Tuesday, 27 May 2008

போர்க்குணம் மாறாத அரசு.

நவ பாசிச அமெரிக்க ஏகாதிபத்திய அரசும், விஸ்தரிப்புவாத இந்திய அரசும் தான்-இஸ்ரேலின் துணையுடன் - பக்சபாசிஸ்டுக்களை ஊட்டிவளர்க்கின்றன.ENB
Robert Blake
Q: What do you think that Sri Lanka is facing today - is it a war on terror or an ethnic problem? What sort of a solution do you suggest to end the conflict in theisland?
A: I think all these are loaded terms. I am reluctant to say this is an ethnic conflict but it is a civil conflict. I always remind people who are visiting from USA thatSinhalese, Tamils and Muslims lived together and continue to live peacefully together. Tamils are living in Colombo peacefully with their Sinhalese and Muslim friends.So there is no ethnic conflict here. And certainly the government is defending itself against terrorism.
(Sunday Observer 25-05-08)
பொதுமக்களுக்கு எத்தகைய இழப்பு வரினும் போரை நிறுத்தப் போவதில்லை: மகிந்த
[செவ்வாய்க்கிழமை, 27 மே 2008, 07:56 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] செய்தி புதினம் இணைய தளம்.
மூனா ஓவிய இணைப்பு enb.
பொதுமக்களுக்கு எத்தகைய இழப்புக்கள் வந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று
தெரிவித்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, போருக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளுடனான போரை நான் எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை. இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டேன்.
பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை போர் தொடரும். எவர் கூறினாலும் போரை நிறுத்த மாட்டேன்.
பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு புலிகளை நான் கோருகிறேன். வேண்டுமானால் என்னை இலக்கு வைக்கலாம். பொதுமக்களுடன் மோத வேண்டாம். என்னுடன் மோதுங்கள். பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தும் குண்டுத் தாக்குதல்களால் என்னையோ அல்லது எனது அரசாங்கத்தையோ அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.
பொதுமக்களின் பேருந்துகளில் குண்டுகள் வெடிக்கின்றன. தொடருந்திலும் குண்டு வெடித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களால் புலிகளுக்கு எதிரான
நடவடிக்கையில் தளர்வு ஏற்படும் என்று எவரும் நினைக்க வேண்டாம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இனிமேல் தீவிரப் படுத்துவோம்.
கொழும்பில் இருக்கும் சிலரும் இத்தகைய குண்டுத்தாக்குதல்களுக்கு உடந்தையாக உள்ளனர். இத்தகைய தாக்குதல்களைக் கண்டு மக்கள் அஞ்சத்
தேவையில்லை. ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும். கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளோம். முன்னர் தமக்கு உணவு வேண்டும், மருந்து வேண்டும் என்று கேட்ட அப்பகுதி மக்கள் இன்று அபிவிருத்தி குறித்து பேசுகின்றனர். கிழக்கில் நான் பெருவெற்றி பெற்றுள்ளேன். ஆனால் சிலர் அவசரப்பட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
பயங்கரவாதத்தை இந்த நாட்டில் இருந்து ஒழித்துக் கட்டவேண்டியது எமது கடமையாகும். வன்னியில் உள்ளவர்களுக்கு தேவையானவற்றை நாங்களே
வழங்குகின்றோம். அரிசியைக் கொடுக்கின்றோம். மருந்தை அனுப்புகிறோம். அதேபோல் வன்னியில் பயிரிடப்படும் அரிசியைக் கொள்வனவு
செய்கிறோம். எனவே இங்குள்ள பயங்கரவாதப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்.
"நேசன்" பத்திரிகையின் கீத் நொயார் மீதான தாக்குதல் குறித்து எனக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக "நேசன்" பத்திரிகை ஆசிரியுடன்
தொலைபேசியில் உரையாடினேன். கீத் நொயாரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டேன். இந்த விடயத்தில் குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படையினரை அவமதிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது. அவ்வாறு செயற்படாமல் ஊடகங்களும்
நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

No comments: