__________________________________________________
______________________________________
புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து
புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது தேசியத் தலைவரின் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளை பெரும் பொய்களை உலகளவில் பரப்புரை செய்து வருகின்றது.
தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு உலகையும் ஏமாற்றி வருகின்ற சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலகளவில் சித்தரித்து வருகின்றது.
சிறிலங்காவின் இந்தப் பொய்ப் பரப்புரையை தகர்த்து எறிந்து உலகம் முழுமைக்கும் தமிழ்மக்கள் பொங்கு தமிழாக தமது அரசியல் அபிலாசைகளை பேரெழுச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை களத்தில் போராடும் போராளிகளுக்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு அவர்களின் விருப்ப மொழியில் தமிழ் மக்கள் தாயக விடுதலையின் நியாயத்தையும் தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகளுக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உரிமைக்கானதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை அவர்கள் வலுவாக எடுத்துரைக்கின்றனர். அதிலும் கனடாவில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு லட்சம் தமிழ்மக்கள் திரண்டு எழுந்திருப்பதும் பின்லாந்து- சுவிஸ்- நியூசிலாந்து- அவுஸ்திரேலியா- இத்தாலி- ஜேர்மனி- பிரான்ஸ்- நெதர்லாந்து- பெல்ஜியம்- நோர்வே- சுவீடன்- டென்மார்க்- தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை பொங்கு தமிழாக எங்களின் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் பேரெழுச்சியை காட்டியுள்ளனர்.
அடுத்து லண்டனில் பொங்கு தமிழ் நடைபெறவுள்ளது. தாயக தாகத்துடன் புலம்பெயர்ந்த தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இந்த எழுச்சிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை பெருமிதமும் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட பா.நடேசன், விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டும் என்றார் அவர்.
பிரித்தானியாவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு: 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு [சனிக்கிழமை, 12 யூலை 2008, 08:46 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்வு பிரித்தானியாவின் வேல் பகுதியில் உள்ள றிச்சர்ட்சன் இவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு தொடங்கியது.
நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஏற்றினார்.
தொடர்ந்து, அகவணக்கம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அரங்க நிகழ்வுகள் தொடங்கின.
பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் மஞ்சள், சிவப்பு வர்ண உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர்.
"We want Tamileelam" என மேடையில் இளையோர் முழங்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.
நாடகம் மற்றும் தமிழர்களின் மங்கல வாத்தியங்களான தவில், நாதஸ்வரக் கச்சேரி ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவ் உரையாற்றினார். தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனா உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ் உள்ளுராட்சி அமைப்பின் சார்பாக சுரேஸ் கிருஸ்ணா உரையாற்றினார்.
தொடர்ந்து, சோசலிச எதிர்ப்பின் ஆசிரியரும் அதன் கெளரவ உறுப்பினருமான லியாம் மக் எய்ட் உரையாற்றினார். தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும் கவிஞருமான புதுவை இரத்தினதுரையின் உரை ஒலிக்க விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்த சர்மா உரையாற்றினார்.
தொடர்ந்து, "உலகத் தாயே ஒன்றுபடு" எனும் பொங்கு தமிழ் பாடலுக்கு இளையோர்கள் எழுச்சி நடனம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, பத்து வருடங்களுக்கு மேலாக பிரித்தானிய தொழிற்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த மைக் கிறசன் உரையாற்றினார்.
தொடர்ந்து, மனித விவகாரங்களுக்காக குரல் கொடுத்துவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பானாட்ஸ் சாறா லுட்பேட் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய தமிழ் உள்ளுராட்சி மன்ற அமைப்பின் தலைவர் தயா இடைக்காடர் உரையாற்றினார்.
தொடர்ந்து, பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோன் பற்றின் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் பகுதியின் முன்னாள் நகரபிதா யோகன் யோகநாதன் உரையாற்றினார்.
தொடர்ந்து, நடன நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிறப்புரையாற்றினார
கொசவோ விடுதலை அமைப்பின் முக்கிய பிரதிநிதி ஒருவரும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
அரங்க நிகழ்வுகளைத் தொடர்ந்து "We want Tamileelam" என மேடையில் இளையோர் முழங்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் பிரகடனம் படிக்கப்பட, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் பிரகடனத்தினை முழங்கினர்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் உறுதிமொழியுடன் இரவு 7:30 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.
பிரித்தானியாவில் முதல் தடவையாக நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றனர். அரங்க நிகழ்வினை நோக்கி மக்கள் வந்து கொண்டிருந்த போது லண்டனின் பிரதான சாலை முடக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வினை விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலும், லண்டன் ஐபிசி தமிழ் வானொலியும் நேரடி ஒலிபரப்புச் செய்திருந்தன.
பொங்கு தமிழ் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பரப்புரை என்பது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது?
பொங்கு தமிழ் நிகழ்வு இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படினும்கூட உலகத்திலுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடைய பலத்தை தாங்களே அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக - ஒரு விடயத்தில் எவ்வளவு தூரத்திற்கு ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை அறிந்துகொள்ளும் நிகழ்வாக - இதனை பார்க்கமுடியும். அடுத்து, இவர்கள் தமது பலத்தை உலகத்திற்கு அறிவிக்கும் நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.
பரப்புரையை மேற்கொள்பவர்கள் அதனை மீண்டும் மீண்டும் செய்யும்போதுதான் - அது அரசாக இருந்தாலும் சரி அல்லது நாட்டு மக்களாக இருந்தாலும் சரி அல்லது பொதுவாக ஒரு நாடு குறித்த திட்டத்தை தொகுப்பவர்களாக இருந்தாலும் சரி - அவர்களது கவனத்தை ஈர்க்கின்றனர்.
நாங்கள் இத்தகைய பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. இத்தகைய பரப்புரையை மேற்கொள்ளும்போது - நாங்கள் ஒன்றுபட்டு, ஒருகுரலாக எழுந்து நிற்கிறோம் என்பதைக் காட்டுகின்றபோது - உலகம் நிச்சயமாக அதனை கவனத்தில் கொள்ளும். உலகம் மட்டுமில்லை, எமது அயல்நாடுகளும் கவனத்தில் கொள்ளும்.
அதேநேரம், இத்தகைய பரப்புரைகள் தமிழீழத்தில் இருக்கும் மக்களுக்கு புத்தூக்கத்தை தருகின்ற ஒரு நிகழ்ச்சியாக, எங்களோடு எங்கள் மக்களும் எங்களுக்கு பின்னால் - சிக்கல்களுக்கு மத்தியில் - ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்ற உணர்வைத் தருகின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைகின்றது.
அந்தவகையில் இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி, பொதுவான நிகழ்ச்சி, எல்லோருக்கும் பொதுவாக தமிழ்மக்களுக்கு பயன்தரும் நிகழ்ச்சி என்றே நாங்கள் பார்க்கின்றோம்.
பொங்கு தமிழ் நிகழ்வு முதன்முதலில் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?
எங்களுடைய தன்னுரிமைக்கான கோரிக்கையை முன்வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் மக்களுடைய காவலர்கள், அவர்கள் ஒரு விடுதலை அமைப்பு என்பதை உலகம் முழுவதும் உணர்த்துவதற்காகவும் அதற்கும் அப்பால் இந்த மண்ணில் மிகப்பெரியதொரு இனப்படுகொலை நடக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
உலகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளை அது கொச்சைப்படுத்துவதை இன்று பார்க்கிறோம், தன்னுரிமையை மறுத்து நிற்பதை பார்க்கின்றோம்.
நெல்சன் மண்டேலாவைக்கூட அண்மையில்தான் பயங்கரவாதப்பட்டியலில் இருந்து நீக்கினார்கள். இப்படியான செயற்பாடுகள் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளன.
தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பது குறித்து வேண்டுமானால் ஒரு கருத்துக்கணிப்பை நடத்திப் பார்க்கட்டும். எழுந்தமானத்திற்கு பேசுவதைவிட்டு, விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பேராளர்களா? இல்லையா என்பதை ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி பார்க்கட்டும்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உரிமைக்காகத்தான் போராடுகிறோம். ஆகவே, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் எங்களுடைய காவலர்கள் என்பதை நாங்கள் ஒன்றுபட்டு கூறும் ஒரு நிகழ்வாகத்தான் பொங்கு தமிழ் நிகழ்வை பார்க்க வேண்டும்.
களத்திலுள்ளவர்களின் பரப்புரைக்கான வீச்செல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களின் பரப்புரைக்கான வீச்செல்லை சர்வதேச சமூகத்தை எட்டக்கூடிய வகையில் இருக்கின்றது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள் தமது இந்த வீச்செல்லையை எப்படி பாவிக்க வேண்டும்?
சிறிலங்கா அரசாங்கம் ஒரு திட்டத்தின் அடிப்படையில் இப்போது இயங்குவதாகத் தெரிகிறது. கிழக்கை முதலில் பிடிப்பது, அடுத்து மன்னார் கரையோரங்களைக் கைப்பற்றுவது, பின்னர் பூநகரியைப் பிடிப்பது, அடுத்து சுண்டிக்குளத்திலிருந்து திருகோணமலை வரை இடங்களைக் கைப்பற்றுவது என்ற திட்டமே அதுவாகும்.
அதன்பின்னர், இங்கே மக்களுக்கு அழிவுகள் ஏற்படும்போது அதற்காக குரல்கொடுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களது குரல் எழும்பாத வண்ணம் அவர்களை பயங்கரவாதிகள் எனக்கூறி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டதாகவும் அறிகின்றோம். தற்போது நடக்கின்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகின்றது.
உலக மக்களைப் பொறுத்தவரை அந்தந்த நாடுகள் பேசுகின்ற மனித விழுமியங்களை அந்த மக்கள் அப்படியே ஒழுகி நிற்பார்கள். இங்கே இனப்படுகொலை நடக்கிறது, மனிதர்கள் உரிமைக்காகத்தான் போராடுகின்றார்கள், இந்த போராட்டம் நியாயமானதுதான் என்று அந்த மக்களுக்கு தெரிகின்றபோது அவர்கள் அந்தந்த அரசுகளை நோக்கி கேள்விகளைக் கேட்பார்கள்.
ஈராக் மீது ஒரு பெரிய பரப்புரை செய்துகொண்டுதான் போர் தொடுக்கப்பட்டது. அதன்பின், உண்மை அம்பலமாக அந்த மக்கள் பொய்யான பரப்புரைக்கு எதிராக நிற்கின்றனர். அந்தப்போருக்கு பின்னால் நின்ற பல தலைவர்கள் இன்று ஆட்சியை இழப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம்.
ஆகவே, அத்தகைய மக்களை விழித்து - உண்மையில் நலனோம்பு நோக்கத்தில் செயற்படுகின்ற மனிதர்களை விழித்து - பலருக்கு பல விடயங்கள் தெரியாமல் உள்ளது, அவர்களுக்கும் அவற்றை உணர்த்தும் விதமாக இப்படியான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும்போது நிச்சயமாக உலக அரசுகள் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
இன்னொரு வகையில் பார்த்தால், அடக்கப்படுகின்ற போது நாங்கள் அடங்கமாட்டோம், எழுவோம், மீண்டும் மீண்டும் எழுவோம், மிகப்பெரியளவில் எழுவோம் என்று நாங்கள் காட்டவேண்டும்.
உலக அரசுகளில் ஒரு போக்கு இருக்கிறது. ஜனநாயக முறைகளுக்கு ஊடாகப் போராடுகின்றவர்களை சட்டம் இதுதான் என்று அடக்கப்பார்ப்பார்கள். இல்லையெனக்கூறி அதற்கு மேலும் அவர்கள் எழுந்தால் ஒரு பேச்சுவார்த்தை மூலம் அதற்கு ஒரு இணக்கம் காண்பார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அந்த வகையிலான ஒரு போக்கைத்தான் அவர்கள் கையாண்டு வந்தார்கள்.
இத்தகைய போராட்டங்களை அடக்குவதற்கு பல பரப்புரைகளைச் செய்வார்கள். ஆனால், அதையும் மீறி நாங்கள் பொங்கியெழுந்து எங்கள் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவோமாக இருந்தால் அவர்கள் எங்கள் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கவே முனைவர்.
அதற்காக எங்களில் ஒருசிலர் சிறைக்குச் செல்ல வேண்டி வரலாம். துன்பப்பட வேண்டி வரலாம். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது நாங்கள் செயற்பட வேண்டும். அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கு முரணாக நாங்கள் போராட்டத்தை நடத்தவில்லை. அவர்களுடைய சட்டங்களுக்கு உட்பட்டு நியாயபூர்வமான கோரிக்கைகளைத்தான் எழுப்புகிறோம்.
எங்கள் மக்களுக்காக நாங்கள் குரல்கொடுப்பது பிழை என்று சொல்வார்களாக இருந்தால் அந்த நாட்டு மக்கள்கூட அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, இடர் வந்தாலும் - மிகப்பெரிய அளவில் சிக்கல் வந்தாலும் - பொங்கி எழுந்து தமிழர்கள் தங்கள் குரலை உலகம் முழுவதும் வெளிப்படுத்துவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து எங்கள் மீதான கவனத்தை ஈர்ப்பதற்கு உதவும்.
அத்தகையதொரு நிலை களத்தில் உள்ளவர்களுக்கு ஒரு புத்தூக்கமாக இருக்கும்.
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் மீது உலக நாடுகள் தற்போது சட்டரீதியாகக் கொடுக்கும் அழுத்தங்கள் மேற்படி திட்டத்தின் அடிப்படையில்தான் என்று கருதலாமா?
பொதுவான கோட்பாடு ஒன்றை அவர்கள் பரிசீலிக்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று பார்க்க வேண்டும். அதாவது இருதரப்பினர் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் ஒரு தரப்பை பலவீனப்படுத்திவிட்டு ஒரு தீர்வை முன்வைக்கும் - காலங்காலமான - ஒரு போக்கை இன்றைக்கும் அனைத்துலக சமூகம் கொண்டிருக்கிறது.
இதனை அமைதிக்கான போர் (WAR FOR PEACE) என்று சொல்கிறார்கள். அதற்கான ஒரு சோதனைக் களமாகத்தான் சிறிலங்கா தேசமும் தமிழீழமும் பார்க்கப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, எவ்வளவுதான் அழுத்தங்கள் வந்தாலும் தடைகள் வந்தாலும் நாங்கள் போராடுவோம். நாங்கள் சந்திக்கும் அழுத்தத்தில் ஒருவீதமான அழுத்ததை சந்திப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருப்பார்களாயின் அவர்கள் எழுச்சி கொள்வார்கள்.
காந்தியை எடுத்துக்கொண்டால் அவருடைய போராட்டத்தில் அவரை சிறையில் அடைத்தார்கள். அவரைப்போன்று எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும். எத்தனை சட்டங்களைக் கொண்டுவர முடியும். அந்த சட்டங்களுக்குள்ளாகவே அவர்கள் பேசுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு இருக்கின்ற விழுமியங்களை நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட முடியும்.
1958 ஆம் ஆண்டு நாங்கள் சிங்களம் கற்கமாட்டோம் என்றுகூறி கொள்கைக்காக வேலை இழந்தவர்களும் உள்ளனர்.
கொள்கைக்காக அவர்கள் நாட்டில் அவர்களது சட்டங்களுக்கு உட்பட்டு போராடுகின்றபோது அதைக் கண்டித்து சிறையில் அடைப்பார்களாக இருந்தால் -
அந்த சிறை வாழ்வையும் ஒரு போராட்டமாகக் கைக்கொண்டு நாங்கள் போராடுவோமாக இருந்தால் -
எங்கள் முயற்சி ஒரு கட்டத்திற்கு மேல் செல்லாது என்பதை அவர்கள் உணர்வார்கள். அந்த உணர்வு மூலம் அவர்களுக்கு நல்ல அறிவு பிறக்கும். எங்களுக்கும் நல்ல வாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இத்தகைய அழுத்தங்களுக்கு ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக கூறவேண்டிய விடயத்தை விரிவாகக் கூறுங்கள்?
பரப்புரைகள் மூலமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதன் மூலமாகவும், ஆர்ப்பாட்டங்களைச் செய்வதன் மூலமாகவும், மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்குவதன் மூலமாகவும் நாங்கள் எமது விடயங்களை தெரியப்படுத்தலாம்.
அரசாங்கம் எத்தகைய அடக்குமுறையை எங்கள் மீது பயன்படுத்துகிறது, நாங்கள் கோருவதில் ஏதேனும் பிழைகளுண்டா? எங்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பாருங்கள் என்று நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு அறிவூட்டலாம்.
கனடாவில் எங்களுடைய மக்கள் மிகவும் பலமாக இருக்கிறார்கள். சில இடங்களில் ஆட்சியை மாற்றக்கூடியளவுக்கு பலமாக இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் அங்கே சரியான முறையில் செயற்படுவோமாக இருந்தால் முனைந்து நின்று செயற்படுவோமாக இருந்தால் -
அடிபணியமாட்டோம் என்ற எண்ணத்தை அந்நாட்டு அரசுக்கு உணர்த்துவோமாக இருந்தால் - நிச்சயமாக அவர்கள் மாறுவார்கள். அவர்கள் போக்கில் ஒரு மாற்றம் இருக்கிறது. எனினும், அதில் ஒரு தடுமாற்றம் இருக்கிறது. முன்னரைப் போன்று அவர்கள் சில விடயங்களைச் செய்தாலும்கூட, தாங்கள் செய்வது சரியல்ல என்ற ஒரு தடுமாற்றத்திற்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர். அப்படி தடுமாறுகின்றவர்களை சரியான வழிக்கு திருப்ப வேண்டிய பணி எங்களுக்கு இருக்கின்றது. அதேநேரம், நாங்களும் தடுமாறக்கூடாது, பயந்துவிடக்கூடாது, அடங்கிவிடக்கூடாது.
தமிழீழ மண்ணில் ஏறத்தாழ 170 கிலோமீற்றர் கோட்டில் நாளாந்தம் சண்டையிடுகிறோம். நாளாந்தம் வீரச்சாவடைகிறோம். உலகமெல்லாம் வாழ்கின்றன. எங்களுடைய தமிழ்மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்குதான் நாளாந்தம் இந்த வீரச்சாவுகள் இடம்பெறுகின்றன. அதை எங்களுடைய தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த வீரச்சாவுகளுக்கு ஊடாகவும் நாங்கள் உலகத்திற்கு அடிபணியாமல் எழுந்து நிற்கின்றோம் என்பதை உணர்ந்து, எங்கள் பின்னால் அணிதிரண்டு, உலக நாடுகள் போடுகின்ற இந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நிற்பார்களானால் நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம்.
தமிழ்மக்கள் தொடர்ச்சியாக இத்தகைய போராட்டங்களிலும் பொங்குதமிழ் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டாலும் அனைத்துலக சமூகம் அதை கரிசனையோடு பார்க்க தவறுவதாக ஒரு தோற்றப்பாடு உள்ளது. இந்நிலையில், அனைத்துலக சமூகம் எம்பக்கம் திரும்புமென எதிர்பார்ப்பது சரியான எதிர்பார்ப்பாக இருக்குமா?
எங்களது போராட்டத்திற்கு ஊடாக ஒரு விடயத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசியத் தலைவர் குறிப்பிடுவதைப் போல், நாங்கள் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும். 1972 காலப்பகுதியில் அவர் போராட்டத்தை தொடங்கினாலும் 1983 வரை அது ஒரு பெரிய போராட்ட வடிவத்தை எடுக்கவில்லை. எனினும், அதற்குப் பின்னர் ஒரு பெரிய போராட்ட வடிவம் வந்தது. ஆட்லறிகளோடு ஒரு மரபுவழிப் படையாக கடற்படை, வான்படை கொண்டு வளர்ந்து நிற்போம் என்ற எண்ணத்தோடு இந்த போராட்டம் தொடங்கப்படவுமில்லை, அப்போது அப்படி நாங்கள் நினைக்கவுமில்லை.
விடுதலையை வேண்டுகின்ற தமிழரசுக் கட்சியானாலும், கூட்டணிக் கட்சியானலும் சரி இங்கே என்ன புகையிலைதானே இருக்கிறது, பொருளாதாரமா இருக்கிறது என்று ஒரு காலத்தில் கேட்டார்கள். இன்று உலகில் நாங்கள் மிகவும் பொருளாதார வளம்மிக்க, பலம் உள்ள மக்களாக இருக்கிறோம். ஆகவே, சில விடயங்களை எதிர்வுகூற முடியாது.
"ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கைக்கு பின்னர் நாங்கள் மிகப்பெரியதொரு வீழ்ச்சியைக் கண்டோம். மில்லர் போன்ற கரும்புலிகளின் தாக்குதல்களினால் மீண்டும் நிமிர்ந்தோம். இந்தியப்படையும் வந்தது. அப்போது நாங்கள் பெரிய வீழ்ச்சியைக் கண்டுவிட்டோம் என்று கூறினார்கள். நாங்கள் எழுந்தோம். "ஜெயசிக்குறு" காலப்பகுதியில் புலிகள் நாளை அழிந்துவிடுவார்கள் என்று கூறினார்கள். ஆனாலும் நாங்கள் எழுந்தோம்.
நாங்கள் இவ்வளவு காலம் போராடி வருகின்ற போதெல்லாம் அனைத்துலக சமூகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், "தீச்சுவாலை" நடவடிக்கைக்கு பின்னால் அனைத்துலக சமூகம் எமது போராட்டத்தைக் கண்டுகொண்டு ஒரு கூட்டாட்சிக்காவது போகவேண்டும் என்ற முடிவுக்கு வந்ததை நாங்கள் மறுத்துவிட முடியாது.
ஆரம்ப நாட்களில் நாங்கள் போராடியபோது தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பணம் தருவார், இந்தியா எங்களுக்கு பயிற்சி தரும் என்றோ நாங்கள் எண்ணவில்லை. இந்தியாவோடு போரிடும்போது எங்களுடைய பரம எதிரியான சிங்கள தேசம் எங்களோடு பேசும், சிங்கள தேசம் எங்களுக்கு படைக்கலம் தரும் என்று எண்ணிக்கொண்டு போராடவில்லை.
நாங்கள் நினைத்ததெல்லாம் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். அது விடமுடியாத இலக்கு. போராடாவிட்டால் எங்களுக்கு வாழ்வில்லை.
இந்த எண்ணத்தோடு புலம்பெயர் வாழ் தமிழ்மக்களும் பரப்புரையை நடத்தினால் அது இன்றோ அல்லது நாளையோ பயன்தரும். அதற்கு எங்களுடைய போராட்டமே சான்றாக நின்கின்றது. நாங்கள் தளர்ந்து போகவில்லை.
20 ஆயிரம் மாவீரர்களை இழந்திருக்கிறோம். மக்களை இழந்திருக்கிறோம். பெருமளவான சொத்துக்களை இழந்திருக்கிறோம். நண்பர்களை இழந்திருக்கிறோம். உறவினர்களை இழந்திருக்கிறோம். அப்படியிருந்தும் நாங்கள் தளர்ந்துபோனோமா? இல்லையே. எங்களைப் பொறுத்தவரை எங்கள் மீது திணிக்கப்படுகின்ற எதனையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எங்களுடைய விடுதலையை நோக்கி போராடுவோம், அதற்காக அனைவரும் வீரச்சாவடைவதற்கும் தயாராக உள்ளோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இப்படியாக நாங்கள் போராடியபடியால்தான் பெரும் அழிவு என்று கூறப்பட்ட விடயங்களில் இருந்து வென்று வந்திருக்கிறோம். அப்படியாகத்தான் எங்களது போராட்டம் விளங்குகிறது.
போராடுகின்றவன் நிச்சயமாக வெற்றிபெறுவான். அதற்கு காலம் கனியவேண்டும். அந்த காலம் எப்போது கனியும் என்பது வேறு விடயம். அந்த கனிகின்ற காலத்திற்காக நாங்கள் போராடத்தான் வேண்டும். இல்லையேல் எதுவுமே நடக்காது.
எனவே, எங்களுடைய போராட்டத்தை ஒரு சான்றாகக் கொண்டு - நாளாந்தம் போராளிகள் செய்கின்ற தற்கொடைகளை, மக்கள் செய்கின்ற ஒப்படைப்புகளை கருத்திற்கொண்டு - புலம்பெயர்வாழ் மக்கள் தளர்வடையாமல் உறுதியாக நின்று போராடுவார்களாயின் அதற்கு நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
(புலம்பெயர்வாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரது கேள்வி) பொங்குதமிழ் நிகழ்வுகளில் இளையோர் பங்குபற்றுவதன் அவசியத்தை விளக்க முடியுமா?
அழகான தமிழ் பேசுவதற்காக முதலில் உங்களை பாராட்ட விரும்புகிறேன். புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மொழியில் சிக்கல்படுவதை நாங்கள் அறிவோம். அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பினும் அவர் தமிழில் அழகாக அந்த கேள்வியைக் கேட்டதற்காக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மொழி, இன்றும் வாழும் மொழி. அந்த மொழியை நாங்கள் மறந்துவிட்டு இருக்க முடியாது. அந்த மொழியின் பெருமையை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்றை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். எங்கள் மொழிக்குதான் வேர் இருக்கின்றது. மற்ற மொழிகளுக்கு வேரில்லை.
எனவே, மொழியின் பெருமையறிந்து புலம்பெயர் வாழ் இளந்தலைமுறை அதனை கற்றறிந்து கொள்வது அவசியம். இனி உங்களது கேள்விக்கான பதிலைக் கூறுகிறேன்.
50 ஆயிரம் ஆண்டுகள் அழிவின்றி வாழும் தமிழின் எழுச்சி, தமிழீழ தன்னிச்சைக்கான எழுச்சி, தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் காவலர்கள் என உலகிற்கு பறைசாற்றும் நிகழ்ச்சி, அதற்கு அப்பாற்பட்டு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழினம் ஒன்றுதிரண்டு தன்பலத்தை தான் உணர்ந்து உலகிற்கு அந்த பலத்தை அறியத்தரும் நிகழ்ச்சி. இப்படி பல்வேறு கோணங்களில் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
இத்தகைய நிகழ்ச்சி எதற்காக என்று உங்களது பெற்றோரை கேளுங்கள். அவர்கள் விளக்கம் தருவார்கள். அதனடிப்படையில் இந்த போராட்டத்திற்கான நியாயத்தை, நீங்கள் அதற்கு அளிக்க வேண்டிய பங்களிப்பை வழங்க வேண்டும். ஏனெனில் உங்கள் கைகளில்தான் இனிமேல் இந்த போராட்டம் இருக்கிறது. அடுத்த தலைமுறை என்று கூறப்படும் உங்களது கையில்தான் இந்த போராட்டத்தின் வெற்றி இருக்கிறது.
நீங்கள் இருக்கும் நாட்டு மொழி உங்களுக்கு தெரியும், அந்த நாட்டினுடைய பண்பாடு தெரியும், அந்த மக்களோடு இலகுவாக உங்களால் ஊடாட முடியும். எனவே உங்களுக்கு ஊடாக எங்களின் குரல் அந்த மக்களை இலகுவாகச் சென்றடையும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் இந்த கருத்துக்களை விதைக்க முடியும். இளைய தலைமுறையான நீங்கள் எழுந்து நின்றால் அந்த நாடு உங்களை எதுவுமே செய்யமுடியாது. ஏனெனில் நீங்கள் அந்த நாட்டிலே பிறந்தவர்கள், அந்த நாட்டில் வளர்ந்தவர்கள். 50 ஆயிரம் ஆண்டுகளாக வாழும் மொழியின் சொந்தக்காரர்கள் நீங்கள்.
அந்த உணர்வோடு நீங்கள் எழுந்து நிற்பீர்களாக இருந்தால் -
உங்கள் கருத்துக்களை நீங்கள் சந்திப்பவர்களுக்கு பரப்பி நிற்பீர்களாக இருந்தால் -
போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு நிற்பீர்களாக இருந்தால் -
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட இத்தகைய எழுச்சி என்பது நாங்கள் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள உதவும்.
பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஊடாக தேசியத் தலைமையும், போராளிகளும், தாயக மக்களும் எத்தகைய உத்வேகத்தை பெற்றுக்கொள்ள முடியும்?
பல்வேறு நாடுகளில் இடம்பெறும் பொங்குதமிழ் நிகழ்வுகளில் பேசப்படும் விடயங்களை தாயத்தில் "புலிகளின்குரல்" ஊடாக நாங்கள் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பொங்குதமிழ் நிகழ்ச்சி என்பது புலம்பெயர் வாழ் மக்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கின்ற எழுச்சி என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம். அது எங்களுக்கு ஒரு புத்தூக்கமாகத்தான் இருக்கிறது.
நாங்கள் யாருமில்லாத ஏதிலிகள் போல் இல்லை, எங்களுக்கு பின்னால் ஒரு பெரிய ஆற்றல் இருக்கிறது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுடைய பங்களிப்பு, அவர்களின் உதவிகள் ஊடாகத்தான் எங்களுடைய போராட்டம் இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் வாழ் தமிழ்மக்களின் அரசியல் பணியின் ஊடாகத்தான் இந்த போராட்டத்தின் நியாயம் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.
எனவே புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே இருக்கின்ற பிரிவினைகளை விட்டுவிட்டு தமிழர்களுக்கான தமிழீழ நாட்டை வன்பறித்து நிற்பவர்களை கலைப்பதற்கான பொருளாதார வளத்தையும், உணர்வு ரீதியான பலத்தையும் ஒன்றுபட்டு நின்று தருகின்றபோது நாங்கள் எழுந்து நிற்போம்.
இங்கே உணர்வு என்பது முக்கியம். அத்தகைய உணர்வுக்கு ஊடாக நாங்கள் பெற்றுக்கொள்ளும் புத்தூக்கம் என்பதும் முக்கியம். அந்தவகையில் பொங்குதமிழ் எழுச்சி என்பது எங்களுக்கு ஒரு புத்தூகதூத்தை தருகின்றது. எங்கள் பின்னால் எங்கள் மக்கள் அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்ற அந்த உணர்வைத் தருகின்றது.
சிறிய நிகழ்ச்சியானாலும் சரி, பெரிய நிகழ்ச்சியானாலும் சரி எங்கள் போராட்டத்தின் குரல் கேட்கிறது என்ற உணர்வைத் தருகின்றது. எனவே நீங்கள் தொடர்ந்தும் போராட வேண்டும். எங்களுக்காக குரல்தர வேண்டும். அதை வெவ்வேறு வடிவில் நடத்த வேண்டும். அதனூடாக எங்களுடைய தாயகம், தன்னுரிமை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் சிலர் அரசியல் ரீதியான கருத்துக்களால் முரண்பட்டு விலகி நிற்கின்றனர். எனினும் இத்தகைய பொங்கு தமிழ் நிகழ்வுகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்குமான நிகழ்வுகளாக நாங்கள் பார்க்க வேண்டுமா?
கோயில்களில் திருவிழா நடக்கும், பொங்கல் நடக்கும், ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடக்கும். இந்த நிகழ்வுகளில் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுகூடி மகிழ்ந்து புத்தூக்கம் பெறுவதை நாங்கள் பார்க்கிறோம்.
அதுபோன்றே தமிழுக்காக, எங்கள் நாட்டுக்காக எழுப்பப்படும் பொங்குதமிழ் நிகழ்வுகளிலும் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும். இங்கு அவர் பெரிதா?, இவர் பெரிதா? என்பதல்ல முக்கியம். நாங்கள் எங்கள் நாட்டுக்காக ஒன்றுபட்டு நின்று, ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும் என்ற உணர்வே முக்கியமானது.
நாங்கள் தனித்து நின்று எதனையும் செய்யமுடியாது என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். டக்ளஸ் தேவானந்தாவால் எதுவும் செய்யமுடியாது, பிள்ளையானால் எதுவும் செய்ய முடியாது, ஆனந்தசங்கரி ஏதோ கதைத்துக்கொண்டிருந்து விட்டு இப்போது அவரே டக்ளஸ் தேவானந்தாவைக் குறை கூறுகிறார்.
ராஜபக்சவுடன் சேர்ந்து அவர் எதுவும் தருவார் அதனை வாங்கிக்கொள்ளலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். இப்படியான பொய்மைக்குள் இருக்கும் ஒரு வாழ்வு எங்களுக்கு வேண்டாம். சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, அவர்களிடம் கேட்டு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தரப்போவதுமில்லை.
துட்டகைமுனுவின் தாயாரான விகாரமாதேவி தமிழனின் இரத்தத்தை குடித்துத்தான் கருவுற்றாள் என்று மகாவம்சம் கூறுகின்றது. ஆகவே, தமிழனின் இரத்தத்தை குடித்து கருவுற்று எழுந்து இந்த மண்ணை ஆக்கிரமிக்க ஒருவர் வருவதே வரலாறாக உள்ளது. அப்படியான மரபுக்குள்ளே ஊறி தமிழர்களை அழிக்க வேண்டும் என்று நிற்கும் சிங்கள தேசத்திடம் பேசியோ அல்லது ஏதோவொரு முறையில் கேட்டோ எந்தவொரு உரிமையையும் பெற்றுவிட முடியாது என்பது எங்களுக்கு தெரிந்த விடயம். அதில் நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி நம்பிக்கை வைத்தால்தான் இந்த போராட்டம் வெற்றிபெறும்.
ஆகவே இந்த சலசலப்பில் தயங்கி நிற்கின்றவர்கள் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒருமித்த குரலாக, ஒன்றுபட்டு நிற்கும் குரலாக, வேறுபாடுகளை மறந்து நிற்பவர்களாக இந்த பொங்குதமிழ் நிகழ்வுகளில் குரல் எழுப்ப வேண்டும்.
இந்த மண்ணில் வீரச்சாவடைபவர்களுக்கு மதிப்பளித்து கரும்புலிகளாக வீரச்சாவடைபவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, இந்த போராட்டத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், பல துன்பங்களைச் சந்தித்தும் ஒன்றுபட்டு நிற்கின்ற மக்களுக்கு மதிப்பளித்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு ஒரு குரலாக பொங்குதமிழ் நிகழ்வுகளில் குரலெழுப்ப வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும்.
புலம்பெயர் தமிழ்மக்கள் வாழும் பல நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளதால் புலம்பெயர் தமிழ்மக்கள் நடத்தும் பொங்குதமிழ் நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதை தவிர்க்கப்பார்க்கிறோம். இது ஒரு சரியான அணுகுமுறையா?
உலக நாடுகள் வேண்டுமென்றே சில வேலைகளைச் செய்யும். குறிப்பாக உலகத்தில் இருக்கின்ற தலைவர்களில் மரியாதைக்குரிய தலைவரை அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர்தான் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது ஒரு வேடிக்கையான செய்தி.
திருமணம் செய்தால்தான் பைத்தியம் தீருமென்று சிலர் சொல்வார்கள். பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் செய்யலாம் என்று சிலர் சொல்வார்கள். இப்படி சிலர் வாதப்பிரதிவாதங்களை வைத்துக்கொண்டு இருப்பார்கள். அதனால்தான் அவர்களை இந்த பொங்குதமிழ் நிகழ்வின் ஊடாகச் சேர்க்கிறோம். எவருடன் பேசுவதென ஒரு கருத்துக்கணிப்பை வைத்தால் மக்கள் அதற்கு பதில் கூறுவார்கள்.
உலக நாடுகள் தடைசெய்து விட்டன என்பதற்காக புலிகள் தமிழ்மக்களுடைய பேராளர்களாக இல்லை என்று ஆகிவிடாது.
உலக நாடுகள் தடைசெய்துவிட்டன என்பதற்காக புலிகளின் போராட்டம் நின்றுவிடப்போவதில்லை.
உலக நாடுகள் தடைசெய்துவிட்டன என்பதற்காக சிங்களவர்கள் புத்தராக மாறிவிடப்போவதில்லை.
உலக நாடுகள் தடைசெய்துவிட்டன என்பதற்காக நாங்கள் அடிபணிந்து அவர்கள் தருவதை பிச்சை எடுக்கவேண்டியதில்லை.
உலக நாடுகளில்தான் பிழை இருக்கிறது. உலக நாடுகள் கூறுகின்றமை சரிதானா என்பதை மக்களிடையேயான கருத்துக் கணிப்பாக ஏன் நடத்தக்கூடாது என்று கேட்டால் அப்போது அந்த நாடுகள் சிக்கல்படும். உண்மை என்னவென்று தெரியும். தூங்குவதுபோல பலர் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களை விழித்தெழ வைப்பதற்கு அந்த நாட்டு மக்களாலும் அங்கு வாழ்பவர்களாலும்தான் முடியும்.
ஈராக் மீது படையெடுக்கும்பேர்து பலரும் பல நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஈராக் மீதான படையெடுப்பிற்கான காரணம் பொய் என்று பலரும் கூறினர். அது பொய் என்பது ஈராக் மீது படையெடுத்த நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும் படிப்படியாக அவர்கள் தமது இலக்கை அடையமுடியாமல்போனதன் ஊடாக - இழப்புகளின் ஊடாக - பல உண்மைச் செய்திகள் வருகின்றபோது, மக்கள் விழித்தெழுகின்றபோது பொய் கூறியவர்கள் பொய்யர்களாகி ஆட்சியிலிருந்து அகற்றப்படுகின்ற சூழல் வரும்.
ஆகவே, எங்களைப் பொறுத்தவரை அனைத்துலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் இடித்துரைக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதேவேளையில் அனைத்துலக நாடுகளின் தலைவர்களை யார் தெரிவு செய்தார்களோ அவர்களுக்கு ஊடாக அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு சில செய்திகளைச் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது. அதற்காக காலம் எடுக்கலாம். சில வேளைகளில் அதற்காக நாங்கள் உயர்ந்த அளவில் துன்பப்படவேண்டி வரலாம். ஆனால், நம்பிக்கையை கைவிடாது எமது முயற்சியைத் தொடர வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் எதிர்வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஊடாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளுக்கும் நாங்கள் கூறவேண்டிய செய்தி என்ன?
புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஏதிலிகளாக வந்த மக்களுக்கு அடைக்கலம் தந்ததற்காக, அந்த மக்களுக்கு வாழ்வு தந்தமைக்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும். அங்கே வாழ்கின்ற மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஒரு ஆட்சி இருப்பதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். இந்த மண்ணில் நடப்பது போன்று ஒரு இனப்படுகொலை நடக்காமல் இருப்பதற்கான அரசியல் யாப்புகளும், மக்கள் அமைப்புகளும் அங்கே இருப்பதற்கு அவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும்.
ஆனால் எங்கள் மண்ணில் இவை இல்லை. நாங்கள் வாழ்வதற்கு முடியாமல் துன்பப்படுகிறோம். அழிவுறுகிறோம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லருக்கு எதிராக அவுஸ்திரேலியா எப்படிப் போராடியதோ -
ஹிட்லர் ஒரு பேரினவாதி, போராட்டத்தை தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்துகொண்டு கோடிக்கணக்கான மக்கள் அந்த போராட்டத்திற்காக உயிர் தந்தார்களோ -
அந்த போராட்டத்தின் மூலம் ஹிட்லர் எப்படி அழிக்கப்பட்டானோ அது போல -
இங்கே இருக்கின்ற ராஜபக்சவும் ஒருவகையில் ஹிட்லரைப் போன்றவர்தான். பேரினவாதம் பேசிக்கொள்வார்கள். இந்த மண்ணில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்று கூறுகின்றனர். மனித உரிமைகள் இங்கே மதிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட ஹிட்லரை ஒத்த மனிதருக்கு பின்னாலே அவுஸ்திரேலிய அரசு நிற்கலாமா? நிற்கக்கூடாது. அதேவேளையில் அவுஸ்திரேலிய அரசு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது, உலகின் விடுதலைப் போராட்டங்களை மதிக்கின்றது என்ற நம்பிக்கையோடு -
உலகத்தின் திறமையான பண்பாடுகளைக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு மேற்குலம் என்ற நம்பிக்கையோடு நாங்கள் எமது குரலை வைக்கிறோம் என்றுகூற வேண்டும். நாங்கள் அவர்களின் சட்ட திட்டங்களை மீறவில்லை. அவர்கள் தருகின்ற ஜனநாயக உரிமைக்குள் நின்றே எங்கள் மக்களுக்கான குரலை எழுப்புகின்றோம் என்பதையும் அவர்களுக்கு கூறவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எது நடந்தாலும் எங்களுக்காக, எங்கள் மக்களின் விடுதலைக்காக, எங்கள் நாட்டின் விடுதலைக்காக நாங்கள் போராடுவோம்.
சட்டங்களைக் கொண்டு எவ்வளவுதான் எங்கள்மீது அடக்குமுறை செய்தாலும் -
நியாயங்கள், உரிமைகள், முறைகளுக்காக போராடுகிறோம் என்று நீங்கள் கூறினீர்களோ அதேமுறைகளுக்காக நாங்களும் போராடுவோம். அதற்காக நீங்கள் தண்டித்தால் நாங்கள் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்வோம். உங்கள் சட்டங்களுக்கு இசைவாக தொடர்ந்தும் போராடுவோம்.
அந்த போராட்டத்தின் மூலம் எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தின் குரலை மீண்டும் மீண்டும் வைப்போம். தயவுசெய்து நீங்கள் எங்களது குரலுக்கு மதிப்பளியுங்கள். எங்கள் போராட்ட உணர்வுக்கு மதிப்பளியுங்கள். தொன்மையான தமிழர்களின் பண்பாட்டுக்கு மதிப்பளியுங்கள். உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாயான மொழி அழிவதை, அழிக்கப்படுவதை, அந்த பண்பாடு சிதைக்கப்படுவதை பார்த்து நிற்கப் போகிறீர்களா என்று கேளுங்கள். அந்த வகையிலே அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களது சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் பேசுகின்ற விழுமியங்களுக்கு ஊடாக நாங்கள் குரல் எழுப்புவோம். சிலவேளைகளில் எங்களுக்கு தடைகள் வரலாம். சில வேளைகளில் அவர்கள் எங்களை அடக்கக்கூடும். ஆனால் நாங்கள் எழுந்து நின்று குரல் கொடுப்போமாக இருந்தால் அவுஸ்திரேலியா வாழ் மக்கள் இந்த உரிமைகள் நியாயமானவை என்பதை உணர்ந்து அந்த அரசுக்கு கூறுவார்கள். அவர்களாலே தெரிவு செய்யப்படுகின்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு செவி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
எனவே, தமிழீழ மக்களே உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் எங்களோடு நிற்கின்றீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் நிற்கிறோம். இந்த மண்ணின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் எங்கள் மீது, எங்கள் விருப்பமின்றி திணிக்கப்படுகின்ற எந்த தீர்வையும், ஆயிரமாயிரம் படை வந்தாலும் நாங்கள் அதற்கு அடிபணிந்தோ சரணடைந்தோ விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
இந்த மண்ணின் விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம். அதற்காக குரல்கொடுப்போம். அந்த வகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்ச்சி உரமூட்டும். -களத்தில் உள்ள ஆயுதங்களுக்கு சமபலமாக புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழ்: இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 08:29 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர்.
தமிழ் மக்கள் திடமான நிலையில் உறுதியுடன் எழுச்சிகொள்வதையும் இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இவ்வாறான நிகழ்வுகள் மக்களின் ஏகோபித்த கருத்து நிலைக்கும் மாறாத உறுதிக்கும் நடைமுறைச் சான்றாக அமைந்திருக்கின்றது என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
கொடுமையான எதிரியிடம் இருந்து போரை தமிழ் மண் எதிர்நோக்கி இருக்கின்றது. உலகில் உள்ள அடக்குமுறையாளர்களில் மிகக்கொடூரமான அடக்குமுறையாளர்களாக சிறிலங்காப் படையினர் காணப்படுகின்றனர்.
போரை கொண்டுசெல்வதற்கான பண்புகளில் இருந்தும் வல்வளைப்புச் செய்வதற்கான வரலாற்று நிகழ்வுகளில் இருந்தும் விடுபட்டவர்களாக- ஒழுங்கீனமான- கண்ணியமற்ற- முறையற்ற போரை மக்கள் மீது திணிக்கின்ற சிறிலங்கா அரசுடனும் அதன் படைகளுடனும் எதிர்நின்று போரிட்டுக்கொண்டிருக்கின்றோம்.
தொடக்க காலத்தில் சங்குல போர், துவண்ட போர் என்கின்ற முறைமைகளுக்கு அமைவாக போர் நடைபெற்றது.
அது ஒர் போர்முறைமைக்கு அமைவான போராக காணப்பட்டது. இன்று அவற்றை எல்லாம் தாண்டி சிறிலங்கா அரசு ஆயுதங்கள் அற்ற அப்பாவி மக்கள் மீது மிக மோசமாக போரை திணித்துக்கொண்டிருகக்கிறது. இதனை உலக வரலாறு பார்த்துக்கொண்டிருக்கின்றது.
நேர்மையான போரை எடுத்துச்செல்ல முடியாத சிறிலங்கா அரசு, மக்கள் மீது பல்வேறு வழிகளில் போரைத் திணிக்கின்றனர்.
ஆழ ஊடுருவும் படையினரால் மக்கள் தாக்கப்படுகின்றனர். எறிகணைத்தாக்குதல் மூலம் மக்கள் இடம்பெயர்த்தப்படுகின்றனர். மக்களுக்கான மருந்து இன்றியமையாப் பொருட்கள் மறிக்கப்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு வழிகளில் சிறிலங்காப் படைகள் மக்கள் மீது போரைப் புரிவதன் வெளிப்படையான அடையாளமாக இவை காணப்படுகின்றன.
இறைமையுள்ள அரசு என்று கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசு மக்கள் மீதுதான் போரைத் தொடுத்து இருக்கின்றது.
தற்போது தமிழர்களின் பலம் களங்களில் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களை சிறிலங்கா அரசின் கொடுமைகள் தீண்டினாலும் கூட, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தாண்ட முடியாதபடி பன்னாட்டு தமிழ் மக்களின் உணர்வுகளும் தமிழீழ மக்களின் உணர்வுகளும் அமைந்திருக்கின்றன.
தமிழ் மக்களின் மனங்களில் உள்ள விடுதலைத்தீயை அணைக்கமுடியாது எதிரியின் எவ்வாறான இறுக்கமான சூழ்நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் விடாப்பிடியாக ஒன்றுபட்ட உளச்சக்தியுடன் நின்று இறுக்கமாக எதிரி மீது தமது பலத்தினை செலுத்துகின்ற போது விடுதலையைப் பெறமுடியும் என்றார் அவர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அண்மையில் தனது தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைத செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சென்று நேரில் சந்தித்திருக்கிறாரே. இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கருத்து என்ன?
இது முற்று முழுதாக மனிதாபிமான அடிப்படையில் இடம்பெற்ற பயணம். வேறொன்றுமில்லை.
நளினியின் விடுதலை தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளிவந்தவண்முள்ளன. நளினி அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால், அது ராஜீவ் காந்தி கொலை விவகாரத்திலிருந்து வெளிவந்து, ஈழத்தழிழர் விவகாரம் தொடர்பான புதிய புறச்சூழலை உருவாக்குவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள சமிக்ஞை என்று விடுதலைப் புலிகள் கருதுகிறார்களா?
இந்தியாவின் மத்திய அரசும் அதன் தீர்மானிக்கும் சக்திகளும் எமது மக்களின் நியாயமான அபிலாசைகளையும் சுதந்திர போராட்டத்தையும் அங்கீகரிக்கும் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
அப்படியானால், நளினியின் விடுதலை நீங்கள் கூறுவது போல், இந்தியாவின் மாற்றத்தை கோடிகாட்டும் அல்லது புதிய புறச்சூழ்நிலைக்கான ஆரம்பமாக அமையும் என்று கூறுகின்றீர்களா?
ஆம். அப்படித்தான் நான் உணர்கிறேன்.
இந்தியாவுக்கு அண்மையில் பயணம் செய்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, இந்தியாவில் சிறிலங்காப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது உட்பட சில இராணுவ இணக்கப்பாடுகளை எட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
எமது மக்களின் விடுதலைக்காக நாங்கள், இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்.
சிறிலங்கா அரசு எப்போதுமே இந்தியாவின் நலனுக்கு எதிராகவே செயற்பட்டு வருகிறது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மகிந்த அரசு இந்தியாவை ஏமாற்றப்போகிறது.
ஆகவே, இந்தியாதான் தனது கூட்டு தொடர்பில் முடிவு செய்யவேண்டும்.
இந்தியா இது விடயத்தில் பழைய பிழையை விடாது என்று நாம் நம்புகிறோம்.
அப்படியானால், இந்த இராணுவ இணக்கப்பாடுகள் குறித்து தமிழ்நாட்டு தலைவர்கள் ஏன் தொடர்ச்சியாக இந்திய மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்? இவர்கள் பற்றி உங்களது கருத்து என்ன?
ஆம். ஈழத்தில் இருக்கின்ற தமது சகோதர சகோதரிகளின் விடுதலைக்கும் அவர்களின் நியாயமான போராட்டத்துக்கும் இந்திய அரசு உதவிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு இந்தியா அரசு ஆதரவளிப்பது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆகவே, இந்திய அரசு தனது உண்மையான நண்பன் யார் என்று அறிந்துகொள்வது மிக முக்கியமானது.
பொங்கு தமிழும் - புலிகள் ஆதரவும் : சேனன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், சேனன் ≅
July 12 லண்டனில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். குறைந்தது இருபதாயிரம் பேராவது இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். ‘எமக்கு வேண்டும் தமிழ் ஈழம்’ We want Tamil Eelam - எமது தலைவர் பிரபாகரன்’ - Our leader Pirabakaran - என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கோசம் எழுப்பியவர்களும் - பிரபாகரன் படம், தமிழ் ஈழ படம் பிடித்தபடி உணர்ச்சி பொங்க திரிந்தவர்களுமாக திரண்ட மக்கள் மத்தியில் தேசிய - இன உணர்வு ஓங்கியிருந்ததை கவனிக்க கூடியதாக இருந்தது.
தாயகம் தன்னாட்சி சுயஉரிமை எனும் தமிழர் கோட்பாட்டை மீண்டும் உலகுக்கு பறைசாற்ற ஒருங்கமைக்கபட்டதாக கூறப்பட்ட இந்நிகழ்வு ‘தமிழ் ஈழ’ கோரிக்கையை மையமாக வைத்து புலிகளுக்கு ஆதரவாக ஒருங்கமைக்கப்பட்டு இருந்தது தெளிவாக தெரிந்தது. தெளிவற்ற முறையில் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை முதலியவற்றை தனிநாட்டு கோரிக்கைக்கு நிகராக பாவித்து குழப்பியிருந்தமை தமிழர் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வுக்கு எவ்வகையிலும் உதவவில்லை. தேசியவாத அடிப்படை மட்டுமே தமிழர் பிரச்சினை ஒருங்கமைப்பாளர்களால் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் திரலாக கூடி தமது கோரிக்கைக்கு குரல்கொடுக்க முன்வருவது வரவேற்கப்பட வேண்டியது. தமிழ் மக்கள் மத்தியில் ஊறியிருக்கும் தேசியவாத உணர்வை இந்நிகழ்வு வெளிக்காட்டியிருந்தது.
கன மக்கள்கூடி தமது தமிழ் உணர்வை வெளிக்காட்டி உள்ளார்கள் என்று உணர்ச்சி பெருக்க பாராட்டுவதை பல தேசியவாத ஊடகங்கள் செய்து கொண்டிருக்க - நாம் இந்நிகழ்வின் பின்னுள்ள ‘இயக்க’ ஆதரவு மற்றும் கருத்துநிலை பற்றி சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளது.
இன்று புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் ஊடகங்கள் அமைப்புகள் உலகெங்கும் முடக்கப்பட்டு வரும் தருணத்தில் மக்கள் தமக்கு ஆதரவாக இருப்பதை விளம்பரப்படுத்த புலிகள் மிகவும் விரும்புவர். கனடா இங்கிலாந்து முதற்கொண்டு பல நாடுகளில் நடக்கும் பொங்குதமிழ் நிகழ்வில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்குபற்றுவதும் அது புலிகள் சார்பாக இருப்பதும் அவர்கள் வரவேற்ககூடியதே. இந்த நாடுகளில் அரசுகள் ‘புலிகள் ஆதரவுக்கு’ எதிராக தமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில் - புலிகள் ஆதரவு என்பது சிக்கலான கேள்வியாகியுள்ள நிலையில் இதுபற்றி பேசுவது அவசியம்.
‘புலிகள் ஆதரவு’ பற்றி:
வைக்கப்பட்ட கோசங்கள் மற்றும் படங்கள், சில நிகழ்வுக் கருக்கள் என்று இந்நிகழ்வில் காணக்கூடியதாக இருந்த போக்கை கருத்தில் கொண்டே இது புலிகளுக்கு ஆதரவாக ஒருங்கமைக்கப்பட்டு இருந்தது என்ற சந்தேகத்தை நாம் முன்வைத்துள்ளோமே அன்றி வேறு எதுவித ஆதாரபூர்வமான தகவல்களையும் வைத்துக்கொண்டு நாம் இதை சொல்லவில்லை. எந்த ஒரு அமைப்பையோ அல்லது குறிப்பிட்ட தனிநபரையோ விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்று குற்றம்சாட்டுவது இன்று சட்டம் சார்ந்த செயலாக இருக்கிறது. அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படின் இங்கிலாந்து அரசு இதற்கெதிராக தீவிரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கும் சாத்தியமுள்ளது என்ற முறையில் இக்குற்றச்சாட்டை ஆதாரங்கள் இன்றி வைப்பது தவிர்க்கப்பட வேண்டியதே.
புலிகள் எப்படி தமக்கு ஆதரவற்றவர்கள் அனைவரையும் துரோகிகள் என்று பார்க்கிறார்களோ அதேபோல் புலிகளுக்கு ஆதரவானவர்களை இங்கிலாந்து சட்டம் இங்கிலாந்தின் தேசிய இறைமைக்கு எதிராக பார்க்கிறது. புலிகள் ஜரோப்பாவில் தடை செய்ததை தொடர்ந்தும் புதிய ‘தீவிரவாதத்துக்கு எதிரான’ சட்டங்கள் அமுலுக்கு வந்ததை தொடர்ந்தும் இந்த போக்கு தீவிரமடைந்து உள்ளது. இதைபாவித்து வெளிநாடுகளில் புலிகளுக்கு எதிரான பிச்சாரங்களை - நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி இருப்பது தெரிந்ததே. புலிகளில் இருந்து கருணாவின் உடைவுக்கு பிறகு புலிகளின் நடவடிக்கைகளை நன்கறிந்த பல தமிழர் இலங்கை அரசுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவது வெளிநாடுகளில் புலிகளுக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் ஜனநாயகத்துக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டுவரும் மேற்கின் ஆழும் வர்க்கத்துக்கு மக்களை பாதுகாத்தல் என்பதைவிட காலனித்துவ நாடுகளின் வளங்களை சுரண்டுதலே தலையாய நோக்கம். அவர்களின் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது சாதாரண -முக்கியமாக சிறுபான்மை மக்களே. 2005ம் ஆண்டு 7/7 லண்டன் குண்டு வெடிப்பின் பின் ஆசியர்களை நிறுத்தி சோதனையிடுவது 600 வீதமாக அதிகரித்துள்ளது. தமது நடவடிக்கைகளால் சிறுபான்மையர் பாதிக்கப்படுவர் என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் அரசு துவேசத்தை தூண்டும்படியான செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறது. நாம் நிச்சயமாக இதற்கான எதிர்ப்பில் பங்கெடுக்க வேண்டும். சில இஸ்லாமிய அமைப்புகளாயினும் புலிகளாயினும் ஜரோப்பாவில் தடை செய்யப்படுவதை அனுமதிக்கும் போது – அதற்காக அரசு ஜனநாயக மறுப்பு சட்டங்களை கொண்டுவருவதை நாம் அனுமதிக்கும் போது – எமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை நாம் அநாவசியமாக ஆதிக்க வர்க்கத்திடம் தாரைவார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் இதற்கான எதிர்ப்பு முக்கியம். இதை அராஜக குழுக்களுக்கு ஆதரவு என்று இலகுபடுத்தல் தவறான புரிதல்.
ஜனநாயகம் மறுக்கும் - மக்களை துரோகப்படுத்தும் - அநாவசிய கொலைகள் செய்யும் புலிகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் வரவேற்கபட வேண்டியதே என்று கண்ணை மூடி கத்தியபடி எமது உரிமைகளை இன்னுமொரு ஜனநாயக மறுப்பாளர்களிடம் விட்டுக்கொடுப்பது தவறு என்பதற்காக புலிகளின் ஜனநாயக மறுப்புக்கு எதிராக எமது குரலை உயர்த்துவதை நாம் தவிர்க்ககூடாது.
தாம் சில தவறுகளை தவறுதலாக விட்டுவிட்டதாக விக்கி விழுங்கி ஒத்துக்கொள்ளும் புலிகள் தாம் தொடர்ந்து சரியானபடி - மக்கள் சார்ந்து இயங்கி வருவதாகவே வாதாடி வருகிறார்கள். பிரெஞ்சு புரட்சி தொட்டு இந்திய தேசிய போராட்டம் ஈறாக மேற்கோள் காட்டி தேசிய போராட்டம் என்றால் சில தியாகங்கள் - சில துரோகத்துக்கு எதிரான தண்டனைகள் இருக்கவே செய்யும் என்று விசர்தனமாக கொலைகளை நியாயப்படுத்தியும் வருகிறார்கள். சாரம்சத்தில் இலங்கை தமிழ் மக்களின் விடுதலையையே தலையாய நோக்காக கொண்டு இயங்குவதாக சுருக்கும் அவர்தம் வாதத்தை மிக கடுமையாக பரிசீலனை செய்ய வேண்டியது அனைத்து மக்களினதும் கடமை. ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களினதும் ஒரே ஒரு பிரதிநிதிகளாக தம்மை தாமே அறிவித்துக்கொண்ட அவர்களின் நியாயத்தனத்தை நமனைவரும் கேள்விகேட்க வேண்டியது அவசியம்.
இலங்கை தமிழ் மக்களிடையே இயங்கும் அரசியல் அமைப்புக்களில் புலிகளுக்குத் தான் அனேக தமிழர்களின் ஆதரவு உண்டு என்று சொல்வது மிகையில்லை. (இதில் இந்திய மற்றும் உலக தமிழர்களையும்கூட இணைக்கலாம்.) பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்பது எதுசரி என்பதை நிறுவும் கருவியல்ல. பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வருவதாக ஒவ்வொரு தடவையும் கூறும் சிங்கள பேரினவாத அரசுகள் எதுசரி என்பதற்கு எட்டாத தொலைவுள்ளவை. தமது கட்டுபாட்டின் கீழ் இருக்கும் மக்களை பயக்கெடுதியாலோ தேசியவாத உணர்வாலோ தமக்கு ஆதரவான நிலையில் வைத்துள்ளார்கள் புலிகள். அதுவே புலிகளின் பலம். அவர்களது தொடரும் ஜனநாயக மறுப்பால் இந்த ஆதரவு குறைந்து வருவது தெட்டதெளிவாக தெரிகிறது. வெறித்தனமான தேசியவாத அடிப்படையில் இருக்கும் இந்த ஆதரவின் பின்னால் நியாயமான உரிமை பிரச்சினைகள் மறைந்து கிடப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள தலையாய பிரச்சினைகளில் ஒன்று. ஆனால் இம்மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பன்முகப்பட்டவையாக உள்ளது. தமிழ் ஈழத்தை வென்ற பிறகு மிச்சத்தை பார்ப்பம் என்று அனைத்து பிரச்சினைகளையும் தனிநாட்டு கோரிக்கைக்குள் புதைப்பது புலிகள் விடும் மிகப்பெரிய தவறு. ஒன்றும் மிஞ்சாமல் மரணித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அன்றாட பிரச்சினைகள் தேசிய உணர்வை விஞ்சுவது ஆச்சரியமான ஒன்றல்ல. புலம்பெயர் நாடுகளில் இருப்பதைவிட தாய்நாட்டில் புலிகளின் மற்றும் போர் ஆதரவாளர்களின் செல்வாக்கு மங்குவதற்கு இதுதான் காரணம்.
தமக்கு மட்டுமே மக்கள் ஆதரவு தாம் செய்வது புனிதபோர் என்ற மனநிலையில் இருந்து கொண்டு எல்லாவித எதிர் கருத்துக்களையும் துரோகத்தனமாக்கி கொலை வெறியுடன் அணுகும் புலிகளின் போக்கில் எவ்வித மக்கள் நலனுமில்லை. புலித் தலைமையின் இந்த உறுதியான நிலைப்பாடு சாதாரண உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பலமான செய்தியாக பதியப்பட்டுள்ளது. எதிர்த்து ஒரு சொல் காணும் - ஆள் சரி - தமிழ் ஈழத்தின் துரோகி. தமது கொள்கைகளில் தமக்கே நம்பிக்கையற்ற இயக்கங்களிடையிலும் மக்களின்மேல் மிகவும் பயங்கொண்ட சர்வாதிகார அரசுகள் மத்தியிலும் இந்த போக்கை நாம் பார்க்க முடியும். உலகெங்கும் புரட்சிகரமான சமூக மாற்றங்களை கொண்டுவந்த மக்கள் நடவடிக்கைகளில் ஒழுங்கமைப்பும் கட்டுபாடும் இருந்ததே அன்றி நான் சரி என் எதிரி துரோகி என்ற இறுகிய புனைவு இருந்ததே இல்லை. இத்தகைய மிகவும் பிற்போக்குதனமான ஜனநாயக மறுப்புடன் எந்த புரட்சியையும் சாதித்துவிட முடியாது. தேசியவாதத்தை மட்டுமே ‘திரட்டும்’ உத்தியாக வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு இருக்கும் என்ற நினைப்பில் புலிகள் இயங்குவது தவறானது. ஒவ்வொரு பேச்சுவார்த்தை முன்னெடுப்பின் போதும் இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதை ஏற்றுக் கொள்ளும் புலிகள், தமிழ் மக்கள் மத்தியில் வெளியிடும் பிரசுரங்களில் தொடர்ந்தும் ‘புலிகளின் தாகம் தமிழ்ஈழ தாயகம்’ என்று முடிப்பது ஏமாற்றுதனமானது. தனிநாட்டு கோரிக்கையை நாம் விட்டுகொடுக்க தயார் என்று அன்ரன் பாலசிங்கம் கூறியது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் பரவியது? புலிகளின் தீர்வு நடவடிக்கைகளை தனிநாட்டு யுத்தத்தை தொடரும் உத்தியாக தமிழ் மக்களே பார்க்கும் பொழுது சிங்கள மக்கள் அதில் எவ்வளவு தூரம் நம்பிக்கை கொள்ள முடியும்.
மக்களின் ஜனநாயக உரிமைக்காக – அவர்தம் சுயநிர்ணய உரிமைக்காக - அவர்கள் அனைவரதும் நலனை முதன்மையாக கொண்ட சமுதாய மாற்றத்திற்காக குரல்கொடுக்க கூடியவர்கள் யார் என்று அறிந்து அவர்களை நட்புசக்தியாக பார்க்கும் போக்கு இலங்கை தமிழ் ‘தேசியபோராட்ட வரலாற்றில்’ இருக்கவில்லை. மாறாக திருகோணமலை ஆசைகாட்டி அல்லது அதுபோன்ற ஏதாவது ஒரு ‘வளத்தின்’ ஆசை காட்டி சுரண்டல் மோகம் கொண்டவர்களை வளைத்துபோட்டு அவர்களின் ஆதிக்க சக்தியை தேசிய போராட்டத்துக்கு ஆதரவாக திரட்டுவதையே சர்வதேச நோக்காக கொண்டு புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் இயங்கி வருகின்றன. சுரண்டல் மோகம் கொண்டவர்கள் எந்த பக்கம் கூட பயனோ அந்த பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை. கடந்த மாவீரர் உரையில் சர்வதேசம் எம்மை ஏமாற்றிவிட்டது என்று கலங்கியதில் பிரியோசனம் என்ன? ஆபிரிக்க கறுப்பின மக்கள் மிககேவலமான முறையில் ஒடுக்கப்ட்ட போதுகூட சர்வதேசம் ஒன்றும் செய்யவில்லை. வியட்நாமில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது சர்வதேசம் துணைபோனது தெரியும். ஆபிரிக்காவில் இன்று விநாடிக்கு விநாடி சா நிகழ்வதை சர்வதேசம் பாத்துக்கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் தமிழர் எங்கட திறமையால் சர்வதேசத்தை மடக்கிபிடிப்பம் என்று எனக்கொருவர் சொன்னார். அப்பேர்பட்ட மொக்குதனமான இனவாதத்தை வளர்ப்பது மக்களை கட்டுபாட்டில் வைக்க உதவுமே அன்றி ஒருபோதும் விடுதலைக்கு உதவாது. ‘பூமிப்பந்தில் வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட சிறப்பு வாய்ந்த இனம்.’ என்று எம்மைபற்றி நாம் கூறுவது வெள்ளையின துவேசிகள் கூறும் இனவெறி கதையாடல்களுக்கு இணையானது. நாமொன்றும் விசேமான மனிதர்களில்லை. எந்த விசேமான பண்புகளாலும் எமக்கு வெற்றி தரப்போவதில்லை. வியட்நாம் மக்களுக்கும் தென் ஆபிரிக்க மக்களுக்கும் ஆதரவாக கிளர்ந்தெழுந்த உலக நாட்டு மக்களின் நெருக்கடியும் அழுத்தமுமே இந்த சர்வதேசங்களை அடி பணிய வைத்தனவே தவிர அவர்தம் விசேசமான பண்புகளல்ல. மேற்சொன்ன அரசியற் தெளிவீனத்தின் நீட்சி புலம்பெயர் நாடுகளிலிருக்கும் ‘புலிகள் ஆதரவு’ நடவடிக்கைகளிலும் காணமுடியும்.
சர்வதேசம் என்ற கற்பனை செய்யப்பட்ட ஒருமை:
தொழிற்கட்சி சார்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மா (Chairman of the All Party Parliamentary Group for Tamils) லேபரின் அனைத்து யுத்த முன்னெடுப்புகளுக்கும் வாக்களித்தவர். ஈராக் யுத்தத்துக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் மில்லியன் கணக்கில் தெருவில் நின்று போராட இவர் பராளுமன்றத்தில் குந்தியிருந்து கொண்டு யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர். இன்றுவரையும் அதற்கு எதிராக குரல்கொடுக்க முன்வராதவர். தனது பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே முதன்மையாக கருதும் இவர் கன ஆசியர் வாழும் தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் இருந்திருந்தால் தமிழர் பிரச்சினை பற்றி எந்த அக்கறையும் கொள்ளமாட்டார் என்பது திண்ணம்.
இதுபோல் பாராளுமன்ற வாதிகள் வாக்கு வங்கி சார்ந்து இயங்குவது புதினமில்லை. அவர்தம் வாக்குவங்கிகளாக இருக்கும் நாம் எமது உரிமைகளுக்கு குரல்கொடுக்கும்படி அவர்களை தூண்டுவதிலும் தவறில்லை. இருப்பினும் நாம் இதனால் சாதிக்ககூடியது தற்காலிக பிரச்சார வெற்றி மட்டுமே. இவர்கள் யாரும் இங்கிலாந்தோ அல்லது இலங்கை அரச ஆதிக்கத்துக்கு எதிராக முழு நடவடிக்கைகளில் இறங்க போவதில்லை. இவர்கள் ஆழும் வர்க்கம் சார்ந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைவிட மனிதநேயம் கருதி கலந்து கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
தமிழர் பிரச்சினையை முடிப்பதில் எமக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால் நாட்டில் மனித உரிமைக்காக – தமிழ் மக்களுக்காக போராடும் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இருபதாயிரம் தமிழர் மத்தியில் சிங்கள மக்களின் பிரதிநிதி தமிழருக்கு ஆதரவாக பேசுவதை விட யுத்தத்துக்கு ஆதரவான லேபர் பிற்போக்கு மந்திரி பேசுவது முக்கியம் என்று கருதும் எமது தவறான அரசியல் மாற்றப்பட வேண்டும். இந்த வலதுசாரி கட்சிகள் சார்பில் பேசுபவர்கள் தெளிவாக - தமது வர்க்க ஆதிக்க நலன்சார்ந்து - மிக கவனமாக பூடகமாக பேசி செல்கிறார்கள். பேசிதீர்க்க வேண்டும் என்பது தாண்டி தமிழ் மக்களின் தனிநாட்டு அபிலாசைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது தாண்டி அவர்கள் போவது மிக மிக அபூர்வம்.
இதற்கு மத்தியில் சில தேசியவாதம் ஊறிய தமிழ் அரசியற் கத்துக்குட்டிகளின் கத்தல் கேலிக்கிடமானதாக இருக்கிறது. போக்லன்ட் தீவை காக்க பிரித்தானிய மக்களின் போருக்கு நிகராக தமிழர் போரை வர்ணித்த தயா இடைக்காடரை என்ன சொல்லி வர்ணிப்பது? தமது மொக்குத் தனத்தை காட்ட இதைவிட நல்ல உதாரணத்தை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. இந்த பிரித்தானிய யுத்தம் தச்சரின் இருண்ட பக்கங்களில் ஒன்றாக – பிரித்தானிய தவறுகளில் ஒன்றாக கருதப்படுவது மட்டுமின்றி - இடைக்காடர் இன்றிருக்கும் லேபர் கட்சி பெரும்பான்மை உறுப்பினர் உட்பட ஏராளமான பிரித்தானிய மக்கள் இந்த யுத்தத்தை எதிர்த்தது அவர்க்கு தெரிந்திருக்கவில்லை - பாவம். இந்த யுத்தம் போக்கிரித்தனமான லாப நோக்கில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றை கன்சவேட்டிவ் உறுப்பினர்களே அவருக்கு விளக்க தயாராக இருப்பார்கள் என்று நம்பலாம். இந்த மாதிரியான தூன்களில் நமது நம்பிக்கைகளை வைத்து பின்பு அது சரிஞ்சுபோச்சென்று அழுவதில் லாபமில்லை. லேபரில் இருக்கும் மற்றய உறுப்பினர்கள் இடைக்காடரின் அரசியல் தெளிவை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். கதைக்கிற பானியில் இவர் கன்சவேட்டிவுக்கு தாவினாலும் தாவுவார் போலுள்ளது!
இவ்வாறான அரசியல் தெளிவுடன் நாம் எதுவும் சாதித்துவிட முடியாது. சர்வதேசம் என்ற ஒற்றை போக்கு வெறும் கற்பனையே. பனியுத்தம் தொட்டு எத்தனையோ உடைவு வரலாற்றை தாண்டிவந்தும் நாம் ஒற்றை சொல்லில் சர்வதேசம் என்று இலங்கை தாண்டிய உலகுக்கு அரசியல் அர்த்தம் கொடுப்பது மிகத்தவறு. அதிலும் பெரிய தவறு சர்வதேச சமூகம் என்று உலகின் கொடிய ஆழும் வர்க்கங்களை விழிப்பது. அவர்களுக்கும் ‘சழூகத்துக்கும்’ தொடர்பில்லை. நாம் பேச வேண்டியது எம்மைப்போல் ‘ஒடுக்கப்படும் சர்வதேச சமூகத்தோடன்றி’ ஒடுக்குபவர்களோடில்லை
No comments:
Post a Comment