====================================================================
நெடுமாறன் ராமதாஸ் வை.கோ கும்பலின் உலகத் தமிழர் பிரகடனம்: மன்மோகன் சோனியா கும்பலின் இந்தியவிஸ்தரிப்புவாதத்துக்கு, ஈழ தேசிய விடுதலை ப்புரட்சியை அடிமைப் படுத்தும் ஜன கண மணவே!! ====================================================================
நெடுமாறன் ராமதாஸ் வை.கோ கும்பலின் உலகத் தமிழர் பிரகடனம் (1)
1. ஈழத் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும் அதற்கேற்ற அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முறையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவை திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக் கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்னையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.
அ) ''மரபுவழித் தாயகத்தில்'' - எது அந்தத் தாயகம்? அதன் எல்லைகள் என்ன? ஏன் வரையறுத்துக்கொள்ளவில்லை?
ஆ) ''முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள்''- ஐயா நெடுமாறனே அவை என்ன வென்று சொல்வீர்களா? இதற்குள் தமிழரின் பிரிவினைக் கோரிக்கையாகிவிட்ட தேசிய சுயநிர்ணய உரிமை அடங்குகிறதா?
இ) ''அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய முறையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்''எந்த அரசியல் அமைப்பு ஐயா நெடுமாறனே? இலங்கைச் சோசலிஸ ஜனநாயகக் குடியரசின் 1978 அரசியல் அமைப்பு (அதன் பல்வேறு திருத்தங்களுடன்) தானே! ஏன் குறிப்பிடுச்
சொல்லவில்லை,இதையே தானே 1970களின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இந்திய விஸ்தரிப்புவாத அரசு தமிழ் மக்கள் மேல் திணித்து வருகிறது.சோனியா அம்மாவுக்கும் நெடுமாறன் ஐயாவுக்கும் என்ன வித்தியாசம்??
ஈ) ''ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக் கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்னையைத் தீர்க்கும் ஒரே வழி'' என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.எப்பேற்பட்ட ஜனநாயகவாதிகள்?! ஒரு ஜனநாயகவாதி ஒரு போதும் ''ஒப்புக் கொள்கிற'' தீர்வுபற்றிப் பேசக் கூடாது, ''வேண்டி நிற்கிற தீர்வு'' பற்றிப்பேச வெண்டும்.
இதோ ஈழத்தமிழர் வேண்டி நிற்கின்ற தீர்வு:
>சோல்பரி அரசியல் யாப்பு கட்டாய இணைப்பை சட்டபூர்வமாக்கியது!
> 1972 ஒற்றையாட்சி குடியரசு அரசியல் யாப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இறுதியாக அதை எதிர்த்து - தேர்தலில் மக்கள் ஆணை பெற்று வெற்றியை நிறுவினர்!
> மீண்டும் 1977இல் அரசியல் யாப்பை எதிர்த்து வட்டுக்கோட்டையில் தமிழீழத்தீர்மானம் நிறைவேற்றியது, பொதுஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது!!
>1978 இல் ஜே.ஆரின் பாசிச அரசியல் யாப்பும்- பயங்கரவாத தடுப்பு, அவசரகால, பாதுகாப்பு வலய- கறுப்புச் சட்டங்களும் தமிழ் மக்களின் குரல் வளையை நெரித்து ஆயுதப் போருக்கு வழி திறந்துவிட்டன.
> 1983 இல் அரசியல் சட்டத்தின் 6வது திருத்தச்சட்ட மூலம் அரசியல் சட்டப் பாதுகாப்பை முற்றாக ஈழத்தமிழர்களுக்கு நிராகரித்தது!!
>1985 இல் 1977 மக்கள் தீர்ப்பின் நிலை நின்று போராளி இயக்கங்கள் முன் வைத்த திம்புக்கோரிக்கைகளை இந்திய விஸ்தரிப்புவாத அரசு ஏற்கமறுத்து 1978 அரசியல் யாப்புக்கு 13 வது திருத்தம் செய்து முழு இலங்கை நாட்டையும் தன் காலடியில் வீழ்த்தியது;தமிழர்களுக்கு போலி மாகாணசபையை தீர்வாக முன்வைத்தது!
>இவையனைத்துக்கும் ஒட்டுமொத்த எதிர்ப்பாக இந்திய மேலாதிக்க யுத்ததைத் எதிர்த்து, விடுதலைப்புலிகளின் தேசபக்த யுத்தத்தை ஆதரித்து ஈழமக்கள் விடுதலைப்புலிகளை தமது அரசியல் தலைமையாக ஏற்றுக்கொண்டனர்.இதன்மூலம் இலங்கையின் அரசியல் அமைப்புக்குள்- கட்டாய இணைப்புக்குள்- கட்டுண்டு வாழ மறுத்து, விட்டு விடுதலையாகினர்.
>புலிகளின் ஏகபோகம் நிலை நிறுத்தப்பட்டது முதல், நிறையப் பேச்சுவார்த்தைகளும் பேரங்களும் நடந்தன.எனினும் இறுதியாக இலங்கையின் இறைமை என்கிற வாள் தமிழர்களின் தலைமேல் தொங்கிக் கொண்டேயிருந்தது!
> சிறீலங்காவின் இறைமைக்கு எதிரி கொடுத்த வலிமையை, ஈழத்தின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு தமிழர்கள் கொடுக்கவில்லை,இந்த சந்தர்ப்பவாதத்துக்கு 2009-மே 19 இல் தமிழர்கள் மாபெரும் விலை கொடுக்க நேரிட்டது.
(இத்தகைய ஒரு மாபெரும் அரசியல் தவறை இனிமேலும் தமிழ்க்குலம் தன் எதிர்கால சந்ததிக்கு இழைக்கக் கூடாது).
>ஈழத்தமிழரின் வரலாறு முழுவதிலும் சிறீலங்கா அரசின் அரசியல் அமைப்பு ஒரு அடக்குமுறைச் சாதனமே!இந்த அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அல்ல இந்த அரசுமுறையை ஓழித்துக்கட்டுவதே ஈழத்தமிழர்களின் விடுதலையை உறுதி செய்யும் பாதையாகும்.
> முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்கள் வேண்டி நிற்பதும், முழங்கிவருவதும் ஒன்றுதான்;
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
எனவே தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் வாழ்நிலத்திலும் சிதறிவாழும் ஈழத்தமிழர்களே;*சுயநிர்ணய உரிமையை, பிரிந்துசெல்லும் உரிமை என்ற ஒரே பொருளில்
மட்டும் உச்சரியுங்கள்!!
*பிரிந்துசெல்லும் உரிமை இலங்கையில் பிரிவினைக் கோரிக்கை என்ற குறிப்பான வடிவத்தை எடுத்துவிட்டதால் தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடியுங்கள்!
*ஈழவிடுதலைப் புரட்சிக்கு குழிபறிக்கும் நெடுமாறன் கும்பலைத் தனிமைப் படுத்துங்கள்!
*சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் புரட்சிகர சக்திகளுடன் ஐக்கியப்படுங்கள்!!
ஈழப்புரட்சி நீதியானதே! இறுதிவெற்றி ஈழமக்களுக்கே!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$நெடுமாறன் ராமதாஸ் வை.கோ கும்பலின் உலகத் தமிழர் பிரகடனம்:
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
1. ஈழத் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும் அதற்கேற்ற அரசியல் அமைப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய
முறையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவை திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக் கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்னையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.
2. தங்கள் தாயகத்திலும் உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களிலும், வீடுகளிலும், மீண்டும் குடியேறவும் அமைதியான,
இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணுகிறோம். 3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும் சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற
வேண்டுமென அய்.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.
4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும் அவர்களை ஏவி விட்ட சிங்கள
அரசியல்வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி
பூணுகிறோம்.
5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையும், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும், அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்ள அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணைநிற்க உலகத்
தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
6. அளப்பரிய தியாகங்களைச் செய்து ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும் வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாகப் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும், அந்த மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு, எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம். உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத்தமிழர் சிக்கலுக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக் கொள்வதற்காக தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி இப்பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகத்தான ஒரு கடமையை மேற்கொள்வதற்காகவே நாம் கூடி உலகறிய செய்துள்ள இப்பிரகடனம், ஈழத்தமிழர்களுக்கு வாழ்வளிக்கப்போகும் பிரகடனம் மட்டுமல்ல, உலகத்தமிழர் அனைவருக்கும் விடிவைக் கொண்டு வருவதற்கான வழிகாட்டும் பிரகடனமுமாகும் என்பதை உணர்ந்து தமிழர்கள் கட்சி, சாதி, மத வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட முன்வருமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment