சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் தாக்கியழிப்பு
13 படையினர் பலி- ராடார், 3 உடலங்கள் உட்பட ஆயுதங்கள் மீட்பு
[வியாழக்கிழமை, 29 மே 2008, 05:24 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம் இணைய தளம்
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார், 50 கலிபர் துப்பாக்கி, வெடிபொருட்கள், 3 உடலங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ( 5 ஆம் இணைப்பு: படங்கள், படையினரின் 3 உடலங்கள் மீட்பு, ஆயுதங்கள் விபரம், வரைபடம்) யாழ். நகரில் இருந்து 1 கிலோ மீற்றர் தெற்கில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளம் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:25 மணிக்கு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் அதிரடித் தாக்குதலை தொடுத்துள்ளனர்.
இத்தாக்குதல் அதிகாலை 2:00 மணிவரை நீடித்துள்ளது.
மண்டைதீவுக்கும் யாழ். நகருக்கும் இடையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் முட்கம்பிவேலிகள் கடலில் சுற்றிவர அமைக்கப்பட்டு ராடார் அவதானிப்புக்களுடன் அதிகூடுதல் பாதுகாப்புக்களுடன் அமைந்துள்ளது. இதற்கு மிக அருகாமையில் மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினரின் பாரிய "வேலுசுமண" தளம் அமைந்துள்ளது. இதிலும் ராடார் தளம் மற்றும் கடற்கலங்களின் தரிப்பிடமும் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தளமாக யாழ். நகரத்துக்கு தெற்காக இத்தளம் உள்ளது.
யாழ். கடலேரியின் முழுமையான பாதுகாப்பை இந்த இரு தளங்களும்தான் உறுதிப்படுத்தி வந்துள்ளன.
மேலும் யாழ். நகரின் கரையோரத்திலும் அதிகளவில் சிறிலங்கா தரைப்படை நிலைகள், மோட்டார் நிலைகள் என்பனவும் இருக்கின்றன.
இவற்றுக்கு மத்தியில் சிறுத்தீவு கடற்படைத் தளத்திற்கு கடற்புலிகளின் படைக்காவிப் படகுகளில் சென்று தரையிறங்கிய கடற்புலிகளின் சிறப்பு
கொமாண்டோ தாக்குதல் அணிகள், தாக்குதலை நடத்தி அதற்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர்.
கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் சகிதம் சென்ற இந்த கொமாண்டோ அணியினர், அங்கிருந்த சிறிலங்கா கடற்படையினரை தாக்கி, தளத்தை 35
நிமிடநேரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது படைத்தளத்தை தாக்கி அழித்து படைப்பொருட்களை கைப்பற்றிய கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினர்
வெற்றிகரமாக தளம் திரும்பியுள்ளனர்.
இத்தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர். மேலும் பல படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் கொல்லப்பட்ட 3 கடற்படையினரின் உடலங்கள், பெருமளவிலான படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளால்
கைப்பற்றப்பட்டகைப்பற்றப்பட்ட படைக்கலங்கள் விபரம்:
ராடார் - 01, 50 கலிபர் ரக துப்பாக்கி - 01, பிகே எல்எம்ஜி - 01, ஏகே எல்எம்ஜி - 01, 60 மில்லி மீற்றர் எறிகணை மோட்டார் - 01, 40 மில்லி மீற்றர்
குண்டு செலுத்தி - 01 மற்றும் பெருமளவிலான படை வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் நெடுந்தீவு சிறிலங்கா கடற்படையினரின் "குயின்ராக்" தளம் கடற்புலிகளின் ஈருடக தாக்குதல் அணியினரால் அழிக்கப்பட்டு ராடார்கள், 50 கலிபர் ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்களை கைப்பற்றி வெற்றிகரமாக தரையிறங்கியதன் பின்னர் யாழ். நகருக்கு நெருக்கமான கடற்படைத்தளம் இன்று அழிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்களை ஏமாற்றும், பக்ச பாசிஸ்டுக்களின் படுவாந்திரப் பொய்!
3 LTTE boats destroyed, 15 killed in Army-Navy counter attacks- Jaffna [2nd Lead]Army and Navy troops deployed at the Chiraththivu islet, Jaffna sprung an ambush killing at least 15 terrorists as troops claimed to have thwarted a pre-dawn LTTE infiltration attempt at the combined military detachment located between the Jaffna mainland and the Mandathivu island today (May 29).
One soldier was killed while another 2 suffered injuries in this incident. Two navy sailors and an army soldier reported missing in action, military sources added.
Later troops also have reportedly repulsed a second wave of offensive launched by LTTE in six boats towards the islet from non-liberated Ponneryn area, as sources said 3 LTTE boats destroyed and another heavily damaged and sunk in the shallow waters at around 2a.m. Troops have also mounted heavy artillery attacks towards the fleeing terrorists as enemy fatalities were expected to soar, military source said.
Chiraththivu is a small islet located in close proximity of the Jaffna- Mandathivu causeway.
Security Forces are now engaged in search operations in the area, while a military official said that efforts are been made to recover another LTTE boat partially sunk in the shallow waters off the Chiraththivu islet
பக்சபாசிஸ்டுக்களுக்கு பக்கப் பாட்டுப் பாடும் ஏகபோக செய்தி நிறுவனங்கள்
Sri Lanka military sinks 4 Tamil rebel boats
Associated Press Writer Thu May 29, 5:46 AM ET
Sri Lanka's military sank four Tamil Tiger rebel boats Thursday off the island's northern coast after a battle that killed eight rebels and one soldier, while six civilians were killed in a rebel artillery attack, the military said.
A military official said the rebel boats were sunk when troops fired artillery at them as they attempted to attack army and naval positions in Sirutheevu off northern Jaffna.
The battle left eight rebels and one soldier dead and two soldiers wounded, the official said, speaking on condition of anonymity citing government rules. He said one soldier and two sailors were missing.
Also Thursday, air force helicopters and jets bombed a rebel gathering point in northern Mannar district and two camps in Mullaitivu district, the official said.
He said the raids were successful but did not give details of casualties or damage.
Meanwhile, six civilians were killed Thursday in rebel artillery fire in three villages on the Jaffna peninsula, the official said.
A rebel spokesman could not immediately be reached for comment.
However, a pro-rebel Web site reported that the guerrillas raided a navy camp Thursday in Sirutheevu islet, killing 13 sailors and seizing weapons.
Tamilnet.com said the rebels did not suffer casualties. The site also reported two civilian deaths due to artillery fire in Jaffna, but did not say who fired the shells.
The military said 20 insurgents and one soldier were killed in fighting Wednesday in Jaffna and Welioya.
It was not possible to obtain independent confirmation of the reported fighting. Both sides often release contradictory versions of attacks that take place in the embattled north, where access is restricted.
Both sides are known to exaggerate death tolls and damage inflicted upon each other while underreporting their own losses.
Fighting has escalated in recent months along the front lines separating government-controlled territory and the Tamil Tiger rebels' de facto state in the north.
The Tamil Tiger rebels have fought since 1983 to create an independent state for the island's ethnic minority Tamils who have suffered marginalization by successive governments controlled by majority ethnic Sinhalese. More than 70,000 people have been killed in the conflict.
No comments:
Post a Comment