Monday, 28 July 2008

வன்னிக்களமுனை: மல்லாவிக்கு சமீபமாக தாக்குதல்!

மல்லாவிக்குச் சமீபமாக இப்பொழுது தாக்குதல்
நடத்தப்படுவதாக படைத்தரப்பு அறிவிப்பு மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியை நோக்கிச் செல்லும் படையினர் மல்லாவிக்குச் சமீபமாகத் தமது படை நடவடிக்கைகளைத்
தொடர்ந்து மேற்கொண்டு வரு கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது.வவுனியா, மன்னார் களமுனையில் மேற்கொண்டு வரும் படைநடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதல்களில்
விடுதலைப்புலிகளின் 13 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்று படைத்தரப்பு அறிவித்துள்ளது.வவுனிக்குளம் பகுதியில் நேற்று இடம் பெற்ற மோதல் களின் பின் படையினர் மேற்கொண்ட தேடுதலில் பெரும்
எண்ணிக்கையான ஆயுத தளபாடங்களும் விடு தலைப் புலி உறுப்பினர் ஒருவரின் சடல மும் மீட்கப் பட்டுள்ளன என்றும் இராணு
வத் தரப்பு கூறியுள்ளது.வவுனியா, நாவற்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் இரண்டு படையினர் காயமடைந்தனர் என்றும் தெரி
விக்கப்பட்டிருக்கிறது.30 சடலங்கள் ஒப்படைப்புவன்னிக்களமுனையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் 19 சட லங்கள் நேற்று ஓமந்தை சோதனை நிலையத்தில் வைத்து செஞ்சிலுவைச் சர்வ தேசக்குழுவினரிடம் கையளிக்கப்பட் டன என்றும் நேற்று முன்தினமும் 11 சடலங் கள்
ஒப்படைக்கப்பட்டன என்றும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.சுகந்தன் முகாம் கைப்பற்றப்பட்டதாம்இதேவேளை முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் உள்ள கிரிபன்வௌவில் அமைந்துள்ள விடுத லைப்புலிகளின் "வன்போ(ஊ)ர்' படை
வளாகத்திலுள்ள "சுகந்தன்' செய்மதி முகா மைத் தாம் கைப்பற்றி விட்டதாக படைத் தரப்பினர் நேற்று நள்ளிரவு அறி வித்தனர்.

துணுக்காயில் வல்வளைப்பு -முற்றுகை-முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம்
[ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 08:30 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர்.
40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால்
கைப்பற்றப்பட்டுள்ளது. துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும்
நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகளின் சூட்டாதரவுடன் சிறிலங்காப்
படையினர் பாரிய முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வினை சிறிலங்கா தரைப்படையின் 57 ஆவது டிவிசன் படையினர் மற்றும் கொமாண்டோக்கள் மேற்கொண்டனர்.
இதற்கு எதிரான முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்புத்தாக்குதல் விடுதலைப் புலிகளால் குட்டிமூலையில் மேற்கொள்ளப்பட்டது.
படையினரின் தாக்குதலுக்கு ஒத்துழைப்பாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகளும் தாக்குதலை நடத்தின.
படையினரின் இப்பாரிய தாக்குதல் நடவடிக்கை நேற்று முன்நாள் மாலை 6:30 மணியளவில் விடுதலைப் புலிகளால்
முறியடிக்கப்பட்டது.
இதில், படையினர் பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர்.
விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 படையினர் படுகாயமடைந்தனர்.
படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ன.
இம்முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:
ஆர்.பி.ஜி செலுத்தி - 01பி.கே.எல்எம்ஜி துப்பாக்கி - 01ரி-56-02 ரக துப்பாக்கிகள் - 03 மற்றும்பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: