்துக்கே இட்டுச்செல்லும்.
இ) சமாதானத்தின் எதிரியான பிரபாகரனைப் படுகொலை செய்து ஒரு 'திருப்புமுனையை' ஏற்படுத்துவது.
ஈ) போராட்டசக்திகளை ஒழித்துக்கட்டுவது,ஓடுகாலிகள் கைக்கூலிகளைக் கொண்டு தமிழர்கள் மீது ஒரு அடிமைத் தீர்வைத்திணிப்பது.(இதைத் தான் கொசொவோவில் செய்தார்கள்.........ஈழத்தில் இருக்கவே இருக்கிறார் ''எப்போதும் சமாதானத்தையே விரும்பும்'' சுரேஸ் பிரேமச்சந்திரன்.)
உ) இனிமேல் 'அமைதியாக, சமாதானமாக' சேது சமுத்திரத்திட்டத்தாலும், மன்னார் எண்ணெய் அகழ்வாராய்ச்சியாலும் ஈழ தேசத்தை சூறையாடலாம்,
திருகோணமலையில் இராணுவத்தளம் நிறுவி அமெரிக்காவுக்குத் தாரை வார்த்து, தென்னாசியாவில் அமெரிக்காவின் அடிமைப் பேரரசாக இந்தியா
வாகைசூடலாம்!
9)
இத்தகைய ஒரு அரசியல் திருப்பத்தை எவ்வாறு எதிர் கொள்வது?ஆனையிறவின் வெற்றிகளை ஒஸ்லோவில் காவு கொடுத்த 'வரலாற்றுத் தவறை', _ வடபோர்முனை வெற்றிகளை இந்திய மத்தியஸ்த்துவத்துக்கு காவு கொடுத்து _ விடுதலைப் புலிகளின் தலைமை மீண்டும் இழைக்கக் கூடாது.
தமிழ் மக்களுக்கு தமது தலை விதியை தாமே தீர்மானிக்கும் உரிமையுண்டு. கருணாநிதி சொல்வது போல அது இந்திய மத்திய அரசிடம் இல்லை.
கருணாநிதியின் நிர்வாகத்துக்கு வேண்டுமானால் அது பொருந்தலாம்.தமிழீழத் தாயகத்துக்கு அது பொருந்தாது. நாம் நிர்வாகம் நடத்தப் போராடவில்லை,
தேசிய சுதந்திரத்துக்காகப் போராடுகின்றோம். நமக்கு வெட்கம் உண்டு, மானம் உண்டு, சூடு உண்டு, சுரணை உண்டு, அதனால் சுதந்திர தீரம் உண்டு,
அதை அடைவதற்கான வீரம் உண்டு!
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்னவென்பது, தமிழ் மக்களுடைய தீர்ப்பு.1977 இல் அவர்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தமிழீழ
விடுதலைப் புரட்சிகர யுத்தம் தொடர்கிறது. இது நீதியான, முற்றிலும் ஜனநாயக ரீதியான தேச பக்த யுத்தமாகும். சிங்களத் தரகுமுதலாளிய, சிங்களப் பேரினவாத, பெளத்த மதவாத, பாசிஸ அரைக்காலனிய இலங்கை அரசே ஜனநாயக விரோதமானதாகும். எனவே ஜனநாயக வழிக்குத்
திரும்பவேண்டியவர்கள் நாங்கள் அல்ல அவர்களே!
இதுவல்லாத வேறு எந்தத் தீர்வை சிபார்சு செய்கிறவர்களும் - ISGA உட்பட, மக்கள் தீர்ப்பைப் பெற்றாக வேண்டும். இதற்காக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையே சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும்.1977 மக்கள் தீர்ப்பை திருத்தி எழுத யாருக்கும் உரிமையில்லை. இனிவரும் எந்தப்
பேச்சுவார்த்தைகளுக்கும் இதுவே அடிப்படையாக இருக்கவேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் விடுதலை யுத்தமே பதிலாக இருக்க
வேண்டும்.
10)
* மீண்டும் ஒரு இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்தை தோற்கடிப்போம்!
* பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!
* அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு வடக்குக் கிழக்கு மக்களிடையேயான, சர்வஜன வாக்கெடுப்பை நிபந்தனையாக்குவோம்!
* தமிழக திராவிட அமைப்புக்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்த்த, இன மொழிப் பித்தலாட்டங்களை அம்பலமாக்குவோம்!
* ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவள, பிரதேச கைப்பற்றுதலுக்கான ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்ப்போம்! இதை எதிர்த்த நீதியான தேசபக்த விடுதலை யுத்தங்களை ஆதரிப்போம்!
* மூன்றாம் உலகப்போரை தடுத்து நிறுத்துவோம், மூளும் பட்சத்தில் உள்நாட்டுப் போராய் மாற்றி, தீவிரப்படுத்துவோம்!
* விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்போம், புரட்சிகர ஈழ விடுதலைப் போரை இறுதி வரை தொடர்வோம்!
* விடுதலைப் போரின் தலைமையைப் பாதுகாப்போம்!
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.
28-04-2008_____>சுபா_____>ENB________>*
**********
செய்திகள்
தினக்குரல் 24-04-08
இலங்கை மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம்
* கருணாநிதி முன்மொழிந்தார்; காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க.வரவேற்பு இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து முறையான அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய
அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமெனக்கோரும் தீர்மானமொன்றை தமிழக சட்டசபை நேற்று புதன் கிழமை நிறைவேற்றியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முன்மொழிந்த தீர்மானத்தை காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை வரவேற்றுள்ளன.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்கிரஸ்) ஜி.கே.மணி (பா.ம.க) கண்ணப்பன் (ம.தி.மு.க) ஆகியோர் உரையாற்றினர்.
இந்த விவாதத்தில் முதலமைச்சர் கருணாநிதியும் பங்கேற்று தமது கருத்துகளைத் தெரிவித்தார். அரசின் சார்பாக தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் கூறியதாவது;

இந்த அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் பரிவு உணர்வோடும் இரக்க சிந்தனையோடும் தமிழர்களுக்கு உதவிடும் பாசமனப்பான்மையோடும்
கொண்டு வர வேண்டும். அதே அடிப்படையில் இதன் மீது விவாதம் நடைபெற்று இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால், ஜி.கே.மணி என்ன நோக்கத்தில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர நினைத்தாரோ அந்த நோக்கம் சிதையும் வகையில் சில வார்த்தைப்
பிரயோகம் அமைந்துவிட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
இந்தியப் பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து நிறைவேற்றப்படும்
தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்துவிடக்கூடாது. அது தான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும்.
இங்கே பேசிய ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் , சுதர்சனத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட கருத்தைச் சொல்ல வந்தபோது
உணர்ச்சி வேகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்து விட்டார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.
இலங்கைப் பிரச்சினை தொடங்கிய காலம் முதல் செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பல்வேறு அறவழிப் போராட்டங்கள் , கிளர்ச்சிகள்
நடத்தினார்கள். அது பயனளிக்காத நிலையில் இலங்கை ஆதிக்கத்தின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று சிலர்
போராளிகளாக மாறினார்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு
வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும். ஆனால், அங்குள்ள போராளி குழுக்களுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்று இந்த அவையிலே
அவர்களுக்காக பரிந்துரை செய்து பேசும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னரும் நான் சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று
சொல்லியிருக்கிறேன்.
ஒரே குழுவாக இருந்து தமிழர்களுக்குரிய உரிமைகளைப் பெறும் எண்ணம் அவர்களிடம் இல்லாமல் ஒரு குழு மற்றக் குழுவினரை மாய்க்க வேண்டும்
என்று வெட்டிக் கொண்டும் சுடப்பட்டும் மாய்ந்தார்கள். அமிர்தலிங்கம் போன்ற தலைவர் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு என்று வந்து
அவரையும் அவரது தோழர்களையும் பிணமாகச் சாய்த்தார்கள்.
அதனால் தான் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றும் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. நமக்குள்ளே
ஒற்றுமையின்றி பகைவருக்கு இடம் கொடுத்துவிட்டதால் தான் சிங்கள இராணுவம் நம்மீது ஏறி மிதிக்கிறது. ஆனாலும் கூட நம் குழந்தை தவறி
விழும்போது தாங்கிப் பிடிக்கும் தாய் உள்ளத்துடன் நாம் செயற்படுகிறோம்.
தொப்புள்கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக இங்கே ஒரு தீர்மானம் வருவதை
நானும் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் இந்திய அரசை குறை கூறிப் பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே,
அவர்களைப் பழிசொல்லியும் குறைகூறியும் பயன் இல்லை.
அந்தக் குடும்பம் இன்னும் மனித நேயத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு வேலூர் சிறைச்சாலைச் சம்பவமும் சோனியா மன்னிப்பு அளித்ததும்
உதாரணங்களாகும். அதன் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். நீங்கள் இதை ஆதரித்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறிய முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை வாசித்தார். அந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு;
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு
ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி , கண்ணப்பன் ஆகியோர் இத்தீர்மானத்தை தங்கள்
கட்சி வரவேற்பதாகத் தெரிவித்தனர்.

உதயன்Posted on : Thu Apr 24 9:35:00 2008

இலங்கையில் உடனடியாக அமைதிப் பேச்சு நடைபெறுவதற்கும் தீர்வை உருவாக்கவும் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்

தமிழக சட்டசபையில் தீர்மானம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்து வதற்காக, மோதலில் ஈடுபட்டு வரும் இரு தரப்புகளுக்குமிடையில் உடனடி அமைதிப் பேச்சுக்களை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், முறையான அரசியல் தீர்வு எட்டப்பட இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.தமிழகச் சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைப் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்புப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண் ணப்பன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, தீர்மானத்தின் மீதான விவாதம் நடை பெற்றபோது பாட்டாளி மக்கள் கட்சி உறுப் பினர்களுக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பி னர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றன. அதனால் சபை யில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட் டன. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன் றத் தலைவர் ஜி.கே.மணி மத்திய அரசைக் கண்டித்துப் பேசிய சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து
நீக்கப்பட்ன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறி இலங்கையின் வடக்குகிழக்கைப் பிரித்து அங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த தேர்தலை நடத்தக்கூடாது என்று இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் வலியு றுத்தவேண்டும் என்று ஜி.கே.மணி தமது பேச்சில் தெரிவித்தார்.

(குறிப்பு: கருணாநிதி இந்தியப் பேரரசின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு குரல் எழுப்பிய பகுதியை உதயன் பத்திரிகை விசமத்தனமாக இச்செய்திக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டது. பாரத மாதா மேல் உள்ள பாசத்தாற்போலும்!)

புதினம்

விடுதலைப் புலிகள்- சிறிலங்கா அரசு இடையேயான பேச்சுக்களுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் [புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008, 04:53 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்படும் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்கிரஸ்), கோ.க.மணி (பா.ம.க), கண்ணப்பன் (மதிமுக) ஆகியோர் பேசினார்கள்.
இந்த விவாதத்தில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்று தமது கருத்துக்களை தெரிவித்தார்.

அரசின் சார்பாக தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தார்.
அப்போது முதல்வர் கூறியதாவது:
இந்த அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிடும் பாச மனப்பான்மையோடும்
கொண்டு வரவேண்டும்.
அதே அடிப்படையில் இதன் மீது விவாதம் நடைபெற்று இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால் என்ன நோக்கத்தில் கோ.க.மணி, இந்த தீர்மானத்தை கொண்டு வர நினைத்தாரோ அந்த நோக்கம் சிதையும் வகையில் சில வார்த்தைப்
பிரயோகம் அமைந்து விட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
இந்தியப் பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம்.
இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து, நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்து விடக்கூடாது அது தான் இறையாண்மை,
ஒருமைப்பாடு ஆகும்.

இங்கே பேசிய மதிமுக உறுப்பினர் கண்ணப்பன், சுதர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட கருத்தை சொல்ல வந்த போது உணர்ச்சி வேகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்து விட்டார். அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.
இலங்கைப் பிரச்சினை தொடங்கிய காலம் முதல் செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பல்வேறு அறவழிப் போராட்டங்கள், கிளர்ச்சிகள்
நடத்தினார்கள். அது பயனளிக்காத நிலையில் இலங்கை ஆதிக்கத்தின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று சிலர்
போராளிகளாக மாறினார்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு
வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும். ஆனால் அங்குள்ள போராளி குழுக்களுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்று இந்த அவையிலே
அவர்களுக்காக பரிந்துரை செய்து பேசும் நிலைமை உருவாகி உள்ளது. அப்போதே கூட நான் சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று
சொல்லியிருக்கிறேன்.
ஒரே குழுவாக இருந்து தமிழர்களுக்குரிய உரிமைகளை பெறும் எண்ணம் அவர்களிடம் இல்லாமல் ஒரு குழு மற்ற குழுவினரை மாய்க்க வேண்டும்
என்று வெட்டிக் கொண்டும், சுடப்பட்டும் மாய்ந்தார்கள்.
அமிர்தலிங்கம் போன்ற தலைவர் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு என்று வந்து அவரையும், அவரது தோழர்களையும் பிணமாக சாய்த்தார்கள்.
அதனால் தான் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றும் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
நமக்குள்ளே ஒற்றுமையின்றி பகைவருக்கு இடம் கொடுத்து விட்டதால் தான் சிங்கள இராணுவம் நம்மீது ஏறி மிதிக்கிறது. ஆனாலும் கூட நம்
குழந்தை தவறி விழும் போது தாங்கி பிடிக்கும் தாய் உள்ளத்துடன் நாம் செயற்படுகிறோம்.
தொப்புள்க்கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதாது.
அந்த உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக இங்கே ஒரு தீர்மானம் வருவதை நானும் ஆதரிக்கிறேன்.
அதே நேரத்தில் இந்திய அரசை குறை கூறி பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே அவர்களை பழி சொல்லியும்,
குறை கூறியும் பயன் இல்லை.
அந்த குடும்பம் இன்னும் மனித நேயத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு வேலூர் சிறைச்சாலை சம்பவமும், சோனியா மன்னிப்பு அளித்ததும்
உதாரணங்களாகும். அதன் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தீர்மானத்தை நான்
முன்மொழிகிறேன்.
நீங்கள் இதனை ஆதரித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வ்வாறு கூறிய முதல்வர் கருணாநிதி தீர்மானத்தை வாசித்தார்.
தீர்மான விபரம்:
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்படும் செய்ய வேண்டும்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து சுதர்சனம், கோ.க.மணி, கண்ணப்பன் ஆகியோர் இத்தீர்மானத்தை தஙகள்
கட்சி வரவேற்பதாக தெரிவித்தனர்.

கிழக்கு தேர்தலைத் தடுக்க இந்தியத் தலையீடு அவசியம்: தமிழக முதல்வருக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள் [வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008, 10:02 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழ தேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதனை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம்
என்பதனை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.
திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இன்று வியாழக்கிழமை தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமைதிப்
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உரிய முய்ற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத்தில் அரசியல் நெருக்கடிகள் நிறைந்த இந்தச் சூழலில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல்
அளித்துள்ளது.இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த ராஜீவ் முயற்சியில் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி ஈழ தேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் பிரிக்கக்கூடாது என
உறுதி செய்யப்பட்டது
.ஆனால் தற்போது சிங்கள இனவெறி அரசு இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான வகையில் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரித்து தனித்தனியே சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 ஆம் நாள் முதல் தபால் வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.
இவ்வாறான சூழலில்தான் இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக- ராஜீவுக்கு எதிராக-இந்திய அரசுக்கு எதிராக- வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கும்

சிங்கள இனவெறிக் கும்பலின் சதியை முறியடித்திட இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் அங்கே நடைபெற உள்ள தேர்தலை தடுப்பதற்கோ அல்லது தள்ளி வைப்பதற்கோ ஏற்ற வகையில் இந்திய அரசின் தலையீடு தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு
முன்னதாகவே இருந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
என்று விடுதலைச் சிறுத்தைகள்-பாமக- மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது.
ஆனால் அதனை சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானமாக அனுமதிக்கவில்லை என்றாலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்ததோடு இந்திய அரசின் தலையீட்டை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மனமார்ந்த நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான சிங்கள அரசின் சதி முயற்சி தொடர்பாகவும் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக பிரிப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானத்தில் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. (எப்படி ஏமாற்றுகிறார் என்றுபாருங்கள்,அப்படி ஒரு தீர்மானம் போட முடியாது, ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதல்ல; அதனால் அது இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும்!)
எனவே முதல்வர் கலைஞர், ஈழ தேசத்தை கூறுபோடும் சிங்கள இனவெறிக் கும்பலின் அரசியல் சதியை முறியடித்திட இந்திய அரசின் தலையீடு
தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது என்பதை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்
கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உதயன் Posted on : Tue Apr 22 10:00:00 2008

ஐ.நா. செயலருடன் வைகோ விரைவில் முக்கிய சந்திப்பு! ஈழத்தமிழர் அவலநிலை விளக்கப்படும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் ஈழத்தமிழர் ஆதரவாள ருமான மறுமலர்ச்சித் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி
விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவிருக் கின்றார்.ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரச ஒடுக்கு முறைகளால் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்கள் குறித்தும் உண்மை நிலையை
இந்தச் சந்திப்பின் போது, வைகோ ஐ.நா.செயலர் பான் கீ மூனுக்கு விலாவாரியாக எடுத்துவிளக்குவார் என்று விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது.ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்திப்ப தற்கு வைகோவிற்கு ஐ.நா.சபை நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது என்றும் இன் னும் சில தினங்களில் இந்தச் சந்திப்பு இடம் பெறவிருப்பதாகவும் இராஜதந்திர வட்டா ரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன.முன்னதாக கடந்த வாரம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட வைகோ ஈழத்தமிழர் பிரச்சினை குறித்தும் அங்கு
விவாதித் திருந்தார். இதனையடுத்து நாடு திரும்பிய கையோடு அவர் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர்
பிரணாப் முகர்ஜி ஆகி யோரை தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ஈழத்தமிழர் பிரச்சினை தீர இந்தியாவின் உடனடித் தலையீடு அவசியமென்றும் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதை புதுடில்லி நிறுத்த வேண்டுமெனவும் இந்த சந்திப்பின்போது வைகோ வலியுறுத்திக் கேட்டிருந்தார்.இந்தத் திடீர் சந்திப்புகளையடுத்தே ஐ.நா.செயலரைச் சந்திக்க வைகோ முடிவு செய்தார் என்று அறியப்படுகிறது. சில தினங்களில் நியூயோர்க்கிற்கு
புறப்படவுள்ளார். அங்கு ஐ.நா.செயலரைச் சந்தித்து ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தவுள்ள வைகோ, மனித உரிமை பாதுகாப்பு சங்கங்களின்
உயர்மட்டப் பிரநிதிகள் குழுவினரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.அதேசமயம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்தமை தவறென்று கூறி வாதாடும் அமெரிக்க சட்டத்தரணிகள் பலருடனும் வைகோ
பேச்சுகளை நடத்தவுள்ளார் என்றும் அறியவருகிறது.வைகோவின் இந்த முக்கிய சந்திப்புகள் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இலங்கை அரசின் உயர் மட்டத்தினரிடம் எரிச்சலையும் ஆத்திரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

தமிழை ஆட்சி மொழியாக மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் - கருணாநிதி நம்பிக்கை வீரகேசரி இணையம் 4/21/2008 5:08:59 PM - சென்னை உயர் நீதி மன்றில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டுவரும் நல்ல அறிவிப்பை இந்திய
மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தான் நம்புவதாக முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்
கருணாநிதியின் கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது என்றும், மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ஆதரவாகவே
அணுகும் என்றும் மத்திய சட்ட மந்திரி எச்.ஆர்.பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

உதயன்Posted on : Tue Apr 22 9:30:00 2008

புலிகளையும் இந்தியாவையும் பீடித்திருந்த தோஷம் பிரியங்கா நளினி சந்திப்பால் அகலக் கூடுமோ?

இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சந்திப்பு ஈழப்போராட்டத்திற்கும் இந்தியாவுக் கும் மிக நெருங்கிய நீண்ட வரலாறு உண்டு. இக்காலச் சக்கரத்தில் இந்திரா குடும்பத் தின் பங்களிப்பும் அளப் பரியது. தமிழ் நாட் டின் முன்னாள் முதல மைச்சர் நடிகர் மறைந்த மக்கள் திலகம் டாக் டர் எம்.ஜீ. ஆருக்கும் இந்திராகாந்தி குடும்பத்துக்கும் அக்கால கட்டத்தில் இருந்த வலுவான அரசியல் பிணைப்பு ஈழப்போராட்டத்தின் வளர்ச்சியை வேகப் படுத்தி இருந்தது என குறிப்பிட்டால் மிகையாகாது. அப்போது ஈழப் போராளிகள் தங்களுக் குள் முரண்பட்டுக் கொண்டதன் பின்னணி யில் விடுதலைப் புலிகளின் கை ஈழத்தில் ஓங்கிய போது 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் வரலாற்றுபதிவானது. இவ் ஒப்பந்தம் புலிகளையும் இந்தியாவையும் நேர் எதிரே பகைத்துக் கொள்ள வைத்தது. இதை தொடர்ந்து இந்தியா ஈழத்தமிழர்கள் மீதான தனது அக்கறையை குறைத்துக் கொள்ள நேர்ந்தது. பின்னர் 1991 மே 21 இல் இடம்பெற்ற இந்திய பிரதமர் ராஜீவ் படுகொலை ஈழத்தமிழர்களை இந்தியா காறி உமிழ்கின்ற அளவுக்கு நிலைமையை சிக்கலுக்குள்ளாக்கியது.( உதயன் உணர்ச்சிவசப்பட்டு தனது அடிமைத்தனமான இந்திய விசுவாசத்தைக் கக்கி விட்டது!) விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பு உணர்வும் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்திரா குடும்பத்தின் எதிர்ப்பையும் புலிகள் சம்பாதித்துக் கொண்ட நிலையில் விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டனர்.

இதேவேளை ராஜீவ் கொலை குற்ற வாளிகளாகத் தீர்ப்பிடப்பட்ட சிவராசன் தனு,சுபா, ஹரிபாபு, முருகன், நளினி ஆகியோரில் நளினி, முருகன் தவிர்ந்த
ஏனையோர் இப்போது உயிருடன் இல்லை. நளினி மற்றும் முருகனுடன் ராஜீவ் படு கொலை விவகாரம் மூச்சை இழந்து விடும் என எதிர்பார்க்கும்
நிலையில் அண்மையில் இடம்பெற்ற நளினி பிரியங்கா சந்திப்பு இந்திய அரசியலில் மற்றொருதிருப்பத்தைத் தரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.ராஜீவ் படுகொலைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடப்பட்டு தூக்குத் தண்டனை விதிக் கப்பட்ட நளினிக்கு ஆயுள் தண்டனை வழங்கும்படி அவரது குடும்பப் பின்ன ணியை ஆதாரம் காட்டி நீதிமன்றுக்கு ஆவன செய்தார் ராஜீவ் பாரியார் சோனியா.17 வருடங்களாகச் சிறையில் புலம்பிக் கொண்டிருக்கும் நளினியை, படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மார்ச் 19ஆம் திகதி வேலூர் மத்திய சிறையில் சந்தித்துள்ளார்.இதற்கான முன் ஆயத்தங்களை இந்திய மத்திய உளவுப் பிரிவு மேற்கொண்டி ருந்த நிலையில் இச்சந்திப்புக் குறித்து இந்தியப் பத்திரிகைகள் கடந்த வாரங்களில் விலாவாரியாக எழுதித் தள்ளியிருந்தன. இச்சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித் திருக்கும் நளினி, பிரியங்கா தனக்கருகில் இருந்து அன்புடன் பேசியது சற்று ஆறு தல் தருவதாகக் கூறி இருந்தாலும் இதில் பல விடயங்கள் தொக்கி நிற்பதை துப்ப றியக் கூடியதாக உள்ளது.நளினி பிரியங்கா சந்திப்பில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கும் இந்திய மத்திய உளவுப் பிரிவு 17 வருடங்களாக சிறைக்குள் புலம்பிக்
கொண்டிருக்கும் நளினி யிடமிருந்து
விடுதலைப் புலிகள் தொடர் பான மேலதிக தகவல்களைப் பெற்று கொள் வதற்கான தந்திர நகர்வாக இச்
சந்திப்பைக் கையாண்டிருப்பதாக நோக்குவதோடு மறுபக்கத்தில் ஈழத்தமிழர்களின் கூக்குரல் கள் இந்தியாவின் காதுகளை அடைப்ப தாலும் இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் இந்திரா குடும்பத்தினர் மத்தி யில் வேதனையை உண்டுபண்ணு வதாக வும் அவதானிக்க முடிகிறது.இதேவேளை மேற்குலக அகலக்கண் இலங்கைமீது விரிந்திருப்பதால் இதுவரை இலங்கை விவகாரத்தில் மெத்தனப் போக் கைக் கடைப்பிடித்து வரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் எதிர்காலத்தில் மாற்றங் கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கலாம்.தமிழ் நாட்டில் இடம்பெறுகின்ற ஈழத் தமிழர் ஆதரவுக் கோசங்கள் இந்திய மத் திய அரசை ஈழத்தமிழர் விவகாரத்தில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது
எனவும் பார்க்கலாம். அத்தோடு நளினி பிரியங்கா சந்திப்பின்போது இருவரும் ஒரு பாத் திரத் தில் தண்ணீர் அருந்தியமை நளினியை ராஜீவ் குடும்பம்
மன்னித்து விட்டதென்ப தையும் உலகுக்குப் பறைசாற்றி நிற்கிறது. இதிலிருந்து நளினிக்கு விடிவு தொலை வில் இல்லை என்பது தெளிவாகிறது.முன்னாள் இந்தியப் பிரமர் இந்திரா காந்தியின் உயிரைப் பறித்ததும் அதே இந் திய தேசத்தில் பிறந்த பகவத்சிங் என்ப தையும் இந்தியாவில்
சுதந்திரத்துக்கு உழைத்த தேசபிதா மகாத்மா காந்தியும் அதே இந்திய மண்ணில் தான் பிறந்தவர் கள் என்பதையும் கோடிட் டுக் காட்டி இந்த விவ காரத்தை இந்தியா நேர்த்தியான வழியில் நகர்த்தக்கூடும்.அத்தோடு இந்திரா குடும்பத்தின் கௌர வத்தையும் உலகறி யச் செய்வதோடு ராஜீவ் கொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளை யும் இந்தியாவையும் பீடித்திருந்த பகை தோசம் கால ஓட்டத்தில் அகலக்கூடும் எனவும் எதிர்பார்க்கும் இதேவேளை, ஈழத் தமிழர் நலனில் இந்தியா மீண்டும் அக்கறை காட்டத் தலைப்படும் என்பதையும் நளினி பிரியங்கா சந்திப்பு உணர்த்தி நிற்கும் இதே வேளை நளினி பிரியங்காவுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு
குறித்து வேதனை அடைந்திருக்கிறார் நளினியின் கணவர் முருகன். இச்சந்திப்பால் முருகன் நளினி உற வில் சற்று விரிசல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானதை வேலூர் மத்திய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நிராகரித்துள்ளனர்.

குறிப்பு: அழுத்தங்களும் இடைக்குறிப்புகளும் நம்முடையவை

No comments: