Friday 16 May, 2008

உலகைக் குலுக்கிய புலிகள்

புலிகளுடனான போரில் நாம் தோற்றால் பயங்கரவாதத்திடம் உலகம் தோற்றதாகும்
யாழ் உதயன் Posted on : Thu May 15 7:58:14 EEST 2008
புலிகளுடனான போரில் நாம் தோற்றால் பயங்கரவாதத்திடம் உலகம் தோற்றதாகும் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையில் ஜனாதிபதி மஹிந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும்.இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம்
செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.உலகில் ஜனநாயகமும் மனித வாழ்வியலுக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனியான
போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை நெருக்கடிக்கு பேச்சு மூலமான தீர்வைக் காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அங்கு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன்
பேச்சுகளை மேற்கொள்வதற்குத் தாம் மூன்று முறை முயற்சிகளை மேற்கொண்டனர் எனவும் எனினும் அவர்கள் அதற்குச் சாதகமான விதத்தில்
செயற்படாமல் போலியான சாக்குப் போக்குகளை முன்வைத்துச் பேச்சுகளிலிருந்து விலகிக்கொண்டனர் எனவும் குற்றம் சாட்டினார்.புலிகள் ஆயுதங்களைக் கைவிடதயார் என்றால் மட்டுமே பேச்சுஅரசியல் தீர்வில் விடுதலைப் புலிகள் நேர்மையான விருப்பம் கொண்டுள்ளனர் என்பதும், ஆயுதங்களைக் கைவிட அவர்கள் தயார் என்பதும் உறுதியான
பின்னரே அவர்களுடன் இனிப் பேச்சு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது இலங்கைக்கும், உலக நாடுகளுக்கும் கடும் சவாலாக அமைந்துள்ளது.இலங்கையில் ஊடக சுதந்திரம் காணப்படுகின்றது. ஊடகங்கள் என்னைத் தாக்காத ஒருநாள்கூடக் கிடையாது.இலங்கையில் பட்டினி நிலை என்பது கிடையாது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கும் தொடர்ந்து உணவு, மருந்து போன்றவற்றை
நாம் அனுப்பி வைத்துள்ளோம். அங்குள்ள சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசே சம்பளம் வழங்குகின்றது.சர்வதேச அளவில் சக மனிதர்கள், அவர்களது தேவைகள் ஆகியன குறித்து இலங்கை அக்கறை கொள்ளாத நாடு எனக் காட்டுவதற்கு முயற்சிகள்
இடம்பெறுகின்றன என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:எவ்.பி.ஐயினால் உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத இயக்கமென வர்ணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சவாலை துரதிஷ்டவசமாக நாங்கள்
எதிர்கொண்டுள்ளோம்.தற்கொலைக் குண்டுதாரி அங்கிகளை உருவாக்கியவர்கள் புலிகளேபெண்களையும், குழந்தைகளையும் கூட தற்கொலைத் தாக்குத லுக்குப் பயன்படுத்துவது அவர்களுக்கே உரிய பாணியாகக் காணப் படுகின்றது.
தற்கொலைக் குண்டுதாரி அணியும் அங்கியை உருவாக் கியது இந்த அமைப்பே. இதில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை ஏனைய பயங்கரவாத அமைப்பு களுக்கும் வழங்கி யுள்ளனர். இது தற்போது சர்வதேச பிரச்சினை யாக மாறியுள்ளது.வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பாட சாலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், குழந் தைகள் உட்படப் பலர் சன நெரிசல் மிக்க பகுதிகளில் வெடிக் கவைக்கப் பட்ட குண்டுகளாலும், மூளைச்சலவை செய்யப்பட்ட தற்கொலைக் குண்டுதாரி களால் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பயங்கரவாதக் குழுவிற்கு உத் வேகத்தை அளிக்கின்ற கொடூரத்தை உணர்வ தற்கு எரியுண்ட தசைகளையும், துண்டிக்கப் பட்ட
உடற்பாகங்களையும் நாம் பார்க்க வேண்டும்.இவர்கள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார் கள், ரணசிங்க பிரேமதாஸவைக் கொலை செய்தார்கள், சமீபத்தில் தமிழ் பேசும் கத்தோலிக்கரான எனது
அமைச்சர் ஒருவரைக் கொலை செய்தனர்.எம்மால் முடிந்தவரை இந்தக் குழுவை எதிர் கொள்வதும், இலங்கை மக்களையும் அவர்களது ஜனநாயக வாழ்க்கை முறைமையையும் பாது காக்க அரசின் சகல வளங்களையும் பயன்ப டுத்துவதும் மிக முக்கியமானவையாகவுள்ளன. நான் இப்போது எடுத்துள்ள நடவடிக்கை கள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட நாடுகள் முன்னர் எடுத்த நடவடிக்கைகளில் இருந்தும் தற்போது
எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்தும் வேறுபட்டவையல்ல.சர்வதேசத்தின் ஆதரவு தேவைஉலகம் இதுவரை சந்தித்துள்ள மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பு விடுத லைப் புலிகளே என்பதையும் அதனைத் தோற்கடிப்பதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்பதையும் நாம் தெரிவிக்க வேண்டும்.உலகில் ஜனநாயகமும் மனித வாழ்க்கைக் கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இந்தப் பயங்கர வாத அமைப்பிற்கு எதிராகப் தனியாகப் போராடுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் தோற்றால் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்; ஜனநாயகம் பலியாகினதாகிவிடும். இதுவே வெளிப் படையான உண்மை.எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் துர திஷ்ட வசமாகத் தடைகளை எதிர்கொண் டுள்ளன. இதில் முக்கியமானது பயங்கர வாத அச்சுறுத்தலாகும்.
இதன் காரணமாக அபி விருத்தியடைந்துவரும் நாடு என்ற வகை யில் நாம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.உலகம் காட்டுமிராண்டித்தனமான தற் கொலைக்குண்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஒருமித்த குரலில் தனது எதிர்ப்பைத் தெரி விக்கவேண்டும்.தமது அரசியல் உணர்வுகளை இவ்வா றான விதத்தில் வெளிப்படுத்துவது நாகரிக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதைத் தெரிவிக்க
வேண்டும்.அப்பாவி மக்களையும் அவர்களது சாதா ரண வாழ்க்கை முறையையும் பாதுகாக்கும் நோக் குடன் செயற்படும் எனது நாட்டின் பாதுகாப்புப் படையினர்
கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.பொதுமக்களை காக்கவேண்டியது அரசின் கடமைஎமது படையினர் அப்பாவிகளைத் துன்புறுத்துகின்ற அல்லது சிறுபான்மை யினத்தவர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
இதனைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தமது உயிரையே பணயம் வைக்கின்றனர்.விடுதலைப் புலிகளால் உருவாகியுள்ள அச்ச சூழ்நிலை காரணமாக சிலவேளை களில் கணிப்பீடுகள் பிழைக்கின்றன.இவ்வாறான சூழ்நிலைகளில் பயன்படுத்து வதற்கென சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள் ளப் பட்ட தீர்வுகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையா கும். எங்கு தாக்கு வது என முதலில் தீர்மானிப்பது பயங் கரவாதிகளே. இடத்தையும், சந்தர்ப் பத் தையும் தீர்மானிப் பதும் அவர்களே.ஜனநாயக அர சைக் கட்டுப்படுத் தும் விழுமியங்க ளும், நடைமுறைக ளும் அவர்களைக் கட்டுப்படுத்துவ தில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இப்படிக் கூறி னார் ஜனாதிபதி.

No comments: