Wednesday 7 May, 2008

தாயக கோட்பாட்டை சிதைக்கும் கிழக்குத் தேர்தல்.

தாயகக் கோட்பாட்டை சிதைக்க சிங்களம் நடத்தும் "கிழக்கு தேர்தலை முற்றாக புறக்கணிப்போம்":
திருமலை தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் [செவ்வாய்க்கிழமை, 06 மே 2008, 08:06 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] புதினம் இணைய தளம்
"கிழக்கு மாகாண சபைத் தேர்தல்" என்கின்ற சிறிலங்கா அரசின் தேர்தலானது தமிழீழத் தாயகக் கோட்பாட்டினை சிதைக்கும் ஒரு சதிமுயற்சியே- அதனை முற்றாகப் புறக்கணிப்போம் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை இன்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்கின்ற பேரில் சிங்கள இனவெறியரால் நடத்தப்பட இருப்பது தமிழின அழிப்பின் ஒரு உச்சகட்ட செயற்பாடு என்பதனை சகலருக்கும் அறியத்தர விரும்புகின்றோம்.
இத்தேர்தல் நயவஞ்சகம் நிரம்பியதொரு அரசியல் மோசடி.
எமது கண்களை எமது விரல்களைக்கொண்டு அழிக்கும் நரித்தந்திரம் நிரம்பிய நாசாகார முனைப்பு.
தமது மிக நீண்டகால விருப்பினை சிங்களம் நிறைவேற்ற விரும்பும் ஒரு சதி வழிமுறை.
எனவே இத்தேர்தலை முற்றாக புறக்கணித்தல் தமிழ்த் தேசியப்பற்றின் முதன்மைக் கடமை என்பதனை வலியுறுத்துகின்றோம்.
இத்தேர்தலில் எந்த வகையில் தெடர்புபடல்- பங்குபற்றுதல் என்பன எல்லாமே தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்கு அதன் தேசியத்திற்கு செய்யும் பெரும் தீங்காகவே முடியும் என்பதனை உரைத்து இங்கு சொல்கின்றோம்.
சிங்கக்கொடியினை அகற்ற முயன்று இனமானச் சாவடைந்த நடராஜன் மாண்ட திருமலை மண் ஒருபோதும் மாற்றான் சதிக்கு மண்டியிடபது என்பதனை திடத்துடன் உரைக்கின்றோம்.
தமிழீழ மண் ஒருபோதும் பறிபோக அனுமதியோம். அதற்கு துணை போவோரை வரலாறு மன்னிக்காது என்பதனையும் மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோம்
இத்தேர்தல் என்பது எத்தகைய இரகசிய அரசியல் இழிநோக்கைக் கொண்டது என்பதும் மகிந்த அரசு 2006 இல் தொடங்கிய போரின் நீட்சியாகவே இத்தேர்தல் அமைகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை குண்டு தாக்குதலுடன் சிங்களவர்களுக்கும் தொடர்புண்டு ஒரு மாதத்தில் 121 படையினர் பலி -பிரதமர்
வீரகேசரி இணையம் 5/6/2008 8:45:58 PM
கத்தோலிக்கர்களின் புனித பிரதேசமான மடு தேவாலயத்தை படையினர் கைப்பற்றியதற்கு பதிலடியாகவே பிலியந்தலையில் பயணிகள் பஸ்ஸில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் சிங்களவர்களும் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் விசாரணைகள் தொடர்வதனால் இது குறித்து மேலதிக விபரங்களை வெளியிடமுடியாதுள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் படைத்தரப்பில் 121 பேர் பலியானதுடன் 745 படையினர் காயமடைந்துள்ளனர். இதேவேளை பொதுமக்கள் 56 பேர் பலியானதுடன் 145 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: படையினர் களத்தில் முன்னின்று போராடி கொண்டிருக்கின்ற நிலையில் மக்கள் ஆணையை பெற்ற அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். அத்துடன் சகல சக்திகளும் அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும். தனிப்பட்ட போராட்டத்தின் மூலமாக வெற்றிபெற முடியாது. தெற்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கிழக்கில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சகல சக்திகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கிழக்கில் ஜனநாயகத்திற்கான ஒளிக்கதிர்கள் விழுந்துள்ளன. துப்பாக்கி ரவைகளுக்கு வாக்கு சீட்டுக்கள் மூலமாக பதில் கிடைக்கும். வடக்கில் பயங்கரவாதிகளுக்கு இராணுவ நடவடிக்கையின் மூலமாக பதில் கிடைக்கும். பயங்கரவாதிகளின் பிரசாரத்திற்கு எதிராகவும், பிறந்த மண்ணிற்கு துரோகம் இழைப்போருக்கு எதிராகவும் அரசாங்கம் செயற்படுவதுடன் வடக்கில் மக்களை மீட்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் படையினர் மடுதேவாலயத்தை கைப்பற்றியதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் பிலியந்தலையில் பயணிகள் பஸ் மீது தாக்குதலை மேற்கொண்டனர். கொடூரமான இந்த தாக்குதலுடன் சிங்களவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது.தங்களின் பலவீனத்தையும், தோல்வியையும் மறைப்பதற்காகவே பயங்கரவாதிகள் சாதாரண மக்களின் உள்ளத்தை பாதிக்கின்ற வகையில் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். சிங்களவர்களின் உதவியுடன் பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த பல தாக்குதல்களை புலனாய்வு துறையினர் செயற்பாட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டன.
தரைமார்க்கமாகவும், ஆகாய வழியாகவும் மேற்கொள்கின்ற தாக்குதல்களினால் பயங்கரவாதிகள் பின்வாங்குகின்றனர். அதனை படையினர் திறம்பட செய்து கொண்டிருக்கின்றனர். பலியாகின்ற, காயமடைகின்ற படையினரின் எண்ணிக்கையை கணக்கிடும் கணக்கீடுகளை நிறுத்துவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. இறப்பிற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். அதனை படையினர் முன்னெடுக்கின்றனர்.

No comments: