Monday, 26 January 2009

முல்லைத்தீவு: காடையன் ராஜபக்சவின் காட்டுமிராண்டி பாசிச அரசே வன்னிமக்கள் மீது தொடுத்துள்ள படுகொலைத் தாண்டவத்தை உடனே நிறுத்து!

காடையன் ராஜபக்சவின் காட்டுமிராண்டி பாசிச அரசே வன்னிமக்கள் மீது தொடுத்துள்ள படுகொலைத் தாண்டவத்தை உடனே நிறுத்து!
NEEDS: SOS
More than 1,000 wounded, Mullai RDHS urges IC to send medical teams [TamilNet, Monday, 26 January 2009, 16:27 GMT]
The Regional Director of Health Services (RDHS) for Mullaiththeeev district, Dr. T. Varatharajah in an urgent appeal to the Government of Sri Lanka (GoSL), ICRC, the United Nations and the International Community has urged to send medical supplies and medical teams to the district to assist its medical staff. Full text of the appeal follows:26 January 2009Human Catastrophe & Medical Emergency in the Vanni
Mullai RDHS: Human Catastrophe & Medical Emergency in the Vanni
Heavy fighting and continuous multi-barrel artillery shelling has resulted in more than 300 internally displaced persons being killed and over 1000 hundred injured in Suthanthirapuram, Udaiyaarkaddu, and Vallipuram in the Mullaitivu District.We are making an URGENT APPEAL to the Government of Sri Lanka, ICRC, the UN, and the international community for medical supplies and medical teams to be sent to the District to assist our staff. We currently only have 9 MMBS Doctors.The nature of the injuries and the number of the injuries is such that if these medical supplies do not arrive in the next 24 hours many of the injured will die.
காணொளி
சங்கதி - Breaking Tamil News, Analysis and stories from Tamileelam
300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்; கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்": வன்னி மக்களை சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல்
[திங்கட்கிழமை, 26 சனவரி 2009, 08:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில்
கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.
சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.
மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.
இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என "புதினம்" செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவிக்கின்றார். இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகள் - தமது வன்னிச் செய்தியாளரை மேற்கோள் காட்டி "தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்ட செய்திகளில் இருந்தும், எமது வன்னிச் செய்தியாளர் அனுப்பிய செய்திகளிருந்தும் தொகுக்கப்பட்டவையாகும்.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் - மிகக் கொடூரமாக பொதுமக்களை நோக்கி அதிகரித்து வருவதால் - இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம் என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
உடையார்கட்டில் பெரும் மனிதப் பேரவலம் - சிறிலங்கா கொடூர எறிகணைத் தாக்குதல் - 300 பொது மக்கள் படுகொலை நூற்றுக் கணக்கானோர் படுகாயம்
திகதி: 26.01.2009 // தமிழீழம் // [வன்னியன்]
இன்று திங்கள் காலை உடையார் கட்டில் அமைந்துள்ள பொது மக்களின் பாதுகாப்புப் பிரதேசம் மீது சிறிலங்கர் இராணூவம் நடத்திய மிக மோசமான மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலில் 300க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு இன்னும் படுகாயப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் எந்தவித மருத்துவ உதவிகளுமின்றி
இறக்கும் தறுவாயில் இருப்பதாக அறியவருகிறது.
உடையார் கட்டிலிருந்து வந்த ஆரம்ப தகவல்களின் படி எல்லாப் பொதுமக்களுமே சுமார் 5 மணித்தியாலாங்களுக்கும் மேலாக பதுங்கு குழிகளுக்குள் இருந்ததாகத் தெரியவருகிறது.
உடையார்கட்டில் இடம்பெயர்ந்து இயங்கி வந்த மருத்துவமனையும் முற்றாக செயல் இழந்துள்ளதோடு அங்கு 10 பொதுமக்கள் கொல்லப்பட்டு 4 அவசர உதவி வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய போதும், அவர்களும் பதுங்கு குழிகளுள் இருந்தபடியினால் எந்த உதவியுமே கிடைக்கவில்லை.அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் வெளிப்பகுதிகளில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் அவசர மருத்துவ உதவிகளை வேண்டியிருப்பதோடு, பொது மக்களின் பாதுகாப்பு வலயத்தில் நடக்கும் அப்பட்ட கூட்டுக் கொலையைத் தடுத்து நிறுத்தும்படியும் வேண்டியிருக்கின்றனர்.
பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான அழிப்பு எறிகணைத் தாக்குதல் எனக் கருதப்படும் இத்தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான எறிகணைகள் அரச பயங்கரவாதத்தால் ஏவப்பட்டதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பொதுமக்களைச் சரணடைய வைத்து அவர்களை தாக்குப்பிடிக்கும் அளவின் எல்லைக்கே கொண்டு சென்று அடிபணியவைக்கும் நோக்குடன் சிங்கள இராணுவம் நடத்தியுள்ள இந்த கொலைத் தாக்குதலில் பெரும் மனித அவலம் ஏற்பட்டிருக்கிறது.காயப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு அங்கு எவருமே இருக்கவில்லை என்று ஆரம்பகட்ட மருத்துவத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.
மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை நோக்கி பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.
இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் என சம்பவ இடத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.
"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 03:52
"வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார். "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை
கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" என பா.நடேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் புலிகள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போது, "எம் மீது அவர்கள் வைப்பது ஒர்
அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின்
உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்" என தெரிவித்த அவர்,
"இவ்வாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத்
தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என அவர்களுக்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்"
என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா என்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "எமது தலைவர் எங்கும் சென்று
விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடுகின்றோம்" என அவர் தெரிவித்தார்.
பெரும் இராணுவப் பின்னடைவைக் கண்டுள்ள நிலையில் புலிகள் இயக்கம் ஏன் ஒரு அரசியல் தீர்வைப் பெறக்கூடாது என்பது தொடர்பான ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், "சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து
போராடுவோம். (வே. பிரபாகரன்)


வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்." (வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.மாவீரர் நாள் உரை 271108
எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது "எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது.
பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச்
சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர்
காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும்
சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள்
எமது மக்களது வாழ்வு சுழல்கிறது."
"இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து
வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும்
உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது. பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே
அன்றி வேறெதற்காகவும் அன்று."
"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து
போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
"இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர
இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக."
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.
மாவீரர் நாள் உரை 271108

No comments: