Thursday, 7 August 2008

வான் வெளித்தாக்குதல், சிறீலங்கா அரசின் ஈனச்செயல்!

முல்லைத்தீவில் வான் குண்டுத்தாக்குதல்: 18 அப்பாவிப் பொதுமக்கள் காயம் [புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 08:02 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவுப் பகுதியில் இன்று புதன்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் விவரம்:
வற்றாப்பளையைச் சேர்ந்த சதாசிவம் (வயது 45),முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 52) வற்றாப்பளையைச் சேர்ந்த பரமராஜசிங்கம் (வயது 40),முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநாதன் (வயது 30) புதுக்குடியிருப்பை சேர்ந்த தாசன் (வயது 35),சிறீதாஸ் (வயது 21),பொன்நகரைச் சேர்ந்த திருநாகராசன் (வயது 35)
மூங்கிலாறைச் சேர்ந்த சிவறஞ்சன் (வயது 31),சிவசீலன் (வயது 37),தண்ணீரூற்றைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 21)
முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் (வயது 25),புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தராசா (வயது 52)
முள்ளியவளைச்சேர்ந்த மனோகரன் மற்றும் பாஸ்கரன் தேவராசா (வயது 49),மந்துவிலைச் சேர்ந்த கனகசுந்தரம் (வயது 50) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மூவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Posted on : Wed Aug 6 9:31:04 EEST 2008
வெள்ளாங்குளத்தில் விமானத் தாக்குதல்
மன்னார், வெள்ளாங்குளம் வடக்குப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர் குண்டுவீசித் தாக்கியிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.எனினும் புலிகள் தரப்பிலிருந்து இத்தாக்குதல் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.

முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் விமான தாக்குதல்
வீரகேசரி இணையம் 8/6/2008 2:23:19 PM -
இலங்கை விமானப்படையின் ஜெட் ரக விமானங்கள் முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் படகுகளை இலக்கு வைத்து இன்று காலை 11 மணியளவில் விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத் தாக்குதல் வெற்றியளித்துள்ளதாகவும் இதன் போது விடுதலைப்புலிகளின் இரு படகுகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது

வெற்றிலைக்கேணியில் படையினர் எறிகணைத்தாக்குதல்: பொதுமக்கள் இருவர் படுகொலை
[புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 01:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வாடிகளை இலக்குவைத்து நாகர்கோவில் பின்தளத்திலிருந்து படையினர் இன்று புதன்கிழமை காலை 8:45 மணியளவில் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் மக்களின் வீடுகள், படகுகள் மற்றும் வலைகள் என்பனவற்றுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதில் ஒரு பிள்ளையின் தந்தையான தங்கவேலு குணேந்திரராசா (வயது 29), முள்ளியானைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் கணேசலிங்கம் (வயது 45) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த கோபாலகிருஸ்ணசாமி (வயது 47) தொழிலில் ஈடுபட்டுக்கோண்டிருந்த வேளையில் காயமடைந்தார்.
இவரின் குடும்பத்தினர் படையினரின் தாக்குதலால் இடம்பெயர்ந்து கிளிநொச்சி முரசுமோட்டையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஜூலையில் 106 சிறிலங்காப் படையினர் பலி- 662 பேர் காயம்
[புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2008, 06:44 பி.ப ஈழம்] [க.நித்தியா] வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் கடந்த மாதம் மாத்திரம் 106 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 662 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் பேசியபோதே அவர் இத்தகவலை கூறினார்.
அத்துடன் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அது 72 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 84 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

No comments: