Thursday 15 May, 2008

பிள்ளையானை முதல்வர் ஆக்குவோம்! பிரபாகரனைத் தேடி அழிப்போம்!!

முஸ்லிம் பிரமுகர்களின் இணக்கத்துடன் பிள்ளையானை முதலமைச்சராக்க முயற்சி [15 - May - 2008]
* சதிவலையில் சிக்க வேண்டாமென முஸ்லிம் அமைச்சர்கள் அறிவுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்காக முஸ்லிம் பிரமுகர்களிடம் வலுக்கட்டாயமாக இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் தீவிர முயற்சியில்
அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்த தந்திரோபாய வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென முஸ்லிம் பிரமுகர்களுக்கு முஸ்லிம் அமைச்சர்களினால் அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லாவுக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியை வழங்கி அவரை முதலமைச்சர் போட்டியிலிருந்து கழற்றிவிட்டு பிள்ளையானுக்கு
முதலமைச்சு பதவியை வழங்கவும் ஒரு தரப்பினரின் முயற்சி இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் இடம்பெற்று இன்று வியாழக்கிழமையுடன் 5 நாட்கள் நிறைவடைகிற போதிலும் முதலமைச்சரை நியமிப்பதில்
இழுபறி நிலை நீடிக்கிறது.
முதலமைச்சுப் பதவிக்காக முட்டிமோதும் ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கடுமையான கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதுடன்
தென்னிலங்கையிலும் முதலமைச்சர் தெரிவுப்போட்டி பாரிய எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
நேற்றும் கொழும்பில் அமைச்சர்கள் சிலர் கிழக்கு முதலமைச்சர் நியமனம் தொடர்பில் கூடிக்கூடி ஆராய்ந்துள்ளனர். எனினும், முஸ்லிம் அமைச்சர்கள்
தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் பலரின் விருப்பம் கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையானை நியமிக்க வேண்டுமென்பதேயாகும்.
எனினும், இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் சவாலாக விளங்குவதுடன், அரசாங்கத்திற்கு மறைமுக எச்சரிக்கையினையும் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கிழக்கு முஸ்லிம் பிரமுகர்களுடன் தொடர்புகொண்டு பிள்ளையானை
முதலமைச்சராக்குவதற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
சில அமைச்சர்கள் முஸ்லிம் பிரமுகர்களிடம் வலுக்கட்டாயமாக பிள்ளையானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடச் செய்யவும் முயன்றுள்ளனர்.
இதனையடுத்து, விசனமடைந்த முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தின் தந்திரவலையில் சிக்கிவிடக் கூடாதென முஸ்லிம் பிரமுகர்களுக்கு
அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, ஹிஸ்புல்லாவுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கிவிட்டு, பிள்ளையானுக்கு முதலமைச்சுப் பதவியை வழங்கவும் ஒருசாரார்
முயல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு நாடு திரும்புவாரென எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் முதலமைச்சர் பதவி தொடர்பாக ஆராயப்படவிருந்தது.
இன்று வியாழக்கிழமையும் ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சு பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்
அறியவருகிறது. இதேவேளை, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கமையவே தாம் கிழக்கு மக்களிடம் வாக்கு கேட்டதாகவும் அதற்காகவே முஸ்லிம்கள்
ஆதரவு நல்கியதாகவும் எனவே, ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக்குவது மிக அவசியமெனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக உள்ளோம்: சிறிலங்கா அரச தலைவர்
[புதன்கிழமை, 14 மே 2008, 08:03 பி.ப ஈழம்] [ப.தயாளினி]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஏனைய நாடுகள் கைக்கொண்ட, கையாண்டு வருகின்ற அதே ஜனநாயக வழிமுறைகளையே நாமும்
தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு உலகின் ஆதரவும் தேவைப்படுகின்றது.
புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வியடைவோமானால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகம் தோல்வியடைந்து விடும்.
எமது நாட்டின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கின்றது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் நாம் பெரும் இழப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
எமது படையினர் அப்பாவி மக்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கவோ அல்லது சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கோ செல்லவில்லை.
புலிகளை வெற்றிகொள்ள முடியாது எனப் பலர் குறிப்பிட்டாலும் அவர்களின் பயங்கரவாதத்திலிருந்து நாம் கிழக்கு மாகாணத்தை விடுவித்துள்ளோம்.
கடந்த வாரம் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலை நாம் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தியுள்ளோம்.
இதில் பல அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன.
புலிகளைத் தோல்வியடையச் செய்து நிராயுதபாணிகளாக ஆக்குவதற்கு எமது படையினர் முயற்சித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் இலங்கையில் உள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை வழங்கவும் நாம் உறுதியாக உள்ளோம்.
இராணுவத் தீர்வில் நான் நம்பிக்கை கொண்டவன் அல்ல. உண்மையான அரசியல் தீர்வுக்கான அவர்களின் நோக்கம், ஆயுதங்களைக் கைவிடுவதற்கான தயார்நிலை என்பன குறித்து உறுதியளிக்கும் போது நாம் அவர்களுடன் பேசத் தயாராகவே உள்ளோம் என்றார் மகிந்த ராஜபக்ச.

என்ன அழுத்தம் கொடுத்தாலும் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே இல்லை: சிறிலங்காப் பிரதமர் அறிவிப்பு
[புதன்கிழமை, 14 மே 2008, 06:32 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்]
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று
அந்நாட்டின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது:
பல வருடங்களாக புலிகளின் அச்சுறுத்தலுக்கு சிறிலங்கா உள்ளாகியுள்ளது.
இந்த நீண்டகால அச்சுறுத்தலை முழுமையாகத் துடைத்தெறியும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
புலிகள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அனைத்துலக சக்திகள் மூலமும் உள்நாட்டிலுள்ள சில சக்திகள் மூலமும் அரசாங்கத்தின் மீது
அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
தற்காலிக போர் நிறுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பாதுகாப்புப் பெற முயற்சிக்கின்றனர்.
எத்தகைய அழுத்தங்கள் வந்த போதிலும் புலிகளுடன் இன்னொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மகிந்த அரசாங்கம் ஒருபோதும்
தயாரில்லை.
புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கு இருந்தாலும் போதிலும்-(எங்கிருந்த போதிலும்)-நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் உதவியுடன் அவரைத் தேடியழிக்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இந்தப் பணியை எமது படையினர் விரைவில் செய்து முடிப்பார்கள் என்றார் அவர்.

No comments: