Friday 16 January, 2009

முல்லைத்தீவு: மேனன் பயணம்

மேனன் பயணம்: ஆனையிறவில் தொடக்கி வைத்து, கிழக்கை ஆக்கிரமித்து, கிளிநொச்சியை நடத்தி முடித்து, முல்லைத்தீவில் முடிவுகட்டும் இந்திய எதிரியின் இழிவான சதி.ENB
'Secretary Menon extended his appreciation of the proactive role played by Sri Lanka both multilaterally and in the regional context in combating terrorism, and extended the unstinted support of the Indian government in this exercise,' the statement said.
மகிந்த - சிவ்சங்கர் மேனன் சந்திப்பு: சந்திப்பு தொடர்பான விடயங்கள் இருட்டடிப்பு
வெள்ளி, 16 ஜனவரி 2009, 14:29 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று நள்ளிரவு கொழும்பை வந்தடைந்த சிவசங்கர் மேனன் இன்று காலை சந்தித்து தற்போது முன்னெடுக்கப்படும் யுத்த நடவடிக்கைகள் பற்றியே உரையாடியுள்ளனர். எனினும் சிவசங்கர் மேனனின் கொழும்பு வருகை மற்றும் அரச அதிபருடனான சந்திப்பு தொடர்பான விடங்களை சிறீலங்கா அரசு இருட்டடிப்புச் செய்துள்ளது.

தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 16 சனவரி 2009, 09:44 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர்.
இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.
களமுனையில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.
40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 01ஆர்பிடி எல்எம்ஜிக்கள் - 02ஆர்பிஜி - 01ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02ஆர்பிகே எல்எம்ஜி - 01
உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து பரவலான எறிகணைத் தாக்குதல்: இன்று மட்டும் 14 பேர் பலி; 12 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 16 சனவரி 2009, 08:40 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
வன்னி பகுதியில் பொதுமக்களை கொன்றொழிக்கும் நோக்குடன் சிறிலங்கா படையினர் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் இன்று மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நகர் மற்றும் சுற்றயல் பகுதிகள் மீது இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.
இதில் புன்னைநீராவிப் பகுதியில் உழுவூர்தி மீது எறிகணை வீழ்ந்து வெடித்ததில் ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுமி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தொடர் எறிகணைத் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் மற்றொரு உழுவூர்தி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களின் துப்பரவுப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் சேத விவரம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
விசுவமடுவில் நகரில் பெருமளவில் மக்கள் உடமைகளுக்கும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
விஸ்வமடுவில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணைத் தாக்குதலில் இராஜரட்ணம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரபுரம் பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்னர்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேராவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மல்லாவி வன்னிவிளாங்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து தேராவிலில் வசித்து வந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராமநாதன் (வயது 65), இராமநாதன் குமரன் (வயது 30), மற்றும் குமரனின் மாமியாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
படுகொலை செய்யப்பட்ட குமரனின் மனைவி, ஒன்றரை வயது குமரனின் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள கைவேலி, கோம்பாவில் மற்றும் விசுவமடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனா். மோகனதாஸ் (வயது 25), இராமநாதன் குமரன் (வயது 30), தம்பையா யோகேஸ்வரன் (வயது 50), யோகேஸ்வரன் கஜேந்தினி (வயது 14), உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. யோகேஸ்வரன் பிரசாத் (வயது 08), பாபுகரன் ஜெயந்தினி (வயது 33)ஞானரூபன் வசந்தகுமார் (வயது 30), நந்தகுமார் தபோதினி (வயது 30)
உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 பேரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
காயமடைந்த அனைவரும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னைய செய்திகள்:
நிருபர் கேள்வி: போர் நிறுத்தம் உண்டா?
கருணாநிதி பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான் (விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதலை நிறுத்துவதற்காக அல்ல என்று பொருள்! enb)
இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள்.

வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி]
கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருகின்றன.
சிறிலங்கா அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உளவு வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்திய உளவு அமைப்பான றோவின் இரகசிய பிரிவுகளில் ஒன்றான வான் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானூர்தி ஜனவரி 3 ஆம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வடபோர்முனையின் கரையோர பகுதிகளை அடைந்து கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இந்த வானூர்தி பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பாது வேறு வானூர்தி நிலையம் ஒன்றில் தரையிறங்கியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறக்கும் இந்த வானூர்திகளில் துல்லியமாக படங்களை எடுக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முகில் கூட்டங்களின் ஊடாக தரையில் நடைபெறும் சம்பவங்களை படம் பிடிக்கும் தகமை கொண்ட இந்த ஒளிப்பட சாதனங்கள் சிறிய வாகனங்களையும், மனித நடமாட்டங்களையும் காண்காணிக்க கூடியது.
இந்திய உளவு அமைப்பின் இந்த வான் ஆய்வு மையத்தை சேர்ந்த வானூர்திகளை உளவு நிறுவனங்களை சேர்ந்த வானோடிகளே செலுத்துவதுண்டு, அதனை வான்படை வானோடிகள் செலுத்துவதில்லை.
மேலும் அவை குறிப்பிட்ட ஒரு நிலையத்தை பயன்படுத்துவது கிடையாது, பொதுமக்கள் பயன்படுத்தும் வானூர்தி நிலையங்களையும், வான்படையின் நிலையங்களையும் மாறி மாறி பயன்படுத்துவது உண்டு.
இதனிடையே, வான் ஆய்வு மையத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக தமக்கு சிறிதளவான தகவல்கள் தெரியும் என சென்னை வானூர்தி நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு ஒரு நிலையத்தில் இருந்து வந்த வானூர்தி ஒன்றே சென்னை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் மீதான கரிசனையை புலிகளுக்கு ஆதரவாக பயன்படுத்தக்கூடாது [13 - January - 2009]
* இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிப்பு இலங்கைத் தமிழரின் நிலைமை தொடர்பாக இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள கரிசனையை எந்தவொரு சக்தியும் தடை செய்யப்பட்டவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பயன்படுத்தக் கூடாதென அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. எனினும், இந்தக் கரிசனையை எந்தவொரு சக்தியும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பயன்படுத்துவதை கட்சி விரும்பவில்லை. இலங்கையிலுள்ள தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் சமாந்தரப்படுத்தி பார்க்க முடியாது. அதேவேளை,
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பிருந்தா காரத் கூறியுள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வும் இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்வரும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதென தீர்மானித்துள்ள வேளையில் பிருந்தா காரத் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இந்த இரு கட்சிகளும் விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளாகும்.
இலங்கையின் சட்டவரையறைக்குள் இலங்கைத் தமிழரின் சுயாட்சிக் கோரிக்கை அரசியல் தீர்வாக வென்றெடுக்கப்பட வேண்டுமென்று பிருந்தா காரத் கூறியுள்ளார்.
கொழும்பு பயணம் தொடர்பாக இன்னமும் முடிவு செய்யவில்லை: பிரணாப் முகர்ஜி [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:27 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]
தமிழகக் கட்சிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து உறுதியளித்தபடி கொழும்பு பயணம் மேற்கொள்வது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது:
இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சில மாகாணங்களில் தேர்தல் நடைபெறுவதால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண இயலாது. 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் படிதான் தீர்வு காண முடியும்.
இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்றார் பிரணாப் முகர்ஜி.
எந்த நேரமும் கிளிநொச்சி வீழ்ந்துவிடும்; சரணடைந்து விடுங்கள்: புலிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 06:59 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] கிளிநொச்சியை மும்முனைகளில் துண்டித்துள்ள நிலையில் எந்த நேரமும் கிளிநொச்சி சிறிலங்கா படையிடம் வீழ்ந்துவிடும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் உடனே சரணடைய
வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பரந்தன் மற்றும் இரணைமடு சந்திகளை படைத்தரப்பு கைப்பற்றியதாக அறிவித்ததைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, சில நாட்களில் கிளிநொச்சி வீழ்ந்துவிடும்
என்றார்.
"மேலும் எஞ்சியுள்ள புலிகளின் நிலைகளும் எதிர்வரும் சில மாதங்களில் அழித்துவிடப்படும். கிளிநொச்சியைப் பிடித்துவிடலாமென சிறிலங்கா படை பகல் கனவு காண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் விரைவில் உண்மை என்னவென தெரியவரும். பரந்தனும் இரணைமடு சந்தியும் வீழ்ந்துவிட்டதால் அழிவை எதிர்கொள்வதா? அல்லது
சரணடைவதா? என்பதை புலிகள் முடிவு செய்ய வேண்டும்" என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியாவைவிட்டு வெளியேற சிவாஜிலிங்கத்துக்கு உத்தரவு
[13 - December - 2008]
* தமிழ்நாட்டில் அரசியல் சர்ச்சை உருவாகும் அறிகுறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கத்தை 72 மணித்தியாலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் இல்லாவிடில் நாடுகடத்தப்படும் நிலைமையை அவர் எதிர் நோக்க நேரிடும் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவால் தமிழ்நாட்டில் புதியதொரு கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
எனினும், இதுவரை இந்திய மத்திய அரசிடமிருந்தோ அல்லது தமிழக மாநில அரசிடமிருந்தோ தனக்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லையென்றும் இது வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படும் செய்தியாக இருக்கலாமெனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இணையத்தளமொன்று நேற்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருக்கிறது.
இந்தியாவில் சிவாஜிலிங்கத்தின் சர்ச்சைக்குரிய அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே அவரை நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவை இந்திய அரசு பிறப்பித்திருப்பதாக அறியவருவதாக "ட்ரான்ஸ் கரண்ட்' செய்திச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அச்செய்திச் சேவையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சிவாஜிலிங்கம் இந்தியாவில் அரசியல் பிரசார நடவடிக்கையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் இந்தியாவின் ஆதரவுடன் தனி நாடொன்று உருவாக்கப்பட வேண்டுமென பகிரங்கமாக சிவாஜிலிங்கம் பேசிவருவது இந்திய அதிகார மட்டத்தை விசனப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகச் சந்தேகப்பட்டால் அது குற்றமாக இந்திய சட்டத்தில் கருதப்படுகிறது. அத்துடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளான அரசியல்வாதிகளுடன் சிவாஜிலிங்கம் நெருக்கமாக இருந்து வருவதும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றுமாறும் தமிழீழம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவளிக்குமாறும் இந்தியாவில் இடம்பெறும் பல அரசியல் கூட்டங்கள், பேரணிகளில் சிவாஜிலிங்கம் பகிரங்கமாக பங்கேற்று வருகிறார்.
இது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதாகவும் இலங்கை போன்ற நட்பு நாடொன்றை உதாசீனப்படுத்துவதாகவும் இந்திய அதிகாரவர்க்கத்தால் நோக்கப்படுகிறது.
சிவாஜிலிங்கம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகையால் அவராகவே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான "காலம்' வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். அவர் அச்சமயம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.
புதுடில்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சிவாஜிலிங்கம் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களுக்கு அமைய நடந்து கொள்ளாமல் உடனடியாகவே சென்னைக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் முன்பாக ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். அக்கூட்டத்தில் உரையாற்றிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட தகவலை வெளியிட்டிருந்ததுடன் அவர் நாடு திரும்புவதற்கு அச்சப்படுவதாகவும் அவர்
திரும்பிச் சென்றால் கொல்லப்படலாம் என்றும் வைகோ கூறியிருந்தார்.
இதேவேளை, சிவாஜிலிங்கம் இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரக் கூடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
சிவாஜிலிங்கம் அரசியல் தஞ்சம் கோரினால், அதற்கு தமிழக அரசு ஆதரவளித்தால் அது மாநிலத்தில் பாரியதொரு அரசியல் விவகாரமாகத் தோற்றம் பெறக் கூடும். அத்துடன், தமிழக, மத்திய அரசுகளுக்கு அரசியல் ரீதியான அசௌகரியங்களும் ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் வெறும் நாடகமே!
திருமாவளவன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 22:38 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்]
சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் ஒரு நாடாகமே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்யை தினம் ஆரம்பித்த திருமாவளவன் இரண்டாம் நாளாகத் தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செய்தியாளரிடம் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை இந்தியா கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். என்னைக் கைது செய்தாலும் எனது போராட்டத்தைக் கைவிடமாட்டேன்.
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும், சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சிக் குழுவினரும் பிரதமரைச் சந்திந்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திய போதும் போர் நிறுத்தம் குறித்து எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
எனது உண்ணாநிலைப் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. எனது கோரிக்கைகளை தமிழக அரசினால் நிறைவேற்ற முடியாதவை. அவை மத்திய அரசினால் மட்டுமே நிறைவேற்றக்கூடியவை.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனனை இலங்கைக்கு அனுப்பியமை வெறும் நாடகமே! இதனால் எதுவித தீர்வும் எட்டப்போவதில்லை என அவர் தனது இரண்டாம் நாள் உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்த - சிவ்சங்கர் மேனன் சந்திப்பு: சந்திப்பு தொடர்பான விடயங்கள் இருட்டடிப்பு வெள்ளி, 16 ஜனவரி 2009, 14:29 மணி தமிழீழம் [கொழும்பு நிருபர் மயூரன்]
இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று நள்ளிரவு கொழும்பை வந்தடைந்த சிவசங்கர் மேனன் இன்று காலை சந்தித்து தற்போது முன்னெடுக்கப்படும் யுத்த நடவடிக்கைகள் பற்றியே உரையாடியுள்ளனர். எனினும் சிவசங்கர் மேனனின் கொழும்பு வருகை மற்றும் அரச அதிபருடனான சந்திப்பு தொடர்பான விடங்களை சிறீலங்கா அரசு இருட்டடிப்புச் செய்துள்ளது

No comments: