Saturday 3 May, 2008

தமிழகத்தில் மக்கள் தளம் அமைப்போம்! ஆளும் திராவிடத் தரகர்களை தனிமைப்படுத்துவோம்!!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

தமிழகத்தில் மக்கள் தளம் அமைப்போம்!

ஆளும் திராவிடத் தரகர்களை தனிமைப்படுத்துவோம்!!

_____________________________________________

அரசியல் அம்பல நகைச்சுவைச் சித்திரம்: கடுகு.கொம்

வைகோ கைது..... திடீர் பரபரப்பு!

கோப்பு வகை: அரசியல் — கடுகு.காம் @ 9:19 நான் Tags: MDMK, Vai Gopalsamy, Vaigo, Vaiko
இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் வைகோ தமது மகன், பேரன் பேத்திகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்திருந்தார். பேரன்,
பேத்திகளுக்கு ஒவ்வொரு விலங்கையும் காட்டி விவரம் சொல்லிக்கொண்டு இருந்த போது அவரது செல்பேசி அழைத்தது, எடுத்துப் பேசினார்.
சில வினாடிகளே நீடித்த அந்த செல்பேசி உரையாடல் முடிந்த சில நிமிடங்களில் அதிரடியாக உயிரியல் பூங்காவினுள் நுழைந்த காவல் துறையினர்
வைகோவை கைது செய்தனர்.
வைகோ கைது : காரணம் என்ன? : வண்டலூர் பூங்காவில் அவருக்கு வந்த செல்பேசி அழைப்பே அவரது கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.
அந்த உரையாடலின் போது மறு முனையில் பேசியவர், ‘நீங்க எங்கே இருக்கீங்க?’ என்று கேட்டிருக்கிறார். வைகோ தாம் புலியின் அருகில்
இருப்பதாகவும் குழந்தைகளுக்கு புலிகளைப்பற்றி விளக்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
வைகோவின் செல்பேசியை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு
கொண்டிருந்த குற்றத்திற்காகவும், குழந்தைகளிடம் புலிகளைப்பற்றி பிரச்சாரம் செய்ததற்காகவும் வைகோவை கைது செய்தனர்.
வைகோவின் செல்பேசி உரையாட‌ல் ப‌திவு அவ‌ருக்கு எதிரான‌ உறுதியான‌ சாட்சியாக‌ இருக்கும் என‌ பெய‌ர் வெளியிட‌ விரும்பாத சென்னை மாந‌க‌ர‌
காவ‌ல்துறை ஆணையர் தெரிவித்தார்.
செய்தி அறிந்த‌ ம‌.தி.மு.க‌ தொண்ட‌ர்க‌ள் வ‌ண்ட‌லூர் பூங்காவினுள் சென்று காவ‌ல்துறையின‌ருட‌ன் வாக்குவாத‌ம் செய்த‌ன‌ர். மேலும் அவ‌ர்க‌ள் அங்கு
சிறிது அடாவ‌டித்த‌ன‌மும் செய்த‌ன‌ர். காவல் துறையினர் அவ‌ர்க‌ளைப் பிடிக்க‌ முய‌ன்ற‌ போது உயிரிய‌ல் பூங்கா வில‌ங்குக‌ளுக்கு ம‌த்தியில் போய்
நின்று கொண்டனர். அவ‌ர்க‌ளை அடையாள‌ம் காண்பது இய‌லாத‌ காரிய‌ம் என்ப‌தால் காவ‌ல்துறையின‌ர் ஏமாற்ற‌த்துட‌ன் திரும்பின‌ர்.
வைகோ கைது பகுதி 2 நாளை வெளிவரும்.
இன்றே விஜயம் செய்வீர் கடுகு.காம்

வைகோ கைது.... 2
03-05-2008
நேற்று கைது செய்யப்பட்ட வைகோ உடனடியாக வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் புலிகளுக்கு ஆதரவு விஷயத்தில் வைகோ கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கிலியடித்த பல தமிழக அரசியல் தலைவர்கள் தமது புலி ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி புலி எதிர்ப்பாளர்கள் ஆகிவிட்டனர்.
வைகோ கைது குறித்து அரசியல்வாதிகள் கருத்து……………
கலைஞர்…..
‘நெஞ்சணையில் இருந்தவராயினும், பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்க முற்பட்ட வஞ்சகரை பஞ்சணையில் இருத்தியா அழகு பார்க்க முடியும்?’
என்று கலைஞர் தமது உடன்பிறப்புக்கான கடிதத்தில் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து உணவு விடுதிகளிலும் புளி சாதத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் கருணாநிதி அறிவித்தார்.
மேற்கு மாம்பலத்தில் புளிக்காய்ச்சல் தயாரித்து விற்ற ஆறு பார்ப்பனர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சரத்குமார்…..
வைகோ கைது நடவடிக்கை ஒரு கண்துடைப்பு என்று சரத்குமார் கருத்து தெரிவித்தார். புளி சாதத்தை தடை செய்த தமிழக அரசு புலிநகம்
விற்பனைக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
விஜய டி.ராஜேந்தர் தனது வழக்கமான அடுக்கு மொழி வசனத்தில் வைகோ கைது பற்றி பேசி கிலி ஏற்படுத்தினார்.
இவரு ஆதரிச்சது புலிமூக்குல வர்றது சளிகுழம்புல போடறது புளிஇன்னிக்கி கெழமை வெள்ளிகலைஞர் வச்சாரு புள்ளிபோலீசு தூக்கிட்டாங்க அள்ளிஏ……டண்டணக்கா…..டணக்கண‌க்கா…….
தொல்.திருமாவ‌ள‌வ‌ன்….
வைகோ கைது ந‌ட‌வ‌டிக்கை தேவையான‌ ஒன்று என்று குறிப்பிடுகிறார் திருமாவ‌ள‌வ‌ன். கூட்ட‌ணி த‌ர்ம‌த்திற்காக‌ த‌ம‌து புலி ஆத‌ர‌வு நிலையிலிருந்து
சற்றே மாறி புலி எதிர்ப்பாளராக ஆகி விட்டதாகவும் கூறினார்.
வாட்டமாகக் காணப்பட்ட அவரிடம் சோர்வுக்குக் காரணம் கேட்டபோது, மதியம் உட்கொண்ட ‘புளிக்குழம்பு’ ஒத்துக் கொள்ளாமல் பேதி ஆகிவிட்டதாக கூறினார்.
விஜயகாந்த்…..
த‌ம‌து தொலைபேசியும் ஒட்டுக்கேட்க‌ப்ப‌டுவ‌தால் தானும் எந்த‌ நேர‌மும் வேலூர் செல்ல‌லாம் என்று ந‌ம்புவ‌தாக‌ தெரிவித்தார். தாம் புலிக‌ளை
எப்போதும் ஆதரித்த‌‌தில்லை என்றும் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளையே ஆத‌ரித்த‌தாக‌வும் குறிப்பிட்டார்.
மருத்துவர் ராமதாசு……
இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் க‌ண்ணீரைத் துடைக்க‌ ச‌ரியான‌ வ‌ழி போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துவ‌தே என்றும் வைகோவின் புலி ஆதரவு பிரச்சாரம் பயன் தராது
என்றும் மருத்துவர் ராமதாசு கூறுகிறார்.
தாம் ஒரு ம‌ருத்துவ‌ர் என்ற‌ முறையில் உடலுக்கு தீங்கு செய்யும் புளியை உண‌வில் சேர்த்துக்கொள்ள‌க் கூடாது என்று த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை
அறிவுறுத்துவ‌தாக‌ கூறினார். புளியை த‌டை செய்ய‌க்கோரி த‌மிழ‌க‌மெங்கும் போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப் போவ‌தாக‌வும் தமது தைலாவரம் தோட்டத்தில்
புளிய‌மரங்கள் அனைத்தும் வெட்டி வீசப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
ஜெயலலிதா…..
தமது தத்து சகோதரரும் கூட்டணிக்கட்சித் தலைவருமான‌ வைகோ கைது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட ஜெயலலிதா, திமுக அரசு
புலிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக குற்றம் சாட்டினார். கருணாநிதி ‘பாயும் புலி பண்டாரக வன்னியன்’ என்ற புத்தகத்தை எழுதி இருப்பதாகவும்
அவரது புலி ஆதரவு நிலைக்கு இதுவே சான்று என்றும் கூறினார்.
தமிழ் நாட்டில் எந்த பெட்டிக்கடையிலும் ‘டைகர் பிஸ்கட்’ கிடைக்கும் நிலை உருவாகி விட்டதைச் சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, திமுக அரசை
கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் (என்று நம்பப்படும்) கிருஷ்ணசாமியின் கருத்து…..
தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் விற்கப்படும் ‘டைகர் பாம்’ தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது போல ‘புலிக்குண்டு’ தமிழகத்தில் புழங்குவது கவலைக்குரியது என்றும் வ‌ருந்தினார்.

குறிப்பு:தமிழகத் தமிழரை விற்றுப் பிழைத்தவர்கள், ஈழத்தமிழர்களின் இரத்தம் தோய்ந்த விடுதலைப் போரை, வியாபாரம் செய்வதை தோலுரித்துக் காட்டியமைக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் எமது நன்றி.
சகோதர தறுதலைகள்

Friday, May 2, 2008

சென்னையில் நாளை உண்ணாப்போராட்டம்

- பெ.மணியரசன் அறிக்கை
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துப் போராடியோரைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை சென்னையில் உண்ணாப் போராட்டம் -பெ.மணியரசன் அறிக்கை

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பைக் கண்டித்துக் கடந்த 25 மொழிப்போர் நாளன்று சென்னை கோயம்பெடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவுப்
பேருந்தகளில் தமிழாக்கம் கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்த ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப்
பொதுவடைமைக் கட்சித் தோழர்கள் நடத்தினர். அப்போது கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளா தேன் தமிழ்வளவனும் மற்றம் காவலர்களும் அமைதியாகப் போராட்ட்ததில் ஈடுபட்ட
தோழர்களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தடியால் அடித்துப் படுகாயப்படுத்தினர். ஒரு தோழருக்குக் கை எலும்பு முறிந்தது. காவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு, அடையாளப்பூர்வமாக ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழித்தத் தோழர்களை
சட்டத்திற்கு புறம்பாகத் தடியடி நடத்தியும் இழிவான சொற்களில் திட்டியும் அராஜகம் புரிந்த ஆய்வாளா தேன் தமி்ழ்வளவன் உள்ளிட்டோரை
இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்த்தெசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் கடந்த
இருமாதங்களுக்கு முன்பேயே உண்ணாப்போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் அதற்கு அனுமதி அளித்த காவல்தறை பின்னர்
அப்பபோராட்டத்திற்கான அனுமதியை போராட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாளில் அவரசக் கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதி மறுத்தனர்.
அதன்பிறகு நீதிமன்றத்தில் த.தே.பொ.க. வழக்குத் தொடுத்தது. அதன் பயனாக 03-05-3008 சனி காலை 9.00 மண முதல் மாலை 6.00 மணி வரை
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாப்போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. உண்ணாப்போராட்டத்திற்கே
காவல்துறை அனுமதி மறுத்ததும் அதனை தகர்த்தெறிந்து இப்போராட்டம் நடைபெறுவதாலும் இப்போராட்டம் எழுச்சியடன் நடைபெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க.இயக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் இப்போராட்டத்தில்
பங்குபெற சென்னை வருகிறார்கள். இவ்வுண்ணாப்போட்டத்தைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு த.வெள்ளையன் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவாகள் முடித்து வைக்கிறார். ம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர்
தியாகு, தமிழர் கழகத் தலைவர் திர இரா.பாவாணன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன்,
மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிஞர் தமிழெந்தி, புலவர் கி.த.பச்சையப்பனார் உள்ளிட்டோர் கண்டன
உரையாற்றுகின்றனர். இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். தோழமையுடன்தோழர் பெ.மணியரசன் பொதுச் செயலாளர்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

குறிப்பு: மணியரசன் அறிக்கையின் மொழிப் பிழைகள் மூலப்பிரதியில் உள்ளவை!!

No comments: