முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒரு வயது குழந்தை பலி- 16 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 11:28 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]
முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு
வயது குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரின் மனைவி உட்பட 16
பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மருத்துவமனை, அரச அதிபர் இல்லம், மருத்துவர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1:00 மணியளிவில் சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் மருத்துவமனையிலிருந்த ஒரு வயது குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்தது. முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி
திருமதி ரேணுகா உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையை அண்டிய நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம், குமரபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய
பிரதேசங்களிலும் நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளை நோக்கி நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக
எறிகணைத்தாக்குதல்களை நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆளில்லா வானூர்தி அனுராதபுரத்தில் அவசரமாக தரையிறக்கம் [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 12:10 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]
சிறிலங்கா வான்படையின் ஆளில்லா வேவு வானூர்தி ஒன்று தொடர்ந்து பறப்பில் ஈடுபட முடியாத நிலையில் அனுராதபுரத்தில்
அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு மேலாக பறந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்த வானூர்தியின் ஒருபகுதி திடீரென செயலிழந்ததால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:45 மணியளவில் அனுராதபுரம் நுவர வாவி பகுதியில்
அவரசரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வானூர்தி தரையிறக்கப்பட்டதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா வான்படையின் எம்.ஐ-17 ரக படைக்காவி உலங்குவானூர்தி ஒன்று கடந்த புதன்கிழமை மன்னாரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் அது விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நிலையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பின்னர் கொழும்புச் செய்திகள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனருக்கு ஆயுட் தண்டனை வீரகேசரி இணையம் 8/7/2008 11:55:57 AM -
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான, அமெரிக்காவின் முதலாவது
போர்க்குற்ற விசாரணை மன்றமான, குவாண்டனாமா குடாவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான சலீம் ஹம்டன் அவர்களை பயங்கரவாதத்துக்கு பொருளுதவி வழங்கியதற்காகவும் கொலையை நடத்தியமைக்காகவும் ஆயுட் தண்டனை விதித்துள்ளது
No comments:
Post a Comment