Saturday, 3 May 2008

இந்தியத் தலையீடு- ஈழச்செய்திகள்-030508

போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் - வைகோ கோரிக்கை
வீரகேசரி இணையம் 5/2/2008 10:43:07 PM
போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திரõ-ரா-விட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது:
கடந்த முறை விடுதலைப் புலிகளே முன் வந்து போர்நிறுத்தம் செய்தனர். பின்னர் போர் நிறுத்தத்தை நீடித்தனர். இந்நிலையில், உலக நாடுகளின்
நெருக்கடியால் வேறு வழியின்றி போர் நிறுத்தத்தை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டது.
போர் நிறுத்தம் அமுலில் இருந்த நிலையில், இலங்கை அரசு போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக மீறி, மீண்டும் போரைத் தொடங்கியது. இதனால், பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்._ (எதிரியை அல்லது அவனது பலத்தை ஒழித்துக்கட்டாமல் இனிமேல் தமது அரசியல் குறிக்கோள்களை, அடைய முடியாத அளவிற்கு முரண்பாடுகள் முற்றுகிற போதுதான் யுத்தம் வெடிக்கிறது. சிலுவை யுத்தத்திலிருந்து இன்றைய தேசிய யுத்தங்கள் வரை யுத்தத்தின் வரலாறு இதை நிரூபிக்கிறது. எனவே யுத்தத்தை அதில் ஈடுபடும் தரப்பினரின் நீதியான மற்றும் அநீதியான அரசியல் குறிக்கோள்களின்அடிப்படையில் மதிப்பீடு செய்யவேண்டும். '' கொலையை'' வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. யுத்தம் கொலை செய்கிறது என்பது, சூரியன் சுடுகிறது என்பதைப் போல! சாகாமல் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு ஒரு சிறு வாய்ப்பு இருந்தாலும், ஒரு ஒடுக்கப்பட்ட தேசம் யுத்தத்தில் இறங்காது. யுத்தம் எவ்வளவு கொடியது என்பது வேறு எவரைக்காட்டிலும் ஈழத்தமிழர்களின் மாபெரும் இராணுவத்தளபதி பிரபாகரனுக்கும் ஈழதேசத்துக்கும் மிக நன்கு தெரியும்.தமிழர்கள் மட்டுமல்ல 1971 ஜே.வி.பி கிளர்ச்சி, 1987 ஜே.வி.பி.கிளர்ச்சி, 1981 இலிருந்து இன்றுவரை(2008)- இலங்கை மக்கள் சிந்திய இரத்தத்தை நாம் நன்கறிவோம். இரத்தம் மட்டும் காற்றில் உறைகிற பதார்த்தமாக இல்லையென்றால் இந்நேரம் இந்துசமுத்திரம் செந்நிறமாய் மாறியிருக்கும். எனவே யுத்தத்தை ஆய்வு செய்கையில் பொதுவாக கொலை பற்றிப் பேசுபவர்கள் யுத்தத்தின் அநீதியான தரப்பை ஆதரிக்கும் ஆசாடபூதிகளே!-ENB)_ செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்லக்கூட இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இலங்கை விவகாரம் குறித்து இந்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் இலங்கை விவகாரத்தில்
இந்தியாவின் நிலைப்பாட்டை திசை திருப்புகின்றனர் (!!). இலங்கையில் நடக்கும் உண்மை நிலையை அறிந்து, (இந்தியாவுக்கு தெரியாது பாருங்கோ?!) போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தலை ரத்து செய்யவும் வற்புறுத்த வேண்டும்.
ஐ.நா.வின் மனித உரிமை ஆணையரை இலங்கைக்குள் நுழைய சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. மேலும். ஐ.நா.வின் கிளையை கொழும்பில்
தொடங்கவும் அனுமதி தரவில்லை. இதன் மூலம் மனித உரிமை மீறல் இலங்கையில் அப்பட்டமாக மீறப்படுகிறது என்பது உண்மையாகிறது.
இதற்கிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த சில நாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என ஐ.நா.வில் கொண்டு
வந்த தீர்மானத்தை இந்தியா தடுத்து நிறுத்தியதாக, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த அணுகுமுறை மிகவும்
வருந்தத்தக்கது.
________
ஈழத்தமிழர்களை விண்ணுலகம் அனுப்ப வானளாவிய அதிகாரம் கொண்ட படை டக்ளஸிடம் ஒப்படைப்பு,
இந்தியத் தலையீட்டை ஒட்டி பக்சபாசிஸ்டுக்களின் முன்தயாரிப்பு!-ENB
Minister rejects accusations that EPDP is involved in rights violations The Task Force appointed by Sri Lanka President for north is more powerful than an Interim Council, its chairman said.Social Affairs Minister and the head of the Task Force, Douglas Devananda, told BBC Sandeshaya that he was given ‘unlimited powers’ to develop the north.
“My limit is sky and my sky is the president,” the minister said.

__________
வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழு:டக்ளஸ் தேவானந்தா தலைமை!
வீரகேசரி இணையம் 5/2/2008 4:03:20 PM -
வடமாகாண நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்பட வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக விஷேட நிர்வாகக் குழுவினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, வடக்கில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டு,
வட மாகாண சபையினை உருவாக்கும் வரை, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும், யுத்தத்தால் சீரழிந்து போயுள்ள பிரதேசங்களை மீளவும் கட்டியமைத்து, புனரமைப்பு செய்து மக்களின் அன்றாட அவலங்களை துடைத்து, அவர்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவை அங்கீகாரத்துடன் வடக்கு மக்களுக்கான இந்த விஷேட நிர்வாகக் குழுவினை நியமனம் செய்துள்ளதாக அறிய
முடிகிறது.
இக்குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அதன் உறுப்பினர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்திற்கான இந்த விஷேட நிர்வாகக் குழு அம்மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா மற்றும்; மன்னார்
ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலமையினை கட்டியெழுப்புவதற்காக சுகாதார சேவைகள், குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம்,
தொலைத் தொடர்புகள், பெருந்தெருக்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பாடசாலைக் கல்வியினை இயல்பு நிலைக்கு
கொண்டுவருவது, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது, விவசாயம், கால்நடைகள்
மற்றும் மீன்பிடித் தொழில் துறைகளை அபிவிருத்தி செய்வது போன்ற மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
______________________
இந்தியத்தலையீடு: சதிகள் அரங்கேறும் நேரம்!- ENB
______________________
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம் [02 - May - 2008] தினக்குரல்
* இந்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை
தமிழகத்தில் கருணா குழுவினர் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும்
பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்திலிருந்து வெளியாகும் `தினத்தந்தி' பத்திரிகை தெரிவித்துள்ளது.
அப்பத்திரிகை மேலும் கூறுகையில்;
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையே கடும்போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள் இராணுவ முகாம்கள் மீது
தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் தினமும் பலர் மடிகிறார்கள்.
பொதுவாக இலங்கையில் போர் பெரியளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிகளவில் வரும்போது அவர்களோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புக்களுண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர
மாவட்டங்களில் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உளவுப் பிரிவு பொலிஸார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அந்தத் தகவலில்,
இலங்கையிலிருந்து கருணாகுழுவினர் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் அவ்வாறு ஊடுருவும் கருணா குழுவினர் தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
விடுதலைப் புலிகள் மீது இந்தப் பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப இந்தச் சதிச் செயலை அரங்கேற்றலாம் என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைத் தகவலையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேர ரோந்துப்
பணியில் பொலிஸார் விழிப்போடிருக்க வேண்டும். வாகனச் சோதனை தீவிரமாயிருக்க வேண்டும். லொட்ஜ்களில் சோதனை கடுமையாக இருக்க
வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதியில் 1,70,000 பேர் இடம்பெயர்வு, மன்னார் நிலை குறித்தும் - ஐ.நா. கவலை
வீரகேசரி இணையம் 5/2/2008 9:10:59 PM
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தற்போது சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர். இந்நிலையில் மோதல்கள் காரணமாக மன்னாரில் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர் என்று ஐ.நா. கவலை
வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை
உள்ளடக்கிய வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் கடந்த கால மோதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 1 இலட்சத்து
78 ஆயிரத்து 953 பேர் உள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கைகள், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் காரணமாகவே இம்மக்கள்
இடம்பெயர்ந்துள்ளனர். மீள் குடியேற்றம் உள்ளிட்ட மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில் இம்மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில்
இருப்பதாக கொழும்பிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இது தொடர்பில் ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக தோன்றிய பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வடக்கு கிழக்கில் பெருமளவான மக்கள்
இடம்பெயர்ந்தனர். இவர்களில் பலர் மீளக் குடியமர்த்தப்பட்டபோதும் தற்போது சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்தும்
இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். யாழ். மாவட்டத்தில் 6,748 குடும்பங்களை சேர்ந்த 23,397 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13,445
குடும்பங்களைச் சேர்ந்த 51,576 பேரும் முல்லைத்தீவில் 9273 குடும்பங்களைச் சேர்ந்த 33,125 பேரும் வவுனியாவில் 3642 குடும்பங்களைச் சேர்ந்த
12,925 பேரும் திருகோணமலையில் 1772 குடும்பங்களைச் சேர்ந்த 5971 பேரும் மட்டக்களப்பில் 5640 குடும்பங்களைச் சேர்ந்த 21,201 பேரும்
அம்பாறையில் 1396 குடும்பங்களைச் சேர்ந்த 5188 பேரும் மன்னாரில் 6848 குடும்பங்களைச் சேர்ந்த 25,570 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது மன்னார், வவுனியா மாவட்டங்களில் இடம்பெறும் மோதல்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மன்னார் கட்டுப்பாடற்ற
பகுதியில் இடம்பெயர்ந்த சுமார் 25 ஆயிரம் மக்கள் வெள்ளாங்குளம் பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேசத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடைந்ததையடுத்து இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் நகரப் பகுதியை நோக்கி மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த வாரம் 23 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை சுமார் 200 பேர் மன்னார் நகரப் பகுதிக்கு
இடம்பெயர்ந்து வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழு சதியென புலிகள் மீது கரிசனம்- இந்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?: தொல். திருமாவளவன்
[வெள்ளிக்கிழமை, 02 மே 2008, 05:35 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழ்நாட்டில் கருணா குழுவினர் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி புலிகள் மீது பழிபோட சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று புலிகள் மீது
கரிசனம் காட்டும் செய்தியை கசிய விட்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்
செயலாளர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்களப் படையுடன் சேர்ந்து இயங்கும் கருணா குழுவினர் தமிழ்நாட்டில் ஊடுருவி தமிழகத் தலைவர்களைக் கடத்தி- விடுதலைப் புலிகள் மீது
பழிபோட சதி நடக்கிறது என்று இந்திய அரசின் உளவுப்பிரிவு தமிழ்நாடு காவல்துறைக்கு எச்சரிக்கை செய்ததாக அண்மையில் செய்தி
வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் சிங்களப் படையினர் விடுதலைப் புலிகளால் பெரும் பாதிப்பிற்கும் இழப்பிற்கும் ஆளாகும் போதெல்லாம்- இந்தியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வுகள் நிகழ்வதுண்டு.
எடுத்துக்காட்டாக, கடந்த வாரம் முகமாலைப் பகுதியில் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான சிங்களப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சூழலில்தான் இந்திய உளவுப் பிரிவு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் புலிகள் ஊடுருவல் என்ற செய்தியை பல நூறுமுறை தமிழ்நாட்டின் ஊடகங்களில் உலவவிட்ட இந்திய உளவுப் பிரிவு, முதன் முறையாக கருணா பிரிவு ஊடுருவல்- தலைவர்களைக் கடத்திப் புலிகள் மீது பழிபோட முயற்சி என்று கரிசனம் காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் என்று ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்- தமிழ்த் தேசியத் தலைவர்களை தடாவிலும் பொடாவிலும் ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்தவர்கள் இப்போது புலிகள் மீது பழி போடப் போகிறார்களே என்று கலங்குகின்றனர்.
சிங்களப் படையுடன் இணைந்து செயல்படும் கருணா குழுவினர் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசும் உளவுப்பிரிவும்தான், கருணா குழு ஜனநாயக
நீரோட்டத்தில் கலந்துவிட்டது என்று கூறி, சிங்களப் படைகளுக்கு ராடார்களையும் ஆயுதங்களையும் வாரி, வாரி வழங்கி வழங்கி வருகிறது.
இந்நிலையில், திடீரென்று கருணா குழு பயங்கரவாதிகளாக இந்திய உளவுப் பிரிவின் கண்களுக்குத் தெரிகிறது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் படைக்கு இராணுவ உதவி செய்யாதே! என்று தமிழக மக்களை விடுதலைச் சிறுத்தைகள் அணி திரட்டியது.
அதே காலகட்டத்தில் வன்னிப்பகுதியில் எல்லைப் பகுதியில் புலிகளின் முன் சிங்களப் படை முழுவதுமாக செயலிழந்து நின்றது.
இந்நிலையில், சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தது.
இது தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த சிங்கள அரசு முன் முயற்சிகளைத் தொடங்கியது. இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற குரல்கள் தமிழ்நாட்டிலிருந்து வெடித்துக் கிளம்பின.
இந்த நிலையில்தான், பன்னாட்டு அரங்கில் இந்தியத் தலையீடு வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் நோர்வேயில் ஆன்மீகவாதி ரவிசங்கர்
அவர்களின் முயற்சியில் நிகழ்ந்த தெற்காசிய அமைதி மாநாட்டில் ஈழச் சிக்கலில் இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில்- இன்று சிங்களப் படையுடன் இணைந்து இயங்கும் கருனா குழு என்று குறிப்பிட்டுள்ளது இந்திய உளவுப் பிரிவு.
இந்நிலையில் இந்திய அரசு, சிங்கள அரசுக்குக் கொடுத்த ராடார்களையும் ஆயுதங்களையும் கப்பல்களையும் திரும்பப் பெறுமா?
தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் சிங்கள இராணுவத்தைக் கண்டிக்குமா?
கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவல் என்று கூறியுள்ள இந்திய அரசு, இந்தச் செய்தியை வழக்கம் போல் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக
மட்டும் கசிய விட்டிருக்கிறதா?
அல்லது ஒரு உண்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் பன்னாட்டு உறவுகள் குறித்தக் கோட்பாடுகளுக்கு இசைவாக- சரியான புரிந்துணர்வுடன்
இந்தியத் தலையீடு என்கிற தனது கடமையைச் செய்யப் போகிறதா? போன்ற பல்வேறு கேள்விகளுடன், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி-
புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பிரிக்கும் சிங்கள அரசின் சதியை முறியடிக்க இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆவண செய்ய வேண்டும்.
அண்மையில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச்
சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இந்திய நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு
[வெள்ளிக்கிழமை, 02 மே 2008, 02:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம்.
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு
சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தனியார் முதலீட்டு நிறுவனமான ஆதித்யா பிர்லாவு குழுமத்துக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அரசு தாரை வார்த்திருக்கின்றது.
இதனை சிறிலங்காவின் நிர்மாண பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் செயற்பட வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து மிக விரைவில்
இந்தியாவிலிருந்து அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைப் பார்வையிட உள்ளனர்.
இதன் முதற்கட்டமாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள உபகரணங்களை ஆராய்வதற்கான
அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதற்கான அனுமதியை சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்துள்ளது.
_______________________________
உணவு நெருக்கடியை எதிர்கொள்ள திட்டம் எதுவும் அரசிடம் இல்லை
[01 - May - 2008]
* ஆட்சியை அகற்ற இன்று முதல் போராட்டம்; ஜே.வி.பி. அறிவிப்பு ரொஷான் நாகலிங்கம்
உலகில் ஏற்பட்டு வரும் மோசமான உணவு நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் முன்னேற்பாட்டுத் திட்டமோ, செயற்பாடோ
அரசாங்கத்திடம் இல்லையென கடுமையாக சாடியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), அரசாங்கத்தை பதவி நீக்குவதற்கான
வேலைத்திட்டத்தை மே முதல் (இன்று) முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறது.
உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படப் போகின்ற நிலையில், நாட்டு மக்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம்
எடுக்கவில்லையென குற்றம் சாட்டியிருக்கும் ஜே.வி.பி., அரசைக் கலைப்பதற்கான வேலைத்திட்டத்தை மே மாதம் முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இலங்கை மன்ற கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த 2 1/2 வருட காலப்பகுதியிலேயே அதிகளவான விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு உலக சந்தையே காரணமென கூறப்படுகின்றது.
உலக சந்தையில் மசகு எண்ணெய், காஸ், பால்மாவின் விலையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில் எதிரொலிக்கின்றதாயின் உள்ளூரில் உற்பத்தி
செய்யப்படும் மரக்கறி, தேங்காய், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏன் அதிகரித்துள்ளன?
தேங்காய் 50 ரூபாவாக அதிகரித்திருக்கிறது. அதுபோல் மரக்கறியின் விலைகளும் என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் பிரதான
உணவான அரிசி 100 ரூபாவை எட்டியுள்ளது. குறிப்பாக மார்ச், ஏப்ரல் மாதங்கள் நெல் அறுவடை செய்யப்படும் காலப்பகுதியாகையால் அரிசியின்
விலை கடந்த காலங்களில் குறைவடைவது வழமை. ஆனால் இன்று இதற்கு நேரெதிராக நிகழ்ந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த வருடம் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்ததன் பிரதி பலனேயாகும். சந்திரிகா
எந்தவொரு விவசாய உள்ளூர் உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவில்லையென ஐ.தே.க.ஆட்சியைக் கலைத்தார். உற்பத்தியை பெருக்கி
மகிழ்ச்சியாக வாழ்வோம் என வந்த அரசாங்கம் அப்போது 50 ரூபாவுக்கு விற்கப்பட்ட அரிசியை 45 ரூபாவுக்கு வழங்கி மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.
மாறாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எமது கட்சியை சேர்ந்த அநுரகுமார திஸநாயக்க விவசாய அமைச்சராகவிருந்த போது உள்ளூர் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு
தூரநோக்குடன் செயற்பட்டதுடன் பெருமளவு நெல்லை எதிர்காலம் கருதி கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தினார். தேங்காய், இறப்பர்,
போன்றவற்றின் பலன்களை பல வருடங்களின் பின் எதிர்பார்க்க முடியும். ஆனால் நெல்லை ஆகக் குறைந்தது 6 மாதகாலத்துக்குள் அறுவடை செய்ய
முடியுமென்ற வகையில் இந்த அமைச்சுக்கு பொறுப்பானவர்கள் எதிர்காலத்தில் அரிசி விலையைக் குறைப்பதற்கு நெல் உற்பத்தியை அதிகரிக்க
நடவடிக்கையெடுக்காது வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யமுற்படுகின்றனர்.
அதேபோல் அரசாங்கம் பயிர்வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறிவருகின்றது. இவர்கள்
கூறியவாறு பயிர் வளர்த்தால் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்காது. தற்போது அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதிலேயே கவனத்தை
செலுத்தியுள்ளது.
கடந்த டிசம்பரில் பால்மா, பருப்பு உட்பட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ததெனினும் அரிசியின் விலையை அவ்வாறு
மேற்கொள்ளவில்லை. இன்று அரிசி விலை என்றுமில்லாதவாறு அதிகரித்த போது மக்களை ஏமாற்றுவதற்கு விலையை நிர்ணயம் செய்து அரசு
நாடகமாடுகின்றது.
உண்மையாக மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்க வேண்டுமாயின் அரசாங்கம் மானியத்தை அரிசிக்கு வழங்கி கோப்சிற்றி,
கூட்டுறவுச்சங்கம் மூலம் விநியோகிக்க முடியும். மகிந்த சிந்தனையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறியிருந்த போதும் அதனை அரசாங்கம்
காற்றில் பறக்கவிட்டுள்ளது.
முதலில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு வரியை நீக்கியது. இந்த லாபம் மக்களைச் சென்றடையாது, என்பதைத்
தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றுவதற்கே இதனைச் செய்தது, உலகச்சந்தையில் உயர்வு ஏற்பட்டதென எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம்
அதிகரித்தது.
மண்ணெண்ணெய்க்கு கூட அரசு நிவாரணங்களை வழங்க வில்லை. இதனால் விவசாயிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல்
எரிபொருட்களின் விலையேற்றத்தால் உற்பத்திபாதிக்கப்பட்டதுடன் உற்பத்தி செலவு அதிகரித்தன். பேரில் பொருட்களின் விலைதான் உயர்ந்தது.
மசகு எண்ணெய்யின் உயர்வினால் சில நூற்றாண்டுகளுக்கு தனது நாடு குறித்து சிந்திக்கும் அமெரிக்கா எரிபொருளுக்காக மெதனோலை பாவிக்க
முற்பட்டுள்ளது. இது மெதனோல் போஞ்சி மற்றும் தாவங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் அவ்வுற்பத்தியை அதிகரித்ததுடன் கோதுமை
உற்பத்தியை மட்டுப்படுத்தியுள்ளது.
இதன் விளைவே உலகில் கோதுமை தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். அது போல் காலநிலை மாற்றத்தாலும் ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சி காரணமாக
இந்தியா, பாகிஸ்தான் அரிசியை ஏற்றுமதி செய்வதில்லை. இந்நிலையில் எதிர்காலத்தில் உலகில் பஞ்சம் ஏற்படுமென எச்சரித்த நிலையில் நாட்டு
மக்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நாட்டை சரியாக கொண்டு நடத்த முடியாத நிர்வகிக்க முடியாத ஊழல் மோசடி மிக்க இந்த அரசை மக்கள் ஏற்க மறுக்கின்ற நிலையில்
ஜே.வி.பி.விவசாயிகள் சங்கம், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் சங்கங்கள் உட்பட புத்திஜீவிகளை அணிதிரட்டி முன்னணியமைத்து அரசை வீட்டுக்கு
கலைப்பதற்கு மே மாதம் முதல் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயர்ந்துவிட்ட உணவு விலை அபாயம்
[01 - May - 2008] ஆர்.எஸ்.நாராயணன்
இந்தியாவில் எவ்வளவு தான் உணவு விலைக் கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்தும் கூட உலகளாவிய நிலையில் உணவு உற்பத்தி குறைந்துவிட்டால்
மளமளவென்று உணவு விலை ஏறத் தொடங்கிவிட்டது. உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது உணவு உற்பத்தியில் இந்தியாவின் மந்த நிலையை
ஓரளவு பரவாயில்லை என்று கூறலாம். இருப்பினும் ஒரு காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவாய் வளர்ந்த பல நாடுகளில் இன்று உணவுக்குத்
தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவை விட உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சீனா இன்று உணவு
இறக்குமதியில் இந்தியாவுடன் போட்டி போடுகிறது.
உணவு விலை உயர்ந்தும் கூட இதனால் இந்திய விவசாயிகளுக்கு பைசாகூட இலாபம் இல்லை. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலை,
உணவு உற்பத்தியின் அடக்கவிலையை விடக் குறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கொள்முதல் விலையைவிடக் கூடக் கொடுத்து இந்தியாவில்
உணவு இறக்குமதி நிகழ்கிறது. உணவு தானிய வாரியாக உலக அங்காடி நடப்பை மதிப்பிடுவோம். ஆண்டுக்கு 2.5 கோடி தொன் விளையும்
அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சி காரணமாக 98 இலட்சம் தொன் தான் நடப்புப் பருவத்தில் உணவு தானியம் விளைந்துள்ளது. அமெரிக்காவில்
தென்மேற்கு மாநிலங்களிலும் சீனாவின் வடக்கு மாநிலங்களிலும் குளிர்பருவப் பயிர் உற்பத்தி பனி உறைவால் குறைந்துவிட்டது. 2007 இல்
அமெரிக்காவில் 1 தொன் கோதுமை 167 டொலர் விற்றது. இன்று அதே 1 தொன் கோதுமை விலை 449 டொலர். கோதுமை விலை 115 சதவீதம்
கூடியுள்ளது.
2006- 07 இல் இந்தியா விலை கொடுத்து 6.8 இலட்சம் தொன் இறக்குமதி செய்தும்கூட 2007-08 இல் நமது கையிருப்பு போதுமானதாயில்லை. 2008-
09 இல் இந்தியா 30 இலட்சம் தொன் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.
உலகச் சந்தையில் கோதுமை விலை இறங்கும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் சீனாவின் தேவையோ இந்தியாவை விட அதிகம். கோதுமையை ஏற்றுமதி
செய்யும் கனடா, ஐரோப்பிய யூனியன், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவைப்போல் உற்பத்தி குறைந்துவிட்டது. கோதுமை பற்றாக்குறை
உலகளாவியதாக உள்ளது. மனிதனுக்கு மட்டுமல்ல. கால்நடைத் தீவனத்திற்கும் கோதுமை பயன்படுகிறது.
அமெரிக்காவில் இது நாள்வரை மக்காச்சோளம் தீவனமாக இருந்த நிலை மாறி கோதுமை மாட்டுத்தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இரண்டு
காரணங்கள் உண்டு. முதலாவதாக பெருகி வரும் இறைச்சித் தேவை , பால் தேவை, இரண்டாவதாக மிகவும் கணிசமான அளவு மக்காச்சோளம்
உற்பத்தி (20% வரை) உயிரி எரிசக்தி அதாவது எத்தனால் உற்பத்திக்கு ஒதுக்கப்படுவதும் ஆகும்.
40,50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் அரிசி மட்டுமே முக்கிய உணவு. இன்று அப்படி இல்லை. ரவா வடிவில் உப்புமா, கோதுமை மாவு வடிவில்
பூரி, சப்பாத்தி இருவேளை உணவாக மாறியுள்ளது. சர்க்கரை வியாதியும் தமிழனிடம் குடிகொண்டு விட்டதால் கோதுமை உணவுத்தேவை கூடிவிட்டது.
இதைவிட ஒரு வியப்பான உண்மை உண்டு. கோதுமை விளையும் வட மாநிலங்களில் உருட்டு மாவு ஆலைகள் கிடையாது. ஏறத்தாழ 70 சதவீத
கோதுமை மாவு ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இவ்வாறே ரொட்டிக் கிடங்குகளும் தமிழ்நாட்டில் அதிகம். கோதுமை மைதா வடிவில் நாம் உண்ணும் பன், பிரட் ஆகியவற்றையும் கணக்கில்
கொண்டால் தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கம் வடமாநிலங்களை நம்பித்தான் வயிற்றை வளர்க்கின்றனர். அரசியலிலும் அப்படித்தானே. இதனால்,
அரிசியைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா?
கோதுமையைப் போலவே அரிசி விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. உலக சந்தையில் கடந்த ஆண்டு ஒரு தொன் 250 டொலர் விலையில் விற்ற
சாதா வெள்ளை அரிசி இன்று 500 டொலர். ஐ.நா. உணவு விவசாய அமைப்பின் கணக்குப்படி 2007 -08 இல் உலக அரிசித் தேவை 42 கோடி தொன்கள்.
ஏறத்தாழ இதே அளவு அரிசி உற்பத்தி இருந்தும்கூட உணவு விநியோகத்திற்கான கையிருப்பில் தட்டுப்பாடு என்பதாலும் உலக அரிசி ஏற்றுமதி
நாடான தாய்லாந்தில் பதுக்கல் காரணமாகவும் அங்கு அரிசி விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலகிலேயே அரிசி இறக்குமதியை மட்டும் நம்பி வாழும் நாடு பிலிப்பைன்ஸ். ஒரு காலத்தில் அரிசி உற்பத்தியில் முன்னிலை வகித்த பிலிப்பைன்ஸ்
நாட்டில் பசுமைப்புரட்சியின் விளைவால் மண்வளம் இழந்து உணவுக்கு அடுத்த நாட்டை எதிர்பார்க்கும் அவலம். உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளது. இன்று தீராத வறட்சியால் சிக்கித்தவித்து வரும் பிலிப்பைன்ஸ் நாடு அரிசிக் குறுநொய்யை தொன் ஒன்றுக்கு 750
டொலர் என்ற விலையில் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைமை தமிழ்நாட்டுக்கு வந்துவிடக்கூடாது.
இன்று இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டாலும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி தொன் 650 டொலர் கிடைத்தால் விற்கலாம்
என்ற நிபந்தனை உள்ளது. கோதுமையுடன் ஒப்பிடும்போது அரிசியின் நிலை பரவாயில்லை. இன்று பரவலாகப் பேசப்படும் காலநிலை மாற்றம்
காரணமாகப் பல நாடுகளில் குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா, சீனா , வங்கதேசம், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்
இதன் பாதிப்பு குறைவு என்று நாம் ஆறுதல் கொள்ளலாம். உணவு விலையைப் பொறுத்தவரை உலகச் சந்தையை விட இந்தியாவில் உணவு விலை
குறைவு என்றால் அதை எவ்விதத்திலும் ஒரு சாதனையாகவே ஏற்க முடியாது.
ஏனெனில் இந்தியாவின் அசலான விலை அங்காடி விலையை விட அதிகம். உணவு மானியம் 31,000 கோடி ரூபாய். உரமானியம் 42,000 கோடி
ரூபாவையும் கூட்டிப்பார்த்தால் இந்தியாவின் அசல் விலை ஆகாயத்தைத் தொடும்.
இன்று தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடிக்கு மவுசு கூடியுள்ளது. பெரும்பாலும் இது கால்நடை- கோழித்தீவனம் குறிப்பாகப் பால் மாடுகளுக்கு
மக்காச்சோளமாவை அடர்தீவனமாக வழங்கும்போது கூடுதல் பால் கறவை இருக்கும் என்பது உலகறிந்த உண்மை.
தமிழ்நாட்டில் பால் விலை உயர்ந்து பாலின் தேவை பன்மடங்கு உயர்ந்துவிட்டதும் மக்காச்சோள சாகுபடிக்குக் கிடைத்த பூஸ்ட், அதேசமயம்
மக்காச்சோளம் அமெரிக்கா, ஆபிரிக்கா கண்டங்களில் பிரதான மனித உணவாகவும் உள்ளதால் உயிரி எரிசக்தி உட்பட இதன் பன்முகப்
பயன்பாட்டினால் இதன் விலையும் கூடிவிட்டது. கடந்த ஆண்டில் 1 தொன் 180 டொலர் என்ற நிலை மாறி இன்று மக்காச்சோளம் விலை 1 தொன் 220
டொலர் சுமார் 24 சதவீதம் உயர்வு.
இந்திய ரூபாய் விலைகளோடு உலகச்சந்தை விலைகளை ஒப்பிடுவதானால் முதலில் கோதுமை டில்லி விலை ரூ.1,100 என்றால் இறக்குமதி விலை
ரூ.1800 . அரிசி (வெள்ளை -சாதா) ரூ. 1600 ஹைதராபாத் விலை . இதே அரிசி இறக்குமதி விலை ரூ. 2000 (100 கிலோ). மக்காச்சோளம் தமிழ்நாட்டு
விலை ரூ.800 என்றால் உலக விலை ரூ.900.
உணவு விலை உயர்வு மிகவும் தெளிவாகவே நெருங்கிக் கொண்டிருக்கும், உணவுப் பஞ்சம் அல்லது உணவு நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. மிக
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய் , பருப்பு ஆகிய விலைகளின் உயர்வினால் பணவீக்கம் தீவிரமாகிறது.
உள்ளூர் விலைவாசிகளைக் கட்டுப்படுத்த இறக்குமதிதான் தீர்வு என்றால் அதற்குரிய வழியும் அடைபட்டு விட்டது. உள்ளூர் விலையை விடக் கூடுதல்
விலை கொடுத்து உணவு இறக்குமதி செய்தால் அதே விலையை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.
இன்றுள்ள உணவு நெருக்கடியும் இனி ஏற்படப் போகும் உணவுப் பஞ்ச அபாயமும் மனிதத் தவறுகளால் உருவாகிறதே தவிர மக்கள் தொகை
காரணமல்ல. இருக்கும் வளத்தை உருப்படியாகக் காப்பாற்றி உணவு உற்பத்தியில் போதிய கவனம் செலுத்தினாலே போதும். இதர நாடுகளுடன்
ஒப்பிடும்போது இந்தியாவுக்கு மாறி வரும் தட்ப வெப்பம் விவசாயத்தை அதிகம் பாதித்துவிட வில்லை. கூடுதல் மழை அல்லது கூடுதல் வெள்ளத்தை
நல்ல முறையில் சேமித்து வளம் காணும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைப் பின்பற்றி ஓட்டை இல்லாத நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நீர்
மேலாண்மையைத் தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டும்.
கூடுதல் வெப்பம் கூடுதல் ஒளிச்சேர்க்கைக்கு வழிகாணும் இயல்பைத் தேர்ந்தெடுத்து வளம் பெற உணவு சாராத உயிரி எரிசக்திப் பயிர்களுக்கு
வழங்கப்படும் சலுகைகள், மானியம் ஆகியவற்றை உணவுப்பயிர் சாகுபடியாளர்களுக்கு வழங்குவது அவசியம். உணவுக்கே வழியில்லாத நாடு உயிரி
எரிசக்தியைப் பற்றிக் கவலைப்பட்டால் பணவீக்கம் மேலும் அதிகமாகும். மத்தியில் ஆட்சி மாற்றமே ஏற்படலாம்.
தினமணி

மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
[01 - May - 2008]
*திருமலையில் ரணில் மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் இடம்பெற்றதொரு காட்சிதான் இன்று கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று, திருகோணமலை முற்ற வெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்
ரணில் மேலும் தனது உரையில்,
பாண்டவர்கள் அதிகாரப் பகிர்வு கேட்டார்கள். நூறு சகோதரர்களுடன் ஆட்சி நடத்திய துரியோதனன் மறுத்தான்.
பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் துரியோதனாதியர்களைச் சந்தித்தனர், அப்போது கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் பகவத்
கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டு நாள் குருஷேத்திரப் போர் நடக்கிறது. பாண்டவர் வென்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நான் இத்துடன் ஒப்பிடுகிறேன்.
கிழக்கு மாகாணத்தை ஆயுதக் கலாசாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும். ஆயுத கலாசாரத்திற்கு நாம் அடிபணிய முடியாது. அச்சுறுத்தல்,
அடாவடித்தனங்களுக்குப் பயந்து தினமும் கப்பம் செலுத்தி வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது ஆட்சியாளருக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது. வங்குரோத்து நிலையை
நோக்கிச் செல்லும் இவ்வரசு வாக்காளர்களை அச்சுறுத்தி வெற்றியீட்டலாம் என்று எண்ணுகிறது.
இலங்கையன் என்ற முறையில் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது ஒரே
நோக்கமாகும். ஆளுமை நிறைந்த தீர்வுத் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வர முடியும்.
இலங்கையில் கிழக்கு மாகாணம் ஒன்றில் மட்டுமே மூன்று இனங்களைச் சேர்ந்த மக்களும் சமமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். எனவே, கிழக்கு மாகாண மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வு நாட்டிலே வாழ்கின்ற அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு
தீர்வாக அமையும்.

( இது தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்ட விடயம். வடக்குக் கிழக்கின் நிரந்தர இணைப்பை முடிவு செய்ய கிழக்கு மாகாண மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ENB)
அவ்வாறான ஒரு தீர்வை இந்த அரசினால் முன்வைக்க முடியாது. ஆயுதமேந்திய குழுக்கள் அவற்றை ஒப்படைப்பார்களாயின்
அவர்களை அரசியல் சக்தியாக அங்கீகரிக்க முடியும்" என கூறினார்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன மஹ்ரூப் பேசுகையில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
ஹெலிகொப்டர் வசதி மறுக்கப்பட்ட நிலையில் தரைவழியாக திருமலை வந்து பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றுகின்றார் எனக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் செய்து கொண்டுள்ள இந்த உடன்படிக்கை, கிழக்கு மாகாணத் தேர்தலுடன் நின்று விடும்
ஒன்றல்ல; பாராளுமன்றத் தேர்தலிலும் இத்தேர்தல் கூட்டு நீடிக்கும் என்றும் சின்ன மஹ்ரூப் குறிப்பிட்டார்.
========================
பணவீக்கம் 29.9%

[01 - May - 2008]
இலங்கையின் பணவீக்கம் முன்னொருபோதுமில்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் 25 சதவீதமாக அதிகரித்திருப்பதை புதிய விலைச்சுட்டெண்
காட்டியிருக்கும் அதேவேளை பழைய அளவீடான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 29.9 சதவீதமென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புள்ளிவிபரவியல் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை இத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
மார்ச் மாதம் 23.8 சதவீதமாக பணவீக்கம் இருந்ததாக புதிய கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தொகை ஏப்ரலில் 1.8 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை 1.32 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்தது

வீரகேசரி இணையம் 5/1/2008 12:04:02 AM
பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை முன்னெடுக்கும் சவாலை பொறுமையுடன் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கும் பாரிய உதவியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் பெருமையுடன் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இலங்கை வாழ் தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தைப் பலப்படுத்துவதனூடாக எமது நாட்டின் அபிவிருத்திக்கு எமது தொழிலாளர்களினால் வழங்கப்படும்
ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுவதோடு இது வளமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் மக்களின் அபிலாஷைகளுக்கு
முன்னுரிமையையும் அளிக்கின்றது. எமது தொழிலாளர்கள் நாட்டுக்கு பல அடைவுகளை ஈட்டித்தந்துள்ளனர். அந்த கௌரவத்தை தொழிலாளர்களுடன்
நான் பகிர்ந்துகொள்ள முடியுமாக இருப்பது எனது அதிஷ்டமாகும். மக்களின் அபிலாஷைகளைச் சிறப்பாகப் புரிந்து கொண்டு சரியான பாதையில்
எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள எமது நடவடிக்கைகளினால் அவர்கள் கௌரவப்படுத்தப்படுகின்றனர் என நான்
நம்புகிறேன்.
தொழிலாளர்கள், இன, மத, குல மற்றும் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஐக்கியமாக இருப்பது நாட்டுக்குப் பெரும் சக்தியாகும். நாட்டில்
சமாதானம் சீர்குலையும் போது தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளுமே அதிகம் அல்லல்படுகின்றனர். பயங்கரவாதத்தை தோல்வி அடையச்
செய்து சமாதானத்தை முன்னெடுக்கும் சவாலை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு அவர்கள் அரசாங்கத்துடன் நடந்து கொள்வது இந்த விடயத்தை
புரிந்து வைத்துள்ளமையே காட்டுகிறது. இது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கும் பாரிய உதவியாகும்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தைக் கொண்டுவருவதற்கான
கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதனாலேயே நாம் பொதுத்துறை ஊழியர்களைப் பலப்படுத்தும் அதேவேளை, தனியார்துறை
ஊழியர்களின் உரிமைகளைக் காப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மக்கள் சார்பு அரசாங்கம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதனூடாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நீண்டகால
அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கும் நம் நடவடிக்கை
எடுத்தோம். நாம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன்
செயற்பட்டு வருகிறோம்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, நிலையான சமாதானத்தை அடைவதற்கõன சவால்களுக்கு முகங்கொடுப்பதில் தொழில் புரியும் மக்களின்
தொடரான ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடிய புதியதோர் இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதில்
நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த தொழிலாளர் ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர் மேதின செய்தி
வீரகேசரி இணையம் 4/30/2008 11:22:23 PM -
பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு தொழிலாளர் வர்க்கத்தினர்
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, உயிர் தியாகத்தின் மூலம் பல உரிமைகளைப் பெற்றுக் கொண்டு வீரமிக்க இலங்கையின் தொழிலாளர்
வர்க்கத்தினர் பெற்றுக் கொண்ட வெற்றியினை நினைவுகூரும் இந்த மே தினத்திலே முதலில் அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகின்றேன்.
தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், பெற்றுக் கொண்ட உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பதற்காகவும்
நடவடிக்கை எடுக்கின்றமை முற்போக்குவாத அரசாங்கமொன்றின் பொறுப்பும் கடமையுமாகும். அவ்வாறே எமது ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு அரசாங்கமானது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துள் ளது. உரிமைகளைப்
பெற்றுக் கொள்ளும் அதே நேரம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை வேகப்படுத்துவதற்காகவும் அர்ப்பணித்து செயலாற்ற வேண்டியமையும்
முக்கியமானதொரு விடயம் என்பதனை ஞாபகப்படுத்த வேண்டும்.
இலங்கையில் காணப்படும் பயங்கரவாத போராட்டம் போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விளக்கமொன்று தொழிலாளர்
வர்க்கத்தினரிடம் காணப்படுதல் வேண்டும். ஏனெனில் இவ்வாறானதொரு நிலையிலே அரசாங்கம் முகம் கொடுத்துள்ள இந்த சவாலின் கீழ் தொழிலாளர்
வர்க்கத்தின் பிரதான கடமையாக அமைவது தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியமையாகும்.
அனைத்தையும் விட நாட்டின் ஐக்கியத்தை பாதுகாத்தல் வேண்டும். அதனால் நாட்டின் இறைமைக்கும், சமாதானத்திற்கும் ஏற்பட்டுள்ள
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக தொழிலாளர் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பானது தொடர்ந்தும்
தேவைப்படுகின்றது.
இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் பெறுமதி மற்றும் முக்கியத்துவம் பற்றி நாம் புரிந்து கொண்டுள்ளோம். தொழிலாளர் வர்க்கத்தினரின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எடுக்க வேண்டிய அனை த்து நடவடிக்கைகளையும் எடுக்க பின்னிற்கப் போவதில்லை. சாதி, இன, மத, கட்சி
வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று ஒரே தாயின் சகோதரர்களாக முன்னோக்கிச் சென்று நாட்டைக் கட்டியெழுப்பும் பணி க்கு தோள்கொடுப்போம்.
அதற்காக எமது தொழிலாளர் வர்க்கத்திற்கு பலமும் சக்தியும் கிடைக்க வேண்டுமென இந்த மே தின த்திலே பிரார்த்திக்கின்றேன்.

மலையக இளம் பெண் சவுதியில் மர்ம மரணம்
சிவலிங்கம் சிவகுமார் 4/30/2008 12:59:53 PM -
அட்டன் டிக்கோயா பட்டல்கலை எனும் தோட்டத்தைச்சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதியில்
மர்மமான முறையில் இறந்துள்ளார்.23 வயதான இவரின் பெயர் க.தெய்வமலர் என்பதாகும். இவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவர்
கடமையாற்றும் வீட்டில் இருந்து இன்று தகவல் கிடைத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தமது மகளுக்கு பிரச்சினைகள் ஒன்றும் கிடையாது என்றும் இம்மரணத்தில் சந்தேகம்
நிலவுவதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தெய்வமலர் 25042007 அன்று பட்டல்கலை தோட்டத்தைச்சேர்ந்த உப முகவர் ஒருவரின் மூலமே சவுதி பயணமாகியுள்ளார்.கொழும்பிலுள்ள வேலை
வாய்ப்பு பணியகத்தின் மூலம் தெய்வமலர் இறந்த விடயம் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் தற்போது அங்கு சென்றுள்ளனர்.

Tuesday, April 29, 2008
பிரிட்டனில் இலங்கை தமிழர்கள் மூவர் கைது
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார்
தெரிவித்துள்ளனர்.
இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக
தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

கிழக்குத் தேர்தல்- ஒரு முட்டாள்தனமான நடவடிக்கை:
இரா.சம்பந்தன்
[செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2008, 05:30 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]
வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பிரித்து கிழக்கில் தேர்தலை நடத்தும் மகிந்த அரசின் நடவடிக்கையானது முட்டாள்தனமானது என்று தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சாடியுள்ளார். இது தொடர்பில் கொழும்பிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த "த நசன்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:
கேள்வி: வடக்கில் நடைபெறும் போர் அப்பாவி பொதுமக்களுக்குப் பாரிய தலையிடியாக அமைந்துள்ளது. அண்மைக்காலமாக பல அழுத்தங்களை
பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து?
பதில்: இது மிகவும் துயரமான சூழ்நிலையாகும். இரண்டு தரப்பிலும் பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்படுகின்றனர். பேராளிகளும், படையினரும்
உயிரிழக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வை உருவாக்க முடியும் என்பதே எனது கருத்தாகும்.
ஆயுதம் தரிக்காத பெண்கள், ஆண்கள், குழந்தைகளும் இந்தப் போரின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்க்கை நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
போர்ச் செலவீனங்களினால் சிறிலங்காவின் பொருளாதாரம் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விளைவுகளும் மேலும், மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இனிவரும் மாதங்களில் இந்த நிலைமை மேலும் உக்கிரமடையக்கூடும்.
கேள்வி: இந்த நிலைமையின் கீழ் சமாதான முன்னெடுப்புக்களுக்கு ஏதேனும் வாய்ப்புக்கள் உண்டா?
பதில்: ஒரு தலைபட்சமாக போர் நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் இரத்துச் செய்தமை ஒரு முட்டாள்தனமான செயலாகவே நான் உணர்கின்றேன்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சமாதான முன்னெடுப்புக்களுக்கு விழுந்த பாரிய அடியாகும்.
இந்த நிலைமையின் கீழ் அரசாங்கமே சமாதானம் குறித்து அதிக முனைப்புக்காட்ட வேண்டும்.
கேள்வி: அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தீர்மானித்தது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து என்ன?
பதில்: தனி கிழக்கு மாகாணம் என்ற எண்ணக்கரு ஓர் உசிதமான தீர்வாக நாம் கருதவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு
- கிழக்கு மாகாணமாகவே நாம் கருதுகின்றோம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. சிறிலங்கா சட்டங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக நடவடிக்கை
எடுக்க முடியாமை மிகவும் துரதிர்ஸ்டவசமானதொன்றாகும்.
எனினும், இந்த தீர்ப்பை எம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் அனைத்துலக ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்துக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்
மூலம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளின் எமக்கு உடன்பாடில்லை, இதனால் தான் நாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை.
இதனை ஓர் ஜனநாயக தேர்தலாக ஏற்றுக்கொள்ள முடியாது, அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களுடன் இணைந்தே தேர்தலில் போட்டியிடுகின்றது.
துணை இராணுவக் குழுக்களே பல்வேறு கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு பொறுப்பாளிகள்.
கேள்வி: வடக்கு - கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சிறிலங்கா சட்டங்களில் வாய்ப்பு இல்லை என்று நீங்கள்
குறிப்பிட்டீர்கள். இதற்கு எதிராக உங்களின் கட்சி அனைத்துலக நீதிமன்றத்தில் நியாயம் கோருமா?
பதில்: இது தொடர்பாக எமது கட்சி மிகக் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டமை தொடர்பாக பலமுறை
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம்.
கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் தற்போது கிழக்குத் தேர்தல்களை முன்னெடுக்கின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் கிழக்கு
மாகாணத்தில் எத்தகையதொரு சூழ்நிலை காணப்படும்?
பதில்: இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நான்கு அரச தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் ஆட்சி வகித்த அரச தலைவர்கள்
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்தக் காலப்பகுதியில் ஆட்சி செய்த நான்கு அரச தலைவர்களும் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை ஏற்றுக்கொண்டனர்.
வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அணுகுமுறையை முற்றிலும் பிழையாக நாம் கருதவில்லை.
கேள்வி: இந்திய - இலங்கை ஒப்பந்தம் இந்தத் தேர்தல்களின் போது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்: நான் ஏற்கனவே குறிப்பிட்டதனைப் போன்று, இந்தத் தேர்தல் ஒரு முட்டாள்தனமான முயற்சி. இதுவொரு பயனற்ற முயற்சியாகவே
நோக்குகின்றோம்.
கேள்வி: நளினியை வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி சந்தித்தார். இந்திய அரசியலில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உங்கள் பார்வையில் இது ஓர்
அரசியல் சந்திப்பா அல்லது தனிப்பட்ட சந்திப்பா?
பதில்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் தனது சந்திப்பின் நோக்கத்தை விளக்கியிருந்தார். நான் அதற்கு மதிப்பளிக்கின்றேன். இது தொடர்பான
மேலதிக கருத்துக்களை என்னால் தெரிவிக்க முடியாது.
கேள்வி: கிழக்கு தேர்தல்களின் உங்களது ஆதரவாளர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
பதில்: கிழக்கில் என்ன நடந்தது என்பதை எமது ஆதரவாளர்கள் நன்கு உணர்வார்கள். இராணுவ நடவடிக்கைகளினால் குறிப்பாக வான் தாக்குதல்கள் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களினால் 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த 260 பேர் தொடர்பான தகவல்களை நான் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பட்டியலிட்டிருந்தேன்.
அவர்களின் வீடுகள், விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தேன். எனினும்,
அரசாங்கம் இந்த வேண்டுகோளை நிராகரித்தது.
மூதூர் பிரதேச செயலகத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
28 கிராமங்களைச் சேர்ந்த 16,648 பேரை இந்தப் பிரதேசம் உள்ளடக்குகிறது. இந்தப் பகுதியில் 18 பாடசாலைகளும், 9 இந்து ஆலயங்களும், ஒரு
மெதடிஸ்த தேவாலயமும் உள்ளது.
எனினும் அந்தப் பிரதேச மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. அந்தப் பிரதேசத்தை அரசாங்கம் வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது.
இந்தப் பிரதேசங்களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அகற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்காகவே அந்தப் பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன.
அவ்வாறாயின், தற்போது அந்தப் பிரதேசங்களில் ஏன் பொதுமக்கள் வாழக்கூடாது என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் கொலன்னாவ ஆகிய அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் சிங்கள மக்கள் வாழ முடியுமாயின் ஏன் தமிழ் மக்கள்
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வாழக்கூடாது.
கிழக்கில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் வகையில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக பேராசிரியர்களின் மனித
உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இத்தகைய ஓர் சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு சார்பாக தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என எவ்வாறு கருத முடியும்.
துணை இராணுவக் குழுக்களின் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை பறித்தெடுக்க முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தல்கள் நடைபெற்றால் ஒருபோதும் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்க
மாட்டார்கள்.
மகிந்த சிந்தனையான பெரும்பான்மை இனத்திற்கும், மதத்திற்கும் மட்டுமே நன்மை பயக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இத்தகைய
கொள்கையுடைய அரசாங்கத்திற்கு எவ்வாறு தமிழர்கள் வாக்களிக்க முடியும்.
1981 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி தேர்தல்களில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் வவுனியா
ஆகிய தொகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றி பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
ஏனெனில் அந்தக் காலத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறையில் போட்டியிடவில்லை.
துணை இராணுவக் குழுக்களின் மீது நம்பிக்கை வைத்தே அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் எனக் கருதுகின்றது.
தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
கேள்வி: தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிறிலங்கா காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம்கள் அகற்றப்பட்டமை குறித்து
உங்களது கருத்து என்ன?
பதில்: இது குறித்து எனக்குத் தெளிவாக தெரியாது. எனினும், துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு அதிரடிப்படையினர் தடையாக
இருக்கக்கூடும் என்பதாலேயே அவர்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடாத காரணத்தில் உங்களின் ஆதரவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி கவனம் செலுத்தவில்லையா?
பதில்: ஆம். எனினும், எம்மைப் பொறுத்த வரை இது ஓர் புத்திசாதூரியமான தேர்தல் உபாயமாக கருதுகின்றோம். சில அடிப்படை கொள்கைகளிலிருந்து
விலகிச் செயற்படுவதில் எமக்கு உடன்படில்லை. குறிப்பாக சிலவற்றை விட்டுக் கொடுப்பதன் மூலம் அரசாங்கம் கிழக்குத் தேர்தல்களை நியாயப்படுத்த
ஏதுவாக அமைந்துவிடும்.
எங்களின் ஆதரவாளர்கள் இந்த அரசாங்கம் பற்றி நன்கு அறிவார்கள் எனவே, இந்தத் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி
அவர்கள் சரியான தீர்மானம் எடுப்பார்கள்.
கேள்வி: நீங்கள்- ஐக்கிய தேசியக் கட்சி- சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு உங்களின் ஆதரவாளர்களிடம்
கோரியிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து?
பதில்: நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காகவோ அல்லது வேறு எந்தவொரு அரசியல் கட்சிக்காகவோ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
எனினும், இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது எமது மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இருப்பினும்
மக்கள் சுயாதீனமான தீர்மானத்தை எடுக்கக்கூடிய சூழ்நிலை இருக்குமா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
சுதந்திரமான, செயற்திறண் மிக்க தேர்தல் அவதானிப்பாளர்கள் உள்ளனரா என்பது பற்றி எமக்குத் தெரியாது.
சில தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறித்து ஏற்கனவே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்பது பற்றி சொல்ல முடியாது.
எனினும், இதுவரையில் மிகக் கடுமையான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதாக தெரியவில்லை.
கேள்வி: சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்தியாவின் தலையீட்டின் மூலம் கிழக்குத் தேர்தல்களை நிறுத்த முயற்சிகள்
மேற்கொண்டனர். எனினும் அது பலனளிக்கவில்லை. உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பதில்: எமது நிலைப்பாட்டை நாம் இந்தியாவிற்கு தெரிவித்தோம். இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு - கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதனையே
இந்தியா விரும்புகின்றது. மகிந்த அரசாங்கம் இந்தியாவுடனான நட்புறவு காரணமாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறிச் செயற்படாது. கிழக்குத்
தேர்தலானது வடக்கு - கிழக்கு மாகாணத்தை மீள இணைப்பதற்கு ஒரு தடையாக அமையாது என்பதே எமது கருத்தாகும்.
கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து, வடக்கு - கிழக்கு மாகாண பிரிப்பு போன்றைவை தொடர்பாக இந்திய அரசாங்கம் எவ்வித கருத்தையும்
தெரிவிக்கவில்லை. இது குறித்து உங்களின் கருத்து?
பதில்: இந்தியா மௌனம் சாதிக்கின்றது என்று குறிப்பிட முடியாது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்து இந்திய நிச்சயம் கருத்து தெரிவிக்கும்.
ஆனால் எப்போது எவ்வாறு என்பதே கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி: வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து பொதுவாக தமிழ் மக்களினதும், உங்களின் கட்சியினதும் நிலைப்பாடு என்ன?
பதில்: அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளின் மூலம் எவ்வித பயனும் எட்டப்படபோவதில்லை. வடக்கு - கிழக்கை மீள ஒன்றிணைப்பதற்காக சட்ட
ரீதியாக போரட்டங்களை நாம் கடுமையாக முன்னெடுப்போம். சமாதான முன்னெடுப்புக்களின் மைல்களாக நாம் வடக்கு - கிழக்கு இணைப்பை
கருதுகின்றோம். இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இது குறித்து அழுத்தம் கொடுத்து வந்தன.
கேள்வி: மனித உரிமை தொடர்பான விவகாரங்கள் மோசமடைந்து வரும் வேளையில், அனைத்துலக சுயாதீன வல்லுநர்கள் குழுவும்
வெளியேறியுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து?
பதில்: அனைத்துலக சுயாதீன வல்லுநர்கள் குழுவின் நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாகவே இருக்கின்றனர். சுயாதீன குழுவின் வல்லுநர்
சிறிலங்காவில் பணியாற்ற முடியாதுள்ளமை ஒர் துர்ப்பாக்கிய நிலையாகவே நாம் கருதுகின்றோம். இந்த நிலைமையானது சிறிலங்கா தொடர்பான
அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பை மேலும் வலுவிழக்கச் செய்யும்.

கொசொவோ விளைவுகள்:ENB
ஜோர்ஜியாவின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
[01 - May - 2008]
*ரஷ்யா எச்சரிக்கை திபிலிசி : ஜோர்ஜியா தனது பிரிந்து போன இரு மாகாணங்களுக்கெதிராக படைப்பலத்தை பிரயோகிக்குமானால் அதற்குப் பதிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து போன மாகாணங்களான அப்ஹாஸியா மற்றும் ஒஸிரியாவின் தென்பகுதியில் ரஷ்யா தனது படைப்பலத்தை
அதிகரிப்பதாகக் கூறி அப் பிராந்தியத்தின் மீதான படையெடுப்பிற்கு ஜோர்ஜியா தயாராகுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இப்பதற்றமான சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்திலுள்ள படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவேகமற்ற செயலென
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது நாடு போருக்கு தயாராகவில்லையென தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், ஆனால் எந்தவொரு தாக்குதலுக்கும்
பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பான ரஷ்ய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்ஹாஸியாவுக்கெதிராக இராணுவ தாக்குதல்களை
ஆரம்பிப்பதற்கு ஜோர்ஜியா தயாராகி வருகிறது.
அப்ஹாஸியாவிலும் தென் ஒஸிரியாவிலும் ரஷ்ய அமைதிப் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தமைக்குப் பதிலாகவே ஜோர்ஜியா இந்
நடவடிக்கையை மேற்கொள்கிறதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இப் பிராந்தியத்தில் தமது படைப்பலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள
ஜோர்ஜியா,ரஷ்யா கோபமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் இந்நடவடிக்கை பிராந்தியத்தில் பேரிழப்புகளை ஏற்படுத்தும். இப்போதிலி அப்ஹாஸியாட மற்றும் தென் ஒஸிரியாவிற்குள்
நுழையும் ஒவ்வொரு ரஷ்ய படையினரும் அல்லது இராணுவ உபகரணங்களும் எமது நோக்கில் சட்ட ரீதியற்றதாகவும் படையெடுப்புக்கான
அறிகுறியாகவுமே கருதப்படுமென ஜோர்ஜிய பிரதமர் லடோ குஜினிட்ஸி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான
தலைமையதிகாரி ஜே.வியர் சொலானா ரஷ்யா பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோர்ஜியாவிலிருந்து அப்ஹாஸியா மற்றும் தென் ஒஸிரியா ஆகியவை பிரிந்த பின்னர் ரஷ்யாவுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையொன்றின்
பிரகாரம் அப்ஹாஸியாவிலும் தென் ஒஸிரியாவிலும் ரஷ்யாவின் அமைதிப் படைகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: