Thursday, 15 May 2008

விண்ணை எட்டிய அதிகாரம்

ஈபிடிபி முக்கியஸ்தர் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டார்
≡ Category: ஜெயபாலன் த, செய்திகள் ≅ தேசம் நெற்
ஈபிடிபி முக்கியஸ்தர் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். சுகவீனமுற்று இருந்த தாயாரை பார்ப்பதற்காக அவரது சொந்த ஊரான கரவெட்டிக்குச் சென்றிருந்த போதே அங்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இரவு 7.45 அளவில் இராணுவ உடையில் வீட்டை சோதனையிடப் போவதாக கூறி உள்ளே சென்ற நபர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தபின் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மகேஸ்வரி வேலாயுதத்துடன் அவரின் சகோதரரும் கரவெட்டிக்குச் சென்றிருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரது கட்சி உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகளாக இருந்து வருகின்றனர். கரவெட்டிக்கு சில தினங்களுக்கு முன்னரே சென்று அங்கு தங்கி இருந்தமையே இவர் கொல்லப்படுவதற்கு ஏதுவாகி இருந்துள்ளது. கடவுள் பக்தையான இவர் தனக்கு எதுவும் நேராது கடவுள் காப்பாற்றுவார் எனத் தெரிவித்திருந்ததாக அவ்வூருவரும் அவரை நன்கு அறிந்தவருமான ஒருவர் தேசம்நெற்றிற்குத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவுடன் இணைந்திருந்த இவர் 1995 களின் பிற்பகுதியில் ஈபிடிபி உடன் தன்னை இணைத்து அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகவும் அமைச்சுக்களில் முக்கிய ஆலோசகராகவும் சட்ட ஆலோசகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: