* மீண்டும் ஒரு இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்தைத் தோற்கடிப்போம்!
* இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் தமிழக தரகர்களைத் தனிமைப்படுத்துவோம்! அவர்களது சுயநிர்ணய உரிமையை எதிர்த்த,இன மொழிப் பித்தலாட்டங்களை அம்பலமாக்குவோம்!
* அரசியல் தீர்வுகாண வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவோம்!
* பிரிந்து செல்லும் உரிமையைப் பற்றிப்பிடித்து, விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிற்போம்!
* சுயாட்சிப் பிரதேச திட்டத்தின் அடிப்படையில், விடுதலைப் புரட்சியில் முஸ்லிம், மலையகமக்களை ஒன்றிணைப்போம்!
* அமெரிக்காவுடன் அணிசேர்ந்து, சீனாவுடன் போட்டி போட்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யுத்தகளமாக்கும் இந்திய விஸ்தரிப்புவாத பேரரசை எதிர்ப்போம், இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சமாதானப் பிராந்தியமாக்குவோம்!
* ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவள, பிரதேச கைப்பற்றுதலுக்கான ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்ப்போம்! இதை எதிர்த்த நீதியான தேசபக்த விடுதலை யுத்தங்களை ஆதரிப்போம்!
* மூன்றாம் உலகப்போரை தடுத்து நிறுத்துவோம், மூளும் பட்சத்தில் உள்நாட்டுப் போராய் மாற்றி, தீவிரப்படுத்துவோம்!
* விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்போம், புரட்சிகர ஈழ விடுதலைப் போரை இறுதி வரை தொடர்வோம் !
* யுத்த கால மனிதநேயப் பணிகளுக்காக மக்கள் குழுக்களைக் கட்டியமைப்போம்! மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவோம்!!
* தமிழர் தாயகத்தில் அனைத்து தன்னார்வ உளவாளி நிறுவனங்களுக்கும் தடை விதிப்போம்!
* விடுதலைப் புரட்சியைக் காக்க, போராடும் தலைமையைப் பாதுகாப்போம்!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.
No comments:
Post a Comment