Monday, 29 June 2009

மீண்டும் ''திருவிழா''-2009

மீண்டும் ''திருவிழா''-2009

TNA's 2004 Election Manifesto
◦Accepting LTTE’s leadership as the national leadership of the Tamil Eelam Tamils and the Liberation Tigers as the sole and authentic representatives of the Tamil people, let us devote our full cooperation for the ideals of the Liberation Tigers’ struggle with honesty and steadfastness.
◦We emphasize that if the Tamil nation’s requests are continued to be rejected, rightful political solution denied and armed aggression and oppressive rule return, based on the doctrine of self-determination, it is an inevitable reality that Tamil sovereignty and independence will be established in the Tamil homeland.

================2009
யுத்த பீதியை தக்க வைத்து தமிழரை ஒடுக்க அரசு முயற்சி; தமிழர் பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது: இரா.சம்பந்தன் பா.உ.
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2009, 02:16.16 AM GMT +05:30 ]

யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும் நாட்டில் தொடர்ந்தும் யுத்தப் பீதியைத் தக்கவைத்து தமிழர்களை ஒடுக்க அரசு முற்படுகிறது.புலிகள் இல்லாத இச்சந்தர்ப்பத்தில் தமிழர்களின் பிரச்சினைகளை இராணுவ ரீதியில் தீர்க்க அரசு முற்படக்கூடாது. நீண்ட காலமாகவுள்ள இப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான நடைமுறைகள் மூலமே தீர்வு காணப்படவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று
நாடாளுமன்றில் காட்டமாகத் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுற்ற போதிலும் அரசு யுத்த பீதியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படையின் தலைமை அதிகாரி நியமனம் தொடர்பிலான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
இலங்கையில் தற்போது யுத்தம் இல்லை. அரசின் எதிரிகள் அழிந்து விட்டனர். இருந்தும் அரசுக்கு எதிரி ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டில்தான் அரசு உள்ளது.
யுத்தம் முடிவுற்றபோதிலும் யுத்தப் பீதியை இந்நாட்டில் தக்கவைத்துக் கொள்ள அரசு முற்படுகிறது. இது நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். யுத்த பீதியை நாம் இனியும் விரும்பவில்லை.
இராணுவ மயமாக்கலுக்கு வழி வகுக்கும் அரசு தற்போது கொண்டுவரும் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சட்டமூலம் இதையே காட்டுகின்றது. இராணுவ மயமாக்கல் ஒன்றுக்கே இச்சட்டமூலம் வழிவகுக்கும்.
இந்த இராணுவ மயமாக்கலைச் செய்து இராணுவத் தீர்வின் ஊடாகத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. புலிகள் தற்போது இல்லாத நிலையில் அரசியல் தீர்வின் ஊடாகத்தான் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும்.
ஒரு இலட்சம் பேர் படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எத்தனை வீதம் இடமுண்டு? அல்லது முழுவதும் சிங்களவர்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா?
எமது மக்கள் சமாதானமான வாழ்க்கையையே விரும்புகின்றனர். இராணுவ ரீதியில் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பவில்லை. அப்படி இடம்பெற்றால் உரிமை கோரி மீண்டும் ஒரு அமைப்பு உருவாக வாய்ப்புண்டு.
இது இவ்வாறிருக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் இலங்கை அகதிகளுக்கு வழங்கிய நிவாரணப் பொருட்களைப் பெற்று அவர்களுக்கு வழங்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா இலங்கையிடம் கோரியிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

அரசாங்கத்தின் போலித்தனத்தை தேர்தலில் மக்கள் நிரூபிக்க வேண்டும்: யாழ்ப்பாணத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ. [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2009, 03:34.10 AM GMT +05:30 ]

மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக இத்தேர்தலை திணித்துள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிழக்கில் பொய்யான ஒரு தேர்தலை நடத்தியது போன்று யாழ்ப்பாணத்திலும் தேர்தலை நடத்திக் காட்டுவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. யாழ்.மாநகரசபைக்கான தமிழ் தேசிய
கூட்டமைப்பின வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது:-
தமிழர்களை காட்டி ஆளும் அரசாங்கம் உலகெங்கும் பிச்சை ஏந்துகின்றது. அரசின் போலித்தனத்தை மக்கள் தேர்தலில் நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே பல்வேறு இடங்களிலும் வெற்றிலைச் சின்னத்திற்கு அரசாங்கம் மோசடிகளை மேற்கொண்டு தேர்தலில் வெற்றியீட்டியுள்ளது.
தமிழ் மக்கள் அரசின் போலித்தனத்தை நன்கு உணர்ந்துள்ளனர். இதற்கான தீர்ப்பினை இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்குவார்கள். இந்தத் தேர்தல் சுதந்திரமாக இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகும். நாங்கள் இது தொடர்பில் அவதானிப்புகளை மேற்கொண்டு தேர்தல் ஆணையாளருக்கு விரிவான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க உள்ளோம்.
மனித பேரவலத்தின் விளைவு, தமிழ் மக்களின் நீண்டகால போருக்கான தீர்வு, யாழ்.மாநகரசபையை மீளக் கட்டி எழுப்புதல் ஆகியவற்றை நாங்கள் முதன்மைக் கோசமாக முன்வைக்கின்றோம்.
மக்கள் அச்சமூட்டப்பட்டு பீதியின் மத்தியில் வாழும் நிலையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அரசாங்கம் முழு அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது. இதற்கெல்லாம் இந்தத் தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பினை வழங்க வேண்டும்.

தமிழர்கள் தமது மண்ணில் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன் [வெள்ளிக்கிழமை, 26 யூன் 2009, 09:42 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்]

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அவர்களின் கலை, கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் தமது உழைப்பில் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்
தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சட்டமூல விவாதத்தில் உரையாற்றியபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கூட்டுப்படை தலைமை அதிகாரி பதவி தற்போதும் உள்ளதொரு விடயம். இந்த சட்டமூலத்தின் படி அப்பதவிக்கு அதிக அதிகாரங்கள் அள்ளி வழங்கப்படுகின்றது. இதற்கு அங்கீகாரம் பெறவே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தின் பின்னால் உள்ள ஏது நிலைகளைப் பார்க்கும் போது இந்த நாட்டுக்கு வெளிநாட்டு எதிரிகள் யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில், இந்த நாட்டில் நீங்கள் எதிரிகளாக கருதியவர்களின் கதையை முடித்து விட்டீர்களே. அப்படியாயின், உள்நாட்டிலும் நீங்கள் எதிரிகளாக கருதியவர்களின் கதையை முடித்துவிட்டீர்களே. அப்படியாயின், உள்நாட்டிலும் எதிரிகள் இருக்க முடியாது. அவ்வாறானால் உள்ளக ரீதியான எதிரி தேவை என நீங்கள் நினைப்பது போல் உள்ளது.
மக்கள் மத்தியில் போர்ப் பீதியை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என அரசு நினைக்கின்றது. அத்துடன், இராணுவ மயப்படுத்தலை தொடர்ந்தும் இந்த நாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் அரசுக்கு உண்டு. இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய முடியாது.
விடுதலைப் புலிகள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். பயங்கரவாதிகள் இந்த நாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கியவர்களிடம் இருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இதுதான் இன்றைய நிலை.
விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் என்ற நொண்டிச் சாட்டை இனிமேலும் அரசு கூறக்கூடாது. இராணுவ மயப்படுத்தல் என்ற எண்ணக்கருவை விட்டு தமிழர் பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டும்.
தமிழர் பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது. முடியும் என யாராவது நினைப்பார்களால் அது பெரும் முட்டாள்த்தனமாகும். தமிழர் பிரச்சினை பேச்சுவார்த்தை மேசைகளிலேயே ஆராயப்பட வேண்டும்.
இந்த சட்டமூலம் நாட்டின் முழுச் சூழலையும் சமாதான முறையில் கொண்டு வராது. இந்த நாடு இராணுவ மயமாய்ப் போகிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை மறுப்பதையே இந்த சட்டமூலம் உணர்த்துகின்றது.
விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் தமிழர் பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்க்க முற்படக்கூடாது தமிழரை தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள் வைக்கக்கூடாது. இது தொடர்ந்தால் இன்னொரு போராட்ட அமைப்பு உருவாகவே வழிவகுக்கும்.
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அவர்களின் கலை, கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் தமது உழைப்பில் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
படைகளுக்கு பெரும்பான்மை இனத்தில் இருந்தே ஆட்கள் திரட்டப்படுகின்றனர். 98 வீதமானோர் இவ்வாறே திரட்டப்படுகின்றனர். இன்னும் ஒரு லட்சம் பேரை திரட்டவுள்ளீர்கள் இது இன
விகிதாசாரப்படி இடம்பெறுமா? அல்லது பெரும்பான்மை இனத்தில் மட்டும் நடைபெறுமா?
பிரித்தானியாவில் இருந்து தமிழ் மக்களால் வன்னியில் உள்ள தமது உறவுகளுக்கு என கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அந்த மக்களுக்கு வழங்க முன்வந்ததையிட்டு சிறிலங்கா அரசுக்கு பாராட்டையும் அதற்கான அழுத்தத்தினையும் கொடுத்ததற்காக இந்திய அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வன்னி மக்களுக்கு இந்தப் பொருட்கள் கிடைக்க விரைவாக வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோருவதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப் போராட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது – TNA:
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஜனநாயக வழியில் தொடரும் எனவும், ஒருபோதும் போராட்டம் கைவிடப்பட மாட்டாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா பிரதேச சபைத் தேர்தல்களின் போது தமது கட்சி இந்த கோரிக்கையையே தமிழ் மக்களிடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண நகரை மீளக் கட்டியெழுப்புதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட மனிதப் பேரவலம் குறித்து வெளிப்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தாம் தேர்தலில் களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்கான வேட்பு மனுத்தாக்கல்களின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சுரேஸ் பிரேசந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல்கள் சர்வதேச சமூகத்தையும், உள்நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கான ஓர் கண்துடைப்பு நாடகமே என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உலக சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அதன் மூலம் வெளிநாட்டு உதவிகளையும் பணத்தையும் பெற்றுக்கொள்வதே இந்த அவசரத் தேர்தலின் உள்நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈ பி டி பி, யாழ்., வவுனியா தேர்தல்களில் வெற்றிலை சின்னத்தில் போட்டி[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2009, 08:13.25 AM GMT +05:30 ]

தமது கட்சி யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலிலும் வவுனியா நகரசபைத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமது வீணை சின்னத்தில் தனித்து போட்டியிட அனுமதி கோரியபோதும் ஜனாதிபதியின் வலியுறுத்தலின் பேரிலேயே வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி தரப்புகள் தெரிவித்துள்ளன.
அகதிகளை மீளக்குடியமர்த்தும் வரைவடக்கு உள்ளூராட்சித் தேர்தலைஒத்திவைக்கக் கோருகிறது கூட்டமைப்புஜனாதிபதிக்கு வெள்ளியன்று கடிதம் [15 யூன் 2009, திங்கட்கிழமை 4:20 மு.ப இலங்கை]

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து, வவுனியா அகதி முகாம்களில் தங்கி அவல முறும் மக்களை, அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தும் வரை வடக்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தக் கோரிக்கைக் கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் சார்பில் நாடாளு மன்ற உறுப்பினர் க.துரைரத்தினசிங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டது.தேர்தல்களை நடத்துவதற்கு இது உகந்த தருணம் அல்ல என்றும் இடம்பெயர்ந்த வன்னி மக்களை அவர் களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த் தும் வரை எந்தத் தேர்தல்களையும் நடத்து வது பொருத்தமானது அல்ல என்றும் ஆகவே யாழ்ப்பாணம் மாநகர சபைக் கும், வவுனியா நகர சபைக்கும் நடத்து வதற்குத் திட்டமிட்டுள்ள தேர்தல்களைஒத்திவைக்குமாறு கூட்டமைப்பில் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.இந்தியாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் இந்தியத் தலை வர்களுடன் பேச்சுநடத்தியபின் இலங்கை திரும்புகின்றனர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினரான மாவை சேனாதிராசா நேற்று மாலை கொழும்பு திரும்பினார். கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்புவார்.வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டிய காலம் நெருங்கி வந்த நிலை யில், வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாளுக்கு முன்னதாக தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் கடிதத்தை கூட்டமைப்பின் சார் பில் க.துரைரட்ணசிங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தெரிவிக் கப்பட்டது.இதேவேளை வேட்பு மனுப் பத்திரங்களைப் பெறு தல், வேட்பு மனுத் தாக்கல் செய்தல் போன்ற பணிகளுக்காக தமது அதிகார மளிக்கப்பட்ட முகவராக எஸ். எக்ஸ் குல நாயகத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரான மாவை சேனாதிராசா நேற்று நியமித்துள்ளார்.இந்த நியமனம் தொடர்பான கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு நேற்று கைய ளிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி யாழ். தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பப் பட்டுள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜன நாயக தமிழர் முன்னணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி), ஐ.தே.க, தமிழரசுக்கட்சி, சுயேச்øசக்குழு ஆகியன தமது தேர்தல் முகவர்களை நியமித்து தேர்தல் திணைக்களத்துக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா தேர்தலுக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம் [17 - June - 2009] டிட்டோகுகன்

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை வியாழக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று புதன்கிழமை முதல் ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
வடக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வடக்கில் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை வியாழக்கிழமை (18 ஆம் திகதி) தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், இந்த தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி
நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வருவதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 23 உறுப்பினர்களையும் வவுனியா நகரசபைக்கு 11 உறுப்பினர்களையும் தெரிவு செய்யும் பொருட்டு நடைபெறும் இந்த தேர்தலில் கட்சியொன்றின் சார்பாக யாழ்.மாநகரசபைக்கென 29 வேட்பாளர்களையும் வவுனியா நகரசபைக்கென 15 வேட்பாளர்களையும் போட்டிக் களத்தில் நிறுத்த முடியும்.
இதேநேரம், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், இங்கு 70 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், வவுனியா நகரசபைக்கான தேர்தலில் 24,626 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், இதன்பொருட்டு 18 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன.
ஊவா மாகாண சபை இதேநேரம், ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் மேலதிக
தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக கட்டுப்பணங்களை செலுத்தி முடிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண சபைக்கென இரு போனஸ் ஆசனங்கள் உட்பட மொத்தமாக 34 உறுப்பினர்களை தெரிவு செய்ய நடைபெறும் இந்த தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து 21 உறுப்பினர்களும், மொனறாகல மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களும் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அத்துடன், போனஸ் ஆசனங்களின் அடிப்படையில் எஞ்சிய இரு
உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதேநேரம், பதுளை மற்றும் மொனறாகல ஆகிய இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 9 இலட்சத்து 34 ஆயிரத்து 856 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 507 வாக்களிப்பு நிலையங்களும் மொனறாகல மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.
இதேவேளை, வேட்பு மனுத்தாக்கலின் நிறைவில் வேட்பு மனுத்தாக்கல் பற்றிய விபரங்களுடன் வெளியாகும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் நடைபெறும் தினமும் தேர்தல்கள் ஆணையாளரினால் அறிவிக்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிலர் ஆளும் கட்சியில் இணையத் திட்டம்: லக்பிம தகவல் [ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2009, 03:57.55 AM GMT +05:30 ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக லக்பிம சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் உள்ளிட்ட சிலர் இவ்வாறு இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியுடன் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளார்.
தமிழருக்கு சுயாட்சி அடிப்படையில்புதிய தீர்வு யோசனை தயாராகிறது இந்தியாவின் ஆதரவை நாடியிருப்பதாக கூட்டமைப்புத் தகவல் [14 யூன் 2009, ஞாயிற்றுக்கிழமை 3:20 மு.ப இலங்கை] ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு யோசனை ஒன்றைத் தயாரிக்கும் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.தமிழர் தாயகம், தமிழருக்கு சுயாட்சி, அவர்களுக்குரிய சுய நிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்தத் தீர்வு யோசனை அமையும். இன்னும் இரண்டு மாதங்களில் அந்தத் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க உள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தீர்வு யோசனை குறித்து இந்திய அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வெளி விவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஆராய்ந்துள்ளோம். அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியைச் சந்தித்து இது விடயத்தில் இந்திய அரசுக்கு ஆதரவளிக்கக் கோரினோம். அவர் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியை இங்குள்ள அவரது உத்தி யோக பூர்வ இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் தூதுக்குழுவினர்
சந்தித்துப்பேசினர்.அதன் போது இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும்
கஷ்டங்கள் பிரச் சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப் பட்டது. தமிழர்களுக்கு உகந்த தீர்வு யோசனைக்கு இந்திய மத்திய அரசுக்கு தாம் ஆதரவு அளிப்பதற்கு எல்.கே. அத் வானி தூதுக்குழுவினரிடம் வாக்குறுதி அளித்துள்ளார் என்று தூதுக்குழு உறுப்பி னர்களில் ஒருவர் தகவல் வெளியிட்டுள் ளார்.எதிர்க்கட்சி தலைவர் அத்வானியைச் சந்தித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதி ராசõ, கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.அத்வானியுடனான சந்திப்பபுக்குறித்து தூதுக்குழு உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிடுகையில் மேலும் கூறியதாவது: தமிழர்களின் அரசியல் பிரச்சினைக் குத் தீர்வாக 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவான திட்டம் குறித்தேஇலங்கை இன்னமும் பிரஸ்தாபித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இறந்து போன ஒன்று. அந்தத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இன்னமும் இரண்டு மாதங்களில் அந்த தீர்வுத்திட்டத்தை முன் வைப்போம். அதற்கு
இந்தியாவின் ஆதர வும் பங்களிப்பும் அவசியமானது என்றார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் இன்று கொழும்பு திரும்புகின்றனர் [14 யூன் 2009, ஞாயிற்றுக்கிழமை 3:45 மு.ப இலங்கை]

சமகால அரசியல் நிலைமை தொடர் பாக இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கொழும்பு திரும்புகிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் சென்ற குழுவினர்,
பேச்சுக்களை முடித்துக்கொண்டு இன்று திரும்புவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.கூட்டமைப்புத் தூதுக்குழுவினர் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சுச் செயலர் சிவ்சங்கர் மேனன், தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி : ஆனந்தசங்கரி வீரகேசரி இணையம் 6/17/2009 1:31:00 PM - யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கூட்டுக்கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமாகிய குத்துவிளக்கு சின்னத்தில் வவுனியாவில் போட்டியிடுவது என்று முன்னர் தீர்மானித்திருந்தன. எனினும் தற்போது, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தமது சின்னமாகிய நங்கூரம் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. இது செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதனால், அதற்கு தம்மால் இணங்க முடியாது என்று ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
முன்னர் இணங்கியபடி, குத்து விளக்கு சின்னத்தில் வவுனியாவிலும், உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணத்திலும் கூட்டாகப் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு மற்ற கட்சிகள் தயாரில்லாவிட்டால் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இட்ங்களில் தாங்கள் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்:மாவை சேனாதிராஜா![பிரித்தானிய நேரம் : June 17th, 2009 at 13:47]
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமென அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் கஷ்டங்களை அனுபவித்துவருகின்ற நிலையில், தற்போது இந்தத் தேர்தலுக்கு அவசியமில்லையெனத் தாம் கருதுவதுடன், இந்தத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தாம் கோரவிருப்பதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தாம் ஆளாகியிருப்பதுடன், எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்ய தாம் தயாராகவிருப்பதாகவும் கூறிய மாவை சேனாதிராஜா, இந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து தாம் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்துப் பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மோதல்களால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் உறவினர்கள் குறித்து எதுவித தகவலும் தெரியாத நிலையில் யாழ் மாநகரசபை பிரதேசத்திலுள்ள மக்களில் பலர் கவலையடைந்திருப்பதாகக் கூறிய மாவை சேனாதிராஜா, இந்த நிலையில், இவ்வாறானதொரு தேர்தலை நடத்தவேண்டிய அவசியமில்லையென தேர்தல் ஆணையாளருடனான
சந்திப்பின்போது தாம் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான முயற்சியில் கட்சிகள் தீவிரமாகவிருப்பதுடன், இந்தத் தேர்தல்களில் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தமிழ்க் கட்சிகள் போட்டியிடவிருப்பதால், பலமுனைப் போட்டி நிலவுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளே ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடவிருப்பதுடன், இந்தக் கட்சிகள வவுனியாவில் புளொட் அமைப்பின் சின்னமான நங்கூரத்திலும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சின்னமாக மெழுகுதிரியிலும் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருக்கிறது.
இது இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஈ.பி.டி.பிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.

சமஷ்டியை ஏற்க இரு தரப்பும் மறுப்பு;அதனாலேயே சமாதான முயற்சி முறிவு!அம்பலப்படுத்துகிறார் எரிக் சொல்யஹய்ம் [17 யூன் 2009, புதன்கிழமை 7:05 மு.ப இலங்கை]
"இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வேயின் சர்வ தேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதியுமான
எரிக்சொல்ஹெய்ம்.பி.பி.ஸியின் ஹார்ட் "டோக்"நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய நிலையில்இலங்கைக்கு எதிரான தடைகள் அவசியமில்லை
எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இலங்கையின் மனிதாபிமானப் பணிகளுக்காக அரசுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால், இடம்பெயர்ந்தோரின்முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்தவை வருமாறு:இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கானஅனுமதியைப் பெறும் விடயத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.இது தொடர்பாக பல உத்தியோகப்பற்றற்ற பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.எனினும் அந்த மக்களுக்கு நாங்கள் எதற்காக நிதி வழங்குகிறோம் என்பதை எமது மக்களுக்குக் காண்பிக்க வேண்டும்.இதற்காக முகாம்களுக்குச் செல்ல அனுமதி அவசியம். போராட்டத்தை அமைதி வழியில் முன்னெடுக்க வேண்டும்இலங்கையைப் பொறுத்தவரை ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்டது.தமிழ் மக்கள் தமது போராட்டத்தை அமைதி வழிகளில் முன்னெடுக்க வேண்டும்.அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன் தாராள மனோபாவமுள்ள பல் கலாசாரதேசமொன்றை உருவாக்க முயல வேண்டும்.விடுதலைப் புலிகளுடன் பேசுவது என்பது நாங்கள் மாத்திரம் மேற்கொண்ட முடிவல்ல. இலங்கை அரசின் வேண்டுகோளின்பேரிலேயே இதனைச் செய்தோம்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி என அனைவரும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர். உற்சாகப் படுத்தினர்.
நாங்கள் எப்படி மாட்டோம் எனக் கூற முடியும்?விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபட்டதைச் சரியான விடயமாகவே கருதுகிறேன். என்றாலும், இறைமையுள்ள அரசை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட நான் முயலவில்லை.எமது இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு மிக நெருக்கமாக வந்தது.சமாதானப் பேச்சுகளின் காலத்தில் ஆகக் குறைந்தது ஆயிரம் உயிர்களையாவது காப்பாற்றினோம்.விடுதலைப் புலிகளின் தலைவரை 10 தடவைகளுக்கு மேல் சந்தித்தேன். சந்திக்க வேண்டிய தேவை இருந்தது.அவரைச் சந்தித்த பல தமிழ்த் தலைவர்கள் நீங்கள்தான் கடவுள், நீங்கள் தமிழ் மக்களுக்குக் கொடை என மாத்திரம்தெரிவித்தனர். ஆனால் நான் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தினேன்.அரச தலைவர்களுக்கும் இதுவே இடம்பெற்றது.மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசி சமாதானத் தீர்விற்கு முயன்றதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஓரளவு சட்டபூர்வதன்மையை வழங்கினேன் என்பது உண்மைதான்.சர்வதேச சமூகமும் இதனைத்தான் எதிர்பார்த்தது. பிரபாகரன் செய்த பெரும் பிழை என்னவென்றால், சமஷ்டியை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை.பிரபாகரனும் இலங்கை அரசும் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய
அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராகஇருக்கவில்லை.உண்மையில் என்ன நடைபெற்றது என்பதனை அறிய முடியாமல் உள்ளது பிரபாகரனின் கூற்றுகளை நான் நம்பினேன். அவர் இராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதச் செயல்கள் சிறிது காலத்திற்குநிறுத்தப்படும் என உறுதியளித்தார். அதனைக் காப்பாற்றினார். எனினும், சில மாதங்களுக்குப் பின்னர் அவரால் அதனைப்பின்பற்ற முடியவில்லை. மோதலின் இறுதிக் காலங்களில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைவதே ஒரே வழி என விடுதலைப் புலிகளுக்குத்தெளிவாகத் தெரிவித்தோம்.வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடையுமாறும், ஒலிபெருக்கி மூலம் நோக்கத்தை இராணுவத்துக்குத் தெரிவிக்குமாறும்கூறினோம்.அவர்கள் அதனைச் செய்ய முயன்றனர். எனினும், கொல்லப்பட்டனர்.உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை அறியமுடியாமலுள்ளது.எனினும், அவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டமை தெளிவாகின்றது.என்ன நடைபெற்றது என்பது தெரிய வரவில்லை. தெரிய வருவதற்கு பல வருடங்கள் எடுக்கலாம். விடுதலைப் புலிகள் சரணடைவதை இலங்கை இராணுவம் வேண்டுமென்றே அலட்சியம்
செய்ததா என்பதும் எமக்குத் தெரியாது என்றார் அவர்.

*********-------------**********--------------

TNAElection Manifesto, 2004

TAMIL NATIONAL ALLIANCE
Election Manifesto, 2004
Within two years of Parliamentary elections of December 5, 2001 the Tamil nation was forced to the position of having to face another election as a result of a power struggle between the two largest Sinhala chauvinist parties.
However, with the current political environment and in the backdrop of the changes shaping the attitudes of the international community towards our freedom struggle, the TNA has decided to make use of the opportunity presented by this election to bring forcefully to the attention of the world, and Sri Lanka in particular, our resolve for self-determination.
The Tamil Nation which from historical times had its own traditional homeland, sovereignty and rule over it lost them first to the European aggressors. When in 1833 the British brought the whole island of Ilankai under one administrative control the Tamil Nation, without its consent, was annexed to the Sinhala areas.
Later in 1948 at the time of their departure, the British rejected every constitutional proposal submitted on behalf of the Tamil Nation and the way was paved for the fate of the Tamil Nation to be at the mercy of the Sinhala nation. Subsequently, as a result of the measures taken by the chauvinist Sinhala majority such as the appropriation of Tamils’ land, disenfranchisement, abrogation of voting rights and language rights, discrimination based on race in education, employment, culture all of which threatened the distinctiveness and survival of the Tamil Nation, the non-violent struggle adopted by the Ilankai Thamil Arasu Katchi on behalf of the Tamil Nation based on the conviction that the affairs in our traditional homeland should be administered only by us and on the principle of self-determination, was put down by force of arms by the government. Since 1957 the agreements entered into from time to time, by the leaders of Tamil people with the chauvinist Sinhala political leaders have been torn up and discarded.
Continuing this behavior, in the years 1956 and 1957 planned violence was directed at the helpless Tamil people. Because the provisions of the unitary-state republican constitution of 1972, which was approved in the midst of the opposition by Tamil people’s representatives by the chauvinist Sinhala majority, which denied totally and comprehensively the rights of the Tamil people, there arose the historical inevitability of the start of an armed rebellion on behalf of the Tamil people.
In this political environment the Tamil organizations got together and resolved on May 14, 1976 to establish a sovereign independent Tamil Eelam based on our inalienable right to self-determination. Independent Thamil Eelam received its mandate as a result of the overwhelming support given to the TULF by the Tamil speaking people of NorthEast in the general elections of July 1977.
In addition to the unleashing of genocidal attacks on the Tamil people as an immediate response to the mandate for an independent Tamil Eelam, in the following year, a second republican constitution, further strengthening the unitary-state government was promulgated despite opposition from the Tamil people and their representatives. Subsequently in 1979 and 1981 and later on a enormous scale in 1983, genocidal attacks on Tamils was planned and agitated by the Sinhala chauvinist politicians.
In this circumstance, in order to safeguard the life and liberty of the Tamil race and to establish its birthright for self-determination, the Tamil Nation having been pushed to the unavoidable state of armed conflict as the only way, the war not only broadened but advanced under the generalship of the Tigers’ leader Hon. Pirapaharan.
The state of affairs being that all the efforts taken by the successive Sinhala chauvinist governments to defeat the armed campaign for Tamil Nation’s freedom and thereby crush the political aspirations of the Tamil people having ended in failure, and in the context of the reality being accepted and emphasized by the international community that the solution to the Tamil National problem cannot be settled by force of arms but only politically, the basis was laid for political negotiations with the help of the international community.
We are obligated to remind ourselves at this stage that the only reason we have established the power of Tamil nationalism thus is because our people have demonstrated such determination and sacrifice for the ideals in the face of numerous hardships and the loss of nearly one lakh of lives and because of the legendary bravery, sacrifices and exploits of our heroes and fighters.
The unilateral cease-fire, declared by the LTTE midnight on December 24, 2001 and the subsequent cease-fire agreement signed (between the LTTE and the Sri Lankan government) as a result of the efforts of the Norwegian government with the approval of the LTTE and the Sri Lankan government, paved the way for a series of talks.
On account of the failure to institute, in terms of the agreement reached in the talks, the administrative organs including 'SIHRN' to carry out the necessary and urgent functions based on humanitarian considerations required to restore normalcy in the daily lives of the Tamil people and the failure to organize the bureaucratic framework to put to use the huge amount of aid promised by the international community and bearing in mind the escalating daily hardships and misery to the people and the resulting perceptions, the LTTE put forward the proposal that an interim self-governing authority be set up for the regions of the Tamil nation.
Their draft proposals for the interim self-governing authority (ISGA) was submitted to the facilitators on October 31, 2003.
The LTTE requested the Sri Lankan government to appoint a date for the commencement of talks on these proposals. The political crisis that was precipitated by the president at this juncture by taking over the Defense, Interior and Information ministries within three days of the ISGA proposals culminated in the dissolution of the parliament and the announcement of general elections to take place on April 4, 2004. This state of affairs not only disrupted the efforts to set up an ISGA sorely needed for our people but also set back and put in peril the efforts to a political solution to the Tamil national problem. Despite this the LTTE has reaffirmed their determination to pursue the course of peace. The international community has praised and approved this.
In the forthcoming elections the Tamil national problem has been made to take the center stage in South Sri Lanka. This has been used as the basis for Sinhala chauvinist propaganda in various forms to present to the Sinhala electorate. Thus, the responsibility resides with the Sinhala people to arrive at a mature position in the matter of resolving the Tamil national problem.
The LTTE announced the unilateral cessation of hostilities in December 2001. We wish to point out that following this on February 22, 2002 even though they signed the cease-fire agreement and continued to take part in the political negotiation regarding the Tamil national problem the LTTE not only has fully 70 regions in the Tamil people’s traditional homeland under its complete control and is managing an administrative set up with characteristic features of a state government but also has a functioning government.
For these reason the TNA expects the Sinhala nation also to play its part in the productive and healthy resumption of the disrupted political settlement efforts. Based on this the TNA puts forward the following resolutions:
1.Find a political solution to the Tamil national problem based on the acceptance of the fundamental proposals regarding (Tamil Nation’s) Tamil homeland, Tamil Nation, Tamils’ right to self-government (autonomy).
2.The TNA has clear and definitive position on the political solution of the Tamil national problem in regard to the Muslims. Because of the fact the Muslims have Tamil as their Mother tongue like the Tamils and on the recognition that they have lived in amity amongst the Tamil in the Tamil homeland, the TNA has decided that any solution to the Tamil national problem must incorporate matters and features that reassure the distinctiveness, security, culture and economy of the Muslims. In this manner, in the ISGA proposals and features relating to the Muslims have been made manifest. That the Muslim community has the right to be a party in determining the part to be played by them in ISGA committee has been made clear by the LTTE. Moreover, LTTE has made known that the members appointed by the NorthEast Muslim community will take their place in the ISGA committee. The TNA is confident that the Muslim brothers will join with the Tamils in this front to erect a common future.
3.The Sinhala nation should accept in toto the ideas developed in the ISGA document put forward by the LTTE which contains excellent proposals in regard to rebuilding the Tamil country devastated and Tamil lives ravaged in the twenty-year long war, to solve the day to day problems encountered by the Tamil people and to establish normalcy in the lives of the Tamil people, centered on their welfare, respecting human rights and conforming to the rule of law, and proceed to hold talks with the LTTE and set up the ISGA committee.
4.The high security zones and armed forces camps which are located in areas populated by Tamils disregarding their welfare, priority given to strategic interest of warfare, should be removed and arrangements made for the Tamil people to return and settle in their places of residence.
5.The armed forces’ interdiction and oppression imposed must be lifted comprehensively to enable the Tamil people to carry on the activities needed for their livelihood and to move freely in their homeland.
6.The international community, instead of waiting until the Tamil nation’s ethnic problem is permanently solved, should step forward and directly assist in the pressing humanitarian needs and economic development schemes and improve the economic life of the Tamil nation.
7.The political prisoners unreasonably held in jail for years should all be released forthwith.
8.An international judicial inquiry should be conducted to deliver justice to our people and to the relatives who are burdened with the unbearable sorrow of not knowing the fate of those innocents who disappeared after having been arrested by the armed forces and police in our homeland.
9.All the provisions of the cease-fire agreements must be completely fulfilled and peace and normalcy should prevail in our homeland.
10.The LTTE has for the past two years put up with the violent, surly behavior of the armed forces without impairing the conditions for peace and observing the cease-fire and acting steadfastly and firmly towards the path of peace. Hence, the international community should create the environment by removing the restrictions put in place by certain countries on the LTTE, the authentic sole representatives of the Tamil people, so that they could, with authority, dignity and with equal status conduct talks with the government of Sri Lanka.

◦Accepting LTTE’s leadership as the national leadership of the Tamil Eelam Tamils and the Liberation Tigers as the sole and authentic representatives of the Tamil people, let us devote our full cooperation for the ideals of the Liberation Tigers’ struggle with honesty and steadfastness.
◦Let us endeavor determinedly, collectively as one group, one nation, one country, transcending race and religious differences, under the leadership of the LTTE for a life of liberty, honor and justice for the Tamil people.
◦Let us work side by side with the LTTE, who are fighting for the protection and autonomous life of the Tamil speaking people, for the political initiatives under their leadership.
◦We emphasize that if the Tamil nation’s requests are continued to be rejected, rightful political solution denied and armed aggression and oppressive rule return, based on the doctrine of self-determination, it is an inevitable reality that Tamil sovereignty and independence will be established in the Tamil homeland.
◦We implore our people to identify the selfish, opportunistic packs and gangs that operate in our midst as the enemies and as the tools of the majoritarian chauvinist Sinhala forces against the Tamil nation which seeks an honorable and peaceful life and reject them totally and completely in the upcoming elections.
◦We are sending a clarion call to the Tamil speaking people to unite under one flag and give overwhelming support to the TNA which is contesting (the elections) under the ILANKAI TAMIL ARASU KATCHI’S symbol of house, so as to emphasize the aims of the people of the Tamil Nation, to proclaim again the political resolve of our people, to strengthen further the Tamil nation and to win the political rights of the Tamil speaking people.

No comments: