Thursday, 17 July 2008

டக்ளஸ்: உனது 'எக்காலமும் பிரிக்கமுடியாத வடக்கும் கிழக்கும்'' என்னாச்சு?

என்றும் நாம் மக்களுக்காக! தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!! மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!!
தோழர் டக்ளஸ் தேவானந்தாசெயலாளர் நாயகம்,ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி அமைச்சர்,மற்றும் வடக்கு மக்களுக்கானசிறப்பு நிர்வாகத்தின் தலைவர்!
============================================
இந்தியாவின் ஏவலில் எல்லைப்புற சிங்கள மக்களைக் கொன்றொழிக்க கொல்லன் பட்டறை கட்டியவனே;பெருமாள் கோவில் கொள்ளையனே; கூறைச்சேலை திருடிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனே; அப்பாவி நெடுந்தீவு மக்களை வெட்டரிவாள் கொண்டு வெட்டிச் சரித்தவனே; பிரேமதாசா போட்ட பிச்சையில் இலட்சாதிபதியானவனே; வெள்ளை வான் கொள்ளையனே; சிதறு தேங்காய் கொலையாளியே,
உனது ''எக்காலமும் பிரிக்க முடியாத வடக்கும் கிழக்கும்'' என்னாச்சு?
==================================
" ஊர் சுமந்து போகும் போது உனக்கும் கூடத் தெரிந்துவிடும்"
தேசத்தின் தியாக ஜோதி மகேஸ்வரி!
புலம் பெயர்ந்து வாழும் எம்தாயக தேசத்து உறவுகளுக்கு வணக்கம்!
மறுபடி, மறுபடி எம் சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எப்போதுமே எம்மிடம் இருக்கும் நம்பிக்கையின் சிறகடித்து பறப்பதற்கு
பழங்கப்பட்டவர்கள் நாங்கள்!
தொடரும் எமது இலட்சியப் பயணத்தில் பல நூறு தோழர்களையும் பலநூறு சகோதர அமைப்பு தோழர்களையும் பறி கொடுத்திருக்கும் நாம் இன்று தியாக ஜோதி மகேஸ்வரி என்ற மகத்தான மனித உரிமை வாதியை இழந்து நிற்கிறோம்.
இந்த இழப்பு ஈ.பி.டி.பி யினராகிய எமக்கு மட்டுமல்ல, மனித உரிமைகளை நேசிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு. மனித
கௌரவத்தை விரும்பி நிற்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு. எமது மக்களின் உரிமைகளை நேசிக்கும் அனைத்து ஐனநாயக
சத்திகளுக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பு. மொத்தத்தில் தமிழ் பேசும் மக்களுக்கே ஏற்பட்டிருக்கும் இழப்பு!
எமது தாயக தேசம் மகேஸ்வரி என்ற தன் தவப்புதல்வியை இன்று இழந்து நிற்கிறது. அவரது நினைவுகளும், சேவைகளும், மக்களுக்காக உழைத்து வந்த அவரது அர்ப்பண உணர்வுகளும் எமது நீள வரலாற்றில் என்றும் மீள நினைத்துப் பார்க்க வேண்டியவை.
1977 ஆம் ஆண்டு மகேஸ்வரி அவர்கள் தமிழரசு கட்சியின் - தமிழர் விடுதலைக் கூட்டணியின் மகளிர் பேரவையின் கொழும்பு கிளையோடு இணைந்து செயற்பட்டு கொண்டிருந்த போது அவரை நான் சந்தித்திருந்தேன்.
அப்போது 77 ஆம் ஆண்டின் இனக்கலவரம் நடந்த காலம். எனது பெரிய தந்ததையாரும், வளர்ப்பு தந்ததையாரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான திரு. கே.சி நித்தியானந்தா அவர்கள் ரி.ஆர்.ஆர்.ஓ என்ற தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை ஆரம்பித்து அந்த கலவரத்தின்போது அகதிகளாக்கப்பட்டு அவலங்களை சந்தித்து நின்ற எம் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.
அந்த அமைப்பில் நானும் ஒரு முன்னணி உறுப்பினராக இணைந்து பணியாற்றியிருந்தேன். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து செயலாற்றியிருந்த மகேஸ்வரி அவர்கள் கிழக்கு மாகாண மக்கள் சூறாவளியில் சிக்குண்டு தவித்த போது எம்முடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்.
அந்த நாட்களில் அவருக்குள் புதைந்து கிடந்த சமூக அக்கறையினையும், மனித நேயப்பண்புகளையும், எடுத்த இலக்கை எட்டிவிட
வேண்டும் என்ற திடமான மன உறுதியையும் கண்டு அக்கினிக் குஞ்சொன்று கண்டோம் என்ற ஆனந்தக்களிப்பில்அவருடன் இணைந்து நாம் எமது மக்களுக்காக உழைத்திருந்தோம்.
============================
டக்ளஸ்
நீ
வெள்ளை வான் கொள்ளையன்
=============================
அன்றிலிருந்து இறுதி வரை காலமும் 30 ஆண்டு கால அரசியல் வரலாறு மகேஸ்வரி அவர்களுக்கு இருந்திருக்கின்றது. எமது வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கு, தென்னிலங்கை சூழல், எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் புது டில்லி, மற்றும் தமிழ் நாடு என்று தொடங்கி சர்வதேசமெங்கும் அவரது உழைப்பும் வியர்வையும் சிந்தப்பட்டிருக்கின்றது.
மனித உரிமை வாதியாக… சட்டத்தரணியாக…. பெண்ணுரிமை வாதியாக….சமூக அக்கறையாளராக…. சிறந்த சேவகியாக…. மனித நேய போராளியாக….மதியுரைஞராக…. ஆன்மீக சிந்தனையாளராக…. அற நெறிச்செயற்பாட்டாளராக…தனது உண்மை முகத்தை காட்டி நின்றவர் தியாக ஜோதி மகேஸ்வரி அவர்கள்.
நாம் மக்களை தேடிச் செல்கின்ற வேளைகளிலும், மக்கள் எம்மை தேடி வருகின்ற வேளைகளிலும் அவர்களை தாயன்போடும்,
தயவன்போடும் அணுகி அவர்களது அவலங்களுக்கு தீர்வு காணும் எமது மக்கள் பணிக்கு பக்க பலமாக இருந்த ஒருவரையே நாம் இழந்து நிற்கிறோம்.
சர்வதேசமெங்கும் சென்று எமது அமைச்சு சார்ந்த மாநாடுகளில் கலந்து கொண்டு, அமைச்சு சார்ந்த விடயங்களை மட்டுமன்றி,
எமது மக்களின் அரசியலுரிமை சுதந்திரம் குறித்தும் உலகத்தின் செவிகளில் உரத்துச்சொன்ன ஒருவரையே நாம் இழந்து நிற்கின்றோம்.
தான் கற்றறிந்த சட்டக் கல்வியை தனது சட்டைப்பையை நிரப்புவதற்காக அன்றி, சமூக அந்தஸ்தாக எண்ணி மேதாவித்தனம்
கொள்வதற்காக அன்றி.. சமூக அக்கறையோடு தனது சட்டத்துறையை பயன்படுத்தியிருந்த சிறந்த ஒரு சட்ட வல்லுனரையே
எமது தாயக தேசம் இழந்து நிற்கிறது.
காணமாமல் போனவர்களை கண்டு பிடிக்கவும், அதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும்,
(மன்மத லீலை: அத்தான் அந்த பட்டியலை மறைத்தாரா? அல்லது இந்த அக்கினிக் குஞ்சு மயக்கத்தில் கேட்க மறந்தாரா?)
சிறைகளில் வாடிய எம் உறவுகளை சிறை மீட்டு அவர்களது பெற்றோரகள், உறவினர்கள் முகங்களில் மகிழ்ச்சியை காண்பதற்கு உழைத்து வந்த சிறந்த ஒரு மனிதநேய வாதியையே எமது மக்கள் இழந்து நிற்கிறார்கள்.
வறுமையின் எல்லையில் வாழும் எம் மக்களும், கணவனை இழந்து தனித்து விடப்பட்ட பெண்களும், அங்கங்களை இழந்து வலுவிழந்து வாழ்வோரும் வாழும் சமூகத்தில் சரி நிகர் சமனான வாழ்வியல் உரிமைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கருதி உழைத்து வந்த ஒரு சமூக அக்கறையாளரையே எம் தேசம் இழந்து நிற்கிறது.
இறுதிக் காலத்தில், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும், ஈ.பி.டி.பி யின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் திச விதாரண அவர்களின் தலைமையில் ஐனாதிபதி அவர்களால் உருவாக்கப்பட்ட சர்வ கட்சி மாநாட்டில் நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் எழுந்து நின்ற உரிமைக் குரலையே எமது மக்கள் இழந்திருக்கிறார்கள்.
குடும்பம், உறவு, என்ற கோடுகளை கிழித்து தாம் வாழும் சமகால கொடுமைகளை எதிர்த்து, தேசத்திற்காக தியாகங்களை ஏற்று,
இழப்புகளை சந்தித்து வந்திருக்கும் இவரது குடும்ப உறவுகள் தீராத்துயரத்தை தந்திருக்கும் இன்னொரு இழப்பையும் சந்தித்து நிற்கின்றனர்.
எமது தேசத்திற்காகவும் எமது மக்களுக்காகவும் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த மகேஸ்வரி என்ற மாபெரும் தியாக
ஜோதி எமது மண்ணில் நிரந்தர சமாதானத்திற்கான ஒளிக்கீற்றை உருவாக்கி விட்டுத்தான் அணைந்திருக்கின்றது.
எமது மக்களின் அரசியலுரிமை சுதந்திரந்திற்கான பாதையை திறந்து விட்டு, அந்த பாதையின் வழியே எமது இலக்கு நோக்கிய
எமது பயணத்தை தொடக்கி வைத்துவிட்டு சாதித்துக்காட்டி விட்ட சரித்திர வெற்றியோடுதான் அவர் ஆகுதி ஆகியிருக்கின்றார்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அதிகாரப்போட்டிகளே அரசியலாகிவிட்ட நீண்ட கால வரலாற்றுச்சூழலுக்குள்
எமது அரசியலுரிமை சுதந்திரத்திற்கான முயற்சிகள் யாவும் முடக்கப்பட்டிருக்கும் சூழலில்…..
நடை முறை ஐதார்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல், தமிழ் தேசியம், தன்னாட்சி, சமஷ்டி என்று தொடரும் வெற்றுக்
கோசங்களுக்குள் சுயலாப அரசியல் தலைமைகள் மூழ்கிப் போயிருக்கும் ஒரு சூழலில்…..
உரிமை என்பது அடைவதற்காக அன்றி, அரசியல் நடத்துவதற்கே என்ற வெறும் சலசலப்புகளுக்கு மத்தியில்….
அன்று சுதந்திரத்திற்காக போராட எழுந்த எமது மக்கள் இன்று சோறும் இல்லை, சுதந்திரமும் இல்லை என்ற நிலையில் தங்களது
உயிர் வாழும் சுதந்திரத்தையும் இழந்து நிற்கும் துயரங்களுக்கு மத்தியில்….
இலக்கு நோக்கி நகர முடியாமல் சகதிக்குள் புதைந்திருந்த எமது மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கிய பயணத்தை
முன்னோக்கி இழுத்து நகரத்தி…எங்கிருந்து தொடங்க முடியுமோ… அங்கிருந்து தொடங்கி…. எமது கரங்களுக்கு பலம் கொடுத்து…. உரம் கொடுத்து… அதற்காக
வியர்வை சிந்திய மகேஸ்வரி என்ற தியாக ஜோதி இறுதியாக அந்த புனித இலட்சியத்திற்காகவே குருதி சிந்தியிருக்கிறது.
மக்களை நேசித்து, மக்களின் மகிழ்ச்சிக்காகவும், மானுட நீதிக்காகவும், மனித கௌரவத்திற்காகவும், அமைதி, சமாதானம், இன
ஐக்கியம், இன சமத்துவம் என்பவற்றிற்காகவும் தன் உயிரையே அர்ப்பணித்தவர் தியாக ஜோதி மகேஸ்வரி அவர்கள்.
இவரை கொன்றொழித்த புலித்தலைமையினர் மக்களின் எதிரிகளே!மானுட சமூகத்தின் கருவறுப்பாளர்களே!
தியாக ஜோதி மகேஸ்வரி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது அவர் எம்முடன் இணைந்து தொடக்கி வைத்த
பயணத்தை எமது இலக்கு எட்டப்படும் வரை நடத்தி முடிப்பதே ஆகும். இதுவே அனைத்து ஐனநாயக, மனிதநேய, அரசியல்
சக்திகளுக்கும், மற்றும் சமூக அக்கறையாளர்களுக்கும் முன்பாக விரிந்து கிடக்கும் பாரிய வரலாற்று கடமையாகும்.
என்றும் நாம் மக்களுக்காக!
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!!
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!!
...........................................................................................( கீறிட்ட இடம் நிரப்புக.)
தோழர் டக்ளஸ் தேவானந்தாசெயலாளர் நாயகம்,ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி அமைச்சர், மற்றும் வடக்கு மக்களுக்கானசிறப்பு நிர்வாகத்தின் தலைவர்!

ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம்
[வியாழக்கிழமை, 17 யூலை 2008, 03:59 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான
ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக
அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே
புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால் இது குறித்து உடனடியாக காவல்துறை
மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பிரகாரம் மாவட்ட நீதிபதிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிபதி
முன்னிலையில் புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் வரை புதைகுழி தோண்டப்படவில்லை என்றும் இன்று மாலை புதைகுழி தோண்டப்படலாம்
என்றும் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதைகுழிக்கு வெளியே தெரியும் தலைப்பகுதி மட்டக்களப்பில் அண்மையில் கடத்தப்பட்ட ஒருவரினது என்று அப்பகுதி மக்கள்
தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும்
அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மனிதப் புதைகுழி:
அனைத்துலக விசாரணையை கோருகிறது வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
[புதன்கிழமை, 16 யூலை 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் அனைத்துலக விசாரணைகள்
மேற்கொள்ளப்படவேண்டும் என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது:
மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் இன்று புதன்கிழமை சான்றுகளுடன் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்
அவற்றுக்கு தீர்வு எதுவும் கிட்டவில்லை.
ஆனால் காணாமல் போனோர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் சட்டபூர்வமாக இருந்தன. ஆனால், இதுவரை
அதற்கு எந்த விசாரணைகளோ, தீர்வோ சிறிலங்காவின் நீதித்துறையாலோ விசாரணைக்குழுக்களாலோ வழங்கப்படவில்லை.
தமிழ்மக்கள் தொடர்பிலான படுகொலைகளுக்கு இதுவரை காலமும் எந்தவிதான நீதியான விசாரணையும் நடக்கவில்லை. நீதியும்
வழங்கப்படவில்லை.
மூதூரில் "அக்சன் பெய்ம்" தொண்டு நிறுவனப்பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அது தொடர்பிலான
விசாரணைகளில் சிறிலங்கா அரச தலைவர் விசாரணைக்குழு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அந்த விசாரணைக்குழு
அரசுக்கும் அவர்களின் படைகளுக்கும் சார்பாகவே செயற்பட்டுள்ளது.
இதனால், விசாரணைகளை கண்காணித்த அனைத்துலக நிபுணர் குழுவே சிறிலங்காவை விட்டு வெளியேறிவிட்டது.
"அக்சன் பெய்ம்" என்ற பிரான்ஸ் தொண்டு நிறுவனம் இந்தப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை தேவை என்பதை
வலியுறுத்துகின்றது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரும் இதனை வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவின் நீதியற்ற தன்மையை இது
அம்பலப்படுத்துகின்றது.
1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட பாரிய மனிதப் படுகொலைகள் எவற்றுக்கும் எந்தவொரு நீதி
விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இன்று, மட்டக்களப்பில் நீண்டகாலமாக படையினர் நிலைகொண்டுள்ள பாலமீன்மடுவில் எலும்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இது
உலகை உலுக்கிய மனித புதைகுழிகளுக்கு ஒப்பான - மிகப்பெரிய - மனிதப்புதைகுழியாகும்
சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன? தமிழ் மக்களுக்கு எத்தகைய பாதுகாப்பு
இருக்கின்றது? ஆகியவற்றை இது தெளிவாக காட்டியுள்ளது.
இந்தப் புதைகுழி விவகாரத்துக்கு சிறிலங்காவிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை. இதற்கு அனைத்துலக விசாரணைகள்
தேவை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: